ஆணி: நோர்வே நக்கீரா

TheNail_TheCrossஆணி

அவன் புனிதமானவனோ?
புண்ணியமானவனோ?
புரட்சிவாதியோ?
மீட்பனோ?
ஆடுகள் மேய்பனோ
யான் அறியேன்

முள்முடிதரித்து
மூன்று ஆணியிலோ
ஐந்து ஆணியிலோ
உயிரை இழந்த கர்த்தா என்பதை
என்வாசல் கதவுகளை உடைத்து
உக்கிரமாய் ஓதக் கேட்டேன்.

குடும்பச் சிலுவையை
சுமந்து கொண்டு
காசுக்கடவுள் அல்லாவிற்கு
சேவை செய்த ஆரியவதிக்கு
சம்பளமாய்
இருபத்திநான்கு ஆணிச்சிலுவை.
சுமப்பதற்கென்றே பிறந்ததா
இந்தப் பெண்ணினம்?

மத்திய கிழக்கில்
மன்னிக்கவும்
மத்திம கிழக்கில்
அல்லாவின் புனித
பொல்லாத பூமியில்
எம்தேசப்பெண் ஒருத்தி
சிலுவை ஏற்றப்பட்டாள்.
மனிதனே அல்லாதவனுக்கு
சேவை செய்த குற்றத்துக்காய்.

கூறான் சுமந்த
குறை மதியர்களால்
கூராணிகளால் அறையப்பட்டாள்
மனித முகங்களில்…..!!
மனித மனங்களில்…..!!!

ஐந்து ஆணியிக்குள்
ஆண்டவனுக்கே அரோகரா
மீண்டாரோ தாண்டாரோ
ஆண்டவனுக்கே தெரியாது.
இருபத்திநான்கு ஆணி ஏறியும்
மீண்டாள்
இலங்கை மீண்டாள்.

இனி
புதிய கூறானோ பைபிளோ
ஆண்டவள் ஆரியவதி என எழுதுமா?
அவள் பெண்ணென்பதால்
மீண்டும் புதையுமா?
சிதையுமா?

யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
பிரித்தது உயிர்
ஆரியவதிக்கோ
இருபத்திநான்கு ஆணிகள்
நாட்டில் மீண்டும் உயிர்த்தாள்
ஈழத்தமிழர் உடல்கள் எங்கும்
எத்தனை இலட்சம் ஆணிகள்
மரித்ததே மானிடம்.
மெனளமாய்
கைகொட்டிச் சிரித்ததே உலகம்.
மானிடம் பேசும் மானிடராலே
மானிடத்திற்கு மரணதண்டனை

ஆணிகளின் பின்னால்
அறைந்து கிடக்கிறன மனிதமும்
மானிடமும்.

சிலுவைகளுடன்
நோர்வே நக்கீரா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

297 Comments

 • pandithar
  pandithar

  அரையும் குறையும் அன்றி அறையும் தரமே
  ஆணியின் தரம் ஆயினும் இதன் பின்
  எம் தவம் நின்று பெறுவது வரமே!…

  ஆணித்தரம்!….

  Reply
 • Nackeera
  Nackeera

  பண்டிதர்!
  அரையும் குறையுமின்று
  அறையும் தரம் தானே
  ஆணித்தரம்
  அன்றேல்
  ஆணின் தரம்?
  ஆணின்தரம் ஆணித்தரமான பின்
  பேணித்தரம் காப்பது பேதமை
  என்பதனால்
  ஏணித்தரம் காட்டுவோம்
  பெண்மைக்கும் மென்மைக்கும்.
  இதுவே அவப்பலனற்ற
  தவப்பலன்

  நன்றி பண்டிதர்

  Reply
 • peter
  peter

  அது ஆணியல்ல தோழா
  ஆணியல்ல
  மனிதத்தை நேசிப்பவர்களுக்கு
  விடப்பட்ட அறைகூவல் – இன்னும்
  மதத்தை தூக்கி பிடித்து
  மதம் கொண்டலையும்
  மட மனிதர்களுக்கு,
  மடச்சாம்புராணிகள்
  ஊதிவிட்ட புகையது.

  புகையட்டும்,புகையட்டும்
  புரியாதவர்களுக்கும்-மனிதத்தை
  புரியாதவர்களுக்கும்
  புண்ணாக்குகளுக்கும்
  புரியட்டும்.

  ஆரியவதி கதையை
  ஆப்பிழுத்த கதையாக மாற்ற
  ஆரம்பித்தவனே
  ஆம்
  ஆணியேற்றினவனே,
  ஆரூடம் சொல்கின்றானாம்.
  சாக்கிரதை, சாக்கிரதை.

  ஆண்டவன் தோன்றிய- அந்த
  ஆலய மண்ணில்
  காசுக்கடவுள்கள்தானே
  ஆட்சியில் இருக்கிறார்கள்.

  Reply
 • thamilmaran
  thamilmaran

  என்னால் இந்தக் கவிதையை ரசிக்க முடியவில்லை ஆரியவதிக்கு ஆணி அறைந்தோர் இஸ்லாமியர் அல்ல அரபுக்கள், பணக்காரர். பணம் அதிகாரத்தால் குணம் இழந்தோர் நம்மில் உள்ள சாராசரி மனிதரில் மிருகக் குணம் படைத்தோர் ஆக குரானையும், அல்லாவையும் குறை பிடிப்பது சரி என்று படவில்லை எனக்கு.

  Reply
 • palli
  palli

  தேறாத கவிதை ஒன்றை
  தெரிந்திருந்தும் எழுதுகிறேன்
  தேவைக்காய் கிறுக்குகிறேன்
  தேர்வுக்காய் பல்லி இல்லை;

  குடும்ப சுமை அறிந்து
  குருவியாய் பறந்த அவள்
  ஆணி பல உடல் சுமக்க
  அமைதியாய் தன் மண்ணில்;

  தேவைக்காய் போகின்றாள்
  தேசத்திலே உழைப்பின்றி
  தெரிகிறது தவறென்று
  தெரியவில்லை வேறு வழி ஒன்று;

  ஆண்வர்க்கம் இது என்றால்
  அது சற்று அதிகம்தான்
  அரக்கர்கள் கூட்டத்தில்
  அன்பில்லா கிறுக்கன் இவன்:

  கொடூர மிருகத்தின்
  கொலை வெறியா இதுவென்றால்
  இல்லை இல்லை இன்பம் என்பான்
  இதுக்கா பிறந்த அவன்;

  பெண்மீது தவறென்று
  போதனைகள் செய்வார்கள்
  பொறுப்பில்லா சமூகத்தின்
  பொறுப்புள்ள மனிதர்கள்;

  சேதாரம் கேட்டுரைப்பார்
  சேட்டு கடை கடன்போல
  செலவில்லா தீர்பொன்று
  செய்தியாய் நாம் படிக்க:

  உள்ளாடை புரட்சிதனை
  உலகெல்லாம் சொன்னவர்கள்
  உருகுலைந்த ஆரியவதிக்கு
  உரிமை குரல் கிடையாதோ:

  அரசு இரண்டும் கை கொடுக்கும்
  அதுக்காக சிலர் பேச்சு; ஆனால்
  பெண்களின் அவல நிலை
  போதைபோல் தொடருமோ;

  இன மதம் பாராமல்
  இதனை நாம் கண்டிப்போம்
  பொறுப்போடு ஊடகங்கள்
  பெண் வாழ்வை பார்க்கட்டும்;

  நட்புடன் பல்லி,

  Reply
 • Nackeera
  Nackeera

  பீற்றர் நன்றாகச் சொன்னீர்கள். அது மனித்துக்கு அறைந்த ஆணியே தவிர ஒரு சிங்களப் பெண்ணுக்கு அறைந்த ஆணியல்ல. இது இலங்கை மக்கள் அரசியல்வாதிகள் முகங்களிலும் அறையப்பட்ட ஆணியே.

  தமிழ்மாறன்!
  உங்கள் பார்வையில் உங்கள் கருத்துச் சரியானதே.
  //மத்திம கிழக்கில்
  அல்லாவின் புனித
  பொல்லாத பூமியில்// இந்த வரிகளும்.
  //கூறான் சுமந்த
  குறை மதியர்களால்
  கூராணிகளால் அறையப்பட்டாள்// இந்த இருபகுதிகளும் உங்களைச் சலனப்படுத்தியிருக்கும்.
  அரேபியா என்பது இஸ்லாமியரின் புனிதபூமி: புண்ணிய பூமி: ஒருமுறையாவது மெக்காவுக்கு பயணம் செய்யவேண்டும் என்பது கூரானின் வேண்டுகோளும் கூட. அனைத்து முஸ்லீம்களினதும் கூரானின் அடிநாதமாய் இருப்பது அரோபியா. அந்தப்பூமியில்தான் இப்பாவப்பட்ட பெண் ஆணி அடிக்கப்பட்டாள். கவிதையின் அரேபியாவை குறியீட்டில் மட்டுமல்ல ஆகுபெயராக அமைத்திருந்தேன். அரேபியர்கள் எல்லோரும் அனியாயக்காரர்கள் அல்ல ஆணியடிப்பவர்களும் அல்ல. ஒரு புனிதமான நாடு புனிதத் திருக்கூறானை அடித்தளமாக அமைந்த நாட்டில் இப்படி நடந்தது என்ற ஆதங்கம் தான். அதுமட்டுமல்ல. வெளிநாட்டில் ஒரு தமிழன் ஒரு வெள்ளையனைக் கொன்றால் சகல ஊடகங்களும் ஏன் நாடே எப்படிச் சொல்லும். வெளிநாட்டவன் கொன்றான் அதைவிட சிறிது ஆழமாகப் போய் இலங்கையன் கொன்றான். அதைவிட ஆழமாகப்போய் தமிழன் கொன்றான் என்றுதான் சொல்வார்கள். ஒரு தனிமனிதனின் செயற்பாடு ஒரு நாடாகத்தான் காட்டப்படும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். ஒரு பொதுமைப்படுத்தல் என்பது கவிதைகளில் ஓரணியாகும். அதைத்தான் மரபு சார்ந்து நானும் எழுதினேன். இதை ஏன் முக்கியமாக நான் எழுதினேன் என்றால் சிலுவை கிறித்தவர்களுக்குரியது. குரானும் அல்லாவும் இஸ்லாமியர்களுக்குரியது. ஆரியவதி சிங்களப்பெண்ணாக இருந்தாலும் குடும்பச்சிலுவையைச் சுமந்து கொண்டு அல்லாவிடம் போகிறாள் என்பது அரேபியாவுக்குப் போனாள் என்று ஆகிவந்திருக்கிறது. அதைவிட எனது கற்பனையில் நின்ற விடயம் என்னவென்றால் மக்களின் பாவத்தை சிலுவையாகச் சுமந்தார் யேசுபிரான். அதன்பின் சிலுவையில் அறைந்து தந்தையான கர்த்தரான கடவுளிடம் சென்றார். அதைத்தான் ஆரியவதியும் குடும்பப்பாவச்சிலுவையைச் சுமந்து கொண்டு அல்லாவான கடவுளிடம் (யேசுவின் தந்தை) போனாள். கடவுளின் பூமி பொல்லாத பூமியாக மாறிவிட்டது. குறைமதியர்கள் என்பதைக் கூட நீங்கள் வேற்றுக் கண்களால் பார்த்திருக்கலாம். இஸ்லாமியர்களை முகமதியர் என்பர். அவர்கள் வணங்குவது முழுமதியை அல்ல குறைமதியையே. இக்கருத்தும் எடுப்பார் கைப்பிள்ளை போன்றது. குறையுடைய மூளை என்றும் எடுக்கலாம் பிறைச்சந்திரன் என்றும் எடுக்கலாம் கவி இரசனையைப் பொறுத்து.

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லி!
  “உள்ளாடை புரட்சிதனை
  உலகெல்லாம் சொன்னவர்கள்
  உருகுலைந்த ஆரியவதிக்கு
  உரிமை குரல் கிடையாதோ”
  பலஊடகங்கள் இதை ஒரு செய்தியாக வெளியிட்துடன் நின்று விட்டன. இது ஒரு தமிழச்சிக்கு நடந்திருந்தால் தமிளூடகங்கள் எல்லாம் தொண்டை கிழியக்கத்தியிருபார்கள். இது ஒரு சிங்களத்தியாச்சே. இச்செய்தியை வாசித்த குற்றத்துக்காக என்னுணர்வுகளை கவிதையாகக் கொட்டீனேன். எல்லா அநியாயங்களுக்கும் என்னால் எழுதமுடியாவிட்டாலும் பாகுபாடற்ற மனிதத்துக்காக எழுதினேன்.
  /யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
  பிரித்தது உயிர்
  ஆரியவதிக்கோ
  இருபத்திநான்கு ஆணிகள்/ இவ்வரிகளைக் கவனியுங்கள். கடவுளையும் விஞ்சிவிட்டவளுக்காக ஒரு கெஞ்சல்தான் இக்கவிதை.

  Reply
 • thamilmaran
  thamilmaran

  நக்கீரா தங்கள் மேலான அபிமானத்தை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள் தங்கள் விளக்கங்களுக்கு நன்றி ஆனால் தமிழர் எப்போதும் வித்தியாசமாக சிந்திப்பவர்கள். மனிதம் சுமந்து மனித உணர்வுக்காக மரித்துப் போவர்கள் இதே சம்பவம் தமிழ்ப்பகுதியில் நிகழ்ந்திருந்தால் தமிழர் ஆவேசமாகி இருப்பர் ஆனால் அரேபியர் அளவுக்கு அதிகமான செல்வத்தால் ஆண்டவனையே அறியாது வாழ்பவர் அவர்களுக்கு மனித உணர்வுகள் புரியாது.

  Reply
 • Nackeera
  Nackeera

  தமிழ்மாறன்! /நக்கீரா தங்கள் மேலான அபிமானத்தை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள் தங்கள் விளக்கங்களுக்கு/
  நன்றி தமிழ்மாறன் இருந்தாலும் இந்தவார்த்தைகள் மிகப்பெரியவை இதற்குத் தகுதியுடையவன் தானா என்பது கேள்விதான். ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமாகத் தான் சிந்திக்கிறார்கள். இந்தச் சிந்தனைகளை ஒரு முகப்படுத்தும் மதங்கள் என்றும் மனிதம் தாங்கி நிற்பது அவசியம். என்னைப் பொறுத்தவரையில் வரையறையற்ற பரந்து விரிந்த மனித எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் கட்டுப்பாடு விதிப்பது மதங்களும் சித்தாந்தங்களுமே.வள்ளுவன் சொன்னான் கம்பன் சொன்னான் மாக்ஸ் சொன்னார் என்று பழமைகளைப் புரட்டிப்போட்டு ஆதாரம் தேடுபவர்கள் மேற்கூறியவர்களை விட படிப்பிலும் அறிவிலும் அதிகமாயிருந்தும் நான் சொல்கிறேன் என்று சொல்லத் தயங்குவது ஏன்? காரணம் தன்னம்பிக்கையை நாம் சமூகத்தில் வளர்த்தெடுக்கவில்லை என்பதே எனது சமூகம் மேலுள்ள தீராத கோபம். பல பள்ளிப்பாடங்கள் கூட இப்படித்தான் சிந்திக்கவேண்டும் ஏன் கவிதைகள் கூட மரபுசார் சிந்தனைகளாகவே உள்ளன. கூடுதலாக மதங்கள் கடவுளிடம் இருந்து கிடைக்கப்பெற்றதாகவே கருதப்படுகின்றன: ஆனால் அனைத்தும் மனிதனாலேயே உருவாக்கப்பட்டன.

  வண்டி ஓட்டிய மனிதன் கார் என்றும் விமானம் என்றும் வளர்ந்து வந்தபின் வண்டிதான் சரியானது என்று மதங்களைப்போல் அடம்பிடித்தால் மனிதம் மண்டியிடவேண்டியதாகி விடுகிறது. அன்றைய சிறைச்சாலைகளும் நீதிமன்றுகளும் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கும் தளங்களாகவே இருந்தன. இன்று மனதநேயம் வளர்ந்த மனித உலகில் அவை மனிதனை: குற்றவாளியை திருத்திச் சமூகத்தினுள் அனுப்பும் தளங்களாக மாறிவரும் இக்காலகட்டத்தில் இப்படியான மனிதநேயமற்ற தண்டனைகள் செயற்பாடுகள் அருவருப்புக்குரியன என்பது எனது கருத்துமட்டுமல்ல உங்கள் கருத்தாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வரவுகளை எதிர்பார்த்திருக்கிறோம்.

  Reply
 • BC
  BC

  நக்கீரா இந்து என்றால் போட்டு துவைத்து எடுக்க வேண்டும் முஸ்லிம் என்றால் கட்டியணைத்து தட்டி கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடைய எழுத்தாளர்களை கொண்ட எம்மிடையே அல்லாவின் நாட்டில் நடந்த கொடுமை என்று பாராமல் மதத்தை பின் தள்ளி மனிதத்தை முன் நிறுத்தி ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு கவிதை எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கிறேன்.

  Reply
 • Nackeera
  Nackeera

  பிசி! மிக்க நன்றி. கவிதையை சரியாகப் புரிந்துள்ளீர்கள். மனிதன் என்றும் நல்லவன்தான் அவனுள் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் எதனை உள்வாங்கிறானோ அதையே பிரதிபலிக்கிறான். மதங்கள் மனிதனின் சிறுபராயத்திலேயே தாய் பாலுடன் சேர்த்து ஊட்டப்படுவதால் சுடுகாடு போகும் வரை அழிக்க முடியாதவாறு அமைந்து விடுகிறது. மதங்களும் சரி சித்தாந்தங்களும் சரி இன்னொருவனின் மூளையில் தோன்றிய கருத்துக்களுக்கு நாம் அடிமைகள் போல் சேவகம் செய்கிறோம். ஏன் எமக்கு என்று தனியாகச் சிந்திக்கக் கூடிய மூளை இல்லையா? மதங்களும் சித்தாந்தங்களும் இரவல் மூளையிலே சிந்திக்க மனிதனைத் தூண்டுகிறது என்பது எனது எண்ணம். மதங்களும் சரி மார்க்கங்களும் சரி காலத்துக் கேற்ற மாற்றங்களுடன் மனிதநேயத்துடன் செயற்படாதவரை அந்த மதங்களும் மார்க்கங்களும் மறுக்கப்படவேண்டியவையே. பிறர் மூளையில் சிந்திப்பதை நிறுத்தி சொந்தமூளையில் சிந்திப்போம். எழுத்துக்கள் என்றும் எழுந்து நிற்கவேண்டியவையே. விழுந்து கிடப்பன எழுத்துக்களல்ல. ஆதலால் எனக்கு சரியெனப்பட்டதையும் என்கற்பனை கவிவளத்துக்கு எட்டியவரை எழுதியுள்ளேன். பார்ப்பவர்கள் கண்களையும் கருத்துக்களையும் பொறுத்து பிழைகள் இருக்கலாம்.கவிநயத்துக்காக சமயங்களைச் சம்பந்தப்படுத்தி இருந்தாலும் நான் இந்தச் செயலை அப்பாவி இலங்கை ஏழைப்பெண்ணுக்கு நடந்த ஒரு கொடுமையாகவே பார்க்கிறேன்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ஆரியவதிக்கு நடந்து முடிந்தது ஒரு பெளத்த பெண்மணிக்கு நடந்ததாக நினைக்காதீர்கள். ஒருபெண் தொழிலாளிக்கு நடந்ததாக நினைவு கூருங்கள். ஆரியவதி பெண்தொழிலாளி என்று உண்மையான அடையாளத்தை பெறும் போது உலகம் முழுவதிலும் உள்ள எமது வர்க்க சகோதரர்கள் அவர்களுக்கு இயல்பாகவே அமையப் பெற்ற போர்குணத்துடன் அணிதிரள்வார்கள்.

  Reply
 • palli
  palli

  //ஆரியவதிக்கு நடந்து முடிந்தது ஒரு பெளத்த பெண்மணிக்கு நடந்ததாக நினைக்காதீர்கள். ஒருபெண் தொழிலாளிக்கு நடந்ததாக நினைவு கூருங்கள். //

  தேவைக்காய் போகின்றாள்
  தேசத்திலே உழைப்பின்றி
  தெரிகிறது தவறென்று
  தெரியவில்லை வேறு வழி ஒன்று;

  சந்திரா இதைநாம் மட்டும் நினைத்தால் போதுமா??
  பெண்கள் அமைப்பு இதில் கவனம் கொள்ளாதது ஏன்??

  Reply
 • Nackeera
  Nackeera

  சந்திரன்ராஜா! உங்கள் கூற்றில் எந்தச்சந்தேகமோ மறுதலிப்போ எனக்குக் கிடையாது. மதங்களை கவிதையினுள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டதால் தான் நான் பெளத்தத்தையும் உட்கொணர்ந்தேன். தொழிலாளி என்பது மட்டுமல்ல ஏழைத்தொழிலாளி அதிலும் பெண் தொழிலாளி என்பதே என்குறியீடு. கவிவரிகளில் நான் காட்டியுள்ள வரிகளை கீழே தருகிறேன் பாருங்கள்.
  “காசுக்கடவுள் அல்லாவிற்கு
  சேவை செய்த ஆரியவதிக்கு
  சம்பளமாய்
  இருபத்திநான்கு ஆணிச்சிலுவை”

  இங்கே சேவை செய்ததற்காக சம்பளமாய் ஆணிகள். கூலி எனும் தரந்தாழ்த்தி கூறும் ஒரு சொல்லைத் தவிர்த்தேன். கூலி என்ற சொல்லே மோனைக்குப் பொருத்தமானது. இருந்தும் தவிர்த்ததற்குக் காரணம். இழிதொழிலாக ஆரியவதியைக் கணிக்க கூடாது என்பதற்காகவே.
  “எம்தேசப்பெண் ஒருத்தி
  சிலுவை ஏற்றப்பட்டாள்.
  மனிதனே அல்லாதவனுக்கு
  சேவை செய்த குற்றத்துக்காய்”
  இங்கே முழு முஸ்லீங்களைக் குறிக்காது தனிப்பட்ட ஒரு மனிதனின் செயலையே உட்கொணர்ந்தேன். சேவை என்ற சொல்லை நான் பிரயோகித்ததற்குக் காரணம். கூலி தொழிலுக்கேற்ப இருக்கலாம் அறவிடலாம் சேவை எனும் போது செய்யும் தொழில் பெரிதானது ஆனால் சம்பளம் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். கவிதைகளில் சொற்பிரயோகம் மிக அவதானமாக இருத்தல் அவசியம். ஒரு எழுத்து கவிதையில் கருவையே அழிந்து விடும். அதற்காக நான் ஏதோ புலவனோ பண்டிதனோ அல்ல கற்பனைக்கும் உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து தெரிந்த தமிழில் எழுதுகிறேன். சந்திரன் நீங்கள் இப்போது என் உட்கருத்துக்களைப் புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தாருங்கள்.

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லியின் கேள்வி நியாமானது. அமைப்பு என்றிருந்தால் அதற்கான அமைப்புடன் இருப்பது அவசியமல்லவா?
  இக்கவிதையின் காரணமாக எனக்குத் தொலைபேசி எடுத்து நான் அரசாங்கத்தின் கையாளா என்று கேட்கும் அளவுக்கு மனிதநேயம் எம்மிடையே வளர்ந்திருக்கிறது. துவேசிகள் சிங்களவர் என்று கூறுவதற்கு எமக்கு என்ன உரிமையிருக்கிறது என்று வேதனைப்பட்டுக் கொண்டேன். தொலைபேசியில் பலர் தொடர்பு கொண்டார்கள். இவர்கள் அதைப் பின்னோட்டமாக விடலாமே.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  நட்புடன் நக்கீரா!கவிஞர்களால் மலிந்து போன இந்த உலகத்தில் ஒரு ஆரியவதியை நினைத்து காலத்தையும் நேரத்தையும் ஒதிக்கி கவிதை வடித்த கவிஞனை நான் பாராட்டியல்லவா தீரவேண்டும்?.
  கடைசியாக வெளிவந்த ஆரியவதிக்கான எனது பின்னோட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதியையே நீங்கள் காணுகிறீர்கள்.மிகுதி நான்கு பகுதிகளையும் தேசம்நெற் தணிக்கை செய்து விட்டது.காரணம் புரியவில்லை. நான் இந்துவாக பிறந்ததிற்காக இந்துவையோ தமிழனாக பிறந்ததிற்காக தமிழனையோ தூக்கி வைத்து பாராட்ட முடியாது. இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் எடுக்கவேண்டும். வேறு எந்த மதத்தையோ இனத்தையோ தூக்கிப் பிடிப்பவன் நான் இல்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். தடம்புரண்டு ஓடிய இலங்கை வரலாற்றில் தமிழ் இனத்தை தாழ்த்தியும் சிங்கள இனத்தை மேம்படுத்தியுமே கருத்துக்களை பதியவிட்டிருக்கிறேன். அதற்கும் எனக்கு காரணங்கள் உண்டு. அதை கருத்தாக வெளிப்படுத்தியிருந்தால் நானும் கருத்தாக வெளிப்படுத்தி இருப்பேன். தேசம்நெற்றும் இன்னுமொரு புதுவீச்சுடன் முன் சென்றிருக்கும். அது நடைபெறவில்லை.தவறுகள் எப்பவும் முன்நோக்கி செல்வதற்கேயொழிய பின்வாங்குவதற்கல்ல. ஆரோக்கியமான விடிவை எதிர்பார்ப்போம்.
  நக்கீரா!…எம்மைப் போல் அதுவும் எமது இனத்தில் பிறந்த சிலரால்தான் மனிதநேயம் பாதுகாக்கப்படும் என்ற உள்ளுணர்வுகளுடன் தொடர்ந்தும் எழுதுங்கள். எனது-எமது ஆதரவு என்றும் உங்கள் கருத்துக்களுக்குண்டு.

  Reply
 • palli
  palli

  //காரணம் புரியவில்லை. நான் இந்துவாக பிறந்ததிற்காக இந்துவையோ தமிழனாக பிறந்ததிற்காக தமிழனையோ தூக்கி வைத்து பாராட்ட முடியாது. //
  சந்திரா நான் ஊடகத்துக்கு புதியவன் அதனால் பலரிடம் குட்டு வாங்கி உள்ளேன்; ஆனால் உங்களிடமே பல குட்டு வாங்கினேன்; ஆனாலும் அந்த குட்டெல்லாம் இந்த வாக்கியத்தில் தெரியாமல் போய்விட்டது, நீங்கள் மேல் குறிப்பிட்டதே என் எழுத்து வாழ்வு மூச்சென கூட சொல்லலாம்; இதைதானே சொன்னார்கள் பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம்பிள்ளை தானாகவே வளரும் என, (உவமை பிழையாயின் மன்னிக்கவும்)

  Reply
 • BC
  BC

  இலங்கை ஏழை பெண் தொழிலாளிக்கு நடந்த கொடுமைக்கெதிராக கவிதை எழுதிய நக்கீராவை தொலைபேசியில் துற்றியவர்களின் மனித நேயம் புல்லரிக்கவைக்கிறது. இவர்கள் பின்னோட்டம் எழுத மாட்டார்கள், தங்களது அசிங்க எண்ணம் மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால். தொலைபேசி தான் வசதி.

  Reply
 • pandithar
  pandithar

  முள் முடி தரித்த மனிதம்
  வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றது.

  சபிக்கப்பட்டது மனிதம் அல்ல.
  மனிதத்தின் மீது கோவம் கொண்டிருக்கும்
  கொடுங்கோலர்களே
  இங்கு சபிக்கப்பட்வர்கள்..

  நீயாத்தீர்ப்புக்காக காலம்
  காத்திருக்கும்…

  காத்திருக்கும் கணங்களின் போது
  குற்றப்பத்திரிகையை
  காலமே தயார்ப்படுத்திக்கொண்டிருக்கும்.

  எல்லா கண்ணீருக்கும்
  ஏதோ ஒரு மறு மொழி

  திடுதிடுப்பென எழுதப்படும்..

  ஆரியவதி சிந்திய
  கூரிய கண்ணீர்த்துளிகளுக்கும்
  அது போலவே உண்டு….

  இரத்தத்திலும் கண்ணீரிலும்
  மொழி… மதம்… நிறம்.. எல்லை…
  இவைகள் எதுவுமே தெரிவதில்லை…/

  Reply
 • chandran.raja
  chandran.raja

  //பெண்கள் அமைப்பு இதில் கவனம் செலுத்தாதது ஏன்// பல்லி.
  பெண்களுக்கு பல பிரச்சனைகள் உண்டு. ஆண்களாயின் உழைத்த காசைக் கொடுத்து விட்டு அதிகாரம் செலுத்துவார்கள். அவருக்கு கொடுக்கிற சாப்பாட்டுடன் அந்த அந்த அதிகாரம் நின்றுவிடுவதில்லை. உடுப்பு துவைத்தல் பிள்ளைகளின் வாழ்வில்…. வளர்வில் கவனம் செலுத்துதல்
  படுக்கையை பகிர்ந்துகொள்ளுதல் என்பதைவிட அவரது படுக்கைக்கு தயாராக்குதல் என்பதே சரியாக இருக்கும். குறிப்பிட்ட இந்த சிலவற்றை செய்ய ஒரு பெண்ணுக்கு ஒருநாளில் பதினெட்டு மணத்தியாலங்கள் போதுமானதா? என்பது சந்தேகமே!.
  நான் நினைக்கிறேன் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்து தோன்றியதே பெண்கள் அமைப்பு. பெண்விடுதலை. பெண்கள்பாதுகாப்பு. பெண்கள் முன்னோற்ற….இன்னும் இன்னும்.ஆரியவதி விஷயத்தில் எனக்கு தெரிந்த வரை ராஜேஸ்வரி பாலவோ ஜேர்மனியில் தேவாவோ இது பற்றி அமைதியாக இருந்துவிட முடியாது. இருக்கவும் முடியாது. அதை உறுதியாகச் சொல்லுவேன். ஆனால் இவர்களால் இறுதி வெற்றியை அடைய முடியாது என்பதையும் அதே உறுதியுடன் சொல்ல முடியும். நாட்டிற்கு எப்படி நாம் சொந்தமோ அதேபோல நமக்கும் நாடு சொந்தம்.
  நீ!எப்படி தாய்நாட்டுக்கு உயிரைவிட அழைக்கிறியோ அதேபோல என்னை பாதுகாக்கிற உரிமை நாட்டிற்கும் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் சமூகத்திற்கான உற்பத்தியில் ஈடுபட்டாகவேண்டும். குறிப்பாக வேலை செய்தாகவேண்டும். பிள்ளை பேறுவளர்ச்சியில் அரசாங்கமே பொறுப்புதாரியாக வேண்டும். அரசாங்கம் ஒவ்வொருவரிலும் கவனம் செலுத்தும் போது அங்கு புருஷனின் இடையூறோ சீதனக்கொடுமையையோ கன்னிகழியாமல்
  வாழ்வை முடித்துக்கொள்ளுகிற அவலமோ நடைபெறப் போவதில்லை. இதைத்தான் மாக்ஸியமும் மனிதகுலவரலாறும் தற்கால மனிதநேயமும் எமக்கு புகட்டுகின்றன. அல்லது சில அறிவுறுத்தல் மூலம் விண்ணப்பிக்கின்றன. ஆகவே மொத்தத்தில் முதாலித்தவத்தின் பண-உறவுமுறைலாலேயே அல்லது பத்துபேருக்கு உரியதை ஒருவன் சுவீகரித்துக் கொள்வதாலேயே பெண்அடிமைத்தனமும் விலங்கிடப் பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு வக்கீல் படிப்புமுறைமுறை தேவையில்லை. ஒரு சந்திரன்.ராஜா ஒரு பல்லிக்கு இருக்கிற மனிதநேய அறிவே போதுமானவை.
  இதில் யாரும் சந்தேகம் இருந்தால் கால்மாக்ஸின் போதனையூடாக வளர்ந்திருக்கிற உலகஅனைத்துலக குழுவால் தலைமை தாங்கப்படுகிற நான்காம் அகிலத்தில் இருந்து உங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம். மிகுதி சந்தர்பம் கிடைக்கும் போது.

  Reply
 • Abdul
  Abdul

  //அரேபியர் அளவுக்கு அதிகமான செல்வத்தால் ஆண்டவனையே அறியாது வாழ்பவர் அவர்களுக்கு மனித உணர்வுகள் புரியாது.//தமிழ்மாறன்.

  நன்றாகச் சொன்னீர்கள். மாத்திரமல்ல பணத்திமிரும் அகங்காரமும் கொண்டவர்கள்(எல்லோரும் அல்ல).அதனால்தான் அவர்கள் திமிருடன் சுகபோகத்தில் களித்திருக்க அவர்களின் சாம்ராச்சியத்தினுள் அழையா விருந்தாளியாக வந்த இஸ்ரேல் அவர்களின் கண்களுக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

  கவிஞர் நக்கீரா!

  //எம்தேசப்பெண் ஒருத்தி
  சிலுவை ஏற்றப்பட்டாள்.
  மனிதனே அல்லாதவனுக்கு
  சேவை செய்த குற்றத்துக்காய்”//

  இவ் வரிகளுக்கான தங்களின் விளக்கம்: “இங்கே முழு முஸ்லீங்களைக் குறிக்காது தனிப்பட்ட ஒரு மனிதனின் செயலையே உட்கொணர்ந்தேன்.

  ஆனால் முன்னைய வரிகளில்:

  //கூறான் சுமந்த
  குறை மதியர்களால்
  கூராணிகளால் அறையப்பட்டாள்//

  குர்ஆனை விசுவாசிப்பவர்களின் ஒட்டு மொத்த தாக்குதலாக அல்லவா இது அர்த்தப்படுகிறது.

  ஒரு அநீதி இழைக்கப்பட்ட ஏழைக்காய் சிலுவைகளுடன் கவிதை வடிக்கும் தாங்கள் அந்த சமயத்தினுள்ளும் வாழும் மனிதர்களை; தங்கள் கருத்துக்களுடன் அணி திரள வேண்டிய மனிதர்களை; அவ் அநீதிக்கெதிராய் குரல் தர வேண்டிய மனிதர்களை மேலேயுள்ள வரிகளால் விரட்டியடிப்பது நியாயமா?

  Reply
 • palli
  palli

  //விரட்டியடிப்பது நியாயமா?//
  என்னது விரட்டியடிக்கிறோமா?
  இந்த லொள்ளுதானே எமக்கு வில்லங்கம்;

  Reply
 • suban
  suban

  அப்துல் நீங்கள் கவிதையில் வெட்டி எடுத்த இரு துண்டுகளுக்கும் விளக்கம் நல்லாக விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இந்த இரு பின்னூட்டத்திலும் உள்ளது.
  Nackeera on September 14, 2010 11:52 am
  Nackeera on September 15, 2010 9:50 am

  மேலும் நக்கீராவின் முழுப் பின்னூட்டங்களையும் வாசித்தால் கவிதை முழுதாய் விளங்கும்

  Reply
 • Nackeera
  Nackeera

  சந்திரன்! ஆரியவதியின் பிரச்சனையை பலதமிழ் ஊடகங்கள் அல்லது புலம்பெயர் ஊடகங்கள் கூட கடுமையாக விமர்சிக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அது ஒரு செய்தி என்பதுடன் மட்டும் நின்றுவிட்டது. மனிதஉரிமை பேசும் வெள்ளை நாட்டுப்பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாகக் கூட வரவில்லை.
  இதே ஒரு செயல் ஒரு பணக்காரப்பெண்ணுக்கோ அல்லது ஒரு ஐரொப்பியப் பெண்ணுக்கோ நடந்திருந்தால் ஊடகங்கள் இப்படி மெளளம் சாதித்திருக்குமா? எடுத்ததுக்கும் கண்டன ஊர்வலம் உண்டாவிரதம் என்று இருக்கும் மக்களும் நாடுகளும் எங்கோ போயின? சிங்களச்சமூகம் மேலும் எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. தேசியம் மக்கள் என்று பேசும் அரசியல்வாதிகள் ஆணியடிப்பு நடவடிக்கையை ஒரு இலங்கைத் தேசியத்தின் பிரச்சனையாகப் பார்க்க மறுக்கிறார்கள். பெண் என்பதாலா? ஏழைத் தொழிலாளி என்பதாலா? சவுதியில் இருந்து வேலைவாய்ப்புகள் குறைந்து விடும் என்பதாலா? என்னிடம் பதில்கள் இல்லாத பலகேள்விகள் உண்டு. மனித உரிமைகள் அமைப்பிடம் முறையிட்டுள்ளார்கள். போதுமா? இந்த அவமான நிகழ்வு இலங்கை மக்களிடையே ஒரு தேசிய மனிதாபிமான உணர்வுகளை வளர்க்க உதவும் என்பதை ஏன் அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள்.நான் இதை வெறும் இலங்கைக்குள் மட்டும் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. இதை ஏழை; தொழிலாளி: பெண்; பெளத்தமதத்தவர்: இஸ்லாம்: கூறான்: இவற்றுக்கப்பால் ஒரு பெண்மேல் அதுவும் பலவீனமானவர்கள் மேல் ஆண்களின் அல்லது ஆதிக்கங்களின் பார்வை எப்படி அமைந்திருக்கிறது என்றும் பார்க்க வேண்டியுள்ளது. இக்கவிதை கூடக் காலம்கடந்து வந்ததற்குக் காரணம். நான் மனிதநேயர்களிடம் எதிர்பாத்திருந்த காலம் என்று கூறலாம். ஒரு கட்சிக்காரனுக்கு மற்றை கட்சிக்காரன் அடித்தால் போதும். சத்தியாக்கிரகம் தீக்குளிப்பு போராட்டம் ஊர்வலம். இந்த ஆரியவதிக்கு..?

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லி கவிதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.

  பிசி: கொலைகள் மிரட்டலக்கள் என்பற்றைக் கடந்து வந்திருக்கிறேன். குழந்தைப்பிள்ளைகளுடன் கூடி எனது வீட்டுக்கு இரவு முழுவதும் கொலை மிரட்டளின் பின் அடுத்தநாள் வீட்டுக்குக் கத்தியுடன் வந்த நிகழ்வும் நடந்தது. அது மட்டுமல்ல நான் பேனை தூக்கக் கூடாது என்ற மிரட்டலும் வந்தது. உலகில் ஆறும் இருக்கிறது அள்ளூறும் இருக்கிறது. அள்ளூறுகளைச் சுத்தம் செய்யவே பேனாக்கள் முயலவேண்டும். சமூகம் என்றால் இப்படித்தான் இருக்கும். நாமும் தெரிந்தோ தெரியாமலோ பிழைகளை விடுகிறோம் தானே. பிசி. தொலைபேசி விடயத்தைக் கருத்தில் கொண்டதற்கு மிக்க நன்றி. இத்தொலைபேசி தொடர்பிலுள்ள வேதனை என்னவென்றால் அடிமனதில் விதைக்கப்பட்டிருக்கும் துவேசத்தைத் தான் பார்த்தேன். இங்கே தேசியம் சமூகம் மனிதம் என்ற சிந்தனைகள் கூறுபோடப்பட்டிருக்கும் நிலையைக் கண்டேன். என்ன முதுகில் முத்திரை குத்துவதற்கு இடம்பார்க்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன் பிசி. சரி அப்படியான கருத்துக்களும் வரட்டுமே என்றுதான் தேசத்தில் பின்னோட்டக் களத்தில் எழுதுங்கள் என்றேன். வாசகர்கள் என்னை விடத் திறமான சரியான பதில்களைக் கொடுப்பார்கள் அல்லவா. நன்றி பிசி

  Reply
 • Abdul
  Abdul

  நண்பர் பல்லி!
  //என்னது விரட்டியடிக்கிறோமா?
  இந்த லொள்ளுதானே எமக்கு வில்லங்கம்.//

  கவிஞரின் “கூறான் சுமந்த குறை மதியாளர்களால்” என்ற பொதுமைப்படுத்தல் மூலம் கவிஞரின் கருத்துக்களுடன் அணிசேர வேண்டிய நானும் அந்நியப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். அதனால்தான் (கவிஞரின் கருத்துக்களுடன் ஒன்றுசேர விடாமல்) விரட்டப்படுவதாக எழுதினேன். எனது சொற்பதம் மிகையானதாக இருப்பின் தங்களிடமும் கவிஞரிடமும் மன்னிப்புக் கோருகின்றேன்.

  “விரட்டியடிக்கிறோமா?” இப்பதத்தின் மூலம்; கவிஞரை நோக்கிய எனது கேள்வி (ஆதங்கம்)தங்களையும் சேர்த்து நான் பொதுமைப்படுத்தி விட்டதாக தாங்கள் அர்த்தம் கொண்டுள்ளீர்கள் என எண்ணுகிறேன். எனது ஆதங்கம் கவிஞரை நோக்கியது மாத்திரம்தான் என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.(எனது தவறுகளைத் திருத்துகின்ற உரிமை அண்ணா பல்லிக்கும் உண்டு)

  நண்பர் சுபன்!
  எனது பின்னோட்டத்துக்கு நட்பு ரீதியான தங்களின் பின்னோட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி. உங்களைப் போன்ற பல பேர்தான் இன்றைய காலத்தின் தேவை. அப்போதுதான் கடந்த கால அனுபவங்களின் ஊடாக நாம் கற்ற பாடத்தை வைத்து ஒரு புதிய தெளிவான பாதையை எமது அடுத்த சந்ததியினருக்காக எம்மால் காட்ட முடியும். இது நிகழ்காலத்தின் சந்ததிகளாகிய எமது தார்மீக பொறுப்பு.

  Reply
 • Nackeera
  Nackeera

  “ஆண்களாயின் உழைத்த காசைக் கொடுத்து விட்டு அதிகாரம் செலுத்துவார்கள். அவருக்கு கொடுக்கிற சாப்பாட்டுடன் அந்த அந்த அதிகாரம் நின்றுவிடுவதில்லை” ஐயோ சந்திரன் இத்துடன் நின்றால் போதாதா. சில ஆண்கள் உழைப்பதும் தானே அவர்கள் வாழ்வாகிறது. சமஉரிமை வேலை என்று புறப்பட்டு பெண்கள் படும் சித்திரவதைகளைத் தாங்க முடியவில்லை. 8மணித்தியாலம் வேலை செய்து விட்டு வந்து நித்திரையே இல்லாமல் வீட்டு வேலை செய்யும் பெண்களை நினைத்தால் இப்படியும் ஒரு வாழ்க்கை தேவையா என்று எண்ணத்தோன்றும். இது தற்கொலைக்குச் சமானமாக அல்லவா இருக்கிறது. வேலைக்குப் போகும் மனைவியைக் கூட அவள் ஒரு முழுநேர வீட்டு மனைவி போல் நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல முதலாளித்துவ நாடுகளில் பொருளாகதாரம் பொருளாதாரம் என்று பெண்ணுக்குரிய ஆதாரங்களையே அழித்துவிடுகிறார்கள். இந்தப் பெண்களுக்கு எத்தனை அதிகாரிகள். வேலையில் பல அதிகாரிகள் வீட்டில் பிள்ளைகள் கூட அதிகாரிகள். என்னைப் பொறுத்தவரை பெண் தொடர்ந்தும் அடிமையாகத்தான் இருக்கிறாள். அதற்கான சரியான போராட்டம் நீதி சரியாக வைக்கப்படவில்லை என்பது எனது கருத்து. ஐரோப்பாவில் உள்ள பெண்நிலை வாதங்களும் ஒரு மாயையான பொருளாதார அடிப்படை மனநிலையைக் கொண்டதாகவே இருக்கிறது. சம உரிமை என்பது ஆண்கள் போல் வாழ்வது என்று எடுகோள் முற்றிலும் பிழையானது. பெண் ஆணைமாதிரி வாழ்வதல்ல பெண்ணியம். பெண் பெண்ணாய் வாழ்வதுதான் பெண்ணியம். எந்த ஒரு தலையீடுகளோ மூளைச்சலவைகளோ பொருளாதார நெருக்கடிகளோ இன்றி தன்னைத் தானே நிர்ணயிக்கும் உரிமை பெண்ணுக்கு என்று வருகிறதோ அதுவே என்கருத்தில் பெண்ணுரிமையாகும். இது பிழையாகவும் இருக்கலாம் இது என்கருத்து மட்டுமே.

  Reply
 • pandithar
  pandithar

  பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
  தன் பிள்ளை தானாக வளரும்…

  அப்படி என்றால் என்ன அர்த்தம்?…
  பல்லி சொல்லுவீர்களா?………

  Reply
 • palli
  palli

  //அப்படி என்றால் என்ன அர்த்தம்?…
  பல்லி சொல்லுவீர்களா?………//
  இது பண்டிதர் சமாசாரம் பல்லியிடம் கேக்கலாமா??

  இப்படியும் சொல்லலாம், மற்றவர்கள் கருத்தை கவனமாக அல்லது ஆழமாக படித்தால் எமக்கும் கருதெழுதும் திறன்வரும்;
  என்னமாய் படுத்துறியள்?

  Reply
 • palli
  palli

  //என்னைப் பொறுத்தவரை பெண் தொடர்ந்தும் அடிமையாகத்தான் இருக்கிறாள்.//

  விளையும் நிலபோல
  பெண் விடுதலை இருக்க வேண்டும்;
  வீங்கிய விரல்கள் போலவே
  இன்று விடுதலை பெண்கள் செயல்பாடு,

  விடுதலை கிடைத்த பெண்கள்
  விடுதலை கேட்பதால்
  அடிமை வாழ் பெண்கள்
  அடிமையாய் இருக்கிறார்கள்.

  //பல்லி கவிதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.//

  நக்கீரா கவியெழுத
  நாலுபேர் விமர்சிக்க
  விரும்பியோர் கவியெழுத
  நன்மை பல சமூகத்துக்கே;

  //இந்தப் பெண்களுக்கு எத்தனை அதிகாரிகள்//

  அத்தனை அதிகாரிகளும்
  பெண்கள் ஆக வேண்டாமோ
  அதுக்கான விழிப்புனர்வு
  வீதிவரை வர வேண்டும்;

  பாரதியின் கனவு பல
  அதிலே இது ஒன்று
  அதுக்கான போராட்டம்
  அடிமை பெண்கள் செய்யலாமே:

  முடியை குறைப்பதுதான்
  விடுதலை என்போரால்
  முற்போக்கு பெண்களும்
  முடங்கி போய் இருக்கிறார்கள்.

  தொடருவார் நக்கீரா;

  Reply
 • Nackeera
  Nackeera

  பண்டிதர்! கவிதை நன்றாக இருக்கிறது.
  சுபன்! அப்துலை தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி. கவிதையை மட்டுமல்ல பின்நோட்டத்தையும் நன்றாக வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. தொடருங்கள்.

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லியின் வேண்டுகோளுக்கிணங்க:-

  பண்டிதரே பாடம் கேட்கும்
  பல்லி என்னை
  கவி பாடச்சொன்னால்
  நான் கிளைதாவுவேன் (கவி- ஆண்குரங்கு என்று பொருள்)

  கவிபாடிப் போனால்
  புவிதாங்குமோ
  செவி வாங்குமோ?

  பெண்ணின் சிறை
  அவளின் பேதமைமனம்

  சிறைப்பட்ட தன் மனதாலே
  குறைப்பட்டாள்
  சிறைப்பட்டாள்
  பின்
  கறைப்பட்டாள் போ.

  ஆடை குறைத்தாள்
  அழகென்றாள்
  காட்டி மறைத்தாள்
  கவர்ச்சி என்றாள்
  ஊட்டி வளர்த்தாள்
  பாலனையா
  காலனையா
  காமக்காலனை.

  பாலனின் பாற்குடங்களில்
  சிலிக்கோன் பை

  தலையில் வைக்கும் கொள்ளி
  வாயிகளில்

  அந்தி மயங்கினால்
  சுந்தரி நினைப்பு.

  தண்ணியிலே தவழ்வதுதான்
  விடுதலை என்றால்
  அது விடுதலையல்லத் தாயே
  கெடு தலை.

  ஆண் கெட்டால்
  அவனுடன் போகும்
  பெண் கெட்டால்
  வம்சமே போகும்.

  ஆணாய் வாழ்வதல்ல விடுதலை
  பெண் பெண்ணாய் வாழ்வதே
  விடுதலை பொன்னே!

  ஆடு குட்டிபோட்டால்
  மறிக்குட்டிக்கே மவுசு

  நாய் குட்டி போட்டால்
  பெண்டைக் குட்டிக்கே
  பெருமை

  பெண்ணைப் பெற்றுவிட்டால்
  ஏனிந்தக் கொடுமை

  விடுதலை வேண்டும்
  பெண்ணுக்கு
  அவர்கள் மனங்களில் இருந்து
  அடிமை உணர்வுகளில் இருந்து

  மானிடத்துக்குத் தேவை
  மரியாதை
  இது பெண்ணுக்குக்
  குறையாமை வேண்டும்

  பிறப்பு உறுப்புக்களைச் சுமப்பவளல்ல பெண்
  பொறுப்பு மிக்க உலகின் சிறப்பின் கண்ணே பெண்

  தாயின்றிப் போனால்
  தரணியிலுண்டோ வாழ்வு
  ஆணினமே எண்ணிப்பார்
  அகில அழிவே அதன் வேள்வு.

  பெண்ணில் பிறந்து
  பெண்ணில் உண்டு
  பெண்ணிலே கலந்து
  பெண்ணுடன் வாழ்ந்து
  பெண்ணாலே மடிந்தபின்னும்
  மண்ணென்னும் பெண்ணுண்ணும் போ

  கவியாளர்களே
  கவி காவும் வேளை
  புவி தாவி வாரும்.-

  Reply
 • Sothilingam T
  Sothilingam T

  நல்லறிவு
  விருந்து தந்த
  அவை(க்)
  கவிஞர்களுக்கு
  நன்றி!

  Reply
 • SUDA
  SUDA

  நக்கீரா

  //கூறான் சுமந்த
  குறை மதியர்களால்//

  கூறான் சுமந்த குறை மதியனால் என்று சொல்லியிருந்தால் கவிதையில் என்ன பிழை வந்திருக்குமோ? ஒருமையில் சொல்ல வேண்டியதை பன்மையில் விதந்துரைத்தமைக்கு விளக்கம் என்னவோ??

  Reply
 • chandran.raja
  chandran.raja

  காட்டார் நாட்டில் வீட்டுபணிப் பெண்ணாகப் கடமையாற்றிய மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த 27 வயதுடைய மஜீது ஹில்மியா என்பவரே இவ்வாறு தீகாயங்களுடன் நாடுதிரும்பி முந்தல்மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளவராகும். தான் பணிப்பெண்ணாக கடமையாற்றிய வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுயமாக ஏற்பட்டதவறுக்காக வீட்டு ஏஜமானி தன்மீது சுடுநீர் அடங்கிய பாத்திரம் ஒன்றை வீசி தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் பொலீஸ்சாரிடம் தெரிவித்துள்ளார்.

  இதனாலேயே தனக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் கடந்த 13-ம் திகதி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் நேற்று முன்தினம் நாடு திரும்பியதாகவும் அப்பெண் பொலீசாரிடம் தெரிவித்தார். இந்த செய்தி 17-ம் திகதிக்குரிய “தேனீ” இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.

  Reply
 • palli
  palli

  //பிறப்பு உறுப்புக்களைச் சுமப்பவளல்ல பெண்
  பொறுப்பு மிக்க உலகின் சிறப்பின் கண்ணே பெண்//

  குறி சொல்லி கவியெழுதி
  குத்தாட்டம் போடுவோரே
  நக்கீரன் கவி பார்த்து
  பெண் பெருமை சேருங்கள்.

  நல்லறிவு இருந்ததினால்
  நன்றி சொன்ன சோதிக்கு
  நன்றியென நாம் சொன்னால்
  நன்றியே கவிதையாகும்;

  ஆண்பாதி பெண்பாதி
  கடவுளின் கதை ஒன்று
  அன்றாட வாழ்வில் மட்டும்
  பெண்பாவி எதனாலே:

  //வீட்டுக்குக் கத்தியுடன் வந்த நிகழ்வும் நடந்தது.//

  புத்தியை தொலைத்துவிட்டு
  கத்தியுடன் என்வீடு வந்து
  கத்தி விட்டு போனார்கள்
  பேனாவின் பலம் அறியாமல்;

  //விடுதலை வேண்டும்பெண்ணுக்கு//

  ஆனால் அது விடுதலையாகவே வேண்டும்;
  நட்புடன் பல்லி;

  Reply
 • Nackeera
  Nackeera

  சோதி!
  நன்றி சோதி!!!
  கவி விதைத்த பலனால்
  கவிஞனாகி விடுவேனோ
  நெஞ்சில் கவி தைத்து
  கவி விதைத்த
  கவி வித்தைகள் பலவுண்டே.

  Reply
 • Nackeera
  Nackeera

  சுதா!
  ஆரியவதிக்கு நடந்த அநீதி ஒரு தனிமனிதனால் இழைக்கப்பட்டாலும். அது நாடு சார்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்றால் சவுதி என்ன நடவடிக்கை எடுத்தது? சிகிச்சை அழித்ததா? நட்ட ஈடு மானநட்ட வழக்கு என்று எதாவது நடத்தியதா? பெண்கள் மேல் உள்ள பார்வை எப்படி உள்ளது. சரியாச்சட்டம் பெண்கள் மேல்தானே ஆழமாகவும் அதிகமாகவும் பாய்கிறது. இஸ்லாத்தின் நிறைகுறைகளின் அடித்தளமே சவுதிதானே. மற்றய இஸ்லாமியராலோ இஸ்லாமிய நாடுகளிலோ இது நடந்திருந்தால் குறைத்து மதிப்பிடலாம். ஆணிவேரல்லவா அழுகியிருக்கிறது. மேலே பொதுமைப்படுத்தல் என்பது பற்றி கூறியிருக்கிறேன். இதை அலங்காரம் என்று மட்டும் எடுப்பது தகாது. ஆரியவதிக்கு நடந்தது ஒரு சிறு குறியீடு மட்டுமே. இன்னும் எத்தனையோ விடயங்கள் வெளியில் வராமல் இருக்கிறது. மிகப்பாரதூரமான மனிதமீறலை எப்படி சுதா ஒருமைப்படுத்த முடியும்? மனிதன் மாசற்று நல்லவனாகவே பிறக்கிறான். சந்தர்ப்பம்: சூழ்நிலை: அறிவு: முக்கியமாக மதம்: கலாச்சாரங்கள் தானே மனிதனை உருவாக்குகிறது. இப்படி உருவான மனிதனையும் சமூகம்தானே உருவாக்கியது. முக்கியமாக சவுதி என்று வரும்போது சமயம்தானே முன்நிற்கிறது சுதா. முக்கியமாக சிலநாடுகளை நோக்கும் போது சிலவிடங்கள் தானே நினைவில் வரும் நோர்வேயை எடுத்துக் கொண்டால் நள்ளிரவுச்சூரியன் அல்லது வடஒளிதான் நினைவுக்கு வரும். சவுதி என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவில் வரும்? தமிழில் இடுகுறிப்பெயர் என்ற ஒன்று கவிதைகளில் அதிகம் பாவிக்கப்படும். சபுதியை நினைத்தவடன் எது நினைவில் வரும் இஸ்லாம் மெக்கா கூறான் எதுவுமே ஞாபகத்தில் வராதா சுதா? ஒரு மனிதமீறலை ஒரு தனிமனிதனுக்கும் அடிக்கிவிடுவதால் கவிதையும் ஒரு மனிதனுக்குள்ளே அடங்கிவிடும் என்பதால்தான் பன்மைப்படுத்தினேன். ஒரு சுட்டிக்காட்டல் என்று முக்கியமாகப் புதுக்கவிதைகளில் வரும் போது படிமமாகப் பன்மைப்படுத்தல் அவசியமாயிருந்தது. என் பதில் தெளிவாக இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. சந்தேகமிருந்தால் கேளுங்கள்.

  Reply
 • BC
  BC

  //சுதா- கூறான் சுமந்த குறை மதியனால் என்று சொல்லியிருந்தால் கவிதையில் என்ன பிழை வந்திருக்குமோ? ஒருமையில் சொல்ல வேண்டியதை பன்மையில் விதந்துரைத்தமைக்கு விளக்கம் என்னவோ?? //
  கூறான் சுமந்த குறை மதியனால் என்று ஒருமையில் அந்த அநீதிக்கு எதிராக கவிஞர் நக்கீரா எழுதாததிற்க்கு காரணம் அந்த கொடுமையை செய்தவர்கள் இருவர், மனைவி ஆணியை நெருப்பில் சூடாக்கி எடுத்து கொடுப்பாராம் கணவர் அவற்றை ஆரியவதியின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் அடித்து ஏற்றுவாராம்.இதனால் தான் கவிஞர் பன்மையில் குறிப்பிட்டார் என்று எனது நம்பிக்கை.
  ஏன் சுதா அநியாயத்துக்கு எதிராக கண்டணம் செய்வதற்க்கு ஒருமை, பன்மை எல்லாம் தேவையா? இங்கு தடையாக இருப்பது மதம். அதிலும் கூறான் சுமந்த குறை மதி. மிக மோசமானது.

  Reply
 • aras
  aras

  “பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
  தன் பிள்ளை தானாக வளரும்”

  என்ன அர்த்தம் என்றால் பிறருடைய பிள்ளையாகிய தன் மனைவியை சாப்பிடு சாப்பிடு என அன்போடு ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் தன்னுடைய பிள்ளை தானாக வளரும்.

  Reply
 • palli
  palli

  //என்ன அர்த்தம் என்றால் பிறருடைய பிள்ளையாகிய தன் மனைவியை சாப்பிடு சாப்பிடு என அன்போடு ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் தன்னுடைய பிள்ளை தானாக வளரும்.//
  போதுமா பண்டிதர் விளக்கம், எல்லாமே சுயநலம்தான்,

  Reply
 • SUDA
  SUDA

  //நோர்வேயை எடுத்துக் கொண்டால் நள்ளிரவுச்சூரியன் அல்லது வடஒளிதான் நினைவுக்கு வரும்.//
  //சபுதியை நினைத்தவடன் எது நினைவில் வரும் இஸ்லாம் மெக்கா கூறான் எதுவுமே ஞாபகத்தில் வராதா சுதா? //நக்கீரா

  அப்படியென்றால் நோர்வேயில் இப்படியொரு அநீதி நடைபெற்றிருந்தால் “நள்ளிரவில் சூரியன் காணும் குருடர்களால்” வத்திக்கானில் நடைபெற்றிருந்தால் “பைபிள் படித்த பைத்தியக்காரர்களால்” இலங்கையில் நடைபெற்றிருந்தால் “புத்த நாட்டின் பித்தர்களால்” ஏன் அதுவே இந்தியாவில் நடைபெற்றிருந்தால் “இந்து நாட்டின் அந்தகர்களால்” இப்படியெல்லாமா கவிதை வடிப்பீர்கள்?

  சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் ஒரு புதிய கருத்தியல் தளத்தினையும் உங்கள் கவிகளினூடாக உருவாக்க நீங்கள் விரும்பினால் ஒரு சமுதாயத்தினரை அல்லது சமயத்தினரை புறந்தள்ளுகின்ற இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் தற்கால சினிமாக்களின் கருக்களைப் போல்தான் தங்கள் கவிதையும்.

  Reply
 • palli
  palli

  சுதா உங்களுக்கு நக்கீராவின் கவிவரிகள் மனதை காயபடுத்தியிருந்தால் நக்கீராவின் நண்பனாய் மன்னிப்பு கேக்கிறேன்; நக்கீராவின் எழுத்தில் தவறு என்பதுக்காய் அல்ல; எமது நோக்கத்தில் இப்படியான தடங்கலை தவிர்ப்பதுக்காய்;
  வார்த்தையை வைத்து வாதம் வேண்டாம்; அதுக்கான தளம் அல்ல கவிதை; குறை சொல்லி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு என்பது கவிக்கு மட்டுமே சொந்தம்,

  Reply
 • Nackeera
  Nackeera

  சுதா!
  நான் ஏற்கனவே கூறியது போல் ஒரு தனிமனிதனுயை செயல்பாடு என்பதால் ஒருமையில் இப்படி எழுதியிருந்தேன்
  “மனிதனே அல்லாதவனுக்கு
  சேவை செய்த குற்றத்துக்காய்”

  அடுத்து ஒருசமுதாயம் பற்றி குறைகளை எடுத்தியம்புவது முக்கியம். பிழைகள் என்பன தட்டிக் கேட்காது கண்டும் காணாது எழுதுவது நீங்கள் சொல்வதுபோல் முக்கியமாக இந்திய சினிமாப்படம் போன்று ஆகிவிடும். சமூகமறுமலர்ச்சியைப் பற்றி பேசும் யாவரும் அடிமைப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆகுபெயர் என்றால் என்ன? எதற்காக அது கவிதைகளில் பாவிக்கப்படுகிறது. பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். சவுதியில் 98வீதமானவர்கள் இஸ்லாமியர் கூரானை வாழ்வியலாகக் கொண்டவர்கள். இப்படி ஒரு மனிதமீறல் அங்கு நடந்திருக்கிறது. சவுதி கண்டும் காணாமல் நடந்திருக்கிறது. இதைச் சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்களா? கூறானோ இஸ்லாமோ சாட்சிக்கு வராது என்பதால் இவற்றை வைத்து நடத்தப்படும் அநியாயங்களைத் எழுதக்கூடாது என்கிறீர்களா? ஒரு தனிமனிதனை மட்டும் சுட்டிக்காட்டுவதுடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது.
  நீங்கள் குறிப்பிட்ட //”அப்படியென்றால் நோர்வேயில் இப்படியொரு அநீதி நடைபெற்றிருந்தால் “நள்ளிரவில் சூரியன் காணும் குருடர்களால்” வத்திக்கானில் நடைபெற்றிருந்தால் “பைபிள் படித்த பைத்தியக்காரர்களால்” இலங்கையில் நடைபெற்றிருந்தால் “புத்த நாட்டின் பித்தர்களால்” ஏன் அதுவே இந்தியாவில் நடைபெற்றிருந்தால் “இந்து நாட்டின் அந்தகர்களால்” இப்படியெல்லாமா கவிதை வடிப்பீர்கள்” //இது இடம் பொருள் எனப் பொருந்தி வந்தால் கவிதை மரபுக்கமைய எழுதால் என்கிறதே யாப்பு இலக்கணம். நடிகையுடன் தொடர்பு வைத்திருந்த நித்தியானந்தாவுடன் தொடர்பு படுத்தி இந்து மதம் நாற்றப்படவில்லையா? அமெரிக்க புஸ் சிலுவைப்போர் தொடுக்கிறார் என்று சொல்லவில்லையா. பொதுமைப்படுத்தல்: ஒன்று இன்னொன்றுக்காக ஆகிவருதல் காரணப்பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் உவமான உவமேய படிமங்கள் என்பன இன்றி கவிதையே இல்லை எனலாம். சரி “சிங்களத்தீவினிற்கோர் பாலமமைப்போம்” என்று பாரதி ஏன்பாடினான். பாரதி பேசும் மொழியைக் கொண்ட தமிழர்கள் இலங்கையில் வாழவில்லையா? கவிதைகள் இப்படித்தான் சுதா. ஒரு தனிமனித செய்பாடு ஒரு மொழியை இனத்தை மதத்தைச் சுட்டிக்காட்டும். ஒரு தனிமனிதனுடைய மனிதமீறலை ஆதரித்த ஒரு புனிதமான நாடு மதம் மறை என்பன கவிதை மரபுப்படி விழிப்புக்குரியது. அந்த தனிமனிதனுடைய நடவடிக்கையை ஒரு அரசுமட்டுமல்ல சமூகமே மறைத்திருக்கிறது. அந்த ஏழைப்பெண்ணுக்கு செய்யவேண்டிய எந்த உதவிகளையோ பாதுகாப்பையோ திருக்கூறானைச் சுமந்த சபுதி எனும் புனிதநாடு செய்யவில்லையே. இங்கே இஸ்லாமும் கூறானும் பேசப்படுகிறது என்பதற்காக மற்றை மதங்கள் சரியானவை என்று அர்த்தம் கொண்டு விடாதீர்கள். நான் யாரையும் காயப்படுத்த கவிதை எழுதவில்லை. இருந்தாலும் சமூகத்தின் மேல் பலவீனப்பட்ட மக்கள் மேல் அதிகாரம் செலுத்தும் ஆதிக்கவெறிகளின் மேல் எழுத்தாணிகள் பாயும் போது காயங்கள் தவிர்க்க முடியாதனவாகி விடுகிறது. நான் எழுதிய காரணங்கள் உங்கள் காயங்களுக்கு மருந்தாக இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவேன்.

  Reply
 • Nackeera
  Nackeera

  சந்திரன் ராஜா! தகவலுக்கு நன்றி.
  இது என்ன கொடுமை மனிதா! நாட்டை நம்பித்தானே மனிதர்கள் போகிறார்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பைக் கொடுக்க வேண்டியது அந்தநாடல்லவா? சரி எஜமானி அம்மா செய்தாள் எஜமான் என்ன செய்தார்? இப்படியான நடவடிக்கைகளை ஒரு மனிதச் செயற்டாக என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு முன்னும் பின்னும் இருக்கும் சமூகப்பிரச்சனை அடிப்படை சிந்தனை அனைத்தையும் ஒன்று கூட்டியே பார்க்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கிவிடலாம். ஒரு மனிதனின் உடலில் முக்கியமாக ஒரு பெண்ணின் உடலை அவள் அனுமதியின்றித் தொட கடவுளுக்கே (இருந்தால்) உரிமை கிடையாது. இது கணவனானாலும் இதுதான் மனுநீதி.

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லி!
  நன்றாகக் கவி எழுதுகிறீர்கள்

  நன்றிலிருந்தே நன்றியானது
  அன்றிலிருந்தே ஆணவம் போனது.

  “குறி சொல்லி கவியெழுதி
  குத்தாட்டம் போடுவோரே” – பல்லி

  இந்தக்குறி எந்தக்குறி?
  குறி சொல்வார் பல்லி ஐயா

  குறிகொண்ட குறிதேடி
  குறிப்பறிவாள் குறை கூறும்
  குறியற்ற மானிடனே
  வாழ்வின் குறி
  மனிதம் என்று அறி
  மானிடமே குறி.

  குறிவைத்துக்
  குறி சொன்னேன்
  நெற்றியில்
  குறி வைத்து விடாதீர்கள்.

  “ஆண்பாதி பெண்பாதி
  கடவுளின் கதை ஒன்று
  அன்றாட வாழ்வில் மட்டும்
  பெண்பாவி எதனாலே”

  பெண்பாவி ஆனதெல்லாம்
  பெண்சாதி ஆன
  பெண் சாதி ஆனதினால்.

  கத்தியுடன் வந்தவர்கள்
  கத்திச் சொன்ன விடயம்
  புத்தியைப் சுத்தி வை
  பேனாவினுள் எட்டி வை
  பத்திரிகையில் வடிக்காதே

  சித்தி பெற்றாரோ
  சிறைக்கதவுகள் திறக்கப் பெற்றார்.
  கற்றாரோ
  இல்லை
  கத்திக் கதை ஒன்று
  கட்டி விட்டுள்ளார்.
  பிரமனனுக்கு சாட்சியாக
  மகிழம் பூ
  பினாமியனுக்கு சாட்சியாக
  பிராமணி.
  திராணியற்ற பிராமணி
  பிரமம் அறியாப் பிணி மணி

  Reply
 • Nackeera
  Nackeera

  பண்டிதர்!
  “எல்லா கண்ணீருக்கும்
  ஏதோ ஒரு மறு மொழி

  திடுதிடுப்பென எழுதப்படும்..”

  குடம் குடமாய் கண்ணீரை
  கரை உடைத்துப் பாயவிடும்
  பெண்டிரின் கண்ணீரும்
  கனரக ஆயுதமே.

  ஆரியவதியும்
  மஜிது ஹலமியாவும்
  விட்டகண்ணீரை
  ஆயுதமாக்க
  மனிதம் ஆயுத்தம் இல்லையே.
  ஆ(மாடு) யுத்தமாகிறது
  ஆயுத்தம்
  ஆகா யுத்தமாக

  Reply
 • palli
  palli

  //இந்தக்குறி எந்தக்குறி?
  குறி சொல்வார் பல்லி ஐயா//

  ஆகா ஆகா அருமை அருமை
  யாரங்கே தூங்குவது
  மணியோடு பெயர் சேர்த்து
  கவிதை சொன்ன பெண் எங்கே;

  //குறிவைத்துக்
  குறி சொன்னேன்//

  வைத்த குறி தப்பவில்லை
  வாழ்த்துக்கள் நக்கீரா
  பல்லி சொன்ன புள்ளிக்கு
  கோலமாய் உன் (ங்கள்) கவிதை;

  //பெண்பாவி ஆனதெல்லாம்
  பெண்சாதி ஆன
  பெண் சாதி ஆனதினால்.//

  சாதி சண்டை வந்துவிட்டால்
  சந்த்ததிக்கு ஆகாது
  பெண்சாதி பிளவுபட்டால்
  வாழ்க்கையே தொலைந்துவிடும்;

  //புத்தியைப் சுத்தி வை
  பேனாவினுள் எட்டி வை//

  இலகுவான வழி இதுக்கு
  இயக்கத்தில் சேருவது
  இயக்கத்தில் சேருவதற்க்கு
  இதுதானே தகுதி என்பார்:

  //எல்லா கண்ணீருக்கும்
  ஏதோ ஒரு மறு மொழி//

  ஏழைகள் கண்ணில் மட்டும்
  ஏன் இந்த கேள்விகுறி
  கண்ணிருந்தும் பார்க்காத
  கவலையற்ற அரசாலோ;

  //ஆரியவதியும்
  மஜிது ஹலமியாவும்
  விட்டகண்ணீரை//

  ஏழாற்று பிரிவு போல்
  எடுத்துரைப்போம் சமூகத்துக்கு
  கடமையாய் நாம் செய்வோம்
  அறிவுரையாய் அனுபவமாய்;

  நட்புடன் பல்லி;

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இதிலிருந்து நாம் எதைக்கற்றுக் கொள்ளப் போகிறோம் நக்கீரா!.இதுவே ஐரோப்பிய நாட்டிலேயோ அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாட்டிலேயோ நடந்திருந்தால் வேலை அமர்த்திய வீட்டுகாரர்களை நீதிமன்றம்-மறியலிலேயே காணமுடியும்.
  இதற்கு காரணம் இந்த முதாலிளித்துவநாடுகள் மனம் திருந்தி நல்லவராக வந்து விட்டார்கள் என்பது அர்த்தமல்ல. தொழில்புரட்சி மூலம் பல தொழிலாளர் போராட்ட களை கண்டநாடு. இந்த போராட்டங்கள் மூலமாகவே தொழிலாளர்பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன.
  இந்த சட்டங்களை தகர்கிறவேலைகள் நடந்துகொண்டிருந்தாலும் முழுமையாக சாதிப்பதற்கு சாத்தியம் இல்லையென்பதையே உணர்த்துகிறது.ஏனெனில் வரலாறும் மனித நாகரீகமும் எப்பவும் முன்நோக்கி செல்பவையே!.
  இன்றைக்கிருக்கிற எட்டுமணத்தியாலவேலை ஏழரைமணிவேலை இரத்தம்சிந்தி பல தொழிலாளர்களின் தியாகத்தால் உருவானவையே! இதுவெல்லாம் முதலாளிகளின் கனிவுமனத்தால் ஏற்பட்ட இயங்கியல்வாதப்போக்கை எந்தவொரு வர்க்கநனவுள்ளவ
  னும் மறந்துவிடலாகாது.
  மாக்ஸிம்கார்க்கியின் “தாய்” என்கிற நாவலே அக்டோபர் புரட்சியை கொண்டு வந்தது என்று சொல்பவர்களும் உண்டு .இந்த நாவலும் கணிசமான பங்கை புரட்சிக்கு செலுத்தியிருக்கிறது என்பதே உண்மை. இது இப்படியிருக்க……
  அரேபியநாடுகள் தொழில்புரட்சி என்ன? என்பதை அறியாதவையே!. இன்னும் நிலப்பிரபுவத்தில் இருந்து மீளமுடியாதவையே. நிலப்பிரபுவத்தின் கொடுமைகளையே இந்த மன்னராட்சியில் கண்டுகழித்துக் கொண்டிருக்கிறோம். தொழில்சங்கம் தொழிலாளர்பாதுகாப்பு என்று ஏதாவதுயிருந்தால் அது வெறும் கண்துடைப்புக்கு மட்டுமே.
  இலங்கையரசு இதுபற்றி எதுவும் சொல்லப்போவதில்லை.இரண்டு நாட்டு தூதுவர் களின் பேச்சுவார்த்தையுடன் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.அவர்கள் ஒரு ஆரியவதியையே ஒரு மஜீதுஹில்மியாவையோ சந்தித்தவர்கள் இல்லை.தாய்நாட்டிற்கு பொருள்தேடப்போன லட்சக்கணக்காண மக்களில் உறுப்புகள் களவாடப்பட்டு பிணமாகவந்தவர்களையே சந்தித்தும் மெளனமாக இருப்பவர்கள்.
  எமதுகேள்வி புரட்சிசெய்வதாக பீத்திக்கொள்ளுகிற இலங்கையில்லுள்ள தொழில்சங்கங்கள் என்னசெய்யப் போகிறது? என்பதே!.

  Reply
 • SUDA
  SUDA

  // இஸ்லாமியர்களை முகமதியர் என்பர். அவர்கள் வணங்குவது முழுமதியை அல்ல குறைமதியையே.//நக்கீரன்

  “முகமதியர்” என்ற சொல் தொடர்பாக நக்கீரன் கொண்டுள்ள விளக்கமும் அதையொட்டிய அவரது விமர்சனமும் ஆச்சரியமளிக்கிறது.

  அது “முகமதியர்” அல்ல “முகம்மதியர்” என்பதே உண்மை. அதாவது அவர்கள் அவர்களின் நபி முகம்மது வைப் பின்பற்றுவதால் சிலுவைப் போர் உக்கிரமடைந்த கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வை காட்டுவதற்காக கிறிஸ்தவர்களால் அவர்கள் “முகம்மதியன்” என அழைக்கப்பட்டனர்.

  //அவர்கள் வணங்குவது முழுமதியை அல்ல குறைமதியையே. இக்கருத்தும் எடுப்பார் கைப்பிள்ளை போன்றது. குறையுடைய மூளை என்றும் எடுக்கலாம் பிறைச்சந்திரன் என்றும் எடுக்கலாம்.//

  மேலேயுள்ள நக்கீரனின் விமர்சன விளக்கம் அவர் வடித்த கவிதையின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இதை ஒரு சமூகத்தினர் மீதான இனவாத தாக்குதலாகவும் கொள்ளலாம். அலங்கரிக்கப்பட்ட தமிழ் வார்த்தையில்.

  நிற்க.

  இவ்வாறான கொடுமைகள் சவூதியில் மாத்திரமல்ல ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முதலாளித்துவத்தின் பண்பாளர்கள் என்று சொல்லப்படுகின்ற நாடுகளிலும்தான் தினம் தினம் நடந்தேறுகின்றன.குறிப்பாக பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக. ஆனால் அவை வெளியில் வருவதில்லை. வந்தாலும் அதற்கு அவர்கள் வேறு சொற்பிரயோகம் வைத்திருக்கின்றார்கள். நாமும் வேறு வழியின்றி நம்புகின்றோம்.

  ஆரியவதிக்கு அந்த அரேபிய அரக்கனால் அரங்கேற்றப்பட்ட அந்தக் கொடூரத்தை வண்மையாகக் கண்டிக்க வேண்டுமென்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் மானுடத்துக்காய் புதிய தளமொன்று தேடும் இத்தளத்தில் விரும்பத்தகாத கருத்தாடல்கள் தவிர்க்கப்படல் வேண்டுமென்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். மானிடத்தின் அடையாளங்களாக இத்தளத்தில வலம் வருகின்ற பலருள் ஒருவரான பல்லி எனும் மனிதர் மன்னிப்பு எனும் வார்த்தையை என்னை நோக்கி கேட்கும் தகுதி எனக்கில்லை.

  Reply
 • பல்லி
  பல்லி

  //பல்லி எனும் மனிதர் மன்னிப்பு எனும் வார்த்தையை என்னை நோக்கி கேட்கும் தகுதி எனக்கில்லை.//
  தகுதி என்பது மனிதத்துக்கு கிடையாது என்பதே என் அவிபிராயம் எம்மை விட சிலவிடயங்கள் உங்களுக்கு தெரியும் போது அதை சுட்டி காட்டும் நேரத்தில் நாம் சிறுபிள்ளைதனமாய் நடக்காமல் பண்புடன் மனிதகரம் நீட்டுவதே மன்னிப்பு; அதனால் என்மன்னிப்பு எதுக்காகவெனில் சிறுதவறை(அது தவறாய் இருப்பின்) மன்னித்து பெரும் தவறுகளை தடுக்க மனிதனேயத்துடன் கைகோர்ப்போம்; உங்களுக்கு தெரிந்தவைகளை எழுத தயங்காதீர்கள் அது எம்மையும் வளர்க்கும் சமூகத்துக்கும் பலன்தரும்;
  நட்புடன் பல்லி;

  Reply
 • Nackeera
  Nackeera

  சந்திரன்! நான் பெரியமாக்சிசவாதியோ புரட்சியாளனோ அல்ல. ஈழவிடுதலைப்போராட்டத்தில் இடதுசாரித்துவத்தைக் கற்றுக் கொண்ட கத்துக்குட்டிதான். மனச்சாட்சியம் உணர்வுகளின் உந்தல்கள் கவிதைகளாக வெளிவந்தன. ஆரிவதிக்கான ஒரு ஏழைத்தொழிலாளிக்கு நியாயம் மனித மனங்களில் இருந்து கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தின் உந்தலிலே எழுதியுள்ளேன். அது கவிவரிகளில் காணலாம். இருப்பினும் அடக்கியே வாசித்தேன்: இதை ஒரு செய்தாக மட்டும் போட்டுவிட்டுப்போக எப்படி முந்தது என்று எனக்கு இன்னும் தான் புரியவில்லை. எத்தனை துன்பதுயரங்களுக்கு ஊடாக எமது மக்களின் வாழ்வியல் வந்து சேர்ந்தபோதும் அப்பப்பட்ட துன்பத்தை மறுதலிக்காமல் இருப்பது அதிசயமாகவே இருக்கிறது. இந்த ஆரியவதியினதும் மஜீது ஷில்மியா போன்றவர்களுக்காக தமிழ்கட்சிகளே பாராளுமன்ற உறுப்பினர்களோ குரல் கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் இலங்கையில் ஒரு இனஒற்றுமைக்கான விதையென்றை ஊன்றிறலாம் அல்லவா. இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமல்ல பிரச்சனை சிங்களமக்களுக்கும் பிரச்சனை உண்டு. இலங்கையிலுள்ள முழுப்பிரச்சனையையும் மூடிமறைக்கவே தேசியம் இனம் என்று மக்களையும் ஆமியையும் கொலைக்களம் அனுப்பினார்கள். பாராளுமன்றத்துக்கானவே இடதுசாரிகள் அங்கு உள்ளார்கள் என்ற நிலைதான் காணப்படுகிறது. எனக்கு விக்கிரமபாகுவின் மின்னஞ்சல்கள் அடிக்கடி கிடைக்கப்பெறும். ஆனால்…..? எங்கே இந்த பெண்களின் பிரச்சனைகள்? எங்கு போயும் இலங்கையின் பசிக்குப் பணம் கொண்டுவந்தால் போதும் என்று இருக்கிறது அரசு.

  Reply
 • accu
  accu

  ஆணி அடிபட்ட ஆரியவதிக்காக ஐம்பத்திரெண்டு பினூட்டங்களில் கவிஞர்களின் புலமைப் போர் காணும்.
  இனி சுடுதண்ணி ஊத்துப்பட்ட மதுரங்குளி ஹில்மியாக்காக எழுதத் தொடங்குங்கள்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  நான் மட்டுமென்ன என்ன? நக்கீரா மாக்ஸியவாதியா? எமக்கு தெரிந்தவையைத் தானே! இந்தளத்தில் கதைத்துக் கொண்டிருக்கிறோம். கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். போகிற போக்கில் ஏதாவது வழிகிடைக்க மாட்டாதா? என்கிற நப்பாஷைதான். வருவதை கண்டுகொள்வோம் என்கிற திருப்திதான். தவறுவிடாதவன் யாராக இருக்கமுடியும்?. கல்லறைக்கு போன மனிதனும் வயிற்றில் இருக்கும் சிசுவைத் தவற மற்றைவை எல்லாம் தவறு செய்தவையே!. இதற்கு நானோ நக்கீரனோ இன்னும் தேசம்நெற் இனியொரு அருள்சகோதரர்கள் குகநாதன் யாருமோ பொறுப்பாளிகள் அல்ல. தமிழ்மக்களின் நீதியின்படி நாம் துரோகிகள் ஆக்கப்பட்டு நெடுங்காலம் காலம் ஆகிவிட்டது. இவர்கள்களின் நியாயத்தின் படி நாமெல்லாம் கழுமரத்து தண்டணைக்கு உட்பட்டவர்களே!.
  துன்பப்பட்ட மக்களின் எண்ணங்களை மனதில் சுமந்துகொண்டு ஒரு மெழுகுவர்த்தி ஒளியுடன் இந்த பிரபஞ்சத்தை கடக்கிற ஆற்றல் எம்மிடமிருக்கிறது துணிவுடன் பயணிப்போம். கோளைகளும் மனிதவிரோதிகளும் குறிப்பாக தமிழினத்தை பிற்போக்கு சிந்தனைக்கு உரம்யூட்டிக் கொண்டிருக்கிற புலம்பெயர் அறிவாளிகளாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் அஞ்சி நடுங்கட்டும். உங்கள் வாயும்வயிறும் ஈழத்தமிழரின் வாயும்வயிறும் வேறு என்பதை மாக்ஸிய காற்று எம்மை உணரவைத்துள்ளது. நீங்கள் உங்கள் வழியில் தொடர்வதற்கு உரிமையிருப்பது போலவே எஞ்சியிருக்கிற தமிழரையும் காக்கிற உரிமை எமக்கு இருக்கிற உணர்வுடன் திருப்திப்படுவோம் நக்கீரா!.

  Reply
 • palli
  palli

  //ஆணி அடிபட்ட ஆரியவதிக்காக ஐம்பத்திரெண்டு பினூட்டங்களில் கவிஞர்களின் புலமைப் போர் காணும்.//
  அக்கு சொன்னா சரிதான் நிறுத்தினா போச்சு, ஆனால் போர் அல்ல பெண்ணடிமை கருத்துக்களை; ஆனாலும் எங்களை நளினம் செய்வதாக நினைத்து ஒரு பாதிக்கபட்ட பெண்ணை??

  Reply
 • nantha
  nantha

  மத்திய கிழக்கின் வரலாறு, கலாச்சாரம் என்பனவற்றை நோக்கும் போது ஆணி அடித்தல், அடிமை வியாபாரம் என்பன அந்த மக்களின் வாழ்வோடு சாதாரணமாக இருந்துள்ளன-இருக்கின்றன.

  வேலைக்காரர்கள் என்பவர்களுக்கும் தொழிலாளிகள் என்பனவற்றுக்கும் வேறுபாடுகள் உண்டு. வேலைகள் செய்பவர்கள் “அடிமைகள்” என்பது மத்திய கிழக்கில் நிலவும் உண்மை.

  யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இந்த அடிமை தத்துவத்தை “கடவுளின்” வரமாக அல்லது கொடையாக கருதுகிறார்கள். இந்த மூன்று மதங்களிலும் “அடிமை”களை என்ன செய்யலாம் என்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. அடிமைகளை வைத்திருப்பது இந்த மதங்களின்படி தவறு அல்ல.

  ஆரம்பத்தில் தங்களுடைய “குழுக்களை”ச் சாராதவர்களைப் பிடித்து அடிமையாக வைத்திருந்து அவர்களிடம் “வேலை” வாங்கினார்கள். பின்னர் அந்தக் குழுவின் “கொள்கைகள்” மத அந்தஸ்த்தை அடைந்தவுடன் “தங்களின்” மதம் சாராதவர்கள் அடிமையாக்கப்பட்டார்கள். அந்த அடிமைத் தத்துவம் “கடவுள்” கோட்பாட்டின் மூலம் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளது.

  பாலவனத்து மதங்கள் “பொருள்” பற்றிய சிந்தனைக்கு கடவுளை துணைக்கு அழைக்கும் மதங்கள். அதனால்த்தான் இந்த மூன்று மதங்களையும் சேர்ந்தவர்கள் தங்களுடைய மதங்களுக்கு மாறினால் “பொருள்” கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். பணத்தைக் கொடுப்பதன் மூலம் மத மாற்றங்கள் செய்கிறார்கள்.

  மதங்களின் மூலம் வழக்கப்படுத்தப்பட்டுள்ள இந்த அடிமை, சுரண்டல் முறைகள் மேற்குநாடுகளில் மார்க்ஸிச சிந்தனைகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

  மேற்குநாடுகள் மத சிந்தனைகளுக்கு அரசியலில் இருந்து கல்தா கொடுத்து வெகு காலாமாகிறது. மார்க்ஸிசத்துடன் “சமரசம்” செய்து “புரட்சிகள்” வெடிப்பதை தடை செய்யும்நோக்குடன் சமூக சேவை கொடுப்பனவுகள், இலவச மருத்துவம், தொழிலாளர் கொடுப்பனவுகள் என்பன சட்டங்களாக்கப்பட்டு வாழ்வின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

  மேற்படி மூன்று மதங்களை நம்புபவர்கள் இந்த அடிமை சுரண்டல் என்பனவற்றை ஆதரிக்கவே செய்வார்கள்.

  ஆணி அடித்தல் மத்திய கிழக்கின் கலாச்சார அம்சம். அடிமைகளுக்கு “தண்டனை” என்பது இஸ்லாம் சமயத்தின் ஒரு பகுதி.

  அமெரிக்க கிறிஸ்தவர்கள் “அடிமை” ஆக்குதலை பைபிள் மூலம் நியாயப்படுத்துகிறார்கள்.

  இஸ்லாமியர்களாலும், கிறிஸ்தவர்களாலும் ஆளப்பட்ட இந்துக்கள், பெளத்தர்கள் கூட அந்த மதத்தவர்களின் அடிமைக் கோட்பாடுகளை “லாபம்” கருதி கடைப்பிடிக்கிறார்கள். ஏனென்றால் இந்து மதம், பெளத்த மதம் என்பன பொருள் ஈட்டலுக்கு “அடிமைகள்” என்று மனிதர்களை கீழ்படுத்தவில்லை!

  “சாதி” என்பது “அடிமை” என்ற வரைவுக்குள் இல்லை என்பதும் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் சாதிகள் மூலம் தங்கள் அடிமை வாதத்தை நியாப்படுத்தியே ஆட்சி புரிந்துவிட்டு போயிருக்கிறார்கள்.

  இலங்கை, இந்திய அரசுகள் மதவாதிகளுக்கு வெளினாடுகளில் இருந்து வரும் பணம், போதனைகள் என்பனவற்றை நிறுத்தாத வரையில் அந்தநாடுகளுக்கான அடிமை ஏற்றுமதியை (தொழிலாளர்கள் என்ற போர்வையில்)நிறுத்தப் போவதில்லை.

  இந்தியா அரேபியநாடுகளுக்கு பெண் தொழிலாளர்களை அனுப்புவதை இந்திரா காந்தி காலத்தில் தடை செய்தது.

  இலங்கையை பொறுத்த அளவில் பல ஆரியவதிகள் ஆணிகளுடனும், சடலமாகவும் வரும் வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளன.

  இலங்கயில் ரன் ஜன் ராமனாயக்கா என்ற யுஎன்பி எம்பி மாத்திரம் பெண்களை மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்புவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

  கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தபட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்போதைய பொறுளாதார முறையில் இருந்து விடுபட இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் இருக்கும் மார்க்கம் “மார்க்ஸிசம்” மாத்திரமே ஒழிய மதம் மாறுதல் அல்ல!

  Reply
 • Sothilingam T
  Sothilingam T

  கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தபட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்போதைய பொறுளாதார முறையில் இருந்து விடுபட இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் இருக்கும் மார்க்கம் “மார்க்ஸிசம்” மாத்திரமே ஒழிய மதம் மாறுதல் அல்ல!/

  நன்றி நந்தா. உங்கள் அறிவியற் கருத்துக்கு நன்றி.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இப்படி போட்டலும் நல்ல போடுதான் சோதிலிங்கம். ஆனால் மாக்ஸியம் எது என்பதை பற்றி தேடிக் கண்டுபிடிப்பதிலேயே எல்லோரும் அலைச்சல் படுகிறோம். இலகுவான வரை கோடடை யாரும் வரைவீர்களா? அல்லது இப்படியே “மாக்ஸியம்” “மாக்ஸியம்” என்று வாய்யடித்துக் கொண்டே காலத்தை ஓட்டுவோமா?. ஒன்றுமட்டும் நிச்சியமாகத் தெரியும். மாக்ஸியம் என்றும் வத்திக்கான் பாதிரிகளையோ மெக்காவையோ தனது ஆய்வுக்கு கருப்பொருளாக எடுக்கவில்லை என்பதை.

  Reply
 • nantha
  nantha

  மார்க்ஸியம் என்பது வரைபு படுத்தப்பட்டுள்ள ஒரு தத்துவ சாஸ்த்திரம். அதனை மக்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை மார்க்ஸ் வரையறுத்துக் கூறியுள்ளார். மார்க்ஸ் ஆயுதப் போராட்டத்தை “இறுதிப்” போராட்டமாகவே கருதுகிறார். அடக்கு முறை சர்வாதிகாரம் என்பன எல்லை மீறி மாற்ற முடியாத “இயந்திரத் தன்மையை” அடையும் பட்சத்தில் அடக்கப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது என்பது மார்க்ஸின் கருத்து.

  அதற்கு முதல்படியாக மக்களை மார்க்ஸின் தத்துவங்களின் அடிப்படையில் “உண்மைகளை” புரிந்து கொள்ளும் அறிவைப் புகட்ட வேண்டும். அதனை விடுத்து இறுதி முடிவை முதலில் செயல்படுத்தப் புறப்பட்டால் அதன் விளைவு பயங்கர வாதமாகவே மாறிவிடும். தொழிலாளர் சக்தி வீணடிக்கப்படும்.

  எனவே இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் பிரச்சனைகளையும், முதலாளித்துவத்தின் அடியாள் படைகள் அல்லது சக்திகள் யாரென்பதையும் அடையாளம் காட்டப்படல் வேண்டும். அதற்கு சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் பற்றிய சிந்தனைகளும், வரலாறுகள் பற்றியும் மக்களிடையே போதனைகள் செய்யப்படல் வேண்டும்! மக்களிடையே அந்த சிந்தனைகளைத் தடை செய்யும் “சக்திகளை” அடையாளம் காட்ட வேண்டும்!

  வத்திக்கானையும், மெக்காவையும் விமர்சித்தால் “புண்பட்டுவிடுவார்கள்” என்று கருதிக் கொண்டு மார்க்சிசம், சோஷலிசம் பற்றி புகழ் பாடி யாதொரு பயனும் உண்டாகப் போவதில்லை! ஏனென்றால் அந்த இரண்டும் மார்க்சிசத்தின் “ஜென்ம விரோதிகள்” மாத்திரமல்ல மார்க்சிசக் கருத்துக்களை முளையிலேயே கருக்கிவிட சகல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் ஆணிவேர்கள்!

  Reply
 • Nackeera
  Nackeera

  சுதா! // இஸ்லாமியர்களை முகமதியர் என்பர். அவர்கள் வணங்குவது முழுமதியை அல்ல குறைமதியையே.//
  இதனுடைய அர்த்தம் மதியை வணங்குவதால் தான் முகமதியர் என்று அர்த்தம் அல்ல. குரானின் கூற்றுப்படி கடவுளையும் அதாவது அல்லாவையும் ஏற்றவர்களே இஸ்லாமியர் என்கிறது. ஆனால் அகமதியர் இதை ஏற்றதில்லை ஆனால் இவர்களும் இஸ்லாமியரே. முகமதுவின் பின் அவருடைய தொடர் சீடர் யார் என்று பிரச்சனை எழுந்தது. நான் இஸ்லாத்துக்குக் கவிதை எழுதவில்லை. கவிதை எதற்கு அதன் உட்பொருள் என்ன என்பதை பலதடவை எழுதியாயிற்று. கவியாளன் கவிதைகளூடாக என்ன சொல்வருகிறார் என்பதையும் கவிநயத்தை இரசிப்பதுமே முக்கியம். குறைமதி என்ற சொல்லை நான் ஏன் பாவித்தேன் என்பதற்கு விளக்கம் சொன்னேனே தவிர முகமதியருக்கு வரவிலக்கணம் எழுதவில்லை. கவிதை எழுதுவதை விட கவிதையை இரசிப்பது என்பது ஒரு கலை. இது கவிதை, கட்டுரை அல்ல முகமதியருக்கு விளக்கம் கொடுப்பதற்கு.
  கவிதையை விளங்கியிருந்தால்
  /குடும்பச் சிலுவையை
  சுமந்து கொண்டு
  காசுக்கடவுள் அல்லாவிற்கு
  சேவை செய்த ஆரியவதிக்கு
  சம்பளமாய்
  இருபத்திநான்கு ஆணிச்சிலுவை/
  மேற்கண்ட வரியில் என்ன சொல்லப்படுகிறது

  /மானிடம் பேசும் மானிடராலே
  மானிடத்திற்கு மரணதண்டனை/
  இப்படி இரண்டு வரியுள்ளது யாருக்காக? சுதாவுக்காகவா? இது தீர்க்க தரிசம் இல்லை அனுபவம். சுதா இங்கோ வருவார் என்று எனக்கு எப்படித்தெரிந்தது?

  சுதா! / முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வை காட்டுவதற்காக கிறிஸ்தவர்களால் அவர்கள் “முகம்மதியன்” என அழைக்கப்பட்டனர்./ சிலுவைப்போர் எப்போ நடந்தது? முகமதியர் என்ற பெயர் எப்போ வந்தது? தமிழில் முகம் மதியன் என்று பிரிந்து நின்றால் மட்டுமே அச்சொல் தமிழில் சரியானது. முக என்பது பெயர் அடைச்சொல்லாக அமைந்துள்ளது. அதனால் முகம் எனும் பெயர்ச்சொல்லை(சப்பெயக்ட்)யும் மதியன் ஏனம் மற்றய பெயர்ச்சொலையும் சேர்க்கும் போது முகமதியன் என்றே வரும். இங்கே முக என்பது பெயரடைச்சொல் மதியனுக்காக வந்துள்ளது. தொல்காப்பியம் சொற்களை பிரித்தல் சேர்த்தல் பற்றி நன்கு விளங்கியுள்ளது. நான் தமிழ் பண்டிதன் அல்ல இருப்பினும் தெரிந்ததைச் சொல்கிறேன்.

  சுதா! முகம்மது அவர்களைப் பின்பற்றியவர்களை முகம்மதியர் என்று அழைப்பது சரியானதே. நான் எழுதிய முகமதியர் கவிநயத்துக்காக எழுதியதே. அது ஒரு சுட்டியே. ஆனால் இக்கவிதை மனிதநீதிக்கு எதிராக எழுதியகவிதை என்பதை கவிப்பொருள் கூறும்.

  /இவ்வாறான கொடுமைகள் சவூதியில் மாத்திரமல்ல ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முதலாளித்துவத்தின் பண்பாளர்கள் என்று சொல்லப்படுகின்ற நாடுகளிலும்தான் தினம் தினம் நடந்தேறுகின்றன. குறிப்பாக பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக. ஆனால் அவை வெளியில் வருவதில்லை. வந்தாலும் அதற்கு அவர்கள் வேறு சொற்பிரயோகம் வைத்திருக்கின்றார்கள்/ இதற்கான பதிலை சந்திரன் கொடுத்திருக்கிறார். படிக்கவும்.

  பல்லி! பலநாடுகளின் ஒருமைப்பாட்டுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாடு நாடாகக் கொண்டு திரிந்தும் முள்ளிவாய்காலில் முடித்து வைத்தார்கள். ஆனால் கவிதையைப் புரிந்து உணர்ந்து எழுதும் பல்லியை வாழ்த்தாது இருக்க இயலாது.

  accu! சுடுதண்ணி ஊற்றப்பட்ட பெண்ணுக்கும் கவிதை இருக்கிறது. தற்போது நேரக்குறைவு காரணமாக தவிர்க்கிறேன். பின்நோட்டமாக அது வரும்.

  சந்திரன்! /துன்பப்பட்ட மக்களின் எண்ணங்களை மனதில் சுமந்துகொண்டு ஒரு மெழுகுவர்த்தி ஒளியுடன் இந்த பிரபஞ்சத்தை கடக்கிற ஆற்றல் எம்மிடமிருக்கிறது துணிவுடன் பயணிப்போம். கோளைகளும் மனிதவிரோதிகளும் குறிப்பாக தமிழினத்தை பிற்போக்கு சிந்தனைக்கு உரம்யூட்டிக் கொண்டிருக்கிற புலம்பெயர் அறிவாளிகளாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் அஞ்சி நடுங்கட்டும். உங்கள் வாயும்வயிறும் ஈழத்தமிழரின் வாயும்வயிறும் வேறு என்பதை மாக்ஸிய காற்று எம்மை உணரவைத்துள்ளது. நீங்கள் உங்கள் வழியில் தொடர்வதற்கு உரிமையிருப்பது போலவே எஞ்சியிருக்கிற தமிழரையும் காக்கிற உரிமை எமக்கு இருக்கிற உணர்வுடன் திருப்திப்படுவோம் நக்கீரா/
  இந்த வார்த்தைகள் என்னை உந்தி உதைக்கிறது. இன்னுமொரு கவிதைக்கு இது வித்திட்டு விடுமோ என்று எண்ணத்தோன்றுகிறது. கவிதை என்று இருந்துவிட்டால் நேரம் காலம் போவது தெரியாது. இந்த அவசர உலகில் இதையாவது செய்தோம் என்ற திருப்தி தான் என்கவிதை.

  Reply
 • Sothilingam T
  Sothilingam T

  பொல்லாத பூமியில்
  முழு மதியை
  சிலுவையில் ஏற்றினர்

  குறை மதியர்களால்
  பிறை பிறழ் முகாமில்

  மனித முகங்களில்
  மனித பிணங்களால்

  கருச்சிதைவானது
  மனிதம்

  முழுமதி மறைந்து
  இருண்டது உலகம்

  புதுமதி விருட்சம்
  மனிதம் காக்க
  நிச்சயம் வரும்
  ஆதி பகலவனாய்.

  Reply
 • nantha
  nantha

  மதம் மக்களின் அபின் என்று கார்ல் மார்க்ஸ் எதனைக் குறிப்பிட்டார் என்று சந்திரன் ராஜா கருதுகிறார்?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  மதம் பாட்டாளிகளுக்கு மயக்கத்தை ஏற்படுத்தி தமது சுயஉணர்வு-தமது எதிரி யார்? என்பதை தெரியவிடாமல் மயக்கத்தை ஏற்படுத்துவதாலேயே மதம் ஒரு “அபின்” என்றார் மாக்ஸ் இதில் முன்ணணியில் உள்ள தொழிலாவர்க்க உணர்வுவாளர்களுக்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் கிறீஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாமியரையும் இஸ்லாம்மியருக் கெதிராக கிறீஸ்தவர்களையும் சிண்டு முடிந்து விடுவதின் அர்த்தத்தில் மாக்ஸ் சொல்லவில்லை என்பதை நந்தா புரிந்து கொள்ளவேண்டும்.
  உங்களுக்கு உள்ள கவலையே! இந்துகள் கிறீஸ்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார் என்பதே. நீங்கள் விழுங்கிய அபினை துப்பித்தீர்த்து உங்கள் மயக்கத்தை முதல் தெளியவையுங்கள். இந்துக்கள் தமிழர்கள் போன்ற நிலைப்பாட்டில் மாக்ஸியத்தைஅணுவது தவறானது. தொழிலாளவர்க்க நிலைப்பாட்டிலேயே மாக்ஸியதை அணுகவேண்டு மென்பது ஆரம்பப்படி. நந்தா!. இனியும் தொடருவோம்.
  பலகேள்விகளுக்கு தாங்கள் விடை அளிக்காமல் விடையளிக்காமல் உங்கள் சாதுரியத்தால் திசைதிருப்பிக் கொண்டு போய்விடுவீர்கள்.
  வத்திக்கான் மெக்கா தூண்களை தகர்ப்பதற்கு யாரை அணிதிரடப்போகிறீர்கள் என்பதற்கு இதுவரை எந்தவித பதிலும் இல்லை. மாக்ஸியவாதிகள் ஆகிறது மனிதவரலாற்று வளர்ச்சியின் ஒருபகுதி. நீங்கள் மாக்ஸியவாதி ஆகினால் முதல் சந்தோஷப்படும் மனிதன் நானாகத் தான் இருக்கும். உங்கள் கடந்தகால எழுத்து கிறீஸ்தவ இஸ்லாமிய தொழிலாளர்களில் கூட தாங்கள் ஈடுபாடு உடையவர்களா என்பது இதுவரைக்கும் எனக்கு புலப்படவில்லை இருக்கிற கொஞ்சநஞ்ச மாக்ஸியவாதிகளையும் தொழிலாளவர்க்க உணர்வுள்ளவர்களையும் இந்துக்கள்-தமிழர்கள் என்கிற குறுகிய வட்டத்துக்குள் இழுப்பதற்கு முயற்ச்சி செய்கிறீர்களோ என்றே இப்பொழுது சந்தேகப்படுகிறேன் நந்தா!. நல்ல முடிவுகளையே வாசகர்கள் எதிர்பார்கிறார்கள். நானும் அப்படியே.

  Reply
 • nantha
  nantha

  கார்ல் மார்க்சுக்குத் தெரிந்த மதங்கள் இஸ்லாம், யூதம், கிரிஸ்தவம் என்பனவே. அவற்றையே “அபின்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
  ஆனால் சந்திரனுக்கு அவை எல்லாம் “பாதுகாக்கப்பட” வேண்டியவையாக உள்ளன.
  அது என்ன தொழிலாள வர்க்க “உணர்வாளர்கள்” என்ற பிரயோகம்?நெடுமாரன், கோபாலசாமி கோஷ்டிகளை புலிகள் தமிழ் “உணர்வாளர்கள்” என்றுதான் எழுதுகிறார்கள். சிலவேளைகளில் அவற்றை அதிகமாகப் படிப்பதன் தாக்கமோ?
  சந்திரனின் கருத்துப்படி இஸ்லாமியர்கள் இஸ்லாமியப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். ஆனால் இந்துக்களின் பிரச்சனைகளை கத்தொலிக்கர், முஸ்லிம் எல்லாம் வந்து “தீர்க்க வேண்டும்” என்கிறார். இது என்ன “மார்க்சிசமோ”?

  Reply
 • பல்லி
  பல்லி

  //அது என்ன தொழிலாள வர்க்க “உணர்வாளர்கள்” என்ற பிரயோகம்? நெடுமாரன், கோபாலசாமி கோஷ்டிகளை புலிகள் தமிழ் “உணர்வாளர்கள்” என்றுதான் எழுதுகிறார்கள். சிலவேளகளில் அவற்றை அதிகமாகப் படிப்பதன் தாக்கமோ//
  சந்திரராஜாவே இவர்களை இந்த தேசத்தில் அதிகளவு விமர்சித்தவர் என்பதை நந்தா தெரிந்து கொள்வது இனிமேல் விடும் பின்னோட்டங்களுக்கு வசதியாக இருக்கும்:

  Reply
 • BC
  BC

  கார்ல் மார்க்ஸ் அபின் என்று இந்துவை அல்லது சைவத்தை தான் குறிப்பிட்டார் என்று எடுத்து கொள்ள வேண்டியது தான். இந்து தொழிலாளர்கள் எல்லாம் வெறும் சைபர்கள் zero தான்.

  Reply
 • Sothilingam T
  Sothilingam T

  //கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தபட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்போதைய பொறுளாதார முறையில் இருந்து விடுபட இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் இருக்கும் மார்க்கம் “மார்க்ஸிசம்” மாத்திரமே ஒழிய மதம் மாறுதல் அல்ல!-/நந்தா//அறிவியற் கருத்துக்கு நன்றி த சோதிலிங்கம்//

  இன்று ஜரோப்பாவிலும் உலகின் வேறு பலநாடுகளிலும் இந்து பெளத்த சமயத்தவர்கள் தவிர மற்ற மதத்தவர்களால் மதமாற்றம் முன்வைக்கப்படுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை நாம் எல்லோருக்கும் தெரிந்ததே. கிறீஸ்தவம் கத்தோலிக்கம் இஸ்லாம் இவைகள் இந்தியாவில் இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் மதமாற்றதிற்கு முன்வைக்கும் காரணங்கள் தமது கிறீஸ்தவம் கத்தோலிக்கம் இஸ்லாம் போன்றவையே தீர்வு என்பதாகும். அண்மைக்காலங்களில் பல இந்துக்களை மதமாற்றம் செய்தபோதும் கூறப்பட்ட விடயங்கள் உங்கள் பிரச்சினைக்கு தமது மதங்களில் தீர்வு உண்டு என்பதேயாகும் இப்படியாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என மதமாற்றம் செய்தவர்கள் மீதே பாய்ந்தது அறிந்த கதையாகும்.

  மக்களின் வாழ்வு என்பது வளங்கள் அல்லது வளங்கள் சம்பந்தப்பட்டதாகும். மக்களின் பிரச்சினை என்பதும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதும் எப்போதும் பொருளாதாரப் பிரச்சினைகளை முன்வைத்ததேயாகும். பொருளாதாரப் பிரச்சினையே வேறு ஒரு வடிவத்தில் பிரச்சினையாக உருவெடுப்பது உண்மை. இதில் ஒன்று தான் இந்த சமய கடவுள் பிரச்சினையுமாகும்.

  பொருளாதாரப் பிரச்சினைகளை மிகவும் திட்டவட்டமாக துல்லியமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது மாக்ஸிசமேயாகும் சமயங்கள் அல்ல

  ஆனால் இந்து பெளத்த சமண சமயங்கள் ஆன்மா உடல் சிந்தனை என்பவற்றை கொண்டு உருவாக்கப்பட்டவைகளாகும். புத்தர் கடவுள் என்று ஒன்று இல்லை என்றும் கடந்ததும் எதிர்கால வாழ்வு பற்றிய சிந்தனையை விட நிஜவாழ்வே பிரதானம் நிகழ்கால வாழ்வே பிரதானம் என்பதையும் எடுத்துரைத்தார் இந்த சமயங்களை பின்பற்றுபவர்கள் பொருளாதார மாற்றத்தை சமூகமாற்றத்தை துல்லியமாக கூறும் மார்க்கம் பற்றிய அறிவே சிறந்த அறிவு என்பதையே மேற்குறிப்பிட்ட நந்தாவின் கூற்று விளக்குவதாகவே நான் விளங்கி இதை ஆதரித்தேன்.

  ஆனாலும் நான் பதிலளித்த பதில் பின்னூட்டமும் அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்களும் சரியான இடத்தில் சரியான கட்டுரைக்கு கீழ்வந்தவைகள் அல்ல இந்த பின்னூட்டங்கள் சிலவேளை நக்கீராவின் கவிதையின் உயிர்ப்பை தவறான திசைக்கு செல்ல வழிவகுத்துவிடும். பின்னூட்டக்கார்களை வேறு திசைக்கு எடுத்து போய்விடும் என்பதால் இந்த பின்னூட்டத்தை இந்த கவிதையின் கீழ் என்னால் தரப்பட்டது தவறாகும் என்பதை நான் புரிந்து நான் என்னை விமர்சனம் செய்து கொள்கிறேன்.

  தொடர்ந்தும் கவிதையின் நோக்கத்திலிருந்து விலகிப்போகும் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் பதிவதையும் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  மாக்ஸீயம் பற்றிய உங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக தயவுசெய்து எழுதுங்கள். அங்கே மாக்ஸீயம் பற்றிய விவாதத்தை கருத்துப் பரிமாற்றங்களை ஆரோக்கியமாக செய்யலாம்.

  Reply
 • mohamed nisthar
  mohamed nisthar

  அடித்த ஆணியால் தெறித்த (கன்னிக்) கவிதை ( வசனங்களின் குறுகல்)?

  இதுவென்ன புதுவேதம்
  மதி வணக்க உபதேசம்
  முக(ம்) மதியர் அறியா
  இணை வைக்கும் குறை வேதம்.

  “இல்லாஹ்”* அல்லா மதி எமக்கு
  இல்லை “அல்லா” நக்கீரா.
  மதி வணக்கம் விண்டீரா
  கண்டீரா எங்கேனும் இணை வணக்கம்?

  மக்கமும், மதினமும் புனிதம். நிச்சயம்
  மற்றெல்லாம் எமக்கு சாமானியம்.

  அல்லாவின் நாடென்றார் அறேபியா,
  அண்ட சராசரமும் அவனது
  அறுதியிடுகிறது அல் குர்-ஆன்.
  எங்கு என்றாலு மென்ன
  அவன் பூமி தனில்
  குழம்பம் பண்ணாதே மானிடா
  எச்சரிக்கிறது அக் குர்-ஆன்.

  முளைப்பால் ஊற்றி மத வெறியேற்றமாம்
  சுடுகாடு வரையும் வெறியாட்டமாம்.

  முறையாய் முளைப்பால் குடித்தும்
  வெறியேர வில்லை எமக்கு
  பகுத்தறிவும் குறையவில்லை யதனால் நமக்கு.

  கல் என்ற சொல்லுடன் உருகொண்ட
  என் நிறை வேதம்,
  கொல்லென்று கூறுவதாய் சொல்கின்றார்.
  அதனால் அதை குறை வேதம்மெங்கின்றார்.
  நிறைவான இறைவன்
  அவனை குறை காண
  ஏன் நிலை எடுத்தாய்?
  நெற்றி கண்ணை காட்டினும்
  குற்றம் குற்றமே என்றுரைத்த நக்கீரர் என்ற
  பெயர் கொண்டதாலா? கட்டு கதையையா அது
  விட்டுவிடு.

  கற்றதனா லாய பலனோ, அன்றி கடவுளிடம்
  பெற்ற பரிசோ, பகுத்து பல தறிந்து,
  பகை பல நீக்கி, மனிதனாய் வாழ்ந்து,
  மனிதராய் வாழ வழி
  எமக்கு குர்-ஆன் என்றோம்.
  குற்றமாய் பட்டதோ உமக்கு?

  பலஹீ£ன பக்தியார் பலதும் செய்வார்
  புறந்தள்ளி யவரை பார்த்தா லென்ன?
  புரியாதோ மற்றவர் நற் போக்கு?

  அன்று வாள், இடையில் குண்டு
  இன்று ஆணி இதுதான் எம் குறை வேதம்
  என்கிறது சிறு கூட்டம், பகுத் தறிவு பட்டாளம்.

  சிங்களத்தில் இருந்து சிப்பாயை பகுத்து
  போர்க்குணத்தில் இருந்து பெளத்தரை பகுத்து
  பெண்ணென்ற பொதுமைக்குள் ஆ¡¢யவதியை பகுத்து
  பெண்ணான அறபியை மட்டும் மதத்தில் துவைத்து,
  இனத்தில் வடித்து,
  நாட்டின் பெயரில் கட்டி உலர வைத்து
  குறை மதியரை உளற வைத்ததில்
  பகுக்கும் அறிவு பஞ்சாய் பறந்ததோ?

  அறுபதை அடையமுன் அவதியுறுகிறார்
  அல்ஸ்ஹைமாவினால்*, கருவினிலே உருக் கொள்ள முன்
  எங்கிருந்தார், எப்படியிருந்தார், ஏன் இங்கு வந்தார்
  என்றெல்லாம் தேடாமல்
  படைத்தவனுகே படிப்பிகின்றார்
  பகுத்தறிவு பாடம் தம் அறிவினால் இங்கு.

  கூர்ப் படைந்த குரங்கு மாற்றுமா தன் குணத்தை
  தாவிச் செல்ல என்றும் தேடாதோ கிளைதனை
  மனிதர் நாம் மன்றாட முடியுமா?, மாற்றத்தான் முடியுமா?
  திரையிட்ட கண், பூட்டிட்ட இதயம், அடைத்த காது
  அதனால் வாள், குண்டு, ஆணி முற்றுப் பெறாமல்
  மீண்டும் வரும். வெட்கி தலை குனியத்தான் முடியும் நம்மால்
  குரங்கென்று கூறி மனிதனாய் மாற முடியாமையால்,
  மனிதம் பேசி மந்தை குணம் கொண்டதால்.

  *இல்லாஹ்= இறைவனுக்கான அறபு பதம்
  *அல்ஸ்ஹைமர்(Alzheimer)= அறிவு ம(ழு)ங்கல்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சோதிலிங்கம் உங்கள் அறியாமைக்காக மிகவும் மனம் வருந்துகிறேன். இங்கு மாக்ஸியத்தைப் பற்றி திரிவுபடுத்துவதும் மாக்ஸியத்தை பற்றி சேறடிப்பதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு சர்வதேசதொழிலாள வர்க்க கட்சிகெதிரான தாக்குதல் தான். திரும்பவும் தவறான புரிதலுடனேயே தாங்கள் இருக்கிறீர்கள். இந்துமதத்திலேயோ கிறீஸ்தவமதத்திலேயோ இஸ்லாமியமதத்திலேயோ தொழிலாளவர்கம் இல்லை என்ற என்ற முடிவுக்கு இந்த முதாலித்துவ தாசர்கள் போல் நீங்களும் வந்துவிட்டீர்களா?.

  ஐரோப்பாவில்-குறிப்பாக பிரான்ஸிசில் இருந்து வெளியேற்றப்பட்ட சிந்து-ரோம வெளியேற்றம். மற்றும் முஸ்லீம் மக்களுக்கு கெதிரான பயங்கரவாதக் குற்றறசாட்டு கலாச்சாரத்திற்கான பிரச்சாரம் இதுவெல்லாம் முதலித்துவத்தின் சிதைவில் பாஸிசத்தை கொண்டு வருவதற்கான ஆரம்பமே. இந்த வளர்ச்சியிலேயே வெளிநாட்டவர்களுக்கான தாக்குதலும் ஆரம்பமாகும். இதில் நீங்கள் எந்தபக்கம் நிற்கிறீர்கள்?.முதாலித்துத்தின் பக்கமா? இனம் மதம் கடந்த சாவதேச தொழிலாளர்பக்கமா?? நந்தா பி.சீ தனியொரு மனிதர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இவர்கள் நாறிப்போன முலாளித்துவத்தின் பிரதிநிதிகள் என்பதை வரையறை செய்யுங்கள்.

  Reply
 • palli
  palli

  //ஆனாலும் நான் பதிலளித்த பதில் பின்னூட்டமும் அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்களும் சரியான இடத்தில் சரியான கட்டுரைக்கு கீழ்வந்தவைகள் அல்ல இந்த பின்னூட்டங்கள் சிலவேளை நக்கீராவின் கவிதையின் உயிர்ப்பை தவறான திசைக்கு செல்ல வழிவகுத்துவிடும். // T Sothilingam
  இதில் மட்டுமல்ல பல கட்டுரையில் பின்னோட்டங்கள் திசைமாற இந்த மதம் பிடித்த மதமே காரணம் என்பது உன்மை;

  //தொடர்ந்தும் கவிதையின் நோக்கத்திலிருந்து விலகிப்போகும் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் பதிவதையும் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்// இதில் சிறிது நிர்வாகமும் கவனம் எடுப்பது ஆரோக்கியமானது;

  //மாக்ஸீயம் பற்றிய உங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக தயவுசெய்து எழுதுங்கள். அங்கே மாக்ஸீயம் பற்றிய விவாதத்தை கருத்துப் பரிமாற்றங்களை ஆரோக்கியமாக செய்யலாம்.// காலம் கடந்த உபதேசம் இருப்பினும் வரவேற்க தக்கது,

  //என்றெல்லாம் தேடாமல்
  படைத்தவனுகே படிப்பிகின்றார் பகுத்தறிவு
  பாடம் தம் பாதி அறிவினால் இங்கு.//mohamed nisthar
  படைத்தவன் யார் என சிந்திப்பதே பகுத்தறிவு, நான் கடவுள் பெயர் சொல்லாதவன் ஆனால் அவர்களுக்கு எதிரியல்ல,

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இந்தியா அதுவும் தமிழ்நாட்டில் தமிழ்மக்களின் பழக்கவழக்கங்களைக் கூட பதிவு செய்தார் கால்மாக்ஸ் அழியாபுகழ்பெற்ற தனது “மூலதனம்” என்னும் நுலில். பிரிட்டீஸ்சாரின் வரி அறவிட்ட கொடுமைகளை சித்தரிக்கும் போது எப்படி ஏழைப்பிராமணின் தலையில் கல்லைவைத்து வெயில்நிறுத்தி வரி வசூலித்தார்கள் என்பதையும் விபரித்துள்ளார். இன்று புரட்டல்வாதிகள் கால்மாக்ஸ் இந்தமதத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர் “அபின்” என்று சொன்னது இஸ்லாம் யூதம் கிறீஸ்தவம் என்பவையே என்று தமது மதவெறி கருத்துக்களை வாசகர்ளிடையே கொண்டு செல்வதற்கு முற்படுகிறார்கள். இதில் எத்தனை “தேசம்நெற்” வாசகர்களுக்கு உடன்பாடு?.
  முன்பு ஈழத்தமிழ் மக்களின் பழைவைதப்போக்கே புலியாக உருவெடுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதுவே ஆயிரம்வருட வரலாற்றை கொண்ட முஸ்லீம் இனம் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வடபகுதியில் இருந்து துரத்துவதற்கும் காரணமாக இருந்தது. புலித்தோலை உரித்து எருமை மாட்டுத்தோலை போட்டிருக்கிற இந்த பழமைவாதிகளை இனம்காணப் படாவிட்டால் அடுத்த அவலமும் எம்மை நெருங்கி வருகிறது என்பதையே அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

  Reply
 • nantha
  nantha

  //இந்தியா அதுவும் தமிழ்நாட்டில் தமிழ்மக்களின் பழக்கவழக்கங்களைக் கூட பதிவு செய்தார்//
  சந்திரன் ராஜா “கார்ல் மார்க்ஸ்” பற்றி ஒரு பெரும் புழுகை அவிழ்த்து விட்டுள்ளார். அதுவும் “தமிழ்” பற்றி சரடு விட்டுள்ளார். இவர் “மூலதனம்” பற்றி அளந்துள்ள கதை மூலதனதின் எந்தப்பகுதியில் வருகிறது என்பதனை சொன்னால் உலகுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

  பாவம்! பாதிரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டு அவதிப்படுபவர்கள் இறுதியில் மார்க்ஸுக்கே நாமம் போட புறப்பட்டுள்ளனர்.

  இந்தியா பற்றி மார்க்ஸின் கருத்துக்களை பின்னர் எழுதுகிறேன்.

  கார்ல் மார்க்சையும் ஒரு “தமிழ்” உணர்வாளர் ஆக்கி யாருக்கு காது குத்த புறப்பட்டிருக்கிறார் இந்த சந்திரன்?

  ஆயினும் இந்து மதம் பற்றி மார்க்ஸ் சொன்னார் என்று கருத எதுவித தடயத்தையும் காணவில்லை! இந்தியா பற்றிய குறிப்புக்களில் மார்க்ஸ் எங்கும் இந்து மதம், புத்த மதம் என்பன பற்றி குறிப்பிடவில்லை. இந்தியாவில் பிரிட்டிஷாரின் கொடுமைகளை மாத்திரம் குறிப்பிடும் மார்க்ஸ் “இந்து மதம்” பற்றி பேசினார் என்பது சந்திரனின் “மகா புரட்டல்”.

  இந்தியாவில் பிரிட்டிஷாரின் சுரண்டல் ஏகாதிபத்தியம் பற்றி அவர் கூறிய கருத்துக்களை “இந்து மதம்” பற்றிச் சொன்னார் என்ற சந்திரனின் புரட்டல்வாதம் “சோஷலிசம்” பேசி இந்துக்களை முட்டாள்களாக்கப் புறப்பட்டுள்ளதுடன் சந்திரன் ஒரு வத்திக்கான் விசுவாசி என்பதனையும் நிரூபித்துள்ளது.

  Reply
 • nantha
  nantha

  //தொடர்ந்தும் கவிதையின் நோக்கத்திலிருந்து விலகிப்போகும் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் பதிவதையும் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

  கவிதை என்பது கவியின் சுதந்திரம். தொடரும் விமர்சனங்கள் கவிதைகளாக இருக்க வேண்டிய தேவை இல்லை. தவிர அரசியல், கலாச்சாரம், என்பன கவிகளின் கற்பனைகளை தொட்டு முட்டி மோதி கவிதை பிறக்கிறது.

  இரண்டு வரி திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுத பின்னர் அவரின் உரைக்கு பதினொருபேர் உரை எழுத வேண்டியதாகிற்று.

  “புதுக் கவிதைகள்” பலவற்றோடு எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் வரலாற்றில் இயல், இசை,நாடகம் என்பனவற்றுக்கு கவிகளின் பங்களிப்பு பெருமைக்குரியது. அந்த வகையில் “நக்கீரா” ஒரு கொடுமைக்கான எதிர்ப்பை தனக்கு முடிந்தளவில் வடித்துள்ளார்.

  எனவே கவிதைகளின் “பக்க விளைவுகள்” கவிதைகளாகவே சொல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகப் படவில்லை!

  Reply
 • chandran.raja
  chandran.raja

  நந்தாவின் குரான் பைளிள் போலவே மூலதனப்படிப்பும் இருக்கும் என்பது இனி சொல்லித்தான் தெரியவேண்டுமா?.
  நந்தாவுக்கு தான் இந்துமதத்தை சார்ந்தவர்கள் போல் கிறீஸ்தவமதம் இஸ்லாமியமதம் போன்றவற்றில் தொழிலாளிவர்க்கமோ தொழிலாளியே இல்லையே!
  மூலதனத்தைப் பற்றி என்ன தேடல் இருக்கப் போகிறது?.
  மூலதனம் படைத்தது தொழிலாளிவர்கத்தை தான் என்ற மாக்ஸின் கருத்தை தான் ஏற்றுக் கொள்வாரா? இவர்!.

  Reply
 • nantha
  nantha

  //நந்தாவின் குரான் பைளிள் போலவே மூலதனப்படிப்பும் இருக்கும் என்பது இனி சொல்லித்தான் தெரியவேண்டுமா?.//

  நந்தாவுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் ஓடி ஒளிபவர்கள் வெறும் வெத்து வேட்டுக்கள். மூலதனம் பற்றி “தனக்கு” மாத்திரம் தெரியும் என்று கப்ஸா விட்டு மாட்டிக் கொண்ட அங்க்லாய்ப்பு சந்திரனின் எழுத்தில் தெரிகிறது.

  மூலதனம் என்றநூலின் உண்மைகளை அறிந்த ஒருவன் வத்திக்கானுக்கும், மெக்காவுக்கும் வக்காலத்து வாங்கப் போவதில்லை. இன்றையநவீன முதலாளித்துவத்தின் தூண்கள் என்று கருதப்படும் வத்திக்கான், மெக்கா ஆகியவற்றுக்கு வக்காலத்து வாங்கும்நபர் “முதாலாளித்துவம்” பற்றியும் மார்க்ஸ் பற்றியும் எழுதுவதன் மூலம் எதனை சாதிக்க முயல்கிறார் என்பது தெளிவாகிறது.

  ஜேஆர் ஜெயவர்த்தன இலங்கை “சோஷலிச” குடியரசு என்ற பெயர் வைத்த கதைக்கும், சந்திரனின் வேதாள கதைகளுக்கும் வேறுபாடுகள் கிடையாது.

  பிரிடிஷார் இந்திய மக்களுக்குச் செய்த கொடுமைகள் கூட சந்திரனின் கருத்தில் “இந்துக்களின் கொடுமை” என்று கூசாமல் பொய் எழுத முற்படுகிறார்.

  எனவே சந்திரனின் “சோஷலிச”, “தொழிலாள வர்க்க” புலுடாக்கள் பற்றி ஜாக்கிரதையாக இருப்பதுநல்லது!

  இந்து மதத்தில் “அடிமைகள்” என்ற பிரயோகமே கிடையாது. ஆனால் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் அடிமைகள் பற்றியும், அடிமைகளை எப்படி மேய்ப்பது என்பது பற்றியும் தாராளாமக சொல்லப்பட்டுள்ளது.

  சில வேளைகளில் சந்திரன் அடிமைகள் தொழிலாளர்கள் அல்ல. வெறும் வளர்ப்பு செல்லப் பிராணிகள் என்று வியாக்கியானம் எழுதி தனது பாதிரி விசுவாசத்தை காட்டாமல் இருந்தால் புண்ணியம் உண்டாகும்!

  Reply
 • palli
  palli

  //நந்தாவுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் ஓடி ஒளிபவர்கள் வெறும் வெத்து வேட்டுக்கள்.//

  மதம் இனம் சாதி இவைகளை தவிர்த்து சமூகம் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் உங்களுடன் பல்லி பேச தயாராக இருக்கிறேன், அதைவிட்டு என்னோடு யாரும் சாராயம் குடிக்க முடியுமா என்பதுபோல் போதையாய் ஏசுவதால் நாம் ஒதுங்கிதானே ஆக வேண்டும்; இவ்வளவு விடயம் மார்க்ஸ்சியம் பற்றி தெரிந்து வைத்திருப்பதால் நந்தாவிடம் ஒரு கேள்வி சில காலங்களுக்கு முன்பு வேலைக்காரிக்கு பிள்ளை பிறந்ததாக ஒரு தகவல் வந்ததே அது உன்மையா அல்லது பொய்யா? தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லதுதானே;

  Reply
 • Nackeera
  Nackeera

  “புதுக் கவிதைகள்” பலவற்றோடு எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் வரலாற்றில் இயல் இசை நாடகம் என்பனவற்றுக்கு கவிகளின் பங்களிப்பு பெருமைக்குரியது. அந்த வகையில் “நக்கீரா” ஒரு கொடுமைக்கான எதிர்ப்பை தனக்கு முடிந்தளவில் வடித்துள்ளார்.” /நந்தா!

  உங்கள் கூற்றில் எந்தத் தப்பிதமும் கிடையாது. எனது குருவான கவிஞர் கதிரேசம் பிள்ளையிடம்; தோழமை பாராட்டும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற கவிஞர் சாவே பஞ்சாச்சரம் போன்றோர் கைகளில் குட்டுபட்டு வளர்ந்த எமக்கு மரபுக்கவிதைகள் என்பது அலாதிப்பிரியம். ஆரம்பகாலத்தில் மரபுக்கவிதைகளே எழுதி வந்தேன். இளஞ்சமூகம் அதற்கு இசைவுறவில்லை. அதனால்தான் புதுக்கவிதைகளை தெரிவு செய்தேன். கட்டுரையை முறித்து முறித்து எழுதிவிட்டு கவிதை என்பதை இங்கும் காணலாம். கவிநயம் கற்பனை எழுத்தடுக்கு எதுவுமே இல்லாத உரை நடையைக் கவிதை எனும்போது அம்மணஉலகில் ஆடை உடுத்தவன் குற்றவாளிதானே. என்ன செய்வது புதுக்கவிதைகளுக்குரிய படிமமோ: பளிச்சிடும் தன்மையோ: எந்த அணிகளுமே இல்லாமல் கடிதம் கட்டுரை உரைநடை கவியென்றால் என்ன செய்வது.
  நந்தா உங்களுக்கு மதநீர் என்றால் என்ன என்று தெரியும் என்று எண்ணுகிறேன். மதநீர் கொண்டு மதம் பிடித்து மதம் வளர்க்கும் மடைமையை என்ன செய்வது. மதத்தைக் காப்பாற்றத் துடிக்கும் மடையர்கள் மனிதசாதியில் பெண்ணுக்கு நடந்த அநியாயத்தை கண்டும் கண்மூடித்தனமாக இருக்கிறார்களே என்பதால் புதுக்கவிதையூடாகவாவது புரிந்து கொள்வார்கள் என்ற நப்பாசைதான். மதம் பிடித்தவர்களுக்கு மதத்தைத் தவிர அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

  உங்களுக்கு விரும்பிய மரபுக் கவிதைகள் ஈரடியாயரா நாலடியாரா? இதை விட நான் வேறுவடிவம் எடுப்பதில்லை. நீங்கள் விரும்பினால் மரபுக்கவிதை ஒன்றைத் தரத்தாயாராக உள்ளேன். நன்றி

  Reply
 • nantha
  nantha

  பாலைவனத்தில் தோன்றிய மதங்களுக்கும் இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அதனை தெரிந்து கொள்வது நல்லது.

  “எல்லா” மதங்களிலும் ஆணியடிப்புக்கள் கிடையாது. பாலைவனத்துக் கலாச்சாரத்தில் ஆணியடிப்பு சர்வசாதாரணமாக ஆயிரக் கணக்கான வருடங்களாக நடைபெறுகிறது.

  மகாஜனா கதிரேசர் பிள்ளையா?

  பல்லி:
  மார்க்சிசம் “பிள்ளை பெறுதல்” பற்றி போதிக்கவில்லை!

  Reply
 • thurai
  thurai

  //பாலைவனத்தில் தோன்றிய மதங்களுக்கும் இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அதனை தெரிந்து கொள்வது நல்லது.//நந்தா

  புல்லை புசித்து வாழும் பசு தன் பாலைக்கறக்க விடுவதால் அதனை தெய்வமாக்கி பிழைக்கும் இந்துசமயம். புலம்பெயர் நாடெங்கும் யாரோ கட்டியெழுப்பிய நாட்டில் அகதி அந்தஸ்துக்கேட்டு ஏமாற்ரி வாழுவோரிடத்தில் வள்ர்ந்துள்ள இந்து சமயக் கோவில்கள். இவையெல்லாம் உலகிற்கு எதனைப் போதிக்கின்றன?

  துரை

  Reply
 • nantha
  nantha

  துரையின் புழுக்கம் தெளிவானது. காசுக்காக மதம் மாறியவர்கள் பாலின் விலை பற்றியே சிந்திப்பார்கள். பசுவின் பால் மாத்திரமே ஆதி காலம் தொடக்கம் மனித குழந்தைகளுக்கு ஊட்டலாம் என்ற சாதாரண உண்மையை தெரிந்து கொள்ளாது “சில்லறை” க் கணக்குகள் பார்ப்பதும் “பாலவனத்து” பரட்டைப் பாரம்பரியமே!

  பாலைவனத்துக்காரர்கள் எதற்காக இந்துக்களின் நாடுகளுக்கு படையெடுத்து வந்து திருட்டு, கொலை, கொள்ளைகள் புரிந்தார்கள் என்பதை துரை மறந்து விட்டாரா?

  தவிர பாலை வனத்து மதங்களுக்கும், இந்திய மதங்களுக்கும் என்ன வேறுபாடு என்பதை துரையால் சொல்ல முடியாது மரம் விட்டுத் தாவி சம்பந்தமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பது பரிதாபம்!

  Reply
 • chandran.raja
  chandran.raja

  நந்தா திரும்பதிரும்ப இஸ்லாமியருக்கு மேல் ஆத்திரம் மூட்டிக்கொண்டிருக்கிறார்.
  “பாலைவனத்தில் தோன்றிய மதம் ஆணியடித்தார்களாம்”. இதை ஏன் “தேசம்நெற்” தனது தணிக்கை முறையை கடைப்பிடிக்கவில்லை?
  ஒருமதத்தை போற்றிக்கொண்டு மற்றைய மதத்தை இழிவுபடுத்துகிறவன் என்னை பொறுத்தவரை ஒரு மதவெறியனே. ஆரம்பத்திலேயே ஒருமதத்தில்லிருந்து இன்னொரு மதத்தை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள் என்று. இதற்கு பல்லியும் தேசம்நெற்றிடம் விளக்கம் கேட்டார்.
  தேசம்நெற்றோ இதற்கு பதில் இல்லை.
  எமது ஆரம்பபள்ளியில் ஆறுமுகநாவலர் எழுதிய சைவவினா-விடைதான் சைவப்பாடம். இந்துக்கள் திக்குதிசை பார்த்துதான் மலங்கழிக்க வேண்டியது இந்துகளின் பண்பு என்றார். கனடாவில் நந்தாவுக்கு திக்குதிசை பார்த்தா? மலசலகூடம் கட்டிவைத்திருக்கிறார்கள்?.அல்லது திக்குதிசை பார்த்து கடன் முடிக்க காரில் காட்டுக்காக போகிறார்?.
  ஆரியவதிக்கு ஆணியடித்து உயிரோடுடாவது விட்டார்கள். விசாரணைக்கு கூட்டிப் போய் உயிரே இல்லாமல் செய்வதவர்கள் நந்தா குடியிருந்த ஊரில்தான் இருக்கிறார்கள். அதையும் இஸ்லாமியர் கிறீஸ்தவர்கள்-பாதிரிகள் மக்கா மெக்கா வத்திக்கான் எனப்போகிறார்களா?
  ஆரியவதிக்கு நடந்தபிரச்சனை- சித்திரவதை மனிதகுலத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற கூலிஉழைப்புக்கும் மூலதனத்திற்கும்…முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள பிரச்சனையாக பார்கவேண்டுமே ஒழிய இதை மதப்பிரச்சனையாக்க முயலக்கூடாது.
  இதையெல்லாம் இந்த “காவிக்காரர்” விளங்கிக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை.இந்த புரிந்துணர்வு தேசம்நெற்றுக்கே! தேவை.

  Reply
 • பல்லி
  பல்லி

  //புல்லை புசித்து வாழும் பசு தன் பாலைக்கறக்க விடுவதால் அதனை தெய்வமாக்கி பிழைக்கும் இந்துசமயம்.// thurai
  ஆனால் பால்தராது என கண்டபின் அதை அடிமாடாய் விற்பதும் வழமைதான், உதாரனத்துக்காகவாவது சரியான யதார்த்தமான விடயங்களை சொல்லலாமே,

  //மார்க்சிசம் “பிள்ளை பெறுதல்” பற்றி போதிக்கவில்லை!//nantha
  இருக்கட்டுமே மர்க்ஸ்சியம் பற்றி எனக்கு தெரியாது. அது எதை போதித்துதோ தெரியாது, ஆனால் சமீப காலமாக சோபா, நாவலன்; சிறிரங்கன்; ரயாகரன்; அசோக், நந்தா இப்படி பலர் மர்க்ச்சிசவாதிகளாய் சொல்லி கொண்டு செய்யும் திருகுதாளங்களை பார்க்கும்போது இவர்கள் படித்தத்துதான் மார்க்சியமா அல்லது இவர்கள் செயல்பாட்டைதான் கால்மார்க்ஸ் தூக்கமில்லாமல் சொல்லிகொடுத்தாரா என்பது பல்லி போன்றோருக்கு ஒரு கேள்வியாக சமீபகாலமாக உள்ளது; மற்றவர்களை குப்பற விழுத்துவதிலேயே கவனமாக இருக்கும் நீங்கள் சொல்லுவதுதான் மார்க்சியம் (அப்படி இருக்காது என்பது பல்லியின் பகுத்தறிவு சொல்கிறது) எனில் உன்மையிலேயே முதலில் மார்க்ச்சியம் பற்றிய விவாதமே வேண்டும்: எடுத்ததுக்கெல்லாம் கருவப்பமிலைபோல் மார்க்ச்சியத்தை பாவிக்கும் நிங்களோ அல்லது நான் மேலே குறிப்பிட்ட சிலரோ ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரம் உன்மையான மனித நேயத்துடன் நடவுங்கள் அதன்பின் மார்க்ச்சியத்தை பற்றி புகழுங்கள். உன்மையிலேயே எனக்கு மார்க்ச்சியம் தெரியாது ஆனால் அதைபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசைகூட உங்களை போன்றோரால் போய்விடுகிறது; ஒரு கந்தனுக்கோ அல்லது சுப்பனுக்கோ கார்ல்மாக்ஸ்சை சொல்லி புரியவைக்க முடியாது ஆனால் மனிதனேயத்துடன் எதைசொன்னாலும் அதை ஏற்றுகொள்ளும் பக்குவம் அந்த தொளிலாளரிடம் இருக்கு; உங்களிடம் சொல்லும் திறன் (அப்படிதான் நினைக்கிறேன்) இருக்கே தவிர கேக்கும் பக்குவம் இல்லை; மனித நேயத்துடன் நீங்கள் எதை சொன்னாலும் அங்கே மார்க்ச்சியம் தந்த தரவுகளை இனைத்து கொள்ளலாம் ஆனால் தவறான விடயங்களில் அதை கோர்த்து பேசி அதன் பெருமைகளை கேவலப்படத்த வேண்டாமே; இங்கே துப்பவும் என நாம் சொன்னால் நீங்களோ எமது முகத்திலேயே துப்புகிறீர்கள் என்பதுதானே உன்மை;

  Reply
 • thurai
  thurai

  //பாலைவனத்துக்காரர்கள் எதற்காக இந்துக்களின் நாடுகளுக்கு படையெடுத்து வந்து திருட்டு, கொலை, கொள்ளைகள் புரிந்தார்கள் என்பதை துரை மறந்து விட்டாரா?//நந்தா
  பாலைவனத்திற்கு பணத்திற்காக படையெடுக்கும் இந்துக்கள் அங்கு கோவில்கள் கட்டாவிட்டாலும் பணத்தை மட்டுமே பெரிதாக எண்ணுகின்றார்களே ஏன்?

  //பாலை வனத்து மதங்களுக்கும், இந்திய மதங்களுக்கும் என்ன வேறுபாடு என்பதை துரையால் சொல்ல முடியாது மரம் விட்டுத் தாவி சம்பந்தமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பது பரிதாபம்!//நந்தா

  ஈழத்தமிழர் தம்பி பிரபாவை நம்பி தமிழ், தமிழ் என்றார்கள். இறுதியில் நடந்தது என்னவென்று யாவருக்கும் தெரியும். இப்போ நந்தா இந்துக்கள் இந்துக்கள் என சொல்லி இந்தியாவின் ஆதரைவைப் பெற முயல்கின்றார்.

  ஈழத்தமிழரென்றே உலகம் பார்க்கின்றது. இந்து முஸ்லிம் கிறிஸ்தவமெனெ பார்பதில்லை. இதுவே இன்னும் புரியாமல் வாழ்வதும் கருத்துகள் தெரிவிப்பதும் கிணற்றுத் தவளைகளேயாகும்.– துரை

  Reply
 • BC
  BC

  இஸ்லாமிய புனித நாடு என்று சொல்லப்படுகிற நாட்டில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமையை கண்டித்து நக்கீரா எழுதிய கவிதை பின்னோட்டங்களில் இஸ்லாமிய கொடுமைகளை நியாயபடுத்துவதற்க்கும், ஆணி அடித்ததில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத இன்னொரு மதத்தை தூற்றுவதையும் சந்திரன் ராஜா செய்கிறார்.

  Reply
 • arasaratnam
  arasaratnam

  சந்திரன்ராஜா, ஒரு மதத்தை இறுகப்பிடித்துக்கொண்டு மற்ற மதத்தை இழிவுபடுத்தாதேங்கோ என்று நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள். உங்களின் அடுத்த பந்தி இப்படிச் சொல்கிறது.

  //எமது ஆரம்பபள்ளியில் ஆறுமுகநாவலர் எழுதிய சைவவினா-விடைதான் சைவப்பாடம். இந்துக்கள் திக்குதிசை பார்த்துதான் மலங்கழிக்க வேண்டியது இந்துகளின் பண்பு என்றார். கனடாவில் நந்தாவுக்கு திக்குதிசை பார்த்தா? மலசலகூடம் கட்டிவைத்திருக்கிறார்கள்?.அல்லது திக்குதிசை பார்த்து கடன் முடிக்க காரில் காட்டுக்காக போகிறார்?./
  சந்திரன்ராஜா, இது எதில் சேர்த்தி எண்டு சொல்ல மாட்டீங்களா?.

  இந்த நெட்டிலை நானும்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறன். நந்தா பல்லி துரை என்ற முக்கோணச்சண்டை. இப்ப சந்திரன்ராஜா குசும்பு நிஸ்தார் எண்டு நீளுது. ஆளாளுக்கு மாறி மாறி குத்துங்கோ எக்கச்சக்கமாய் முறையாய் ஒண்டு உங்கட முகத்திலை பட்டதும் கத்துங்கோ ஜயோ தேசம்நெட் தணிக்கை இல்லையோ எண்டு. வெட்கமாய் இல்லை.

  ஆணி கவிதை எழுதினார் நக்கீரா. கவிக்குக் கவி பாடிக்கொண்டு சந்தோசமாய் இருந்தீங்கள்.

  இடையில் நந்தாவின் ஒரு வரிக்கு சோதிலிங்கம் நன்றி சொல்ல தொடங்கினீர்கள் சந்திரன்ராஜாவும் நந்தாவும் உங்கட தொடர் அடிபிடியை. நிலைமை கண்டு குறிப்புப் போட்டு கோடு கீறவந்த சோதிலிங்கத்தை தள்ளி விழுத்திவிட்டு ஒருபாட்டம் உங்கட வழக்கமான குப்பைகளை கவிட்டுக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நிலைமை கவலைக்கிடம் எண்டதம் தேசத்திலை பழியைப் போடுங்கோ. எதற்கும் எதிலாவது அல்லது யாரிலாவது பழியைப் போட்டட்டுத் தப்பிக்கப் பாருங்கோ.

  நீங்கள்தான் எல்லாரும் ஏதோ மக்கள் மக்கள் எண்டு கருத்து எழுதுகிறீர்கள். எவன் கருத்திற்கெடுப்பான் உங்கட கருத்தை. சந்தடி சாக்கிலை நிஸ்தார் கவிதை ஒண்டை இடையில் விட்டிருக்கிறார் பாருங்கோ. இவர்தான் எல்லா மதங்களும் பற்றி எல்லா மதப் பிள்ளைகளுக்கும் அரிவரியில் இருந்து சொல்லிக் கொடுத்தால்தான் சழூக மாற்றம் வரும் எண்டு எழுதியவர்.

  மாக்சிசத்துக்கு அது பற்றி இங்கே எழுதிக் குவிக்கிறவை அதைப்பற்றி இங்கே கட்டுரையாய் எழுதுங்கோ. அங்கை இருந்து மாக்சிசத்தை விமர்சிக்கலாம் எண்டு சோதிலிங்கம் எழுதினதுக்கப் பதில் நந்தா சொல்கிறார். கவிதைக்குப் பக்க விளைவுகள் கவியாய் வரவேண்டுமென்றில்லையாம். முதலில தமிழ் வாசிச்சு விளங்கப் பாருங்கோ.

  சோதிலிங்கத்துக்கு உதெல்லாம் காலம் கடந்த ஞானம் எண்டாலும் நீங்கள் சொன்னதை வரவேற்கிறேன் எண்டு பதில் பல்லி சொன்னதைப் பார்த்து அற்லீஸ்ட் பல்லி இனி தொடராது எண்ட நான் நம்பினேன். விட்டனோ பார் எண்டு தொடர்ந்த பல்லி இப்ப இங்கே துப்புங்கள் எண்டால் என்ரை முகத்திலை துப்புறாங்கள் என்கிறார். இதைத்தானே சோதிலிங்கம் கேட்டாரே கட்டுரை ஒண்டை எழுதிப்போட்டு அதுக்கை நிண்டு துப்புங்கொ எண்டு கேட்டியளா. இப்பவும் காலம் போகேல்லை உங்கட உங்கட மதங்கள் பற்றியும் நீங்கள் நம்புகிற இசங்கள் பற்றியும் கட்டுரை கட்டுரையாய் எழுதலாம் எழுதுங்கோ

  Reply
 • chandran.raja
  chandran.raja

  திரு அரசரட்னம்! கும்பல் கானாது என்று கூட்டத்திற்கு வந்ததிற்கு முதல் நன்றி. தொடர்ந்தும் வாருங்கள்.
  தேசம்நெற்றுக்கு யாரும் குளையடித்து உசிப்பி விடுகிற வேலையோ பப்பாவில் ஏத்திவிடுகிற வேலையை செய்யாதீர்கள். இந்த வளர்ச்சி ஆரோக்கியமானது அல்ல. பக்கம் பக்கமாக விமர்சியுங்கள் ஏசுங்கள் பேசுங்கள் மானிடநலம்கருதி. இதில் இனத்தின் பெருமையும் மதத்தின் பெருமைகளை தம்பட்டம் அடிக்காதீர்கள். அவரவர் மதங்களை அவரவர் போக்கே விட்டுவிடுங்கள். சோதிலிங்கத்திற்காக நீங்கள் வடிக்கும் கண்ணீர் உண்மையானதா? தற்போதைக்கு பல்லி எப்போ! சொன்னது தான். “சில கட்டுரைகளை பின்னோட்ங்களே தூக்கி நிறுத்துகிறது”. இவ்வளவு காலமும் படிக்காத கட்டுரை கதைகளுக்கா இன்னும் காத்துநிற்கிறீர்கள். கட்டுரையை விட பின்னோட்ங்களே வலுவான சக்தியாக மாறிவருகிறது.
  இது நவீனஉலகம் தந்த கொடைபோலும்தொடரும்.

  பிசி ஆணிஅடித்தது மதமா? உங்க ஊர்காரரே ஆணியும் அடித்து உயிரையும் போக்காட்டியிருக்கிறார்கள்! இதை எந்த மதத்தில் சேர்க்கப் போகிறீர்கள்

  Reply
 • mohamed nisthar
  mohamed nisthar

  பீசீ, அது என்ன “இஸ்லாமிய கொடுமைகள் …” இனி சைவக் கொடுமை, கத்தோலிக்கக் கொடுமை, பெளத்தக் கொடுமை என்று நீளும் போல் தெரிகிறது?

  அரசரத்தினம், “நிஸ்த்தார் கவிதை ஒன்றை …..இவர்தான் எல்லா மத பிள்ளைகளுக்கும் எல்லா மதன்கள பற்றியும்… என்று எழுதியவர்.”

  நக்கீராவின் கவிதைக்கான எனது பின்னூட்டம், மற்ற மதங்களை,மன்னிக்கவும், சமயஙளை குறை கூறவல்ல. மற்றோருக்கு என் மதம் பற்றி பிழையான தகவலை தரவேண்டாம் என்பதற்காகவே. உதாரணம் பிறை வணக்கம், காசுக் கடவுள், குரான் சுமந்த குறை மதியர் போன்ற சொற் பிரயோகங்கலள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //சோதிலிங்கத்துக்கு உதெல்லாம் காலம் கடந்த ஞானம் எண்டாலும் நீங்கள் சொன்னதை வரவேற்கிறேன் எண்டு பதில் பல்லி சொன்னதைப் பார்த்து அற்லீஸ்ட் பல்லி இனி தொடராது எண்ட நான் நம்பினேன். விட்டனோ பார் எண்டு தொடர்ந்த பல்லி இப்ப இங்கே துப்புங்கள் எண்டால் என்ரை முகத்திலை துப்புறாங்கள் என்கிறார். இதைத்தானே சோதிலிங்கம் கேட்டாரே கட்டுரை ஒண்டை எழுதிப்போட்டு அதுக்கை நிண்டு துப்புங்கொ //
  அரசரட்னத்துக்கு பல்லி மீது கோபமோ அல்லது கடுப்போ எனக்கு தெரியாது; ஆனால் அவர் பல்லி எழுதுவதை விரும்பவில்லை என்பது புரிகிறது, தயவுசெய்து அரசரட்னம் உங்களுக்கு நேரம் இருப்பின் எனது பின்னோட்டங்களை கவனிக்கவும், நான் யாரையும் பகைக்க விரும்புவதில்லை, அதையே மறவர்களுக்கும் சொல்ல முனைகிறேன், கத்தியால் கொலையும் செய்யலாம் அறுவை சிகிச்சையும் செய்யலாம் (கத்தி என்பது மதம்) நான் எதை எடுத்தேன் என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள்;

  Reply
 • பல்லி
  பல்லி

  // மனித நேயத்துடன் நீங்கள் எதை சொன்னாலும் அங்கே மார்க்ச்சியம் தந்த தரவுகளை இனைத்து கொள்ளலாம் ஆனால் தவறான விடயங்களில் அதை கோர்த்து பேசி அதன் பெருமைகளை கேவலப்படத்த வேண்டாமே;//
  சந்திரராஜா பி சி நந்தா இந்த பின்னோட்டத்துடன் இனையுங்கள். ஆரோக்கியமாக பலருடன் விவாதிப்போம்; பல்லி குறிப்பிட்ட பெயர்கள் உதாரணம்தான் அனைவரும் இனையுங்கள் மார்க்சியம் பற்றியும் சிறிதாவது நாம் தெரிந்து கொள்வோம்:
  நட்புடன் பல்லி;

  Reply
 • Jeyarajah
  Jeyarajah

  நாவலன் , சோபா, ரயாகரன் இந்த வரிசையில் நந்தாவைச் சேர்ப்பது நல்லதல்ல. அவர்கள் தாங்கள் இணையம் தொடங்கி தங்கள் கருத்துக்களையே எழுதி வருகிறார்கள். நந்தா வேறு தளத்தில் தனது பின்னோட்டங்களை எழுதி வருகிறார். நந்தா எழுதுகிற விடயங்களில் மூலதனமாக இருக்கட்டும் குர்ரானாக இருக்கட்டும் இந்தப் புத்தகத்தில் இத்தனையாவது பக்கத்தில் இந்த வரியில் இப்படி இருக்கிறதென்று எங்களால் நிரூபிக்க முடியவில்லை. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு நாஙகள் நிறைய இன்னும் கற்கவில்லையோ தெரியாது.

  என்னுடைய மதம் மட்டுமல்ல மற்றைய மதங்களையும் கொச்சைப்படுத்தக் கூடாதென்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் விமர்சனங்களை வைக்கலாம். இந்த விமர்சனங்களால் மதக்கலவரமோ உலகப்போரோ வரப் போவதில்லை. ஒபாமாவும் பின்லாடனும் தேசம்நெற் வாசித்துவிட்டுத்தான் தங்கள் அலுவல்களைப் பார்க்கப் போகின்றார்களா?

  இங்குவந்து நந்தா, பல்லி ,சந்திரன் ராஜா, சாகீப், துரை இப்படி நிறையப்பேர் எழுதுகிற நல்ல விடயங்கள்தான் வாசகர் மத்தியில் எடுபடும்

  Reply
 • பல்லி
  பல்லி

  //இந்த நெட்டிலை நானும்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறன். நந்தா பல்லி துரை என்ற முக்கோணச்சண்டை. இப்ப சந்திரன்ராஜா குசும்பு நிஸ்தார் எண்டு நீளுது. ஆளாளுக்கு மாறி மாறி குத்துங்கோ எக்கச்சக்கமாய் முறையாய் ஒண்டு உங்கட முகத்திலை பட்டதும் கத்துங்கோ ஜயோ தேசம்நெட் தணிக்கை இல்லையோ எண்டு. வெட்கமாய் இல்லை. //
  பல்லி எழுதிய பின்னோட்டம் நூறை தாண்டி இருக்கும்; (சரிதானே தேசம்) அதில் அரசரட்ணம் சொல்லுவது ஒரு இருபது பின்னோட்டமே நான் நந்தாவுடன் வாதம் செய்தது; ஆகையால் மேலே குறிப்பிட்ட கருத்து தவறு என்பது பல்லியின் கருத்து; தவறை திருத்துங்கள் மன்னிப்புடன்
  ஏற்று கொள்வேன், ஆனால் உங்கள் திருத்தத்துக்காக என் கருத்துக்கள் (பின்னோட்டம்) தவறாக வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கு??

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன் ராசா! /பிசி ஆணிஅடித்தது மதமா? உங்க ஊர்காரரே ஆணியும் அடித்து உயிரையும் போக்காட்டியிருக்கிறார்கள்! இதை எந்த மதத்தில் சேர்க்கப் போகிறீர்கள்/
  அது என்ன புதிதாக ஒன்று. ஆணியடித்து உயிர் எழுப்பது இஸ்லாமும் கூறானும் தான் எமது ஊரில் மண்டையில் கொத்துறது தெரியுமோ? கொத்து வாங்காத குணம்தான் இந்தக்கத்தல். கொத்து வாங்கினவை எல்லாரும் அடங்கி அடிச்சா காசோடை ஓடிப்போட்டினம் பாருங்கோ.

  உந்தமாக்சிசமும் மதமும் இஸ்லாமும் ஏறக்குறைய ஒன்றுதான். முகமது சொன்னது மட்டும்தான் சரி அதேபோல் கால்மாக்ஸ் சொன்னது மட்டும்தான் சரி என்று மற்றப்பக்கம். இது மாக்சிச மதம். மாக்சிசமும் மூலதனத்தைப் பற்றிக் கதைக்கும் சந்திரன் ராசா! மூலதனமில்லாமல் முதலுக்கே ஆப்புவைத்த மாக்சிச மூலதனங்களை யாருக்கு வேண்டியிருக்கிறது. அதனால்தானே லெனிலில் இருந்து மாவே வரை புதைச்சாயிற்று. ஏனப்பா கிண்டிக் கிண்டி பிணங்களைத் தேடுகிறியள். ஏதாவது புதிசாச் சொல்லுங்கோவன். நானென்று புதிசாய் சொல்லட்டே.
  புலிகள் உலகவங்கி ஒன்று திறக்கப் போகினமாம். யூதர்கள் அப்படித்தானாம் திறந்து நாடுபெற்றார்கள். தமிழ்ஈழத்துக்கு வழி பணக்காரர்கள் ஆவதாம். நல்லவிசயம் அப்ப பணக்காராவது யார்? அவர்களா நாங்களா? சந்திரா மூலதனத்தைப் பற்றித்தான் கதைக்கிறோம். தயவுசெய்து மாக்சை நிம்மதியாகத் தூங்கவிடுங்கள். மாக்ஸ் இராத்திரி வந்து கவலைப்பட்டார் செத்தும் கூட என்னைச் சும்மா விடுகிறாங்கள் இல்லை என்று. நான் பகிடிக்கு எழுதியதை வில்லங்கப் படுத்துகிறாங்கள். நீங்கள் எல்லோரும் வந்து கிண்டிக்கிளறுவீர்கள் என்ற பயத்தில் தூக்குப்போட எங்காவது கண்காணாத இடமிருக்கோ என்று கேட்டார். நான் சொன்னேன் தேசத்திலை கொஞ்சப்பேர் உங்களைத் தேடித்திரிந்தவர்கள். அவர்கள் எங்கு போகமாட்டார்களோ அங்கே போய் தூங்காதீர்கள் தூக்கையே போட்டுவிடுங்கோ என்று சொல்லியிருக்கிறன். முடிந்தால் மாக்சிசவாதிகளே எங்கே நீங்கள் போகமாட்டீர்கள் என்று சொல்லுங்கள். பாவம் மாக்ஸ் தூங்கட்டும்.

  Reply
 • nantha
  nantha

  ஆறுமுகநாவலருக்கு இந்து மதத்தில் எந்த அந்தஸ்த்தும் கிடையாது. யாழ்ப்பாணத்தில் அவருடைய “சாதி” என்று சொல்லுபவர்கள் மாத்திரம் அவரைத் தலையில் வைத்து கூத்தாடுகிறார்கள்.

  ஆறுமுகநாவலர் நல்லூர் கோவில் பக்கமே தலை காட்டக் கூடாது என்று துரத்தப்பட்ட கதை பலருக்குத் தெரியாது. ஆங்கிலேயர்களின் அடியாளாக செயல்பட்ட ஆறுமுகத்தை அல்லது அவரால் எழுதப்பட்ட “சைவ வினா விடை” என்ற பைத்தியக் காரத்தனத்தை “இந்துக்கள்” பின்பற்றுகிறார்கள் என்று சந்திரன் கூறுவது அவரின் அறியாமையின் வெளிப்பாடாகும்.

  இஸ்லாமியர்களுக்கு கோவம் வந்தால் சந்திரன் ஏன் குதிக்க வேண்டும்?

  சந்திரனின் “தொழிலாள வர்க்க முகமூடி” சிதைந்து போனதில் எனக்கு வருத்தம் கிடையாது. தொழிலாள வர்க்கம் என்று கதைவிட்டு எந்த தொழிலாள வர்க்க எதிரிகளை அவர் பாதுகாக்க முற்பட்டிருக்கிறார் என்பதனை வாசகர்கள் தற்பொழுது கண்டு கொண்டிருப்பீர்கள்!

  மார்க்சிசம் என்பது எல்லோரும் இன்று தங்களுக்கும் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் அதீத மகிழ்வு அடைகிறார்கள். காரணம் என்ன? கஷ்டத்திலிடர்ப்படும் தொழிலாள வர்க்கத்துக்கு அது இன்றும் ஒரு கலங்கரை விளக்கம் என்பதுதான் காரணம்!

  மார்க்சிசத்துடன் “சமரசம்” செய்துள்ள மேற்குநாடுகளில் தொழிலாளர்கள் பல வசதிகளை பெற்றிருக்கிறார்கள் என்பதனை அங்கு போய் இன்று வாழும் தமிழர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை!

  தேசம்நெட் இலங்கைப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுவதினால் மாத்திரமே எழுதுகிறேன். வெளிநாடுகளில் உள்ள வசதிகளினூடாக நான் பிறந்து வளர்ந்த நாட்டுப் பிரச்சனைகளை நோக்க நான் தயாரில்லை!

  ஆனால் இங்கு எழுதும் பலர் அதாவது என்னுடன் முட்டி மோதுபவர்கள் வெளினாட்டு வசதிகளினூடாகவே இலங்கைப் பிரச்சனைகளை அணுகுவது புரிகிறது.

  பலருக்கு தமக்கு கிடைத்த “சுயலாபங்கள்” எனது கருத்துக்களுடன் அவர்களை மோத தூண்டுகிறன. இந்த லட்சணத்தில் “மக்கள்”நலம் என்று குழையடித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்பதும் புரியவில்லை!

  எனக்குக் கிடைத்த லாபங்கள் மாதிரி உனக்கும் கிடைக்கும் என்று மதம் மாற்ற அலையும் கும்பல்களின் அறிவுரைகள் தாராளமாக வருகின்றன.

  “மதங்கள்” பற்றி தாராளமாக அட்வைஸ் பண்ணுபவர்கள் “தமிழ்” என்று வெளி நாட்டு நாஸி தலமையில் இயங்கும் கத்தொலிக்க பாதிரிகள் எதற்காகப் புகுந்து நாட்டியமாடுகிறார்கள் என்பதற்கு இதுவரை பதில் எழுதாமல், இந்து மதம் என்று குதிப்பதன் மர்மம என்ன? ஆகவே இந்த தமிழ் பிரச்சனை மத மாற்றப் பிரச்சனை என்றே கருதுகிறேன்!

  பாதிரிகள் வெளினாட்டின் ஏஜன்டுகள் என்று உணராதவர்கள் இந்து மதம் பற்றியோ, தமிழ்,சோஷலிசம் பற்றியோ எனக்கு அறிவுரை கூற வேண்டாம்!
  பாதிரிகளோடு அல்லது இஸ்லாத்துடன் சம்பந்தமில்லாதவகளின் குதிப்புத்தான் அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் எனது கேள்விகளுக்கு பதிலளியாது ஓடி விடுவதும் தெரிகிறது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  மாக்ஸியத்தை நிராகரியுங்கள்.அப்படி நிராகரிக்கும் போது அவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டே நிராகரிக்க உரிமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று ஒருசாரர் கருதுகிறார்கள். அப்படியே வைத்துக் கொள்வோம்.கிறீஸ்தவன் குரானையும் ஒரு முஸ்லீம் பைபிளையும் கையில் வைத்திருக்க முடியுமா? அப்ப மனிதனுக்கு என்ற பொய் அம்பலத்துக்கு வருகிறது அல்லவா?. மனிதன் என்பவன் ஒட்டுமொத்த உலகத்தையும் அல்லவா குறிக்கிறது? அவுஸ்ரோலியாவில் உள்ள “அபுஜீனியன்” பூர்வீககுடிகளும் தென்அமெரிக்காவில் செவ்விந்தியகுடிகளும் மனிதர்கள் அல்லவா? ஏன்? தமிழ்நாட்டில் இருக்கிற பாப்பட்டி கீரிப்பட்டி இந்தியாவில்லிருந்து அடிமைகளாக இறக்கப்பட்ட மலையக மக்கள் கிணற்றில் தண்ணீர்அள்ளவிடாமல் தங்கள்துன்பத்தை அழுது சாந்திபெறுவதைக் காண்பதற்கு கருவறையை தடுக்கப்பட்டவர்களும் மனிதர்கள் தானே!. இல்லை.இல்லை.இவர்கள் மனிதர்கள் இல்லை என்று எத்தனை பேர் இத்தளத்தில் சொல்லப் போகிறீர்கள்?.நான் சொல்லுவேன்.மாக்ஸியத்தை நிகாரிப்பவர்களே!
  இவர்கள்.ஏனெனில் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்நீங்கள்.இவர்களுக்கு உண்மையில் தமிழன் என்பவன் யார்? என்பதை அறியாதவர்.அல்லது நடிப்பவர்கள் அடுத்த வார்த்தைகளில் சொன்னால் சுயநலக்காரர்.

  குசும்பு!யாரும் சொல்லாததை நீங்கள் சொல்லவில்லை.மாக்ஸ் இறந்தவுடன் அவர் தத்துவமும் அவருடன் சேர்ந்து கல்லறைக்கு போய்விட்டது என்று முதாலித்துவ தாசர்களால் பத்தொன்பாதவது நுற்றாண்டின் முடிவிலேயே சொல்லியாயிற்று. இந்தமாமேதை இறந்து முப்பத்தினாக்கு வருடங்களுக்குபிறகே ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிவெடித்து உலகமெல்லாம் சிகப்பு பொறிகளை அனுப்பி வைத்தது. அதன்பிறகு முப்பது வருடங்களுக்கு பிறகு ஐந்தில்ஒரு சனத்தொகையை உள்ள சீனா என்ற அசுரன் சிகப்புகொடியுடன் எழுந்து நின்றான். இதில் பல விமர்சனங்கள் உண்டு.இந்த நாடுகள் சிகப்பாகவிட்டால் இந்த நாடுகள் ஏகாதிபத்தியவதிகளின் பலகொடுமைகளுக்கும் இன்னும் பலமில்லியன் கணக்காண மக்களின் அழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்.
  ஒவ்வொரு முதாலித்துவபொருளாதர சிதைவிலும் பத்துத்தலை இராவணாக கால்மாக்ஸ் தத்துவம் கல்லறையில்லிருந்து எழுந்தவந்து உங்களைப் போன்றேருக்கு கிலியூட்டிக் கொண்டேயிருக்கும்.எவரை மனிதர்கள் இல்லையென்று ஒதிக்கி வைத்தீர்களோ அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //இங்குவந்து நந்தா, பல்லி ,சந்திரன் ராஜா, சாகீப், துரை இப்படி நிறையப்பேர் எழுதுகிற நல்ல விடயங்கள்தான் வாசகர் மத்தியில் எடுபடும்//
  நன்றி ஜெயராஜ்; கண்டிபாக பல்லி கவனத்தில் எடுத்து கொள்கிறேன்; தவறுகளை சுட்டிகாட்டவும்; அதுவே எம்மை போன்ற புதியவர்களை சீராக எழுதவைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு;

  //மாக்ஸியத்தை நிராகரியுங்கள்.அப்படி நிராகரிக்கும் போது அவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டே நிராகரிக்க உரிமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.// சந்திரன் ராஜா
  நியாயமான பேச்சுதான் எந்தஒரு விடயத்தையும் புரிந்து கொள்ளாமல் நிராகரிக்ககூடாது, அதேபோல் எந்த ஒரு செயலோ அல்லது உவமைகளையோ தெரியாமல் ஏற்று கொள்வதும் தவறுதானே, இதில் குசும்பு சொல்லியதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் தனக்கே உரிய பாணியில் குசும்பாக கேட்டவிடயம் கவனத்தில் எடுக்கபடவேண்டும் அல்லவா??
  எதுக்கெடுத்தாலும் மார்க்ச்ஸியம் பேசுவது சரிதானா?? அதேபோல் மார்க்ஸ்சிச வாதிகள் என குரல் கொடுப்போர் தாம் செய்யும் காரியங்களுக்கு மார்க்ஸ்சை உதவிக்கு அழைப்பது சரிதானா? அல்லது இவர்கள் ஓரு போலியான மார்க்ச்ஸீயத்தை கையாளுகிறார்களா?? எனது எண்ணபடி மார்க்ஸ் கண்டிப்பாக மனிதனேயமுள்ள ஒருவராகதான் இருக்கவேண்டும்; அப்படியானால் அவரது கொள்கைகளும் அதனை பிரதிபலிக்கதானே செய்யும்; ஆனால் இதில் இன்று தன்னை மர்க்ஸ்நிழலாக சொல்லிகதைகள் பல சொல்லும் நாவலர் (உதாரனத்துக்காக சமீபத்தில் நடந்த சம்பவத்தை எடுத்தேன், ஆனால் இருப்பில் பல உண்டு) ஒரு மனிதனை கடத்துவதுக்கு ஆதரவாகவும் அவரது மனைவியை இரவில் தொல்லைபேசியில் பேசியும் பேசியதை ஒலிவடிவமாக்க இனையத்தில் தனக்கு பாதுகாப்புகேடயமாக பாவித்ததும் பல்லிபோல் பலர் அறிந்த விடயமே, இதை கிராமபுற பாசையில் சொல்லுவதானால் ஒரு பெண்ணை கடத்தி கெடுத்து கொலைசெய்ததுக்கு சமனான செயலே, இன்னொருவர் தண்ணியை போட்டுவிட்டு ஒரு தொளிலாளிக்கு கன்னத்தை பொத்தி அடிக்கிறார், அவரே பின்பு மர்க்ஸ் இப்படிதான் வாழ்ந்தார்(தன்னைபோல்) என ஊடகத்தில் எழுதுகிறார், இத்தனையும் நடக்கும்போது மார்க்ஸ்சியத்தை எந்த ஒரு பாமரனும் அவமானபடுத்தவில்லை, சிலவேளை அது அவனுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் கேவலபடுத்துபவர்கள் யார்? அப்படி கேவலபடுத்துபவர்களுடன் ஏன் மார்க்ஸ்சியம் தெரிந்தவர்கள் வாதிட மறுக்கிறியள்; இதுவே குசும்புபோல் பல்லியின் ஆதங்கமும்;
  மானென்றால் ஓடுவதும்
  மயிலெனில் ஆடுவது
  கியிலென்றால் கூவுவதும்
  மனிதன் என்றால் மாறுவதும்
  இயற்கையுடன் கூடிய இயல்பான விடயங்கள்தான்;
  ஆனால் அதையும் மீறி சில கட்டுகோப்பான நாகரிகமான நல்லிண்ணக்க மனிதநேயமுள்ள விடயங்கள் மார்க்ஸ்சிச வாதிகளிடம் இருக்கவேண்டாமா? அது இல்லாதுபோனால் அவர்கள் மீது நாம் விமர்சனம் செய்யகூடாதா என்பதுக்கான விடையுடன் யாராவது??

  Reply
 • BC
  BC

  குசும்பு, பின்னோட்டத்திற்க்கு மிகவும் நன்றி.
  “உந்தமாக்சிசமும் மதமும் இஸ்லாமும் ஏறக்குறைய ஒன்றுதான். முகமது சொன்னது மட்டும்தான் சரி அதேபோல் கால்மாக்ஸ் சொன்னது மட்டும்தான் சரி” அதே தான். உலகத்துக்கு தேவையான சகல பிரச்சனைக்கு தீர்வுகள் குர்ஆனும், மாக்ஸிசமும் சொல்கிறதாம் என்று பெருமைபடுவார்கள், தம்பட்டம் எல்லாம் அடிப்பார்கள். நாங்களும் அதை ஏற்று கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

  நேற்று தொழிளாளியாக இருந்தவர் இன்று தமிழ்கடை முதலாளியா இருக்கிறார். புலிகளாய் இருந்து மக்கள் காசில் மோசடி செய்து அப்படி வந்தோரும் இருக்கிறார்கள். நேர்மையா தங்கள் முயற்ச்சியால் முதலாளியாக வந்தோரும் உள்ளனர் .இதே மாதிரி முன்பு பெற்றோல்செற் வைத்திருந்த எனது உறவினர் இப்போ தொழிலாளியாக இருக்கிறார்.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  “வால்(ட்)காவிலிருந்து கங்கைவரை” என்ற புத்தகத்தை “தேசம் நெற்” இங்கு மறுபிரசுரம் செய்யுமானால், அறிவுசார் பின்னூட்டக்காரர்களின் மோதல்களுக்கு அது ஒரு முற்றுப்புள்ளியாக அமையும். அந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கவேண்டும் போல ஆவலாய் இருக்கிறது.

  “தேசம் நெற்” இதைச்செய்யுமா?

  Reply
 • பல்லி
  பல்லி

  //“வால்(ட்)காவிலிருந்து கங்கைவரை” என்ற புத்தகத்தை “தேசம் நெற்” இங்கு மறுபிரசுரம் செய்யுமானால், அறிவுசார் பின்னூட்டக்காரர்களின் மோதல்களுக்கு அது ஒரு முற்றுப்புள்ளியாக அமையும். //
  அந்த புத்தகத்தை தாங்கள் வாசித்துவிட்டீர்கள் என்பது உங்கள் பின்னோட்டத்தில் தெரிகிறது, ஆனால் அதன் பின்புமா சில இடங்களில் குண்டக்க மண்டக்கா கேள்விகள் உங்களால் கேக்க முடிகிறது?

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  கேள்விகள் கேட்கப்படும்போதுதானே ஞானம் பிறக்கும்! – இது பொய்யா?

  Reply
 • Nackeera
  Nackeera

  //மகாஜனா கதிரேசர் பிள்ளையா//நந்தா
  ஆம் அவரே தான்: உங்களுக்கு அவரைத் தெரியுமா?

  Reply
 • nantha
  nantha

  தெ.து.ஜெயரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் மகாஜனக் கல்லூரியின் நாடகங்கள் பலவற்றைத் தயாரித்து நெறிப்படுத்திய தமிழ் வித்தகர் கதிரேசர் பிள்ளையை மறக்க முடியுமா?

  Reply
 • palli
  palli

  //கேள்விகள் கேட்கப்படும்போதுதானே ஞானம் பிறக்கும்! – இது பொய்யா?//

  நானும் அப்படி சொல்லவில்லையே. ஞானம் சிறிதாவது எனக்கும் வரட்டுமே எனதான் தங்களிடம் கேலியாய் கேள்வி கேட்டேன் அது ஒரு தப்பா??

  Reply
 • Nackeera
  Nackeera

  நந்தா! அவர் ஒரு அருமையான மனிதர். நல்ல தமிழ்பிள்ளைகளை உருவாக்கவேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருந்தவர். அளவெட்டியைச் சேர்ந்தவர். ஆதவனின் தந்தை. யெரட்ணம் காலம் எனக்கு மிக மிக தொலைவானது. நான் அதிபர் மகாதேவன்: கனகசபாபதி காலத்தைச் சேர்ந்தவன். உதைபந்தாட்ட 3ம் பிரிவில் இருந்து முதலாம் பிரிவு வரை விளையாடி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளேன் எனது இயற்பெயர் நக்கீரா அல்ல. நாங்களும் மகாஜனக்கல்லூரி பழையமானவரா? அதிபர் கனகசபாபதி அவர்கள் கனடாவில்தான் வாழ்கிறாராம். என்ன இருந்தாலும் மோதிரக்கையால் குட்டுப்பட்டோம் என்பதில் பெருமைதான். கதிரேசம்பிள்ளை அவர்களிடம் கற்றதில் நான் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர் பெருமைப்படுமாறு நான் என்ன செய்தேன் என்பது பெரும் கேள்விதான். இன்று கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலவர் கவிஞர் சாவே பஞ்சாட்சரத்தை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். பல நிகழ்ச்சிகள் செய்வதாகவும் அறிகிறேன். இவருடைய இரண்டு வரிகளை நான் எழுதியே ஆகவேண்டும். எழிய நடையில் மரபுக்குள் தமிழ் விளையாடும் அழகைப்பாருங்கள்.

  கல்லைக் கடலையுள் கலந்தே விற்றவள்
  செல்லாக்காசையும் சேற்றே பெற்றனள்.

  இப்படியான சொர்க்கிப்போகும் வரிகளின் சொந்தக்காரன் என்னூரவன் வயது பாராமல் பழகும் நல்ல தோழர் ஆசிரியர் சாவே பஞ்சாட்சம் அவர்கள். மன்னிக்கவும் நான் துர்அதிஸ்டவசமாக நான் ஒரு விஞ்ஞானபீடமாணவன் என்பது வேதனைதான்.

  Reply
 • Nackeera
  Nackeera

  என்ன பல்லி இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நான் எங்கேயும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறவில்லையே. நன்றாகக் கேளுங்கள் எனக்குத் தெரிந்தவரை பதில் தருகிறேன். கேள்வி கேட்பது என்றும் தப்பாக இருக்க முடியாது. தெரிந்தும் சொல்லாமல் இருப்பதுதான் தப்பு.

  Reply
 • nantha
  nantha

  மார்க்சிசம் கம்யூனிசம் சோஷலிசம் என்பன பற்றி பூச்சாண்டி காட்டி மக்களுக்காக போராடுகிறோம் என்பவர்கள் எதனைச் சாதிக்க முற்படுகிறார்கள்?

  மார்க்சிசத்தின் பரம எதிரிகளான மேற்கு நாடுகள் எப்படி “பணக்கார”நாடுகளாயின என்ற வரலாற்றை சிறிதும் ஆராயாது இடதுசாரித் தத்துவங்களுக்கு எதிராக நம்மவர்கள் எழுப்பும் கண்டனங்கள் கேள்விக்குரியவை.

  மார்க்ஸ் தொழிலாளர்களுக்குள்ள உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் பற்றி கூறிய உண்மைகள் இதுவரையில் “பொய்யானவை” என்று எங்கும் நிரூபிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

  ஒரு தொழிலாளியின் உழைப்பை அளக்க இதுவரையில் “மானிகள்” எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஒரு தொழிற்சாலையில் கிடைக்கும் “உபரி” லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு உண்டா? அல்லது அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் “முதல்” போட்டபடியால்த்தான் அந்த லாபம் கிடைத்ததா? அவருக்கு அந்த “முதல்” அல்லது “மூலதனம்” எப்படிக் கிடைத்தது?

  இந்தக் கேள்விகளுக்கு மார்க்சினது “மூலதனம்” மாத்திரம் பதில் தருகிறது. இந்துக்களின் வேதங்களோ கிறிஸ்தவர்களின் பைபிளோ முஸ்லிம்களின் குரானிலோ பதில் கிடையாது.

  “தமிழுக்காக” குருதி கொட்டியவர்களின் செயல்பாடுகள் மாத்திரமே தமிழர்களை இலங்கையில் அழித்துள்ளது. தொழிலாளர் போராட்டங்களினால் இலங்கையில் எவ்வளவு ரத்தம் சிந்தியது என்று சிந்திப்பது நல்லது.

  மார்க்சிசத்துக்கு மதம் மொழி என்பன கிடையாது. உழைப்பின் பெறுமதி பற்றியதே மார்க்சிசம். ஒரு மனிதனின் உழைப்பின் பலன் அவனுக்குக் கிடைக்காது போகும் பட்சத்தில் அது “சுரண்டல்” என்று கூறப்படுகிறது.

  தமிழ் தமிழீழம் என்று புறப்பட்ட யாழ்ப்பாணத்துத் தலைமைகள் இலங்கையின் முதுகெலும்பாகவுள்ள “தமிழ்” தோட்டத் தொழிலாளர்களை அடியோடு ஒதுக்கித் தள்ளிய காரணம் என்ன?

  ஈழம் கிடைத்தால் சிங்களவர்கள் அவர்களை விரட்டுவார்கள். அவர்கள் ஈழத்துக்கு வரவேண்டும் வந்து அடிமை குடிமைகளாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?

  வெளினாட்டு முதலாளித்துவத்தின் தலையீடுகளை இலங்கையில் யுஎன்பி ஆதரித்து அதன் ஏஜன்டாகவே நடந்து கொள்ளுகிறது. அதற்கு “தமிழுக்காக” உயிரை விடுபவர்கள் அனைவரும் ஆதரவு.

  தேசிய முதலாளித்துவ கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இலங்கைத் தொழிலாள வர்க்கத்துடன் எப்பொழுதும் சமரசம் செய்தே வருகிறது.

  இலங்கை சுதந்திரம் பெற்ற பின் வந்த யுஎன்பி அரசு மே தினத்தைக் கொண்டாடக் கூட அனுமதிக்கவில்லை. 1956இல் அரசு கட்டிலேறியவர்கள் மே தினத்தை விடு முறையாக அனுமதித்தவுடன் மாத்திரமின்றி தொழிலாளர்கள் விரும்பியவாறு யூனியன்ளை அமைத்துக்கொள்ளும் உரிமைகளையும் வழங்கினார்கள். தமிழ் என்று புறப்பட்ட கட்சிகள் அந்த தொழிலாளர் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு யுஎன்பியுடன் சேர்ந்து எதிர்ப்புத்தான் தெரிவித்தார்கள்.

  தமிழீழப் பிரச்சனையிலிருந்து முதலில் களட்டிக் கொண்டு போனவர் வரதராஜப்பெருமாளோ, உமாமகேஸ்வரனோ, தேவானந்தாவோ அல்ல. மலையகத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

  தமிழீழத்தால் தமிழர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்றும் வெறும் ரத்தம் சிந்துதல் மாத்திரமே என்று உணர்ந்திருக்கலாம் அல்லது “முதலாளிகளுடன்” பேச யாழ்ப்பாணத்துத் தலைமைகள் தேவையில்லை என்றும் கருதியிருக்கலாம்!

  மார்க்சிசம் தொழிலாளர்களுக்கெதிரான சுரண்டலைக் கண்டனம் செய்கிறது. அது அநியாயம் என்று யாராவது சொல்லப் போகிறீர்களா?

  ஜேஆர் ஜெயவர்த்தன அரசில் யூனியன்களுக்கு இருந்த உரிமைகள், தொழிலாளர் சார்பான பத்திரிகைகள், வேலைநிறுத்தம் செய்யும் உரிமை என்பன காணாமல் போகச் செய்யப்பட்டன. இதற்கு தமிழீழம் காணப் புறப்பட்ட புலிகளும் ஆதரவு கொடுத்தனர் என்பது இன்னொரு விசேஷம்!

  ஜேவிபியினர் 70களில் இலங்கயிலுள்ள இந்திய வம்சாவழி தொழிலாளர்களை இந்திய முதலாளித்துவத்தின் ஏஜன்டுகள் என்று வர்ணித்தது அவர்கள் “மார்க்சிசம்” என்று ஏமாற்றுகிறார்கள் என்பதைப் பறைசாற்றியது.

  தமிழ் தேசியத்திலும், சிங்கள மார்க்சிச திரிபுவாத ஜேவிபியிலும் மலயகத் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

  முதலாளித்துவம் இன்று மாக்சிச முகமூடி அணிந்து தொழிலாள வர்க்கத்தைப் பலவீனப்படுத்துவதில் இறங்கியுள்ளது. ஐரோப்பாவில் புறப்பட்டுள்ள நாலாம் அகிலம் என்ற குழு அதனையே செய்வதில் முன்னணி வகிக்கிறது.

  இலங்கையில் இரத்த ஆறு ஓடியதற்கு “மார்க்க்சிசம்” காரணமா அல்லது மார்க்சிச எதிரிகள் காரணமா என்பதை மார்க்சிசத்துக்கு எதிராக விஷம் கக்குபவர்கள் விளக்க வேண்டும்.

  முதலாளித்துவம் “துப்பாக்கிகள்” மூலம் அதிகாரத்தையும் அடக்கு முறையையும் நிலை நிறுத்தும் பொழுது தொழிலாளர்கள் “மற்றக் கன்னத்தையும்” காட்ட வேண்டும் எதிர்பார்க்க முடியாது.

  இலங்கையைப் பொறுத்த அளவில் தொழிலாளி வர்க்கம் ஆயுதம் தூக்கிப் போராடும் நிலைக்கு இன்னமும் தள்ளப்படவில்லை என்பதே எனது அபிப்பிராயம்!

  Reply
 • nantha
  nantha

  நக்கீரா:
  மகாஜனாவின் பொற்காலங்களில் இருந்துள்ளோம் என்பது சந்தோஷப்பட வைக்கிறது. பழையநினைவுகள் மறக்க முடியாதவை. கதிரேசர்பிள்ளையிடம் தமிழ் பாடங்கள் படிக்க முடியவில்லை. ஏனென்றால் நானும் ஒரு விஞ்ஞான பிரிவு மாணவனாக இருந்தேன். ஆயினும் அவருடைய நாடகங்களும், தமிழும் என்னை ஆகர்ஷித்தவை.

  குடும்ப பொருளாதாரக் காரணங்களினால் படிப்பைத் தொடராது கிடைத்த வேலையுடன் வாழ்வை நிர்ணயிக்க வேண்டியதாயிற்று. எங்களுடைய தலைமுறைகள் இப்பொழுது “பென்ஷன்” கேசுகள்.

  புதிய தலைமுறைகளுடனும், முன்னாள் இயக்க வித்துவான்களுடனும் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் இப்பொழுதும் மகிழ்ச்சியே உண்டாகிறது.

  Reply
 • nantha
  nantha

  “வால்காவிலிருந்து கங்கை வரை” என்னும் நூல் மாஸ்கோ பல்கலைக் கழகம் ஒன்றில் “மானுடவியல்” விரிவுரையாளராகவிருந்த ராகுல் சாங்கிருத்தியாயன் என்பவரால் எழுதப்பட்டது.

  ஆயினும் அது இங்கு நடைபெறும் விவாதங்களுக்கு “முற்றுப்புள்ளி” வைக்கும் என்று நான் கருதவில்லை. அதனைப் படித்தால் விவாதம் செய்யும் பலரின் சித்தாந்தங்கள் தவிடு பொடியாகி விடும். தமிழ் சிங்களம் ஆண் பெண் மனித வரலாறு என்பனவற்றுக்கு புதிய பரிமாணங்கள் கிடைக்கும்.

  மகாஜனக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் 1969-70 களில் அந்தநூலின் தமிழ் மொழி பெயர்ப்பைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

  தமிழ் நாவல்கள் வரலாறுகள் படிப்பது எங்களுக்குத் தேவையற்ற படிப்பாக இருந்த பொழுதிலும் அந்த புத்தகங்களின் மீது மதிப்புத்தான் மிகுந்தது.

  எங்களிடம் அப்படியான நூல்களை விலைக்கு வாங்கிப் படிக்க வசதிகள் இல்லாத பொழுதிலும் நண்பர்களிடம் அலைந்து இரவல் வாங்கி படித்து பல மானுடவியல் உண்மைகளை இன்றும் மனதில் நிலை நிறுத்தக் கூடியதாக உள்ளது.

  எனது நண்பர்கள் நாகராசாவும் தர்மபாலனும் பகிர்ந்து கொண்டு படித்த புத்தகங்கள் ஏராளம்.

  அந்த நாகராசா வேறு யாருமல்ல. புளட் இயக்கத்தில் இருந்து புலிகளால் மிரட்டப்பட்டு அஞ்ஞாத வாழ்வு வாழும் நாகராசா வாத்தி” என்பதில் பெருமைப்படவே முடிகிறது.

  Reply
 • பல்லி
  பல்லி

  //ராகுல் சாங்கிருத்தியாயன் என்பவரால் எழுதப்பட்டது.//
  நந்தா அவரது பெயர் ராகுல்ஜி என நினைக்கிறேன். சரி பார்க்கவும்;

  //மகாஜனாவின்//
  அதே மகாஜனாவின் பளய மாணவர் ஒன்றியம் புலிக்கு வால் பிடித்ததையும் நந்தா விவாதிப்பது அந்த மாணவர்களுக்கு பெருமை சேர்க்குமே;

  Reply
 • பல்லி
  பல்லி

  //என்ன பல்லி இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நான் எங்கேயும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறவில்லையே.//
  ஜயோ நக்கீரா பல்லி கேட்டது தளபதியிடமே தவிர நக்கீராவிடம் அல்ல;நக்கீராவிடம் பல்லி கேள்வி கேக்க பல்லிக்கு யாருடைய அனுமதியும் வேண்டியதில்லை ,

  Reply
 • பல்லி
  பல்லி

  //ஒரு தொழிலாளியின் உழைப்பை அளக்க இதுவரையில் “மானிகள்” எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஒரு தொழிற்சாலையில் கிடைக்கும் “உபரி” லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு உண்டா? //
  உண்டு என்பதே உன்மை; அதை அறிந்த பல முதலாளிகள் இன்று பல தொழில்சாலைகளில் தொழிலாளருக்கு பதிலாக பல யந்திரங்களை நடைமுறை படுத்துகிறார்கள்? அதனால் பலருக்கு தொழில்வாய்ப்பு இல்லாமல் போகிறது; இது காலபோக்கில் தொழிலாளர் முதலாளிக்கு இடையில் மிகபெரிய இடைவெளியை உண்டுபண்ணும், நான் வேலை செய்யும் கம்பெனியில் சில ஆண்டுகளுக்கு முன் பல நூறு பேர் வேலை செய்தோம்; ஆனால் இன்று பல யந்திர உதவியால் முதலாளி தொளிலாளரை நூறுக்குள் குறைத்து விட்டார் என்பது சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும் காலபோக்கில் இதுவே மிக பெரிய அன்றாட மானிட வாழ்க்கையின் பொருளாதார பிரச்சனையை உருவாக்கும்; இதுவே களவு கொள்ளை கொலை என தொடரும் என்பது என் கருத்தல்ல பலரது பயம்;

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நந்தா!
  /அந்த நாகராசா வேறு யாருமல்ல. புளட் இயக்கத்தில் இருந்து புலிகளால் மிரட்டப்பட்டு அஞ்ஞாத வாழ்வு வாழும் நாகராசா வாத்தி/ இவர்தானே ஆரம்பகாலத்தில் புலிகளுடன் ஒன்றாக இயங்கியவர். இன்றும் அவர் ஒரு வெளிநாட்டில் வாழ்வதாக அறிகிறேன். இடதுசாரித்துவச் சித்தாந்தங்களுடன் அலைந்தவர். இவர் புளொட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. புலிகளுடன் பஸ்தியாம்பிள்ளை கொலைவரை இருந்து தெரியும் அதன்பின் இயக்கம் பிரிந்ததும் அவர் புலிகளுடன்தான் இருந்தார். புளொட்டுடன் வரவில்லையே.

  Reply
 • Nackeera
  Nackeera

  நந்தா உங்களது வயதையும் அனுவத்தையும் நான் எட்ட முடியாது. முயல் மனோரஞ்சன் முதலாம் பிரிவில் விளையாடும் போது நான் 3ம் பிரிவில் விளையாடினேன். ரிபியின் கைகளாலும் குட்டுப்பட்டவர்கள் தான். இருப்பினும் பாடசாலையின் பெயர் விளங்குமாறு உதைபந்தாட்டத்தில் சாதனை படைத்தோம். அது பாடசாலை அல்ல வாழ்வியல் கூடம். ஒழுங்கு கட்டுப்பாடு மரியாதை பணிவு கல்வியில் மேம்பட்டிருந்த காலம். நுளைவு அனுமதி கூடப் பரீட்சை வைத்தே எடுத்தார்கள். அதிபர் கனெக்ஸ் (கனகசபாபதி) அதை நன்கு காப்பாற்றி வந்தார். அப்படியானால் நீங்கள் கே.பியை அறிந்திருப்பதற்குச் சாந்தியம் உண்டல்லவோ? அவர் சிலவயதுகள் சிறியவராக இருக்கலாம்? இன்று மகாஜனக்கல்லூரியைச் சேர்ந்த ஒருவரான வன்னித்தம்பி என்பவர் சுவீஸ்சில் இருந்து தொடர்பு கொண்டார். கொல்லங்கலட்டியைச் சேர்ந்தவர். ஓய்வூதியம் பெற்றுள்ளார். உங்களுக்குத் தெரிந்தவராக இருக்கலாம். பாஸ்கரலிங்கம் மகாஜனா நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்தவராகவோ உங்களுடன் படித்தவராகவோ இருந்திருப்பார்.
  // எங்களுடைய தலைமுறைகள் இப்பொழுது “பென்ஷன்” கேசுகள்// நான் பென்சன் எடுப்பதற்கு 15வருடங்கள் உண்டு. அதுவரை…?

  Reply
 • nantha
  nantha

  “ஜி” என்று வட இந்தியாவில் பெயரோடு மரியாதையாக அழைப்பர்கள். காந்தி(ஜி),நேரு(ஜி), சோனியா(ஜி) என்பதெல்லாம் உண்மைப் பெயர்களல்ல.

  தமிழில் “ஆர்” அல்லது “ர்” சேர்த்துக் கொள்ளுவார்கள்.

  பரியாரி =பரியாரியார்.
  கந்தையா=கந்தையர்.

  ராகுல் என்ற பெயரை மரியாதையாக “ராகுல்ஜி” என்று அழைப்பார்கள்.

  ஆனாலும் அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே என்பதாகும். பின்னர் புத்த மத ஈர்ப்புக் காரணமாக புத்தரின் மகனுடைய பெயரான “ராகுல்” என்பதையும் சமஸ்கிருத மொழிப்பற்றுக் காரணமாகவும் “சாங்கிருத்தியாயன்” என்பதையும் சேர்த்து தனது பெயரை ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாற்றிக் கொண்டார்.

  விபரங்களுக்கு:
  http://en.wikipedia.org/wiki/Rahul_Sankrityayan

  Reply
 • nantha
  nantha

  மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கூட்டங்களுக்கு நான் போவது கிடையாது! புலிப்பிரச்சனை மாத்திரமல்ல கனகசபாபதி போன்றவர்களின் சில “திரு விளையாடல்களும்” காரணம்.

  Reply
 • Nackeera
  Nackeera

  //தமிழுக்காக” குருதி கொட்டியவர்களின் செயல்பாடுகள் மாத்திரமே தமிழர்களை இலங்கையில் அழித்துள்ளது. தொழிலாளர் போராட்டங்களினால் இலங்கையில் எவ்வளவு ரத்தம் சிந்தியது என்று சிந்திப்பது நல்லது/ நந்தா!
  இடதுசாரிகளின் கவனத்துக்கு! வெள்ளையர்களை எமதுநாட்டில் எதிர்த்து போராடத்தொடங்கியவர்கள் இடதுசாரிகள். காலப்போக்கில் வந்த வலதுசாரித்துவம் எப்படி அனைத்தையும் மூடி விழுங்கியது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஜே.ஆர் கூட ஒரு இடதுசாரியாகவே தன் அரசியல்வாழ்க்கையைத் தொடங்கினார். இவருக்கு முன்னைநாள் கியூபாவின் அதிபரும் புரட்சிவாதியுமாக பெடல் கஸ்ரோவுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தது. அதே போன்றே பண்டாவும் ஒரு இடதுசாரிப் போக்குடைய நல்ல மனிதர். எமது தமிழ்தலைவர்கள் உச்சரிக்காத ஒரு விடயத்தை முதன் முதலில் உச்சரித்தவர். அதாவது தமிழர் என்பது ஒருதனிஇனம்: இவர்களுக்கென்று தனி கலை:கலாச்சார: விழுமியங்கள் உண்டு அவர்களின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று. காலப்போக்கில் அநாகரீக தர்மபாலா வளர்த்து விட்ட சொல்வங்களால் அரசியலுக்காகவோ மதம்மாறவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இடதுசாரித்துவத்தை மாக்சிசத்தை இலங்கையில் அப்படியே பயன்படுத்துவது கடினம் என்பது எனது எண்ணம். காரணம் பெளத்தத்தில் ஆணிவேரும்: துவேசத்தை ஊற்றி இன்று உதிரமாக ஓடும் நிலையில் (தமிழ் சிங்கள முஸ்லீம்) மாக்சிசத்தை அப்படியே பயன்படுத்துவது என்பது இலகுவான காரியம் அல்ல மாற்றீடாக அரசியல் சாணக்கியத்துடன் ஒரு இடதுசாரித்துவம் சார்ந்த சிறுது மிதமான போக்கே ஆரம்பகாலத்துற்குச் சரியானதாகும். புரட்சி அது இது என்று வெளிக்கிட்டால் முதலாளித்துவமும் தனிமனித பக்திவாதமும் அனைத்து ஏழைகளையும் திண்டு ஏப்பம் விட்ட சரித்திரங்களைத்தான் பார்க்கிறோம். புரட்சி தேவையோ இல்லையோ என்பதை அங்குள்ள மக்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாமல்ல.

  Reply
 • பல்லி
  பல்லி

  //ராகுல் என்ற பெயரை மரியாதையாக “ராகுல்ஜி” என்று அழைப்பார்கள்//
  தகவலுக்கு நன்றி நந்தா;

  ///அந்த நாகராசா வேறு யாருமல்ல. புளட் இயக்கத்தில் இருந்து புலிகளால் மிரட்டப்பட்டு அஞ்ஞாத வாழ்வு வாழும் நாகராசா வாத்தி//
  இவர்தான் அவராயின் இவரே புலி புளொட் பிரிவின் சூத்திரதாரி என நினைக்கிறேன், இவரே உமாவுக்கும் ஊர்மிளாவுக்கும் தனது கற்பனையில் உறவு வைத்து அதை தம்பிக்கு ஆயுதமாய் கொடுத்து அதைவைத்து தம்பி அண்ணனை விட்டு தனிகுடிதனம் போனது மட்டுமல்ல அண்ணனுக்கு மரணதண்டனை என்பதை கொடுக்கலாம் என தன் புன்சிரிப்பால் தீர்பாய் சொன்னதாயும் சிலர் சொல்ல பலரில் ஒருவராய் பல்லியும் கேள்விபட்டேன்: உண்மை பொய் வருங்கால விவாதத்தில் தெரிவோம்;

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பல்லி!
  அது அந்த நாகராஜா எனில் புலிகளுக்குள்ளும் பிற்காலத்தில் குழப்பம் விளைவித்துவர் அவர்தான். புளொட் பிரிந்து சென்றபோது மீண்டும் ஒரு படித்தவரை பிரபா முன்மொழிந்தபோது நாகராஜா தான் அதைத்தடுத்து சென்ற முறை நீ முகுந்தனை (பெரிசு) தெரிவு செய்தாய் என்ன நடந்தது. இந்த முறையும் அப்படியா நீயே இரு என்று முன்மொழிந்தது நாகராஜா தான். நான் அவரைக் குறைசொல்லவில்லை இடதுசாரிகளின் மூளையில்தான் அவர் கூடுதலாகச் சிந்திப்பது வளக்கம். பிரபா என்றும் தன்னை தலைவராக நியமிக்க விரும்பியது கிடையாது. முகுந்தனை இயக்கத்தின் மத்திய செயற்குளு தலைவராக முன்பொழிந்ததே தம்பிதான். என்றும் நாகராஜாவுக்கு பெரிசில் சிறிய காழ்புணர்வு இருந்த வந்தது. காரணம் ஒரோ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்லது கல்வி தகமைகளிலோ தெரியவில்லை.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நந்தா கூறிய ஜி விளக்கம் அத்தனையும் உண்மை.ஜி என்பது ஐயா என்று வடமொழியில் அமையும் என்று நம்புகிறேன் நானும் வால்காவில் இருந்து கங்கை வரை என்ற இராகுல் சாங்கிருத்தியனின் ஆய்வுநூலை வாசித்தேன். அது நல்ல புத்தகமாக இருந்தாலும் நடுநிலையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எனக்கு உண்டு.

  Reply
 • Sothilingam T
  Sothilingam T

  நந்தாஜி சொல்வது சரி ஜி என்னும்போது இது அவர்கள் என்ற கருத்தே புலப்படுவது அதாவது நேருஜி என்றால் நேருஅவர்கள் என்பதே கருத்தாகும்.

  Reply
 • nantha
  nantha

  நக்கீரா:
  புரட்சி என்பது “ஆயுதம்” ஏந்துவது மட்டும் என்று மார்க்சிசம் எங்கும் அறிவுறுத்தவில்லை. இலங்கை இந்தியா போன்றநாடுகளில் 1917 அக்டோபர் புரட்சி போன்று நடைபெற சாத்தியங்கள் கிடையாது.

  ஜே ஆர் மகாத்மாகாந்தியின் கூட்டங்களுக்கும் அவர்களின் “காங்கிரஸ்” தொப்பியோடு போயிருந்த படங்களைப் பார்த்திருக்கிறேண்.

  யாழ்ப்பாணத்து மார்க்சிசம் பேசிய சிவத்தம்பீ புதுவை ரத்தினதுரை இன்னும் பலர் “தமிழீழச்” சகதிக்குள் மாண்டு போன கதைகளும் தெரியும். தோழர் வீ. பொன்னம்பலம் அவர்கள் கூட மார்க்சிச கூடாரத்தை விட்டுப் பறந்து போனார். படித்த காலத்தில் அவர்தான் எங்கள் மார்க்சிச குரு.

  அதனால் மார்க்சிசம் தோற்றுப் போய்விட்டது அல்லது செத்து மடிந்து விட்டது என்றுநான் கருதவில்லை. மார்க்சின் தத்துவஙளுக்கு இலங்கையில் விழுந்த பலத்த அடிகளில் இந்த தமிழீழமும் ஒன்று.

  தமிழீழ போராட்டக் காரர்களினால் முதலில் “களப்பலி” கொடுக்கப்பட்டவர்கள் மார்க்சிச ஆதரவாளர்கள்தான். இந்தநிகழ்வுகளின் ஆய்வு இந்த தமிழீழம் என்பது பிரிட்டனாலும் அமெரிக்காவினாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட செம்மறியாடு என்பதனைக் கண்டு கொள்ள உதவியது. அந்த செம்மறியாடு ஒருநாள் இறைச்சியாகும் என்பது நானும் வெகு சில மார்க்சிச ஆதரவாளர்களும் அன்று பலருக்கும் கூறிய விஷயம். அப்போது எங்களை “தமிழ் துரோகிகள்” என்று பரிகசித்தார்கள்.

  அந்த செம்மறியாடு அழித்துவிட்ட பயிர்கள் பச்சைகள் ஏராளம். அவ்ற்றுக்குப் பதில் சொல்லவோ அல்லது நஷ்ட ஈடு கொடுக்கவோ யாரும் கிடையாது.

  ரீகன் தச்சார் கூட்டணியின் கொள்கை அமெரிக்க எதிர்ப்பாளர்கள் இடதுசாரிகள் ஆகியோரை அழிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அந்தக் காலத்தில் இலங்கை இந்தியா போன்றநாடுகளினதும் அணி சேரா இயக்கத்தின் பலத்தினையும் உடைத்தெறிவது அமெரிக்க-பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் தேவையாக இருந்தது. அதனை அவர்கள் வெற்றிகரமாக சாதிதுள்ளனர். ஆனால் நஷ்டப்பட்டவர்கள் யார்?

  துவேஷம் என்பது தமிழர்களுக்குக் குறைவானது அல்ல.

  1947இல்நடை பெற்ற தொழில் சங்க பொது வேலைநிறுத்தத்தின் போது பொலிசாரின் துப்பாக்கிக்கு இரையாகிய சித்தஙேணியைச் சேர்ந்த கந்தசாமியின் சடலத்தை யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தில் உறவினர்கள் பொறுப்பேற்க வந்த பொழுது ஜீ.ஜீ. பொன்னம்பலம் “சிங்களவர்கள்” தமிழர்களைக் கொலை செய்கிறார்கள் என்று முழங்கியதை துவேஷம் என்று இதுவரை தமிழர்கள் கூறவில்லை. அப்போது ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் என்ற உண்மையை மறந்து பழியை சிங்களவர்களின் தலயில் கட்டியதன் நோக்கம் என்ன?

  அப்படிப்பட்ட “பொய்கள்” தமிழ் அரசியல் வாதிகளின் வாக்கு வேட்டைகளுக்கு உதவின. தமிழர்களின் பிணங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் முதலீடு என்பது அந்தக் காலத்திலேயே உணரப்பட்டது. அந்த “பிண” அரசியல் பிரபாகரன் வரை தொடர்ந்தது. தற்போது வெளினாடுகளில் உள்ளவர்கள் “பிணங்கள்” விழாதா என்று அங்கலாய்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

  மார்க்சிசம் என்பது துப்பாக்கியுடன் அலைந்து திரி என்று யாருக்கும் உபதேசம் செய்யவில்லை. மக்களின் உழைப்பு எப்படிச் சுரண்டப்படுகிறது என்பதனை மக்கள் அறியாமல் யாருக்கெதிராக ஆயுதம் தாங்க வேண்டும்?

  தமிழ் போராட்டக்காரர்கள் மார்க்சிசத்தின் சில வரிகளையும் மாவோ சொன்ன “துப்பாக்கிக் குழலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்ற வரியயும் ” காவினார்களே ஒழிய மக்களை “அரசியல் மயப்படுத்த வேண்டும்” என்பதனையும் மாக்சிசத்துக்கு “மொழி” முக்கியமல்ல என்பதனையும் மறந்து போனார்கள்.

  மொழி பிரச்சனை என்பது “முதலாளித்துவத்தின்” ஒரு உப உற்பத்தியே ஒழிய மார்க்சிசத்தின் பகுதியல்ல. மொழி அடிப்படையில் அல்லது மத அடிப்படையில் எழும் போராட்ங்கள் எப்போதும் சிறு முதலாளியை தோற்கடித்து பெருமுதலாளிக்கு வெற்றியைக் கொடுக்கும். நாம் கண்டது அதுவே!

  தமிழ் என்று மார்க்சிசத்துக்குச் சம்பந்தப்படாத ஒரு கருவை போராட்டமாக்கி தோற்றுப் போனவர்கள் மார்க்சிசத்தின் மீது “பழி” போட முடியுமா?

  இலங்கை இடதுசாரிகள் இந்திய இடதுசாரிகளின் நடவடிக்கைகளை நோக்காது இயங்குவது பரிதாபமான விஷயம். இந்திய மக்களினதும் இலங்கை மக்களினதும் பிரச்சனைகள் ஒரே மாதிரியானவை.

  இலங்கயில் நிலச் சீர்திருத்தம் சிரிமாவோவினாலும் இந்தியாவில் இடதுசாரி அரசுகளின் ஈ எம் எஸ்நம்பூதிர்ப் பாடினாலும் ஜோதிபாசுவினாலும் வெற்றிகரமாக அமுல் படுத்தப்பட்டது.

  50 ஏக்கர்நிலத்துக்கு மேல் தனி மனிதர்கள் வைத்திருக்க முடியாது என்று சிறிமாவொ கொண்டு வந்த காணி மசோதாவை தமிழ் தலைமைகள் யு என் பியுடன் சேர்ந்து எதிர்த்தார்கள்.

  சிறிமாவொ அரசினால் அரசுநிலங்களில் ஐந்து வருடங்களுக்கு விவசாயம் செய்தவர்களுக்கு அந்த நிலங்கள் வழங்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை யாரும் மறந்து விட முடியாது.

  என்வே மக்கள் வாழ்வில் அன்றாடம் எதிர்னோக்கும் பிரச்சனைகளை நோக்காது அல்லது அறியாது மக்களின் எந்தப் பிரச்சனைகளை “தமிழ்” மூலம் நாம் தீர்க்கலாம்?

  Reply
 • nantha
  nantha

  நண்பன் நாகராசாவை 1987 இல் சந்தித்த பின்னர் எனக்கு எதுவித தொடர்பும் அவரோடு இல்லை.

  ஆயினும் பிரபாகரனுக்கு அவர் அவ்வளவு தூரம் ஆதரவு வழங்கி இருந்தால் அவரை பிரபாகரனும், சிறிசபாரத்தினமும் மிரட்டி “வனவாசம்” அனுபவிக்க முற்பட்டிருக்க மாட்டார்கள்.

  சுந்தரத்தின் கொலையுடன் 1982இல் வாயடைக்கப்பட்ட அல்லது கொலை மிரட்டலுக்குள்ளான நாகராசா எப்படிப் பின்னர் புலிகளுடன் ஒத்துழைத்தார் என்பது கேள்விக்குரியது. ஆயினும் 1987இல் அவர் புளோட் இயக்கத்துடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்!

  ஊர்மிளா விவகாரம் பெரிய பிரச்சனையாக இருந்தது என்பதை நான் நம்பவில்லை. ஏனென்றால் 80களில் வங்கி கொள்ளைகளில் கிடைத்த பணத்துடன் குட்டி மணி, பிரபாகரன், சிறிசபாரத்தினம் இன்னும் சிலர் கோடாம்பாக்கம் எக்ஸ்ட்ரா நடிகைகளுடன் தனி விமானத்தில் காஷ்மீர் போயிருக்கிறார்கள். பெண் பிரச்சனையால் இயக்கம் பிரிந்தது என்று நான் நம்பவில்லை. சில வேளைகளில் பெண்ணுக்கான போட்டியினால் பிரிந்திருக்க முடியும்!

  அடுத்து புலிகள் இயக்கத்தில் இந்த பெண் விஷயம் எப்படி பிரச்சாரத்துக்கு பயன் படுத்தப்பட்டது என்பது பலர் அறியாத விஷயம். பிரபாகரன் ஒன்றும் ஏகபத்தினி விரதன் அல்ல. புலிகளின் “சுதந்திரப் பறவைகள்” பட்ட பாடுகளை கண்டு கேட்டு அறிந்து கொண்டால் உண்மைகள் புரியும்!

  Reply
 • nantha
  nantha

  நக்கீரா:
  பாஸ்கரலிங்கம் எங்களுக்கு மூத்தவர். வன்னித்தம்பி பற்றி ஞாபகம் இல்லை!

  கேபி, அவரின் சில உறவுகளையும் எனக்குத் தெரியும். கேபி சில வருடங்கள் இளையவர்.

  மகாஜனாவின் உதை பந்தாட்ட வெற்றிகள். அதனால் கொக்குவிலிலும், சுன்னாகத்திலும் நடந்த அடிதடிகள் மகாஜனா ஆதரவாளர்கள் பலர் சுன்னாகத்திலிருந்து தெல்லிப்பளை வரை எடுத்த ஓட்டங்கள் என்பன இன்றும் நினவில் நிற்பவை.

  மகாஜனாவைப் பொறுத்த வரை கல்விக்கு பாரிய முக்கியத்துவம் கொடுத்த ஒரு கேந்திரம். அது இன்று காணாமல் போய் உள்ளது! கவலைதான்

  Reply
 • Nackeera
  Nackeera

  நந்தா! உங்களுடைய கருத்துடன் எந்த எதிர்மறையாக கருத்தும் என்னிடம் இல்லை. உங்கள் வசனத்தை எடுத்து அதற்கு ஆதரவாகத்தான் எழுதினேன்.

  துவேசம் வளர்த்ததில் சிங்கள அரசியல்வாதிகளை விட எம்தமிழ் அரசியல் பாட்டன்மார் மோசமானவர்கள். இளசுகளை உசுப்பிவிட்டு விட்டு தமிழினத்தை கடவுள்தான் காக்கவேண்டும் என்றால் எப்படி. இதற்குப் பெயர் தீர்க்கதரிசனமாம் செல்வா தீர்க்க தரிசியாம். ஏன் இன்றும் கூடக் காலம் தாழ்ந்து போய்விடவில்லை. ஐக்கிய இலங்கை பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் சிங்களமக்களுக்கு உள்ள பிரச்சனைகளைப் பேச முன்வருகிறார்கள் இல்லை. இந்த ஆரியவதி போன்றவர்களின் பிரச்சனைகளுக்காக குரலுயத்துவது கூட ஒருவகையில் சிங்களமக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப உதவும் என்பதை ஏன் அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள் மறக்கிறார்கள். இன்றைய இடதுசாரித்துவம் ஆரியவதி போன்றோருக்கு என்ன செய்தது. மாக்சிசத்தையும் இடதுசாரித்துவத்தையும் வைத்து அரசியலுக்கு வந்தவர்கள் வலதுசாரிகளை விட மோசமாக நடந்துள்ளார்கள். உ.ம் ஜே.ஆர். மகிந்த முக்கியமாகப் புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும். மாக்சிசம் வெறும் முலாமாகத்தான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறது. வாசுதேசவ நாணயக்காரா என்ற ஒரு இடதுசாரியை பேரினவாதிகளுக்குள் இனங்கண்டோம். இப்போ அவர்நிலை? என்ன நந்தா செய்வது,அரசியல் என்றால் சாக்கடை கசாப்புக்கடை என்ற நிலையாகி விட்டது. இன்று அரசியல் தனிமனிதனின் சுயஉரிமைகளில் தலையிடும் நிலைக்கு வந்துள்ளது.

  // ” காவினார்களே ஒழிய மக்களை “அரசியல் மயப்படுத்த வேண்டும்” என்பதனையும் மாக்சிசத்துக்கு “மொழி” முக்கியமல்ல என்பதனையும் மறந்து போனார்கள்/ அருமையான வரிகள். புலிகள் கூட மக்கள் எழுச்சி பொங்குதமிழன் எனப் பிணங்களைப் பொங்கினார்களே தவிர மக்களை என்று அரசியல் மயப்படுத்தினார்கள். நான் எழுதிய இரண்டாவது கவிதைத் தொகுப்பில் இதுபற்றி 1975 முன்பே எழுதிவந்திருக்கிறேன். மக்கள் போராட்டம் என்று புறப்பட்ட இயக்கங்களும் மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதிலும் இயக்க அடிபாடுகளிலும் கண்ணாயிருந்தார்களே தவிர மக்கள் கிள்ளுக்கீரையாகக் கூட மதிக்கப்படவில்லை என்பது எனது கருத்து.

  நந்தா! வன்னித்தம்பி என்பவர் மிகப்பிரபல்யமானவர் அல்ல சென்ற கிழமை என்னுடன் மெயில் தொடர்பு கொண்டார். அவர் எழுத்து வினைஞராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அதனால்தான் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன்.

  //மகாஜனாவின் உதை பந்தாட்ட வெற்றிகள். அதனால் கொக்குவிலிலும், சுன்னாகத்திலும் நடந்த அடிதடிகள் மகாஜனா ஆதரவாளர்கள் பலர் சுன்னாகத்திலிருந்து தெல்லிப்பளை வரை எடுத்த ஓட்டங்கள் என்பன இன்றும் நினவில் நிற்பவை.//- நந்தா!
  இதை ஞாபகப்படுத்தாதீர்கள். நாங்கள் உதைபந்தாட்டத்தில் வென்றால் எம்மை பந்தாக தெருத் தெருவாக உதைப்பார்கள். எந்தத் தெருக்களாலும் நாம் பாடசாலைக்குத் திரும்ப இயலாது. எம்மை காத்து நிற்பவர்கள் ஆதரவாளர்களே. அதை நினைத்தால் இப்பவும் முதுகு நோகும். சம்பியன் அடித்து விட்டு கே.கே.எஸ் ரோட்டால் வந்தபோது வெள்ளவாய்காலுக்குள் உருட்டி எடுத்தார்கள். நாமும் வென்றால் சும்மா வருவதில்லையே. எப்படி இருந்தாலும் அது பொற்காலம்தான். அந்த நினைவுகளையும் கனவுகளையும் புதிய சமூகம் அனுபவிக்கமா என்பது கேள்விதான். ஏன் பக்கத்துக் கல்லூரியான யூனியன் கொலிச் சும்மாவிட்டதா எம்மை? உதைபந்தாட்டத்தில் மகாஜனா வைத்த சரித்திரத்தை இன்னும் எந்தப்பாடசாலையும் வைக்கவில்லை.
  //மகாஜனாவைப் பொறுத்த வரை கல்விக்கு பாரிய முக்கியத்துவம் கொடுத்த ஒரு கேந்திரம். அது இன்று காணாமல் போய் உள்ளது! கவலைதான்// இது மகாதேவன் காலத்தில் கொஞ்சம் ஸ்தம்பிதமாக இருந்தாலும். அதை மீண்டும் கட்டி எழுப்பினார்கள். கல்வி உதைபந்தாட்டம் இரண்டும் கல்லூரியின் இருகண்கள் .

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /சுந்தரத்தின் கொலையுடன் 1982இல் வாயடைக்கப்பட்ட அல்லது கொலை மிரட்டலுக்குள்ளான நாகராசா எப்படிப் பின்னர் புலிகளுடன் ஒத்துழைத்தார் என்பது கேள்விக்குரியது. ஆயினும் 1987இல் அவர் புளோட் இயக்கத்துடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்/
  சுந்தரத்தின் கொலையுடன் தான் பிரபாவுக்கு புளொட்டுக்கும் இடையிலான சந்தேகங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தது. இறைகுமாரன் உமா சுடப்பட்டதே சந்தேகத்தின் அடிப்படையில்தான் ஆனால் புளொட் நினைத்தமாதிரி இறைகாட்டிக் கொடுப்பைச் செய்யவில்லை. சுந்தரத்துடன் இறைக்கு போதியளவு நல்லறவு இருந்தது. பிரேமாதாசா யாழ்பாணம் வந்தபோது திருப்பிப்போ என்று தெருக்களில் பெயின்ரால் எழுதியதில் இருந்து நோட்டீஸ் அடித்து வினையோகம் செய்தவரை நல்லுறவு இருந்தது. இருபகுதியையும் ஒன்றாக்கும் முயற்சியில் இறை இறங்கியிருந்தார். இந்த இறைகுமாரன் அளவெட்டியைச் சேர்ந்தவர். நந்தா சொல்வதுபோல் நாகராஜா இறுகிக்காலங்களில் புளொட் தளபதி கண்ணன் குமணன் பெரிசு போன்றவர்களுடன் தொடர்பாக இருந்தார்.
  நந்தா கூறவதுபோல் ஊர்மிளா விவகாரம் மட்டும்தான் புலி புளொட்டாகப் பிரிவதற்குக் காரணமாக இருக்கவில்லை. ஊர்மிளா ஒருவகையில் முகுந்தனுடன் பழக்கமுள்ளவர். சில கூறினார்கள் உமாவின் உறவுக்காரி என்று. அவர் மஞ்சள்காமாளை வந்த இறந்ததாக சிலர் கூறினார்கள். சிலர் பிரபா நஞ்சு வைத்துக் கொன்றார் என்றார்கள். உண்மை பொய் தெரியாது. இயக்கத்தின் மத்திய குழுவில் உமாவுக்கென்றும் பிரபாவுக்கென்றும் ஆதரவாளர்கள் உருவாகத்தொடங்கியதன் விளைவும் இந்தப்பிரிவுக்குக் காரணம். உமா சிறிது மிதமான தன்மை உள்ளவராகவும் மக்கள் போராட்டம் தத்துவங்கள் என்று நிற்பவர். இவர்ருடன் நாகராஜா சேருவதற்குச் சாத்தியங்கள் உண்டு.

  Reply
 • haran
  haran

  Nobody understand the real problem. If someone give nackeeras phone nr to nantha, they can talk to each other. Why are you wasting our time and space.

  Reply
 • nantha
  nantha

  HARAN:
  IF YOU CANNOT UNDERSTAND, BETTER SKIP THE POSTS. MANY INTERESTED PEOPLE ARE HERE TO READ OUR WRITTINGS!

  Reply
 • நந்தா
  நந்தா

  மனிதர்களின் பிரச்சனைகள் பலதரப்பட்டவை. அவற்றை எல்லாம் ஒரு “மொழி” தீர்க்கும் என்பது மனிதநாகரீகத்தின் அவலம்.

  மானிடம் வாழ்வதை விட சாவது ஆரோக்கியம் என்பது அரசியல் வியாபாரிகளின் கணிப்பு.

  மக்களுக்கு புரியாதவற்றை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பது எல்லோரையும் மாக்கள் என்ற கணிப்பில் நடை முறையாக்கப்பட்ட அரசியல்.

  பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு சென்று விவாதிக்கத் தயாரில்லாதவர்கள் நவீன உலகத்து விவகாரங்களில் தலையிடுவது அபத்தம்!

  //ஐக்கிய இலங்கை பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் சிங்களமக்களுக்கு உள்ள பிரச்சனைகளைப் பேச முன்வருகிறார்கள் இல்லை. இந்த ஆரியவதி போன்றவர்களின் பிரச்சனைகளுக்காக குரலுயத்துவது கூட ஒருவகையில் சிங்களமக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப உதவும் என்பதை ஏன் அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள் மறக்கிறார்கள்.//

  மேற்படி கருத்துக்கள் இன்றைய தேவைகள். தமிழர்களுக்கு மாத்திரம் பிரச்சனைகள் உண்டு, சிங்களவர்களுக்கு அப்படிப் பிரச்சனைகள் இல்லை என்று “தமிழ் அரசியல்” பண்ணுபவர்கள் கவனத்திலெடுப்பார்களா?

  Reply
 • குமணண்
  குமணண்

  நந்தா கூறுவது சிறிது சிந்திக்க வேண்டியது. எமது சமூகம் என்றைக்குமே எதையும் கட்டுபிடிக்கவோ ஆய்வுகள் செய்வதற்கோ பழக்கப்படாதது மட்டுமல்ல வளர்க்கப்படாததும் கூட. வள்ளுவர்; கம்பர் அண்ணா பெரியார் மாக்ஸ் சொன்னார் என்று கூறி எதை எழுத்லும் அதற்குள்ளே நிறுவ முயல்கிறார்களே தவிரி நான் சொல்கிறேன் கேள் என்று திறந்த மனத்துடன் கருத்தாட எமது சமூகம் தயாராக இல்லை. 500 ஆண்டு அடிமைப்புத்தியில் வெள்ளைக்காரன் செய்ததை அழகாக பாவிக்கமட்டும் பழக்கப்பட்டிருக்கிறோம். ஏதோ 1.2 பில்லியன் மனிததொகையைக் கொண்ட இந்தியர்கள் கொம்பியூட்டரில் எதோ அமெரிக்காவில் வெட்டிப் பிடுங்குகிறார்கள் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். புதிதாக எதையும் கண்டு பிடிப்பவில்லை. வெள்ளைக்காரன் கண்டு பிடித்துச் செய்து கொடுத்ததை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். கணனியைப் பயன்படுத்தி செய்வாயில் மனிதன் இறங்கி மலமும் கழித்தாயிற்று. இந்தியவிற்பனர்கள் கணனியை பயன்படுத்தி சாத்திரமும் திருமணப்பொருத்தமும் பார்க்கிறார்கள். அப்படிப் பொருத்தம் பார்த்துக் கூட்டிக் கொண்டு வந்தவர்கள் தான் முதலில் குடும்பத்தைவிட்டு ஓடுகிறார்கள். இந்தியர்களோ தமிழர்களே பெருமையாக வெள்ளையருக்குச் செல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான் “இந்துமதம்” மட்டும்தான். இந்திய இலங்கைக் கிறிஸ்தவர்களும் தமது கலாச்சாரம் என்று வெள்ளையர்களுக்குக் காட்டுவது இந்துக்கலாச்சாரத்தையே. பரதநாட்டியம் கூட அவர்களின் பார்வையில் தமிழர் கலாச்சாரமாம். ஒரு கத்தோலிக்கப்பாதிரி சொன்னார் அது கல்சறல் அடப்ரேசன் என்றார். அதாவது கலாச்சாரத் தத்தெடுப்பு. உரியவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வது தத்தெடுப்பு இது களவு: திருட்டு.

  Reply
 • Nackeera
  Nackeera

  ///ஐக்கிய இலங்கை பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் சிங்களமக்களுக்கு உள்ள பிரச்சனைகளைப் பேச முன்வருகிறார்கள் இல்லை. இந்த ஆரியவதி போன்றவர்களின் பிரச்சனைகளுக்காக குரலுயத்துவது கூட ஒருவகையில் சிங்களமக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப உதவும் என்பதை ஏன் அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள் மறக்கிறார்கள்.//

  மேற்படி கருத்துக்கள் இன்றைய தேவைகள். தமிழர்களுக்கு மாத்திரம் பிரச்சனைகள் உண்டு, சிங்களவர்களுக்கு அப்படிப் பிரச்சனைகள் இல்லை என்று “தமிழ் அரசியல்” பண்ணுபவர்கள் கவனத்திலெடுப்பார்களா?/

  இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் கூறவிரும்புகிறேன். சிங்களவர்களைத் துவேசிகள் எனக்கூறும் நாம் அவர்களை விட மோசமாக துவேசம் கொண்டவர்கள். 1983ல் சிங்களவர்கள் முழுத்துவேசிகளாக இருந்திருந்தால் ஒரு தமிழன் யாழ்பாணம் திரும்பியிருக்க இயலாது. அப்படி வந்தவர்களுக்கு நாம் பிச்சை எடுப்பது போல் வீடுவீடாய் சென்று உணவு சேர்த்து கப்பலில் வந்தவர்களுக்கு அவித்துப் போட்டபோது எனது காதுபட கொழும்புத் தமிழர்கள் கதைத்ததைக் காது கொண்ட கேட்க இயலாது. ஏதேதோ ஏசி வீட்டுக்குள் இருந்து வேறு ஒருகிரகத்தில் இருந்து வந்துவர்கள் போலவே நடித்தார்கள்.

  சிங்கள இராணுவத்தின் சடலங்கள் கொழும்புப் பகுதிக்குத் திரும்பிய போது கூட தமிழர்கள் கொழும்பில் அடைகாத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இன்று சிங்களவர்கள் யாழ்பாணம் போகும்போது இணையத்தளங்கள் ஊடகங்கள் படும் பாட்டைப்பாருங்கள். நாகர்விகாரை தமிழ் பெளத்தர்களினது ஆதிவிகாரை என்பதை யாரும் மறக்கக்கூடாது. பலபெளத்தபீடங்களில் தமிழர்கள் பதவிவகித்துள்ளார்கள் என்பதையும் மறக்கக் கூடாது. பெளத்தம் தமிழர்களுக்கும் தமிழுக்கும் அன்னியமனாது அல்ல. உரிமையானது என்றே கூறலாம்.

  பெளத்தம் ஆத்மிகத்துக்குரியதே ஒழிய அதிகாரத்துக்குரியது அல்ல. இராஜபோக வாழ்க்கையையும் அரசியலையும் துறந்தவர் புத்தர். பெளத்தத்தையும் புத்தரையும் வைத்து அரசியல் செய்வது தப்பு. இதைக்கூட சிங்களவர்கள் மத்தியில் நாம் கொண்டுபோகலாம். அவர்கள் கல்லாலும் மண்ணாலுமான சடங்களல்ல. இரத்தமும் தசையும் கொண்ட உயிருள்ள ஜீவன்கள். அவர்களுக்கும் புரிந்துணரும் சக்தி உண்டு. ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தாலும் இதுவே உண்மையில் வெற்றி தரும் ஆயுதம்

  சிங்ளவர்களின் பிரச்சனைகளை தமிழர்கள் தமது பிரச்சனைபோல் எடுத்துப் போராடும் போது சிங்களவர்களின் மத்தியில் நம்பிக்கைமட்டுமல்ல சிங்கள அரசியல்வாதிகளின் சுத்துமாத்து அரசியல் அம்பலப்படுத்தப்படும். தமது அரசியலைத் தக்கவைப்பதற்காக சரியான ஒரு அரசியலை தெரிவு செய்யவேண்டிய இக்கட்டானநிலை ஏற்படும். இதைத்தடுக்க துவேசத்தை தட்டி எழுப்ப முடியாது காரணம் சிங்களமக்கள் மத்தியில் தமிழ் அரசியலும் நன்மதிப்புடன் வேரூன்றி இருக்கும். சிங்களமக்களின் பிரச்சனைகளை எமது பிரச்சனையாக எழுத்துப்போராடுவது கூட ஒருவகையில் எமது மக்கள்பால் இருக்கும் அக்கறையும் ஐக்கிய இலங்கைக்குள் சுபீட்சமான எதிர்காலத்துக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம். தமிழ் அரசியல்வாதிகள் மனிதநேயத்துடன் சரியான அரசியலை முழுஇலங்கைக்குமாக நடத்துவீர்களானால் சிங்களமக்களின் ஆதரவுடன் இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாகக் கூட வருவதற்குச் சாத்தியம் உண்டு. துவேசம் வளர்த்த தமிழர்விடுதலைக்கூட்டணி எதிர்கட்சியாக வரமுடிந்தது எனில் நான் மேற்கூறியதும் நடப்பதற்கு போதிய சாத்தியங்கள் உண்டு. கத்தியின்றி இரத்தமின்றி ஒருநாட்டை மட்டுமல்ல பலசமூகங்களையே வென்றெடுக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை. இனி பூனைக்கு மணிகட்டுவது யார்?

  Reply
 • Nackeera
  Nackeera

  சந்திரன்ராஜா தந்த தரவுக்கமைய எழுதப்பட்டது.

  கொடுவயிறு சுடுவதனால்
  கடுகதியாய் கன்னியவள்
  கெடுமதியார் நாட்டிக்கு
  முகமதியாள் நிலம்மிதித்தாள்.

  மருது கில்மியாவும்
  கருதும் சமமதமென்றே
  கருத்தரித்தாள் கருத்தியலில்
  உருக்குலைந்தாள் சுடுநீரால்

  மசூதி சுமந்தது மறைதேசம்
  மனிதத்தில் இல்லை நேசம்
  அசூசையும் ஆணவமும்
  ஆடுகிறதே மனிதவேசம்

  சுடுநெருப்புச் சுட்டதில்லை
  கொடுமதி குழல் ஒழிப்பாள்
  மனமதி சுட்டதையோ
  கெடுமதியர் குறள்கேட்டு
  கொடுமனது சுட்டதினால்
  கொதிநீர் கொட்டி மதிமுகத்தை
  கொழுத்தினாள் கொடுங்கோதை

  சம்மதம் கொண்ட அம்மத(ண)ப்பெண்ணை
  எம்மதம் கொண்ட கொண்டினாள் சுடுநீர்
  எஜமான் என்றால் எதுவும் உனதோ
  நிஜமான் என்றா நினைத்தாள் மருதுவை

  கொட்டிய கொதிநீர் கொழுத்தும் உன்னை
  கட்டியகணவன் கூரானினால் கொழுத்துகையில்
  சரியா தப்பா எனப்புரியாத உனக்கு
  சரியா சொல்லும் சரியான வேதம்

  Reply
 • மாயா
  மாயா

  //1983ல் சிங்களவர்கள் முழுத்துவேசிகளாக இருந்திருந்தால் ஒரு தமிழன் யாழ்பாணம் திரும்பியிருக்க இயலாது. – Nackeera //

  மேலே நக்கீரா சொல்வது மட்டுமல்ல அதற்கு பிறகு சொல்வதிலும் உண்மையுண்டு.

  அண்மையில் நான் இலங்கை சென்ற போது அனைத்து சிங்களவர் வாகனங்களிலும் முருகன் – அம்மன் – விநாயகர் படம் இல்லாமலே இருக்காத காட்சியை அரிதாகவேதான் பார்க்க முடிந்தது. முன்னர் எல்லாம் இப்படி இருப்பதை கண்டு இருந்தாலும், இவை பெரிதாக என்னைத் தாக்கியதில்லை. கடந்த காலங்களில் ஒரு அரச மரக் கிளையை கொண்டு சென்றதற்காக நம்மவர் பேசும் பேச்சை ஒப்பீடு செய்து பார்த்தேன். நான் சென்ற வாகன சாரதியிடம் ” தமிழ் கடவுள்களை எல்லாம் வைத்திருக்கும் போது தமிழர்கள் புத்தரை வணங்காதது பிரச்சனை இல்லையா? ” என்றேன். “புத்தரும் அடிப்படையில் இந்துதானே, அது தெரியாதா?” என்றார். என்னால் பேச முடியவில்லை. 70 சதவீதத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் நம் தமிழ் கடவுள்களை வணங்குகிறார்கள். நம்மில் எத்தனை பேர் புத்தரை வணங்கத் தேவையில்லை, மதிப்பளிக்கிறோம்? என சிந்தித்தால் நம் தவறு நமக்கு புரியும்.

  அடுத்தவனுக்கு மரியாதை கொடுத்தால் , நமக்கும் மரியாதை கிடைக்கும். அதை நாம் கொடுக்காத பட்சத்தில் அது நமக்கும் கிடைக்கப் போவதில்லை. நாம் ஒரு கிளையை கொண்டு சென்றாலே போராட்டம் நடத்துகிறோம். அவன் தன் வீட்டிலும் , வாகனத்திலும் நம் கடவுள்களை வைத்து வணங்குகிறான் . அவனிடம் நம் கடவுள் மேல் உள்ளது பக்திதானே தவிர துவேசம் இல்லை. அதே போல கதிர்காமத்தில் மட்டுமே சைவ கடவுள்ளளும் , புத்த கோயிலும், பள்ளிவாசலும் ஒன்றாக இருப்பது. இது போன்ற ஒரு உறவை நான் வேறெங்கும் கண்டதில்லை. ஒரே சமத்தில் இந்த 3 சமயங்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  இன்றும் தமிழனை விட தமிழன் மேல் உண்மையாக பரிதாபப்படுபவன் சிங்களவன்தான். நம்மிடம் எல்லாம் இருப்பது அரசியல் சுயநலம். இதைத் தவிர வேறெதுவும் இல்லை.கதிர்காமத்தில் உள்ள சிங்களவனது விட்டுக் கொடுப்பு மனநிலை , தமிழரிடம் உள்ளதா? என சிந்தித்தால்? விடை……………

  Reply
 • பல்லி
  பல்லி

  //கொட்டிய கொதிநீர் கொழுத்தும் உன்னை
  கட்டியகணவன் கூரானினால் கொழுத்துகையில்
  சரியா தப்பா எனப்புரியாத உனக்கு
  சரியா சொல்லும் சரியான வேதம்//
  கவிதை சொல்ல ஆசைதான் ஆனால் பின்னோட்டம் 230 தாண்டி விடும் என பயமாக உள்ளது;
  நட்புடன் பல்லி:

  Reply
 • BC
  BC

  அநீதிக்கெதிரான நக்கீரன் கவிதைக்கு(கொடுவயிறு சுடுவதனால்) பாராட்டுகள்.

  குமணண், நீங்கள் கூறியவற்றுடன் உடன்படுகிறேன்.
  //வள்ளுவர்; கம்பர் அண்ணா பெரியார் மாக்ஸ் சொன்னார் என்று கூறி எதை எழுத்லும் அதற்குள்ளே நிறுவ முயல்கிறார்களே தவிரி நான் சொல்கிறேன் கேள் என்று திறந்த மனத்துடன் கருத்தாட எமது சமூகம் தயாராக இல்லை. //
  கார்ல் மார்க்ஸ் கூறினார் என்றால் சரி. இந்த விடயத்தில் நாங்களும் இஸ்லாமியர்களும் ஒன்று தான்.

  Reply
 • நந்தா
  நந்தா

  தமிழர்கள் பவுத்தர்களாக இருந்தார்கள் என்பதை தமிழர்கள் தங்களின் “வரலாற்று” சொத்தாகக் கருதாமல் தமிழர்கழுக்கும் பவுத்தத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்று படிப்பறிவில்லா அரசியல் கோமாளிகளின் “துவேஷங்களைத்” காவுவதன் மூலம் எதனச் சாதிக்க முயல்கிறார்கள்?

  சரியாயகச் சொன்னால் ‘சங்க”காலம் என்பது தமிழர்களும் சிங்களவர்களும் சமாதானமாகவும், செளஜன்யத்துடனும் வாழ்ந்த காலமாகவே தெரிகிறது. சமாதானம் இருப்பின் மாத்திரமே கலைகளும், காவியங்களும் பிறக்க முடிகிறது. கவிகளின் அல்லது எழுதுபவர்களின் கற்பனைகள்/தரவுகள் சேமித்தல் என்பனவற்றுக்கு “சமாதானம்” என்ற அமைதிச் சூழ்னிலை அவசியமானதாகும்!

  அந்த சமாதான சூழ்நிலையினால்த்தான் இன்று புலம் பெயர் நாடுகளில் இப்படியான எழுத்துப் பிரவாகங்களை(சரியோ தப்போ) பார்க்க முடிகிறது.

  மாயாவின் அனுபவம் உண்மை. ஆயினும் நமது தமிழர்களுக்கு பரங்கியர் காலத்துக் கல்வி இந்துக்களினால் “போதி மாதவன்” என்று கருதப்படும் புத்த பகவானை தூக்கி எறிந்து விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

  64நாயன்மார்களை ஆதரிப்பவர்கள் புத்தரை அவர்களில் மூத்தநாயனாராக ஆக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஏனென்றால் இந்துக்களிடையே இருந்த பல “பிரச்சனைகளுக்குத்” தீர்வு கண்டவர் புத்தர் மாத்திரமே! தவிர புத்தர் இந்த நாயன்மார் எல்லோரையும் விட பலநூற்றாண்டுகள் காலத்தால் முந்தியவர்!

  ஐம்பெரும் காப்பியங்களில் காணப்படும் “புத்தமதம்” தொடர்பான அவதானங்களை இன்றைய தமிழ்- சிங்கள அரசியலினால் மறக்க அல்லது மறைக்க முற்படுவது இந்துத் தமிழர்கள் தங்களின் கால்களையே முடமாக்குகிறார்கள் என்பதே என் அனுமானம்!

  Reply
 • நந்தா
  நந்தா

  குமணன்:
  பல்லவர்களின் காலத்தில் எழுந்த பரதநாட்டியம் தமிழர்களின் கலையா அல்லது இந்துத் தமிழர்களின் கலையா என்பதனை காண வேண்டும். மூவேந்தர் பட்டியலில் பல்லவர்கள் இடம் பெறவில்லை. அதன் காரணமும் புரியவில்லை.

  தமிழர்களினது கலை, கலாச்சார வாழ்வில் பல்லவர் காலத்துத் தடயங்களே இன்றும் அதிகமாக உள்ளது.

  சிவ வழிபாட்டிலிருந்து பிறந்த பரதநாட்டியத்தை பாதிரிகள் “தமிழர்” கலை என்று புரட்டுவது இந்து மதம் தமிழர்களுக்கு எதையும் சாதிக்கவில்லை என்ற அவர்களின் வழக்கமான பிரச்சாரமே ஒழிய வேறொன்றுமில்லை!

  Reply
 • Nackeera
  Nackeera

  மாயா!
  உங்கள் பின்நோட்டத்தைப் பார்த்ததும் கத்தி அழவேண்டும்போல் இருந்தது. காரணம் இந்தப்பிழைகளை நானும் சிறுவானாக போராட்டம் எனத்திரிந்தகாலத்தில் மட்டுமல்ல பெளத்தத்தை மாசுபடுத்தும் சிங்களவர்களை நோக்கியும் ஏன் தேசத்தில் கூட எழுதியுள்ளேன். தண்டனையில் கொடுமையான தண்டனை மனச்சாட்சி கொடுக்கும் தண்டனை மரணதண்டனையை விடமோசமானது. நான் சிங்களவர்களுடன் அதிகமாகப் பழகியது கிடையாது ஆனால் புத்தர்மேல் நம்பிக்கை என்றும் இருந்தது.
  / “புத்தரும் அடிப்படையில் இந்துதானேஇ அது தெரியாதா?” என்றார். என்னால் பேச முடியவில்லை. 70 சதவீதத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் நம் தமிழ் கடவுள்களை வணங்குகிறார்கள்/
  /. நாம் ஒரு கிளையை கொண்டு சென்றாலே போராட்டம் நடத்துகிறோம். அவன் தன் வீட்டிலும் இ வாகனத்திலும் நம் கடவுள்களை வைத்து வணங்குகிறான் . அவனிடம் நம் கடவுள் மேல் உள்ளது பக்திதானே தவிர துவேசம் இல்லை./
  மாயா இந்தவரிகளால் கொன்றுவிட்டீர்கள் போங்கள். புத்தர் இந்துவானதுக்காக அல்ல எமது தலைமுறை துவேசிகளாக வளர்க்கப்பட்டு விட்டனவே என்பதற்காக. இன்று கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நாமும் திறந்த மனங்களுடன் இணைந்து கொள்வதும் முக்கியமாகிறது. அரசியல்வாதிகளால் சிங்களமக்களிடையே துவேசம் வளர்க்கப்பட்டிருந்து என்பதும் உண்மை. சிங்கவர்களைப் பொறுத்தவரை நாமே துவேசிகள் நாமே பெரும்துவேசிகள்.எமக்குக் கிடைத்த இந்தச் சந்தர்பத்தை எமது புதிய தலைமுறைகளுக்கு சரியான முறையில் கொண்டு செல்வோமா? இன்றும் புலி ஊடகங்கள் பழையபாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

  Reply
 • Nackeera
  Nackeera

  பிசி: நன்றிகள்.

  பல்லி! எத்தனை பின்நோட்டம் என்பதை விட எத்தனை நல்ல கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்பதுதான் முக்கியமானது. கவிதை எழுதத்தயங்கவேண்டிய அவசியம் இல்லை. அது கவிதையாக இல்லை என்றால் வசனமாக இருக்கட்டுமே. கருத்துக்கள் தான் முக்கியம்.
  கவிதை எமது உணர்வுகளை கரு:கருத்து:எழுத்து:நடை: மிகமுக்கியமாக கற்பனை:கற்பனை வளம்:அணிகள்:படிமம்:வீச்சு: எழுத்தாழுமை எனப்பல சிறப்பம்சங்களுடன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டம் ஒரு அழகான ஆயுதம். எழுதுவதற்குத் தயக்கம் எதற்கு எழுதுங்கள்.

  Reply
 • முனைவர் துரை.மணிகண்டன்
  முனைவர் துரை.மணிகண்டன்

  மிகவும் உண்மையுள்ள மனித தன்மையுள்ளவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இந்த நிகழ்வைச் சரியாக இலக்கியப்படுத்தியுள்ள நக்கீரா அவர்களுக்கு என் பாராட்டுக்கள். நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரா பரம்பரையே உன் கவிதைப்பணி தொடர வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  முனைவர் துரை.மணிகண்டன்.
  http://manikandanvanathi.blogspot.com

  Reply
 • Nackeera
  Nackeera

  நன்றி முனைவர் துரை மணிகண்டன் ஐயா

  அன்புடன் நோர்வே நக்கீரா

  Reply
 • மாயா
  மாயா

  //Nackeera on September 29, 2010 11:05 am
  மாயா! உங்கள் பின்நோட்டத்தைப் பார்த்ததும் கத்தி அழவேண்டும்போல் இருந்தது.//

  உங்களைப் போலவே நான் கத்தி அழ முடியாமல் அன்று மௌனமானேன். அந்த வேதனையை, உங்கள் வரிகளால் மீண்டும் என் நெஞ்சை அழுத்தியதாக உணர்ந்தேன். இன்றைய மாற்றத்தில் தேவை துவேசம் அல்ல, நேசம். விட்டுக் கொடுப்பு. அதனால் அனைவர் மனங்களையும் வெல்லுதல் வேண்டும். உங்களைப் போன்றோரது பேனாக்கள் அதை செய்யும் என நம்புகிறேன். வாழ்க நக்கீராவின் பணி.

  Reply
 • Sothilingam T
  Sothilingam T

  முனைவர் துரை.மணிகண்டன் அவர்களே

  தங்களின் விமர்சனங்களுக்கு நன்றிகள் நேரம் கிடைக்கும்போது எமது புலம்பெயர் மண்ணில் வெளிவரும் ஆக்கங்களுக்கு தங்கள் முழுமையான விமர்சனங்களை முன்வைத்து எமது புலம் பெயர் படைப்புக்களை செழுமைப்படுத்த உதவுங்கள்.

  நன்றி

  Reply
 • Nackeera
  Nackeera

  மாயா! மனச்சாட்சியின் தண்டனை மரணவேதனை என்பதை உணர்கிறேன். அன்பு மனிதநேயம் என்பவற்றை நேசிக்கும் போது அவற்றை அழிக்கமுயல்பவர்கள் மேல் ஆத்திரமும் ஆவேசமும் எற்படுவதால் கவிதைகள் அநீதிமேல் அதிவீச்சைக் கொண்டு விடுகிறது. ஒருவகையில் மாயா நீங்கள் கொடுத்து வைத்தவர். இன்றைய இலங்கை நிலையை நன்கு கண்டவர். துருவத்துக் குயிலாய் 25வருடங்கள் பனிப்பாலைவனத்தினுள் வாழும் எனக்கு இதயம் விறைத்து இரத்தம் உறைந்து விடவில்லை என்பதை உங்கள் போன்றோரின் பின்நோட்டங்களே உணர்த்துகின்றன. என்னால் இயன்றவரை அநீதிக்கு எதிராகவும் மனிதநேயம்;பெண்ணியம்;அன்பு;காதல் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொண்டுவர முயல்கிறேன். கவிதைகள் உணர்வுவழி தானாக ஊற்றெடுப்பதால் என்னை சரியான இடத்தில் இருத்துவது முக்கியம். மாயா தொடர்ந்த உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தாருங்கள். புதிய உலகம் சமைப்போம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //மிகவும் உண்மையுள்ள மனித தன்மையுள்ளவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இந்த நிகழ்வைச் சரியாக இலக்கியப்படுத்தியுள்ள நக்கீரா அவர்களுக்கு என் பாராட்டுக்கள்//
  நக்கீரா உங்கள் எழுத்துக்கு வந்த நூறுக்கு மேற்பட்ட பின்னோட்டங்களை விட அதிக மதிப்புள்ளது முனைவரின் பாராட்டு,
  தொடர்க உம் சமூக பணியை;
  நட்புடன் பல்லி;

  Reply
 • jeyarajah
  jeyarajah

  நான்காம் உலகமாக இருக்கலாம் ஜெகோவாவாக இருக்கலாம் அது அவர்களின் நம்பிக்கையை பொறுத்தது. சொல்லவருகின்ற கருத்துக்கள் இலங்கையில் நன்மை பெறக்கூடியதாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம்.

  நந்தாவுக்கும் சந்திரன் ராஜாவுக்கும் மாக்ஸிசத்தில் ஏதும் வேறுபாடுகள் இருக்கபோவதில்லை. உழைப்பை அளப்பதற்கு ஏதும் மானி இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று நந்தா எழுதியது அருமை அதேபோல் சந்திரன்ராசா பெண்விடுதலை சம்பந்தமாக பெண்கள் வேலைக்கு போக வேண்டும் அரசாங்கம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அப்போதுதான் பெண் உண்மையாக விடுதலை அடைவாள் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவாள் என்பதையும் மறக்க கூடாது.

  நந்தா சொல்லுகிற வெளிநாட்டில் இருக்கிற நகரை சுத்தம் செய்பவர்கள் வங்கி ஊழியர்களைவிட கூடுதலாக சம்பாதிக்கிறார்கள். இது இலங்கையிலும் மாறினால் மதம் சாதி பிரச்சினை தீரும் என்ற அதற்காக யாரும் படிக்க தேவையில்லை என்பதல்ல ஜெயபாலன் சொல்லுகிற மாதிரி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு சலுகை என்பதிலும் பார்க்க சகலருக்கும் ஒரேமாதிரியான கல்வி பயிற்றுவிக்கப்படல் வேண்டும் என்று

  கூட்டமைப்பைவிட பல்லியை பாராளுமன்றம் அனுப்பிவைக்கலாம் அவர்களிலும் பார்க்க நிறையவே கேள்விகள் கேட்பார் அதே நேரம் தூய்மையானவர்.

  அதேபோல சாகிப்நாநா எழுதுகிற அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களில் மதத்தை விட்டு வலையின் தரத்தை பார்ப்போம். இன்று மாயா எழுதுகிற விடயங்களில் அன்று யாழ்தேவியில் இடமில்லாமல் அலைய பிக்கு மடியில் கொழும்பு வந்ததும், மினி பஸ்அல்ல பெரிய பஸ்சில் நயினாதீவுக்கு போக வந்த சிங்கள மக்களுக்கு நொங்கு வெட்டிக்கொடுத்ததும் அவர்கள் ஈரப்பிலாக்காய் கறி தந்ததும் தான் ஞாபகம் வருகிறது.

  இந்த வயது போனமனிதன் யாரைத்தான் விட்டுவைத்தார் நேராக கேட்டால் கட்டி அணைக்க கூடியவர். புலிகளை கருத்து ரீதியாக அடித்து விரட்டியதில் சந்திரன் ராஜாவின் பங்கு பெறுமதியானது தொடர்ந்தும் எழுதுங்கள் சந்திரன்ராசா

  நக்கீரா தகவலுக்கு நன்றி.

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லி மற்றவர்கள் பாராட்டுமட்டுமல்ல பல்லியின் பாராட்டும் எனக்குப் பெரியதே. மனந்திறந்த வாழ்த்துதல் என்பது கடவுளுக்குரிய பண்பு. மந்திரங்கள் என்றாலே பெரும்பாலானவை வாழ்த்துதலாகத்தானே இருக்கிறது. மனிதனின் மனித சக்தியால்தானே கடவுளே வாழ்கிறார். மந்திரங்களில் பல போற்றி போற்றி என்றே முடியும். நாம் ஒருவரை வாழ்த்தும் போது நாமும் வாழ்த்தப்படுகிறோம். காரணம் ஒரு நல்லவிடயத்தை மனதார எண்ணுவதால். வாழ்த்துதலும் போற்றுதலும் மனிதவாழ்வை வளம்படுத்தும் மையங்கள். இந்த வாழ்த்துதல் போற்றுதல் இருந்தால் எம்மிடையே துவேசம் வளர்ந்திருக்குமா? நாமும் இவ்வளவு காலமும் துவேசித்த சிங்களவரையும் பெளத்தர்களையும் வாழ்த்துவோம். இதற்கு அநியாயம் செய்பவர்களைத் தட்டிக் கொடு என்றாகாது. தட்டிக்கேட்கப்பட வேண்டியவை கேட்கப்படவேண்டும் பலாற்காரம் இன்றி.

  Reply
 • Nackeera
  Nackeera

  ஜெயராஜ் பின்நோட்டங்களைச் சரியாக வாசித்து நல்மதிப்பீடு செய்துள்ளார். நன்றி ஜெயராஜ்

  Reply
 • மாயா
  மாயா

  எம்மோடும் பல மாகான்களை காண , நம் நக்கீராவின் கவிதை வழியமைத்து தந்துள்ளது. நக்கீராவுக்கு நன்றி. என்றும் உங்களைப் போன்றோர் கரம் பிடித்து நடப்பேன். உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால் இழுத்துச் செல்ல முடியாவிட்டாலும் , தள்ளிக் கொண்டாவது செல்வேன். இதைப் பார்த்தாவது பலர் உதவ வருவார்கள் . அதை இங்கே எழுதப்படும் பின்னோட்டங்களில் காண்கிறேன். நல்லவர்கள் இன்னும் இருப்பதால்தான் இன்னும் வானில் இருந்து மழை துளி விழுகிறது.

  இது இங்கே உபயம் போல இருக்கும் என நம்புகிறேன்.

  அடிமையாக்க ஆசைப்படாதே
  ……………………………….
  ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

  அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

  குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

  நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

  Reply
 • நந்தா
  நந்தா

  //நந்தா சொல்லுகிற வெளிநாட்டில் இருக்கிற நகரை சுத்தம் செய்பவர்கள் வங்கி ஊழியர்களைவிட கூடுதலாக சம்பாதிக்கிறார்கள். இது இலங்கையிலும் மாறினால் மதம் சாதி பிரச்சினை தீரும் என்ற அதற்காக யாரும் படிக்க தேவையில்லை என்பதல்ல ஜெயபாலன் சொல்லுகிற மாதிரி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு சலுகை என்பதிலும் பார்க்க சகலருக்கும் ஒரேமாதிரியான கல்வி பயிற்றுவிக்கப்படல் வேண்டும் என்று//

  நகரத்தை சுத்தமாக வைத்திருக்க “படிப்பு” முக்கியமானதாயின் பட்டதாரிகள்தான் வேண்டும் என்று நகரசபைகள் விளம்பரம் செய்யலாமே!

  ஒரு தொழிலின் பெறுமதி படிப்பில் தங்கியிருப்பதில்லை!

  நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை வழஙப்படவில்லை என்பதே அந்த “குறைந்த” சம்பளத்தின் பிரச்சனை!

  இலஙையில் கல்வி எல்லோருக்கும் ஒரே மாதிரியானதுதான்! அரச பாடசாலைகளில் வேறு வேறு புத்தகங்கள் பாவிக்கப்படுவதில்லை! ஆனால் ஒரு விவசாயி அல்லது மீன்பிடித் தொழிலாளி அல்லது நகரசுத்தித் தொழிலாளி ஒரு வங்கித் தொழிலாளியை விட அதிக “கலோரிகள்” செலவாக்குகிறான் என்பதும் அதனை அவன் திரும்ப பெற்றுக் கொள்ள அவனுக்கு “பண” வசதி கிடைப்பதில்லை என்பதும் எப்படி “நாகரீகமாகிறது?”

  “உடல் உழைப்பாளிகள்” மூலம்தான் எந்தநாட்டிலும் உற்பத்திகள் பெருக்கப்படுகின்றன என்பதைநாம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் மேற்குநாடுகளில் புரிந்து கொண்டுள்ளனர். அதனாலேயே அவர்களால் “வளமான” ஒரு சமூகத்தை நிர்மாணிக்க முடிந்திருக்கிறது.

  அதற்காக எல்லோரும் “உடல் உழைப்பாளிகள்” ஆக வேண்டும் என்பது கிடையாது.

  Reply
 • பல்லி
  பல்லி

  //நான்காம் உலகமாக இருக்கலாம் ஜெகோவாவாக இருக்கலாம் அது அவர்களின் நம்பிக்கையை பொறுத்தது. சொல்லவருகின்ற கருத்துக்கள் இலங்கையில் நன்மை பெறக்கூடியதாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம்.//
  இதில் எனக்கும் உடன்பாடுதான் ஆனால் அவர்கள் எதுவாக இருந்தாலும் அது சமூகத்தை பாதிக்காமலும் அதில் வெறிபிடித்தவர்களாக இருப்பது தவிர்ப்பது நல்லது;

  //ஜெயபாலன் சொல்லுகிற மாதிரி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு சலுகை என்பதிலும் பார்க்க சகலருக்கும் ஒரேமாதிரியான கல்வி பயிற்றுவிக்கப்படல் வேண்டும் என்று//
  இதை பல்லி பல பின்னோட்டத்தில் பலமாகவே சொல்லியுள்ளேன்; பரிஸ் தலித்மகாநாட்டில் ஜெயபாலன் சொல்லியபோது நேரிலேயும் கேட்டேன், இதில் ஒரு வேடிக்கை எதையுமே எதிர்க்கும் றயாகரன் கூட இதை வழிமொழிந்தார், தரமான கல்வி என்பது பல்கலைகழகம் போவது அல்ல என்பது என் கருத்து;

  //உழைப்பை அளப்பதற்கு ஏதும் மானி இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று நந்தா எழுதியது //
  மறுக்கமுடியாத உன்மை மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணும் யதார்த்தம்கூட;

  //சந்திரன்ராசா பெண்விடுதலை சம்பந்தமாக பெண்கள் வேலைக்கு போக வேண்டும் அரசாங்கம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அப்போதுதான் பெண் உண்மையாக விடுதலை அடைவாள் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவாள் என்பதையும் மறக்க கூடாது.//
  இவரது பல கருத்துக்கள் அரசியல்வாதிகள் காதுகளில் எட்டவேண்டியவை;

  //பல்லியை பாராளுமன்றம் அனுப்பிவைக்கலாம் அவர்களிலும் பார்க்க நிறையவே கேள்விகள் கேட்பார் //
  நல்லவிடயம்தான் பல்லியும் அதுக்கு மறுப்பு இல்லை; ஆனால் பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜெயராஜாதான் இருக்க வேண்டும் அப்போதுதான் பல்லியின் கேள்விகளை அங்கீகரிப்பீர்கள்; இல்லையேல் கையசைவாலேயே பல்லியை உக்கார்த்தி விடுவார் சபாநாயகர்(பல்லியின் லொள்ளுக்கு)

  //அதேபோல சாகிப்நாநா எழுதுகிற அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களில் மதத்தை விட்டு வலையின் தரத்தை பார்ப்போம்.//
  கண்டிப்பாக சமூக நலன் கருதுவோர் இதை கடைபிடிக்க வேண்டும்;நண்பனாய் கைகோர்க்காவிட்டாலும் நல்லதை சொல்லும் போது ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்; இல்லாது போனால் முடிவு முள்ளிவாய்க்காலே;

  //இன்று மாயா எழுதுகிற விடயங்களில் அன்று யாழ்தேவியில் இடமில்லாமல் அலைய பிக்கு மடியில் கொழும்பு வந்ததும், மினி பஸல்ல பெரிய பஸ்சில் நயினாதீவுக்கு போக வந்த சிங்கள மக்களுக்கு நொங்கு வெட்டிக்கொடுத்ததும் அவர்கள் ஈரப்பிலாக்காய் கறி தந்ததும் தான் ஞாபகம் வருகிறது.//
  அந்த நிலை மீண்டும் வரவே பகமைகளை தவிர்ப்போம்: உறவுகளை வளர்ப்போம்;

  //சந்திரன் ராஜாவின் பங்கு பெறுமதியானது தொடர்ந்தும் எழுதுங்கள் சந்திரன்ராசா//
  பின்னோட்டத்துடன் முடித்துவிடாது பல கட்டுரைகள் அவர் எழுத வேண்டும் என்பது பல்லியின் விருப்பம்; ஆனால் முதல் விமர்சன பின்னோட்டம் பல்லியினதே;

  //நக்கீரா தகவலுக்கு நன்றி.//
  தகவலை தந்த நாயகன் என்பதால் நன்றியுடன் நக்கீரனை விட்டு விட்டார்(வழமான குட்டுதான்)

  //இந்த வயது போனமனிதன் யாரைத்தான் விட்டுவைத்தார் நேராக கேட்டால் கட்டி அணைக்க கூடியவர்.//
  எல்லோரது பின்னோட்டங்களையும் கவனமாய் படித்து அதுக்காய் ஒரு தொகுப்பெழுதிய கிழவருக்கு(அனுபவத்தில்) நண்பர்கள் சார்பாய் பல்லியின் நன்றிகள்.

  நட்புடன் பல்லி;

  Reply
 • பல்லி
  பல்லி

  //என்னால் இயன்றவரை அநீதிக்கு எதிராகவும் மனிதநேயம்;பெண்ணியம்;அன்பு;காதல் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொண்டுவர முயல்கிறேன். //
  அப்போதெல்லாம் பல்லியும் (இன்று குடும்பவிழாக்களில் கொடுக்கும் இலவச அன்பளிப்பு போல்) கவிதை போல் ஒன்றை எழுதி இடையூறு செய்வேன் நட்புடன்தான்:

  Reply
 • chandran .raja
  chandran .raja

  சந்திரன்.ராஜா வை தேசம்நெற் அடக்கம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது. தேசம்நெற் நான் எழுதியவையை தேசம்நெற்றால் அடக்கம் செய்யப் பட்டவையை உடனனடியாக வெளியிடப்பட வேண்டும். இல்லையேல்… தேசம்நெற்றின் போலித்தன்மை இன்னொரு இடத்தில் மத்தாப்புவாக
  கண்டு கொள்ளுவர்.

  சிறுகுறிப்பு. எந்த கருத்தையும் நீக்கும் பொழுதும் அதை ஒரு பிரதியெடுத்து தான் நீக்குவோம் என தனது ஜனநாயகத்தை பறைசாற்றியதாக ஞாபகம் இருக்கிறது. அதற்கு உண்மை உள்ளவராக நடந்து கொள்வார்களா?.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  உழைப்பை அளந்துகொள்வதற்கு இன்னும் பாகைமானி கண்டுகொள்ளவில்லையாம். இதையாரிடம் சொல்லி அழுவது?.
  அரை பில்லியன் உலகமக்கள் சனத்தொகையின் வாழ்வுக்காக ஒரு சிலநிறுவனங்களின் உதவிக்காக ஏங்கி நிற்பது பாகைமானி இல்லாது வேறு எதுவென்று கூறப்போகிறீர்கள்?.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  கடந்த மூன்று வருடங்களில் எள்ளத்தனனையும் சுயநலமில்லாமயே இத்தளத்தில் எமது கருத்துக்களை பகிர்ந்தது கொண்டோம். ஒருவகையில் தமிழன் என்பதை தவிர்ந்து உலகத்திற்கும் தாவிப் பாய்ந்தோம். நீதி எதுவென எம்மையே நாம் கேொண்டோம். உண்மையில் இது என்னும் கிடைக்கப்படாத ஒன்று தான். ஆனால் இதற்கு இன்னமும் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. தீர்ப்பு எழுதுவதற்கு முன்பே நீதிமன்றத்தை அடித்துப் பூட்டிவிட்டார்கள் என நினைக்கிறேன்.
  இவர்கள் யாருக்காக அழுதார்களே அதற்காகவே நாமும் அழுதோம். எங்கள் கண்ணீரும் இவர்களுக்காகவே வடிந்தது. நீங்கள் காட்டிய அனுதாபத்தைவிட நீங்கள் காட்டிய சட்ட-திட்ட நீதி பரிபாலனும் தான் எம்மை இம்சைப் படுத்துகிறது.

  Reply
 • BC
  BC

  இங்கே நக்கீரா அநீதிக்கு எதிராக கவிதை எழுத, அங்கே காசி அண்ணா மறுபடியும் யுனியர் விகடனில் தொடங்கி விட்டார் புலிகளின் நான்காம் கட்டப் போரை சிலர் முடிவு என்று எண்ணுகின்றனர். அது முடிவல்ல. திருப்புமுனை.

  Reply
 • Nackeera
  Nackeera

  சந்திரன் ராஜா! உங்களை மீண்டும் காணும் போது மகிழ்சியாக இருக்கிறது. எல்லாரும் கருத்துக் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. இது உங்களது ஜனநாயக உரிமை அதை ஏற்கமறுப்பவர்கள் தம்கருத்தைச் சொல்லலாம். சந்திரன்! ஆரம்பத்தில் நான் எழுதிய எதையும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் எதுவுமே பிரசுரிக்கவில்லை. நான் ஒரு வாசிகசாலையில் கையெறுத்துப்பத்திரிரை என ஒரு சிறுகொப்பை வாங்கி எனது ஆக்கங்களை: செய்திகளை எழுதிப்போட்டேன். பலர் வாசித்தார்கள் காழ்புணர்விலே விரோதத்தாலே யாரோ திருடிக்கொண்டு போய்விடுவார்கள். 14-15வயதில் பெற்றாரிடன் பணம் கேட்பதென்றால் ஆயிரம் காரணங்கள் சொல்லவேண்டும். இதன் வளர்ச்சி இறுதியில் தமிழ்சேவை இரண்டுவரை போய் சேர்ந்தது. இப்படி உங்களது மனஆறுதலுக்காகவாவது எழுதத்தானே வேண்டும். தேசம்நெட் சிலவேளை தளத்தின் கட்டுப்பாடுகளுக்கமைய கத்தரிக்கலாம். நீங்கள் நினைக்கிறீர்களா நான் கட்டுரை கவிதை எழுதியவன் என்பதற்காக சும்மா விடுகிறார்களா? இந்த கவிதைக்கு நான் எழுதிய எவ்வளவு தலைபறக்க வெட்டப்பட்டு குப்பைக்குள் போய் விட்டது.

  Reply
 • நந்தா
  நந்தா

  “மூலதனம்” என்பதை சந்திரன் படித்து இருந்தால் “இந்த பாகைமானி” கதை பேசியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கூறியதையே நானும் கூறியிருக்கிறேன்!

  மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் வறுமை எப்படி ஏற்பட்டது என்பதை சந்திரன் படிக்கவில்லையோ?

  “வறுமையின் தத்துவம்”, “தத்துவத்தின் வறுமை” என்பவற்றை சந்திரன் தேடிப்பிடித்து படித்துக் கொண்டால் உண்மை புரியும்!

  சந்திரன் அந்த “நிறுவனங்களின்” பெயர்களை வெளியிட்டால் உண்மை தெரியும்!

  Reply
 • Nackeera
  Nackeera

  பிசி! காசிஅண்ணர் செக்குமாடு செக்கைச் சுற்றிவருவதைப்போர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்.அவரின் சூழல் அப்படி. புதிய முறையில் சிந்திப்பவர்களும் தமிழ்மக்கள்பால் உண்மை நேயமுள்ள தூரநோக்குடைய மனிதர்கள் அவருக்கு எடுத்துரைப்பது முக்கியம். அவரும் மனிதன் தானே. எந்த ஒரு செயல் வெற்றியடைந்தாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அதைப்பற்றிய கணிப்பீடு என்றும் இருப்பது அவசியம். போராட்டம் போராட்டம் என்று இறுதியில் கிடைத்தது என்ன? பிரதிபலன் என்ன? பிழைகள் என்ன? போராட்டகாலத்தின் மைல்கற்களாக புலிகள் எதைக் கொண்டார்கள். சரி எல்லாவற்றையும் விடுவோம். தமிழ்பேசும் அனைத்து மக்களுக்குமாக ஒரு வேண்டுகோள்: ஆயுதப்போராட்டம் (பலன்கள் பிணங்கள்: இரத்தம்: இடம்பெயர்வு: அவலம்: பொருளாதார கல்வி அழிவுகள்…. இன்னும் பல) இவற்றுக்கு 30வருடம் கொடுத்து நீங்கள் அன்பு மனிதநேயம் உண்மையான அகிம்சைக்க மனதார ஏன் ஒரு 15வருடங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள்? சரி 10வருடம்? சிங்களவர்களையும் மனிதர்களாய் பாருங்கள். எமக்கிருக்கும் அதே பிரச்சனை சிங்கள அரசியல்வாதிகளால் அவர்களுக்கும் உண்டு: அதற்காக சிங்கள அரசியல்வாதிகளுடன் சேர்ந்து மறுபக்கமுளள சாட்கடையில் விழுந்து போகாது உண்மை மனிதநேயத்துடன் இலங்கையராக சிந்தித்துச் செயற்படும் ஒருதலைமையைக் கட்டி எழுப்புங்கள். பிரபாகரன் இருக்கிறார் வருவார் போராடுவார் தமிழீழம் வாங்கித்தருவார் என்று நம்புபவர்கள் பலர் உளர். சரி உயிருடன் இருந்தால் நல்லதானே. ஆனால் தமிழ்ழீழம் வாங்கித்தருவார் என்பது எந்த ஜதார்த்தமும் அற்ற கனவுதான். இன்னுமொரு 30வருடத்தின் பின்னா? நடக்கக்கூடிய விடயங்களைச் சிந்திப்பதும் உரையாடுவதும் அவசியம். மனங்களை வெல்பவர்களே வெற்றியாளர்கள். தமிழ்மக்களின் மனங்களை வெல்ல அரசு முயல்கிறது. புலத்துப்புலி தடுகிறது. அதற்கு கருத்தோ மக்களோ அவசியம் இல்லை. தேவை பணம் விலாசம் தண்டிய பணத்தில் சொகுசு வாழ்க்கை. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள் அல்ல. நித்திரை இன்றி 2 வேலை செய்து ஏன் மலசலகூடங்கள் கழிவியபர்களிடம் பிடுங்கிய பணத்தை என்ன செய்தீர்கள். இதுதான் இடதுசாரிகள் கூறும் சுரண்டர். இதில் தரகுவியாபாரிகள் எவ்வளவோ மேல். இனியாவது நடக்கக்கூடியதைச் சிந்திப்போம். மனங்களை வெல்வோம். நிலங்களை அல்ல. பிசி இந்தப்பின்நோட்டத்துக்கு அடி எடுத்துத் தந்ததற்கு நன்றியுடையேன்.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  நீங்கள் மூலதனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவது அபத்தம் நந்தா? உங்கள் செப்.21 3:28 பின்னோட்டம் இப்படி சொல்லுகிறது?
  கால்மாக்ஸ் அவர்களுக்கு தெரிந்த மதங்கள் இஸ்லாம் யூதம் கிறீஸ்தவம் என்பவையே அவற்றையே அபின் என்று கருத்து தெரிவித்தார்.
  இதைவிட பாட்டாளிமக்கள் தத்துவத்திற்கும் மாக்ஸியத்துக்கும் செய்கிற கொடுமை வேறு எதுவும் இருக்கமுடியாது.
  செவ்விந்திய இனத்தையே ஆய்வுசெய்து ஒரு பழைய உலகத்தின் திறவுகோலாக இருக்கிறது என்பதை கண்டறிந்த மாக்ஸ்சும் எங்கல்சும் உலகத்தின் இரண்டாவது சனத்தொகையை அடக்கிய இந்தியாவும்-இந்துமதமும் தெரியாது என்று தாங்கள் சொல்வது…..? இதற்கான விடையை முதல் வாசகர்களுக்கு தெளிவு படுத்துங்கள்.
  வத்திக்கான் தூண்களை தகர்ப்பதற்கு யாரை அணிதிரப் போகிறீர்கள்? அதற்கும் விடை சொல்லுங்கள். அப்புறமே! பாகைமானிக் கதையை விவாதிப்பதற்கு பொருத்தமானதாக இருக்கும் நந்தா!.

  Reply
 • sarma
  sarma

  // தேசம்நெற் நான் எழுதியவையை தேசம்நெற்றால் அடக்கம் செய்யப் பட்டவையை உடனனடியாக வெளியிடப்பட வேண்டும். இல்லையேல்… தேசம்நெற்றின் போலித்தன்மை இன்னொரு இடத்தில் மத்தாப்புவாக கண்டு கொள்ளுவர்//சந்திரன்.ராஜா

  இப்படியானவர்கள் மாக்ஸிசம் பேசுவதால்தான் மக்களுக்கு மாக்ஸிசம் வெறுத்துப்போனதை சந்திரன் ராசா உணர்ந்து கொள்ள வேண்டும். நாலு அல்ல ஜந்தாவது அகிலம்தான் பிழந்தாலும் மக்களின் தளத்தில் நில்லுங்கோ சந்திரன் ராசா -sarma jaffna

  Reply
 • பல்லி
  பல்லி

  // காசிஅண்ணர் //
  இவர் புலிகள் தோற்றபின் ஒரு இசைதட்டில் இவரது எழுத்தில் சில பாடல்கள் வெழியாகின; அதன் பெயர் ,;;; இது புலி பதுங்கும் காலம் காலம்;:, சமீபத்தில்தான் பல்லி கேட்டேன்; அதில் பிள்ளை மாலதி ஒரு பாடல் பாடுகிறார் 90 வயது கிழவி சிங்கள அரசை மண்ணள்ளி போட்டு திட்டுமாபோல் உள்ளது, காசியின் உணர்வுக்கு வந்த சோதனையா இது என கவலையாக உள்ளது,

  Reply
 • நந்தா
  நந்தா

  பிரிடிஷ் காலனிகள் பற்றியும், அந்தநாடுகளில் மக்கள் எப்படி சுரண்டப்பட்டு சகலதையும் இழந்து போனார்கள் என்பதை மார்க்ஸ் தெளிவாக கூறியிருக்கிறார். வத்திக்கான் எப்பொழுதும் அந்த “சுரண்டல்” கொள்கைகயாளர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

  சொத்துக்களின் மீதுள்ள பேராசை சுரண்டலுக்கு காரணம். அதனைப் பாலைவனத்து மதங்கள் “ஆதரிக்கின்றன” என்பது மாத்திரமின்றி சொத்துக்களுக்காக கொலை, கொள்ளை என்பனவற்றையும் “கடவுளின் பெயரால் ஊக்குவிக்கின்றன. இதனை மார்க்ஸ் அல்லது வேறு எவரும் சொல்லத் தெவையில்லை. அந்த மதங்களே “போதனை” செய்கின்றன.

  வத்திக்கானின் தூணாக தேசம்நெற்றில் வலம் வரும் சந்திரன் ராஜா சோஷலிசம், தொழிலாளர் என்று புரட்டுவது பேர்ல் தேவனாயகம் சொன்ன “கிறிஸ்தவ சோஷலிசமோ?”

  எதிர்பார்த்த படியே சந்திரன் “மார்க்சுக்கே”நாமம் போட புறப்படிருக்கிறார்!

  மார்க்சிச கொள்கைகளின் அழிவுக்கு முதலாளித்துவம் இன்று கண்டு பிடித்துள்ள மார்க்கத்திலொன்று மார்க்சிச கோஷங்களுடன் முதலாளித்துவ சக்திகளுக்கு மிண்டு கொடுப்பது என்பதாகும்!

  சந்திரன் அந்த வேலையை கன கச்சிதமாக நிறவேற்ற முயலுகிறார். யார் எய்த அம்போ?

  Reply
 • மாயா
  மாயா

  // பல்லி on September 30, 2010 9:40 pm
  // காசிஅண்ணர் //
  இவர் புலிகள் தோற்றபின் ஒரு இசைதட்டில் இவரது எழுத்தில் சில பாடல்கள் வெழியாகின; அதன் பெயர் ,;;; இது புலி பதுங்கும் காலம் காலம்;:, சமீபத்தில்தான் பல்லி கேட்டேன்; அதில் பிள்ளை மாலதி ஒரு பாடல் பாடுகிறார் 90 வயது கிழவி சிங்கள அரசை மண்ணள்ளி போட்டு திட்டுமாபோல் உள்ளது, காசியின் உணர்வுக்கு வந்த சோதனையா இது என கவலையாக உள்ளது, //

  “பாடையில் படுத்தூரைச் சுற்றும் போதும்
  பைந்தமிழில் அழவேண்டும் ” என்று எழுதியவர் அல்லவா?
  அதன் தாக்கமாகவும் இருக்கலாம் பல்லி?

  இது புலி பதுங்கும் காலம் காலம் அல்ல, இதுவரை கிடைத்ததை பதுக்கும் காலம்.

  Reply
 • நந்தா
  நந்தா

  //இது புலி பதுங்கும் காலம் காலம் அல்ல, இதுவரை கிடைத்ததை பதுக்கும் காலம்.//

  இது முற்றிலும் உண்மை. கனடாவில் ஒரு கும்பல் இன்னொரு கும்பலுடன் மோதியுள்ளது.நேரு குணா என்பவருக்கு உருத்திரகுமாரன் கும்பல் கையை உடைத்துள்ளது! கனடிய வானொலியில் 500 மில்லியன் டாலர் சொத்துக்கள் புலிப் பினாமிகளின் பெயர்களில் உள்ளதாகவும், அதற்கு செத்துப்போன பொட்டன்,. தமிழ்ச்செல்வன்,நடேசன் ஆகியவர்களின் உறவினர்கள் உரிமை கோருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  நந்தா! கேள்வியை விட்டுவிட்டு எங்கே ஓடுகிறீர்கள்? என்னால் கேட்க்கப்பட்ட இரு கேள்விக்கும் பதில் அளிக்காது. நீங்கள் கேள்வி கேட்க நான் பதில் சொல்ல வேண்டியது கடமை அல்லவா? அதுபோல் தானே நீங்களும். பதிலை சொல்லாமல் பாதயாத்திரை மாதிரி கதை அளந்து கொண்டிருந்தால் எப்படியோ? வாசகர் நிலைமை தான் என்னவோ?? நான் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் நேர்மையான முறையில் பதில் சொல்லுங்கள். இல்லையேல் அது எனது தவறுதான் என ஒப்புக்கொள்ளுங்கள். இது கிடைக்கும் பட்சத்திலேயே நான் உங்களை ஒரு நேர்மையான மனிதனாக இனம்காணமுடியும். வாசகர்களின் இன்னும் கூடுதலான அபிமானத்தைப் பெறுவீர்கள். திரும்பவும் கேள்விஅதே!. ஒன்று: கால்மாக்ஸ் இந்தியாவை-இந்துமதத்தை பற்றி அறிந்திருக்கவில்லையா? கேள்வி இரண்டு: வத்திக்கான் மெக்கா தூண்களை தகர்ப்பதற்கு யாரை அணிதிரட்டப் போகிறீர்கள். இதற்கு தாங்கள் பொறுமையுடன் பதில் சொல்லுமிடத்து நன்றியுடையவனாக இருப்பதும் அல்லாமல் தங்களின் பலகேள்விகளுக்கும் நிபந்தனை இல்லாமல் பதில் சொல்லவும் கடமைப் பட்டவனாவேன்.
  சிறுகுறிப்பு.அலுப்பு சலிப்பாக தெரிந்தாலும் இதுவிஷயத்தில் கொஞ்சம் பொறுமை காத்திட வேண்டும் தேசம்நெற் வாசகர்கள்

  Reply
 • மாயா
  மாயா

  // செத்துப்போன பொட்டன்,. தமிழ்ச்செல்வன்,நடேசன் ஆகியவர்களின் உறவினர்கள் உரிமை கோருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.- நந்தா //

  நந்தா, பாவம் பிரபா, தமிழீழம்தான் வேணுமென்று ஒரே காலில் நின்றார். ” தலைவர் , தலைவர் ” என்று சொன்னவங்கள் எல்லாம் தலையை மாட்டி விட்டு , தலைவரின் சொத்துக்களை பங்கு போட கயிறிழுப்பு. பிரபா குடும்பம் மண் கவ்வ, கிடைத்ததெல்லாம் மறவர் மடியில். வாழ்க மறவர் .

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்ராசா//செவ்விந்திய இனத்தையே ஆய்வுசெய்து ஒரு பழைய உலகத்தின் திறவுகோலாக இருக்கிறது என்பதை கண்டறிந்த மாக்ஸ்சும் எங்கல்சும் உலகத்தின் இரண்டாவது சனத்தொகையை அடக்கிய இந்தியாவும்-இந்துமதமும் தெரியாது என்று தாங்கள் சொல்வது…..? இதற்கான விடையை முதல் வாசகர்களுக்கு தெளிவு படுத்துங்கள்.//
  எனக்கும் ஒரு விசயத்தை சந்திரன்ராசா தெளிவு படுத்துங்கோ. உங்கடை மாக்சுக்குத்தான் எல்லாம் தெரியும் என்றால் இலங்கைத்தமிழர் புலிகளைப்பற்றி என்னசொல்லியருக்கிறார் என்று பார்த்துச் சொல்லுங்கோ. அவருக்குச் சாத்திரமும் தெரியுமோ? அப்படி எண்டால் 2011 கன்னிராசிக்கு என்ன பலன் என்று பாத்துச் சொல்லுங்கோ. உங்களுக்கு மாக்ஸ் ஐயாவைப்போல் எனக்கும் செய்வினை சூனியம் செய்திருக்காம். தம்பி யாழ்பாணத்தில் இருந்து எழுதியிருக்கிறான் பாருங்கோ மாக்ஸ் நீங்கள் வெறுக்கப்பண்ணுகியள் எண்டு. எனக்கும் அதே கணக்குத்தான்.

  பல்லி!
  காசியண்ணாவுக்கு அறளை பெயர்ந்து போச்சு. வயசும் அப்படி இப்படித்தானே //அதில் பிள்ளை மாலதி ஒரு பாடல் பாடுகிறார் 90 வயது கிழவி சிங்கள அரசை மண்ணள்ளி போட்டு திட்டுமாபோல் உள்ளது// 90வயசுக்கிழவியள் தரவளிதான் இனி அவர் பாக்கவேணும். இவர் இந்தியாவிலை இருந்து கொண்டு எதையும் எழுதலாம். அனுபவிப்பது எங்கடை சனம் எல்லே.
  //காசியின் உணர்வுக்கு வந்த சோதனையா இது என கவலையாக உள்ளது// உணர்ச்சி உணர்ச்சி எண்டுதானே முள்ளிவாய்காலிலை கொண்டைத் தாட்டவை. சும்மாயிருந்த வேலுப்பிள்ளையின்ரை பொடியனை உசுப்பிவிட்டு முள்ளிவாய்காலில் அடக்கம்பண்ணக் காரணமாயிருந்த காசியரின் பாட்டு மறவர் படைதான் தமிழ்படை கடசியில் வெறிகொள் தமிழர்புலிக்படை. கிளிச்சீங்கள் போங்கோ. இப்ப காசியர் காசிக்குப் போகவேணும் செத்த தமிழர்கள் பழிகளையும் தீர்க்க. அல்ல அவ்வளவு சனமும் ஆவியாக வந்து வெருட்டும்.

  Reply
 • danu
  danu

  உலகின் எங்கோ
  ஒரு மூலையில் நடக்கும்
  அநியாயத்தைக் கண்டு
  உங்கள் மனம் கொதித்தால்
  நாம் இருவரும் தோழர்களே…!

  — சேகுவேரா

  Reply
 • நந்தா
  நந்தா

  சந்திரன்:
  உங்களுடைய “சாட்சிப் பத்திரங்கள்” எதுவும் எனக்குத் தேவையில்லை. என்னை அறிந்தவர்களுக்கு எனது நேர்மை பற்றி நன்கு தெரியும்!

  கார்ல் மார்க்ஸ் இந்துமதம் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை! அப்படிக் குறிப்பிட்டிருந்தால் காட்டவும்!

  தூண் பிரச்சனயில் அணி திரட்டுவது பற்றி கேள்கிறீர்கள்.நான் எங்கும் “அணி” திரட்டுவதாக எழுதவுமில்லை. புழுகவுமில்லை!
  இந்த கேள்வி என்னிடம் கேள்க்கும்நோக்கம் என்ன?

  வத்திக்கானின் பொறுக்கித் தனங்களை எழுத யாரும் அணி திரள வேண்டியதில்லை.

  இப்பொழுது ஒரு கேள்வி!
  மார்க்சிசம், சோஷலிசம் பேசும் சந்திரன் எதற்காக வத்திக்கானுக்கு வக்காலத்து வாங்க வேண்டும்? என்ன லாபம் உங்களுக்குக் கிடைக்கிறது?

  Reply
 • Nackeera
  Nackeera

  டானு! நல்ல நேரத்தில் தான் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். தோழர்களாக இருப்பதற்கு தமிழர் சிங்களவர் கொள்கை கோட்பாடு என எதுவும் தேவையில்லை. சந்திரனும் நந்தாவும் தோழர்கள்தான் என்ன கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //சந்திரனும் நந்தாவும் தோழர்கள்தான் என்ன கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்//

  நல்ல வேளை நக்கிரா பல்லியையும் தோழரென சொல்லவில்லை; ஆனாலும் நாம் அனைவரும் நண்பர்களே;

  Reply
 • பல்லி
  பல்லி

  //வத்திக்கானின் பொறுக்கித் தனங்களை எழுத யாரும் அணி திரள வேண்டியதில்லை. //
  இதையே தேசம் தணிக்கை செய்யாதபோது சந்திராவின் எபடியான பின்னோட்டத்தை தேசம் தணிக்கை செய்தது, தேசம் மத விடயத்தில் நந்தாவுக்கு எதிரான அல்லது கருத்துக்கள் தணிக்கை செய்வது உன்மை, காரணம் எனது பின்னோடம் சிலதும் தணிக்கை செய்யபட்டது, தணிக்கை செய்வது தவறு இல்லை, ஆனால் ஒரு வரியில் இந்த பின்னோட்டம் தணிக்கை செய்யபட்டுள்ளது என தேசநிர்வாகம் எழுதுவது நல்லது, இது பல்லியின் தாழ்மையான கருத்து;

  Reply
 • Nackeera
  Nackeera

  அட பல்லிக்கென்ன சந்தேகம்? செகுவேரா சொன்னதைப்பார்த்தீர்களா? அநீதிக்கு எதிராக கொதித்தெழும்போது பாதைகள் வேறாயினும் கருத்தில் நோக்கத்தில் ஒன்றாகும்போது தோழமை என்பது தவிர்க்கப்படமுடியாததே. இடதுசாரிகள் தான் தோழர்கள் என்னும் கருத்து உலாவுவதால் பல்லி அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  தணிக்கை என்பது தப்பில்லை. பரந்துபட்டமக்களுக்கு பிழையான தரவுகளை கொடுத்து தவறான அபிராயங்களை ஒரு கருத்து ஏற்படுத்துமாக இருந்தால் அது நிச்சயம் தணிக்கை செய்யப் படவேண்டியதே!. ஆனால்..ஒரு விவாதத்தில் ஒரு கருத்தோ ஒருவாசகமோ அல்லது முழுமையாகவே தணிக்கைக்கு உட்படுமாக இருந்தால் அங்கு கருத்தாளன் கொலைசெய்யப் படுகிறான். உதாரணத்திற்கு என்னால் ஒன்றை கூறமுடியும். பலமாதங்கள் வருடங்கள் கழிந்தது. இன்று புலிகள் இல்லை. புலிகளை தமிழ்மக்கள் தோற்கடிக்கவில்லை. தமிழ்மக்களால் தோற்கடிக்க முடியவில்லை என்பதுதான் தமிழ்மக்களின் வரலாற்றில் உள்ள வடு.இதற்கு தமிழ்மக்களின் பிற்போக்குதனத்திற்கு இருபத்தையாயிரம் இல்லை அதைவிடக் கூடுதலாகவும் இருக்கலாம்… ஏழை சிங்களவிவசாயிகளின் பிள்ளைகளை இராணுவீரர்களாக்கி பலிகொடுக்கப் பட்டார்கள் என்று எண்ணும் போது… இப்படியாக மலட்டுத்தனமாக முப்பதுவருடங்கள் முடிந்த உள்நாட்டு இறுதி சிலவருடங்கள் தான் தேசம்நெற்றும் தனது கடமையைச் செய்தது. ஏதோ ஒரு கட்டுரைக்கு வந்த பின்னோட்டத்தில் “திலீபனை தண்ணீர் இல்லாமல் கருவாடாக்கி சாகவிட்ட புலிகள்” என எழுதியிருந்தேன். “கருவாடாக்கி” என்ற சொல்லை தேசம்நெற் தணிக்கை செய்து விட்டது. இந்த தணிக்கை நியாமானதா? சந்திரன்.ராஜா தவறு செய்யாதவரே இல்லை இனியும் தவறு செய்யமாட்டாரோ எனறு யாரும் கருதினால் அது முட்டாள் தனமே! வெளிப்படும் கருத்துகள் யாருக்காக இருக்கவேண்டும்! இந்த உலகத்தில் தோன்றிய உழைக்கும் மக்களுக்கா இருக்கவேண்டும் அதில் என்னினமும் பிரதிபலிக்கவேண்டும். தணிக்கை என்பதை இப்படித்தான் நான் பார்க்கிறேன். இதில் தேசம்நெற்றுக்கு பெரிய இடைவெளி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

  Reply
 • பல்லி
  பல்லி

  //அட பல்லிக்கென்ன சந்தேகம்? செகுவேரா சொன்னதைப்பார்த்தீர்களா?//
  ஜயோ நக்கீரா இப்போ எல்லாம் தோழர் என்று சொன்னாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது, அது புலத்து தோழர்கள் ஆனாலும் சரி நம் தேச தோழரானாலும் சரி, அதனால் வேடிக்கையாய் அதை சொன்னேன், மனதில் எதுவும் தப்பில்லை,

  Reply
 • chandran .raja
  chandran .raja

  குசும்பு பி.சீ போன்றோரை தவிர்த்து விட்டால் இங்கு நந்தாவின் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வார்த்தைக்கு வலிமையுண்டு. அறுபத்திமூன்று நாயனார்களில் புத்தனை மூத்தநாயனாராக ஏற்றுகொள்ள வேண்டுமென்ற கருத்தில் எனக்கு-எமக்கு நுறுவீத உடன்பாடு உண்டு. ஆனால் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும் அதில்வாழும் உயிர்யினங்கள் பற்றியும் அந்த உயிர்யினங்களில் பெரும்மதிப்பு வாய்ந்ததாக கருதப்
  படும் மனிதயினம் பற்றி மாக்ஸிய மூலவர்கள் என்ன சொன்னார்கள்?
  மனிதனைப் பற்றி…
  மதத்தைப்…..
  உழைப்பைப் பற்றி…
  இந்த உலகில் உழைப்பு வகிக்கும் பாத்திரம் பற்றி…
  ஒட்டுமொத்தமாக மனிதன் எப்படி ஈடேறமுடியும் என்பதைப் பற்றியதே மாக்ஸியம். நந்தாவின் கருத்துக்களோ தமிழ்சமூகத்தின் பிற்போக்கு பாத்திரத்தை வகித்த புலிகளின் இடத்தையே பற்றி நிற்கிறது.
  இனிவரும் கருத்துக்கள் பின்னோட்டமாக வரும் பொழுது ஆதாரமாக உங்கள் முன் வைக்கிறேன் என்பதை தவிரஅதற்கு நான் சொந்தம்மென்று உரிமைகோரமுடியாது. வேண்டுமானால் அவர்களின் வழிவந்தவர்களாகவே கருதமுடியும். இரத்தினசபாபதி என்ற ஒரு மகத்தான மனிதனை குத்திக்குதறுவதை தமிழன் என்கிற இனத்திற்குயுரியவன் என்கிற முறையில் இனியும் சகிக்கமுடியாதவையே! அல்லது மனச்சாட்ச்சிக்கு ஒவ்வாதவையே.
  இனிவரப்போகும் பதிவுகள் உழைப்பு…சுரண்டல்…வர்க்கம்..வர்க்கப் போராட்டம் மதம்….மனிதனில் மதம் வகிக்கும் பாத்திரம் போன்றவற்றை அலசுவதே! இதை ஆய்வுசெய்யும் போதும் கற்றுக்கொள்ளும் போதும்……கீழ்கண்ட வாசகத்தை கிரகிக்கவேண்டியது அவசியமாகிறது.இது வாசகர்களுக்கு மட்டுமல்ல தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கும் தான்.
  “ஆகவே பிரெஞ்சு வாசகர்கள் தங்களை உடனடியாக அலட்டுகிற உடனடிப் பிரச்சனைகளை அடிப்படைத் தத்துவத்துவங்ளுடன் பொருந்தும் அவசரத்தில் நம்பிக்கையிழந்து தொடர்ந்து வரக்கூடிய அத்தியாயத்திற்கு போகாமல் இருந்து விடுவார்களோ என்று நான சந்தேகப்படுகிறேன். என்னால் தவிர்க்க முடியாத ஒரு நிலைஇது. ஆகவே உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று விரும்புகிற வாசகர்களுக்கு இதுபற்றி எச்சரிகை செய்வதை தவிர வேறுவழியில்லை. அறிவியலுக்கு முன் எந்த ராஜபாதையும் இல்லை.அறிவியலின் செங்குத்தான பபாதையில் களைப்புக்கு அஞ்சாமல் ஏறுகிறவர்கள் மட்டுமே அதன் ஒளிமயமான சிகரத்தை சென்றடையமுடியும். -கால்மாக்ஸ்-

  இனிவரும் பின்னோட்டங்கள் நந்தாவின் “மாக்ஸியகரடி”பற்றி சோசஸிச மூலவர்கள் சொன்ன கருத்தாகவே இருக்கும்.

  Reply
 • மாயா
  மாயா

  தணிக்கை என்பது தேவைதான். எங்கே ? எப்போது? எப்படி?
  அதிகமாக வன்முறையை தூண்டும் வார்த்தைகள்., அல்லது தூசன வார்த்தைகள் இடம் பெற்றால் , அதைத் தணிக்கை செய்வதில் தவறில்லை. ஆனால் பல சமயங்களில் தணிக்கையாளருக்கு உடன்பாடில்லாத கருத்துகளும் தணிக்கை ஆகின்றன. இது தவறான ஒரு செயலாகும். இங்கே ஒருவரது கருத்து சரியாக இருக்கலாம், அது அப்போது தடைப்பட்டு , சிறிது காலத்துக்கு பின்னர் அதே கருத்து செய்தியாக மாறி வருவதுண்டு. இங்கே ஒரு பெரிய தவறு நிகழ்கிறது. அதாவது சொல்ல வேண்டிய கருத்து. தடைப்பட்டதால் , அந்த சோகம் இடம் பெற்று பின்னர் செய்தியாவதேயாகும்.

  இது புலிகள் காலத்தில் , அனைத்து ஊடகங்களாலும் பின்பற்றப்பட்டது. கடந்த கால மனித பேரழிவுக்கு புலிகள் மாத்திரமல்ல, பெரும்பாலான ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். தமது வியாபாரத்துக்கு இதை அநேகர் பயன்படுத்தினர் என்பது மறுக்க முடியாத நிசமாகும். இதை காலத்துக்கு காலம் இருந்த ஆட்சியாளர்களும் செய்து வந்தார்கள். இன்றை ஆட்சியாளர்களும்தான். எனவே சரி தவறை உணரும் பொறுப்பு மக்களிடம் விட்டு உண்மைகளை தெளிவுபடுத்துவது அனைவர் கடமையுமாகும்.

  தேசத்திடம் ஒரு வேண்டுகோள். இதே தளத்தில் , புதிய செய்திகளை இணைக்கும் ஒரு பகுதியை இணைத்தால் நல்லது என ஒரு யோசனையை முன் வைக்க விரும்புகிறேன். உதாரணத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்த செய்தி:// தொடர் இலக்கம் M – N கொண்ட கடவுச்சீட்டில் நேற்று முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.சுலானந்த பெரேரா தெரிவித்தார்.

  அதன்படி M – N என்ற தொடர் இலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டைப் பெற வேண்டும். // என்பதாகும். இப்போது .//மேற்படி தொடர் இலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்கள் பழுதடைந்திருந்தால் அல்லதுவிசாக்களுக்கான தாள்கள் முடிந்திருந்தால் மட்டுமே புதிய கடவுச் சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எவ்வித சேதமும் இல்லாதபட்சத்தில் அவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை. // இப்படி வந்திருக்கிறது. இப்படியான தகவல்கள் பலருக்கும் மிக அவசியமானவையாகும். அல்லது அனைவரும் கடவுச் சீட்டோடு தூதுவராலயத்தில் நிற்பார்கள். கடந்த செய்தியின் தொடுப்பை தேசத்தில் தேடுவது அனைவருக்கும் இயலாத காரியம். எனவே புதிய செய்திகள் என்ற ஒரு பகுதியை உருவாக்கி தொடுப்பொன்றைக் கொடுத்தால் , பலரும் அங்கே செய்திகளை இணைக்கவும் , பார்க்கவும் முடியும். உங்கள் கருத்துகள் என்ன? இணையுங்கள்…………

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லி! எனக்கு விளங்கியது. ஒவ்வொருசொற் பதமும் காலத்துக்குக் காலம் வந்து போயின. ஒருகாலத்ததில் தோழர் என்றவுடன் ஒரு கூட்டமே சேர்ந்தது. பின் புளொட் புலிகள் என்றுவுடன் ஒரு கூட்டம். அப்படி ஒவ்வொரு சொற்பதத்தின் பின்னாலும் ஒரு கூட்டம் தொங்கிக் கொண்டே திரிந்தன: தீவீரவாதம் என்ற பதம்போய் பயங்கரவாதம் ஜோய் புஸ்சால் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகமயமாதல் என்ற ஒன்று கிழம்பிக் கொண்டு காலணித்துவ ஆட்சிக்கால எண்ணத்துடன் திரிகிறது. பல்லியின் பயம் எனக்கு நன்றாகவே புரிகிறது. எமது நாட்டில் மாக்சியம் இடதுசாரித்துவத்தை சரியா வளர்தெடுக்காது புத்திசாலிகள் மனிதநேயர்கள் பாட்டாளிகளின் கூட்டாளி என்ற பரப்புரைகளுக்காக மாக்சிசமும் இடதுசாரித்துவமும் எமது தேசத்தில் மாசுபடுத்தப்பட்டது. தமிழனால் எது மாசுபடவில்லை. சத்தியாக்கிரகத்தைக் கூடச் சும்மாவிட்டார்களா? சும்மா போங்கோ பல்லி கெடுகுடி சொற்கேளாது என்ற பழமொழியைத் தவிர எதைத்தான் எண்ணத்தோன்றும். எமக்குத் தெரிந்ததை மனச்சாட்சியுடன் சொல்லுவோம். அதைப் பிழை எனமக்கள் இடித்துரைத்தால் பிழை எனக்காணும் பட்சத்தில் ஒத்துக்கொள்வோம். இதில் தப்பில்லை. என்றுமே நாம்பிடித்த முயலுக்கு 3 கால் எனும் பொழுதுதானே பிரச்சனைகள் தேவையில்லாமல் வளர்கிறது. மறதி மன்னிப்பு என்ற இரண்டும் இல்லையென்றால் உலகமே முழுநரகமாகும். மறக்காது ஒவ்வொருவர் செய்த பிழைகளையோ சொற்களையோ கொண்டு திரிந்தால் என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள். மறதி என்பது மனிதனுக்குத் தரப்பட்ட ஒரு வரம். மன்னிப்பு என்பது ஒரு கொடை

  Reply
 • நந்தா
  நந்தா

  புரியவில்லையே! புலிகளோடு நகமும் சதையுமாக இருந்த வத்திக்கன் கும்பல்களை ஆதரிக்கும் சந்திரன் என்னைப் “புலி” வழி செல்லும் பாமரன் என்று குற்றம் சாட்டுவது விசித்திரமாக உள்ளது.

  இலங்கை இந்தியக் கலாச்சாரத்தின் விழுமியங்களைப் புரியாமல் “விடுதலை”நோக்கி மார்க்சியக் கருத்துக்களை இலங்கையில் நகர்த்துவது இலகுவான காரியமல்ல!

  கிழக்குநாடுகளில் “புத்த மதத்தைப் ” பின்பற்றிய நாடுகளில்த்தான் இடதுசாரி அரசியல் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியா இலங்கை என்பன “மார்க்சிசத்துள்” விழுந்துவிடலாம் என்ற கருத்துக்கள் அமெரிக்க முதலாளித்துவத்துக்கும், அதன் பாதுகாப்பில் இயங்கும் சவுதி அரேபியாவுக்கும் உண்டு. அதற்கு அவர்கள் இன்று பில்லியங்கள் செலவு செய்து தங்கள் “மதங்களைப்” பரப்புவது ஒரு வழி என்று இந்து, பெளத்த மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும், மத மாற்றுதல்களையும் முடுக்கி விட்டுள்ளனர்.

  அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பு என்பது இன்றுநேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. 50களில் இராக்கில் இருந்த பாராளுமன்ற அரசியலை அமெரிக்க சீ ஐ ஏ முடிவுக்கு கொண்டு வந்ததுடன் தமக்குச் சார்பான ஒரு “தனியாளை” நியமித்துப் பின்னர் சதாம் குசைனை அரசு கட்டில் ஏற்றியது. சதாம் முதலில் செய்த வேலை 5000க்கும் அதிகமான கம்யூனிச்ட்டுக்களைப் பரலோகம் அனுப்பியதுதான். அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டுநின்ற புலிகளும் முதலில் தமிழ் இடதுசாரிகளைத்தான் பரலோகத்துக்கு அனுப்பினார்கள்.

  இந்து, பவுத்த மதங்களை அழிப்பதன் மூலம் முதலாளித்துவ தலைமையின் கீழ் இயங்கும் மத தலைமைகளை அந்த மக்களின் தலையில் கட்டி வைத்தால் அவர்கள் அந்த மக்களை எப்போதும் “கட்டி” மேய்த்து முதலாளித்துவத்துக்குப் பங்கம் வராமல் பாதுகாத்துக் கொள்ளூவார்கள் என்பது தற்போது புலப்படும் உண்மை.

  இஸ்லாமிய தீவிரவாதத்தை ரீகன் காலத்தில் ஏன் ஊக்குவித்தார்கள் என்பதை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்!

  பிலிப்பயின்ஸ் இன்று கத்தொலிக்க ஆட்சியில் இருந்து எதனை செய்கிறது? அதனையே இலங்கை இந்தியா போன்றநாடுகள் செய்தால் போதும் என்பதும் வளமிக்கதும், இராணுவ முக்கியத்துவம் உள்ளதுமான பூகோளப் பரப்புக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள “வத்திக்கான்” ஒரு முதலாளித்துவ ஆயுதம் என்பதனையும் உணராது மார்க்சிச கோஷங்களைப் போட்டுக் கொண்டு வத்திக்கானுக்கு வக்காலத்து வாங்கும் சந்திரன் மார்க்ஸ் அது சொன்னார் இது சொன்னார் என்பதில் பயனில்லை!

  மார்க்சின் “செங்குத்தான” பாதையில் வத்திக்கான் என்ன தங்கு மடமா? அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்ராசா! உழைப்பு உழைப்பு என்று அழுகிறீர்களே உடலுளைப்புத்தான் உழைப்பா? அவர்களுக்கு மட்டும் தான் களைப்பு என்கிறீர்களா? உடலுழைப்பை விட மூளையுழைப்பே களைப்பானது. உடலுபாதைகளை விட மனஉபாதைகளே வலிகூடியவை. தன்னம்பிக்கை அற்றவன் கடவுளை நம்புகிறான். அவர்களைச் சாகச் சொல்கிறீர்களா? இப்படித்தான் இருக்கவேண்டும் மாக்சைத்தான் நம்பவேண்டும் என்று உலகை யாரும் வரையறுக்க இயலாது. இன்றைய விஞ்ஞானவளர்ச்சியே இப்போ நான் உங்களுக்கு எங்கோ ஒர மூலையில் இருந்து உங்களுடன் தொடர்பு கொள்வது கூட மூளையின் உழைப்பால்தான். உழைப்பை வரையறுக்க யாராலும் இயலாது. அனைவரும் இந்த உலகம் உருள உழைக்கவேண்டும் என்பதுதான் நியதியோ தவிர உழைப்பில் பாரபட்சம் கிடையாது. மாக்ஸ்சின் தத்துவம் கூட மூளையின் உழைப்புத்தான். சிலமதங்கள் பெண்களை வீடுவேலைக்காகவும்: பிள்ளைப்பெறும் மிசின்களாகவும்: கட்டில்பிணங்களாகவுமே கருதுகின்றன: மக்களின் வரிப்பணத்தில் வயிறு வளப்பதமட்டுமல்ல வயிறு பெருக்கும் பொய்யருக்கு எதிராகப் போராடவேண்டிய காலம் இது. பலவீனமான மக்களுக்கான மாக்சில் கொள்கை கோட்பாடுகளை இன்று பலமானவர்கள் பலவீனர்களாக நடித்து அரசஉதவிப்பணம் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒருவகைச் சுரண்டல்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் பசி இருப்பதுபோல் உழைப்பும் ஒவ்வொருமனிதனுக்கும் உரியது. இந்த இயற்கையின் நியதியை ஒரு சிறு எழும்பு கூடச் சரியாகத்தான் செய்கிறது இந்தக் கேவலங்கெட்ட மனிதனை விட. உழைக்கும் ஒவ்வொருவனும் தான் உணவுக்கு உரிமையுடையவன். தன்தகுதிக்கு மீறிப் பிள்ளைப்பெறுவதும் ஒருவகை உதவிப்பணம் சுரண்டலே. முதுகெலும்புள்ளவன் பிள்ளைப்பெறுகிறான் என்ற முட்டாள்தனமான வாதத்தை நாம் முன்பு பார்த்தோம். முதுகெலும்பால் பிள்ளைப்பெறுவதில்லை என்ற சின்னவிடயமே தெரியாதவர்கள்.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  யதார்த்தத்தை தலைகீழாக புரட்டும் இத்தகைய இறையியல் கோட்பாடுகளே அனைத்து சமயங்களின் ஆணிவேராகும். மனிதன் என்று சொல்லும் போது மனிதனின் அரசின் சமுதாயத்தின் உலகம் என்றாகும்.இந்தசமுதாயம் நேர் எதிராக மாற்றப்பட்ட உலகின் உணர்வாகிய சமயத்தை உற்பத்தி செய்கிறது.சமயம் என்பது இந்த-அந்த உலகத்தின் பொதுப்படையான தத்துவமாகும். அந்த உலகின் பல்கலை அறிவார்த்த சுருக்கவடிவமாகும்.அதன் வெகுஜன வடிவிலான தர்கவியலாகும்.அதன் உற்சாகமும் ஆகும்.அதன் அறவியல் அதிகாரத்துக்கான காரணமும்மாகும்.அதன் பயபக்தியான முழுமையான பாடமும் ஆகும். ஆறுதல் தருதலும் நியாயம் கற்பித்தலும் அதன் சர்வவியாபமான தன்மையாகும்.மனிதசாரம் உண்மையில் நிஜமாக இன்மையால் அதுவே மனிதசாரத்தை அதீத கற்பனையில் நிஜமாக்கிறது….அதே நேரத்தில் சமய உலகில் வெளிப்படுத்தப்படும் துன்பம் உண்மை உலகில் காணப்படும் துன்பத்தின் வெளிப்பாடுகள் தான். உண்மை உலகின் துன்பத்தின் எதிர்புக்குரலுமாகும். சமயம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு தான்.இதயமற்ற உலகத்தின் இதயமாகும்.ஆத்மா அற்ற நிலையில் உள்ள ஆத்மா ஆகும்.சமயம் மக்களை மயக்கம் அபின் ஆகும். (மாக்ஸ்-எங்கெல்ஸ்-சமயம்-41)

  Reply
 • chandran .raja
  chandran .raja

  தற்போதைக்கு குசும்புக்கு அழுத்தி திருத்தி ஒன்றைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். “இவ்வுலகில் உழைப்பவன் சொத்து சேர்ப்பதில்லை சொத்துசேர்பவன் உழைப்பதில்லை” இது பற்றிய எமக்கு கிட்டிய அறிவை தேசம்நெற் வாசகர்களுக்கும் பொதுயுடமையக்குவோம். தேவையானது உங்களுக்கு சிறுதளவு பொறுமையே!.

  Reply
 • பல்லி
  பல்லி

  //முதுகெலும்புள்ளவன் பிள்ளைப்பெறுகிறான் என்ற முட்டாள்தனமான வாதத்தை நாம் முன்பு பார்த்தோம். முதுகெலும்பால் பிள்ளைப்பெறுவதில்லை என்ற சின்னவிடயமே தெரியாதவர்கள்.//
  முதுகெலும்புக்கும் குழந்தை பிறப்புக்கும் மிக தொடர்பு உண்டு குசும்பு; ஆனால் நான் சொல்லுவது ஆண் பாலுக்கல்ல பெண்பாலுக்கு;

  Reply
 • chandran .raja
  chandran .raja

  ராகுல சாங்கிருத்தியானின் ” பொதுயுடைமை தான் என்ன?” என்ற சிறு நுhல் யுத்தம் முடிவடைந்து 1946-ம் ஆண்டு வெளிவந்தது. நவம்பர் 1986 வரை பதின்மூன்று பதிப்புகள் வெளிவந்து விட்டன. அதில் பொதுயுடைமைக் கொள்கையும் கடவுள்-மதமும் என்ற பகுதியில் என்ன சொல்லுகிறர் என்பதைப் பார்போம்….
  மதத்தின் உண்மையான உருவம் யாது? மனிதஜாதியின் குழந்தைப் பருவமனோ பலவீனமும் அதனால் தோன்றிய மூடநம்பிக்கைகளும் சேர்ந்தது தான் மதம். மதத்தில் இதைவிட வேறுதேனும் இருக்கிறதென்றால் அது புரோகிதர்களும் அதிகாரிகளும் ஆடுகள் தங்கள் பட்டியை விட்டு வெளியே போகாமலிருப்பதற்காக செய்யும் ஏமாற்று வஞ்சனைகள் தான்.மனிதர்களின் மனோ வளர்ச்சியோடு கூடவே மதமும் எத்தனையோ அம்சத்தில் மாற்றம் அடைந்திருக்கிறது.பெயரில் எத்தனை மாற்றம் பெற்றிருக்கிறது.ஆயினும் அதன் மாற்றத்தில் அதன் உள்ளுருவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.அது 5000 வருடங்களுக்கு முன்போலவே இன்றும் ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளையும் மனிதனின் மனோ அடிமைத்தனத்தையும் ஆதரிக்கிறது. மூலம் பழையதுதான் உறைமட்டும் மாற்றப்பட்டிருக்கிறது. நமது படித்த சகோதரர்கள் பிசாசு பூதம் மந்திரம் தந்திரம் இவைகளை கண்டு முகத்தை சுழித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் இதே விஷயத்தை புதிய உருவத்தில் “தியாசபி” போன்ற சுவாரஸ்யமான சொற்களில் விஞ்யாணத்துடன் கலந்து கொடுத்தால் பெரியபெரிய அறிவாளிகளும் தங்கள் அறிவை விற்றுவிட தயாராக இருக்கிறார்கள்.
  நீங்கள் மதத்தின் சரித்திரத்தையும் அதன் இறந்தகால-நிகழ்கால தலைவர்களின் வாழ்கைவிபரங்களை கவனத்தோடு படித்தீர்களேயானால் மதத்தில் முதல் தரமான பக்கா அயோக்கியர்கள் நிறைந்திருப்பதை காண்பீர்கள்……….. 2000 வருடசரித்திரத்தை பார்த்தால் அது நாகரீகம் கலை கல்வி எண்ணசுகந்திரம் இவற்றோடு மனிதனின் உயிருக்கூட பெரிய விரோதியாக இருந்திருக்கிறது என்பது தெரியவரும். அவர்கள் ஆயிரக்கணக்கான பெரியபுத்தகாலயங்களையும் கோடிக் கணக்கான புத்தங்களையும் நெருப்பில்லிட்டு விட்டார்கள்.உருவம் பெற்ற அழகையும்-கோமள உணர்ச்சிகளையும் எத்தனையோ கலை நிபுணர்களின் அழகிய சிற்பங்களையும் ஓவியம் நிறைந்த மாளிகைகளையும் நாசமாக்கிவிட்டார்கள்.
  ஆயிரக்கணக்கான கல்வி ஆசையுடையவர்களையும் அறிஞர்களையும் கொன்று எண்ணச் சுகந்திரத்தின் கழுத்தை முறித்து முறித்துவிட்டார்கள். குற்றம் அற்ற ஆண்கள் பெண்கள் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். இதுதான் அவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு முக்கிய வழியாகயிருந்தது. அவர்கள் சென்ற நாட்டிற்கெல்லாம் நெருப்பையும் கத்தியையும் கொண்டு சென்றார்கள்.

  Reply
 • நந்தா
  நந்தா

  குசும்புவின் கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. உடலுழைப்பை மட்டும் மார்க்ஸ் உழப்பாகக் கருதவில்லை. மூளையால் உழைப்பவர்களை புத்திஜீவிகள் என்று வகைப்படுத்தியுள்ளார்.

  குசும்பு குறிப்பிடும் “மோசடிகள்” பல இந்த வெளினாடுகளில் உண்டு. வைத்திய சாஸ்த்திரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சில வியாதிகளுக்கு மருந்துகளும் இல்லை, மருத்துவமும் இல்லை.
  “தாங்க முடியாத வலி” அல்லது “குறோனிக் பெயின்” என்பதனை கண்டு பிடிக்க எந்த கருவிகளும் இல்லை.நோயாளியின் வாக்கு மூலம்தான் ஒரேஒரு ஆதாரம்.நம்மவர்கள் பலருக்கு இப்பொழுது கனடாவில் “இந்த வலி” உள்ளது.

  Reply
 • நந்தா
  நந்தா

  சந்திரன் எழுதியுள்ளது யாருக்காவது புரிகிறதா?

  நாலாம் அகிலத்தின் மொழி பெயர்ப்போ தெரியவில்லை!

  Reply
 • chandran .raja
  chandran .raja

  சகல செல்வங்களின் தோற்றுவாய் உழைப்பே என அரசியல் பொருளியல்வாதிகள் அறைந்து கூறுகிறார்கள். உண்மையில் அதுதான் தோற்றுவாய். அதற்கு இயற்கை இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது. ஆனால் அளவிடகரிய ரீதியில் அதைவிட அது இன்னும் அதிகம் கூட. ஓர் அர்த்ததில் உழைப்பு மனிதனை சிருஷ்டித்தது என்று நாம் கூற வேண்டிய அளவிற்கு அது மானிடவாழ்வுக்கு முழுமைக்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனை ஆகவுள்ளது. மரமேறிய குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம் தோன்றுவதற்குள் லட்ச கணக்கான ஆண்டுகள்-மனிதனுடைய ஆயுளில் ஒரு வினாடிக்கு இருப்பதைவிட அதிக முக்கியத்துவம் இதற்கு பூமியின் வரலாற்றில் எதும் இல்லை-நிச்சியமாக கடந்து சென்றன. ஆனால் இறுதியாக அதுதோன்றத்தான செய்தது. குரங்குகளின் ஒரு கூட்டத்திற்கும் மனிதசமூகற்கும் இயல்புரீதியான வேறுபாடாக திரும்பவும் நாம் எதைக் காண்கிறோம். உழைப்பு.

  //உடல் உழைப்பை மட்டும் மார்க்ஸ் உழைப்பாக கருதவில்லை.மூளை உழைப்பால் உழைத்தவர்கள் கூட புத்திஜீவிகள் என்று வகைப் படுத்தினார்//நந்தா.
  இதில் என்ன? சந்தேகம். அது உண்மையே!.ஆனால்….உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள்!! என்ற அறைகூவலைத்தான் முன்மொழிந்தார். என்ன தான் முடக்கு வாதம் திருப்பமுனைகள் இருந்த போதிலும் அதற்கெதிராக சேறடிக்க சொல்லவில்லை என்பதை நந்தா புரிந்து கொண்டு தமிழ்மக்களின் பிற்போக்கு தன்மையாக புலிஇயக்கத்தின் வாலாக செயல்படாமல் தொழிலாளர் இயக்கத்தின் மீது தனக்கு தெரிந்த அறிவை பிரயோகிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக் கொள்ளுகிறேன். இல்லையேல் டக்கிலஸ்-மகிந்தாவை எப்படி புகழ்ந்த போதிலும் நீங்கள் சங்கமமாவது நந்திக்கடலே!. இது சர்வதேச தொழிலாளிவர்கத்தின் தீர்ப்பாக சந்திரன்.ராஜா வால் வழங்கப்பட்டது என எற்றுக் கொள்ளுங்கள்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்/தற்போதைக்கு குசும்புக்கு அழுத்தி திருத்தி ஒன்றைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். “இவ்வுலகில் உழைப்பவன் சொத்து சேர்ப்பதில்லை சொத்துசேர்பவன் உழைப்பதில்லை” /
  எப்பிடிப் பொய் சொல்லக்கூடாது சந்திரன். நான் கஸ்டப்பட்டு அழைக்கிறேன். கொஞ்ச்சொத்தும் சேர்த்திருக்கிறேன். உழைக்காதவர்கள் என்றும் முன்னுக்கு வர இயலாது. நீங்கள் உலகிலுள்ள ஒருசிலரை வைத்துக் கொண்டு உலகை அளக்க இயலாது. அப்துல் காலாம் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த ஒரு பாட்டாளி. முன்னுக்கு வரவில்லையா? ஆபிரகாம் லிங்கன் என்மாதிரி? சந்திரன் இப்படியான பரப்புரைகளால்தான் மக்கள் உழைப்புக்கு மதிப்பழிப்பதில்லை. இதனால்தான் தமிழில் ஒரு பழமொழி உண்டு செய் தொழிலே தெய்வம். காரணம் தெய்வத்தை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. எங்கோ ஒருவன் சொத்து வைத்திருக்கிறான் என்றால் அவனிடம் உழைப்பில்லாவிட்டாலும் அவன் பரம்பரையில் உழைப்பு இருக்கும் என்பதை மறக்கக்கூடாது. சந்திரன் சொத்தைப் பாதுகாப்பது இலகு என்கிறீர்களா? அதைப்பாதுகாப்பதற்கே உழைப்பு வேண்டும். இல்லையோல் அது பறந்து போய்விடும். நான் மாக்ஸ் திருவள்ளுவர் கம்பர் பிரபாகரன்…. மூளைகளில் அல்லது மற்றவர்களின் மூளையில் சிந்திப்பதில்லை. ஆனால் உங்களின் பரப்புரையானது (/தற்போதைக்கு குசும்புக்கு அழுத்தி திருத்தி ஒன்றைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். “இவ்வுலகில் உழைப்பவன் சொத்து சேர்ப்பதில்லை சொத்துசேர்பவன் உழைப்பதில்லை” /)உழைக்கும் வர்க்கத்தை அவமதிப்பதாகவும் அவர்கள் முயற்சியை தடுப்பதாகவும் தான் இருக்கிறது.

  உங்கள் மொழியில் சொல்கிறேன் “தகுதிக்கேற்ற வேலை வாழ்வுக்கேற்ற ஊதியம்” இதில் எனக்கு உடன்பாடில்லை. உடலுளைப்பாளிக்கு கூடிய கலோரி தேவைப்படுகிறது அவனுக்குத் தேவையான உணவு கொடுக்கப்படவேண்டும். கணனியுடன் வேலை செய்பவனுக்கு உணவே வேண்டாம் என்கிறீர்களா? கல்லுமண்களை மிசினுகள் தூக்குகின்றன. காரணம் மூளை. மூளையிருந்தால் உழைக்கம் வர்க்கம் உயர்ந்து கொண்டு போகும். நான் வெளிநாடு வந்து கவலைப்பட்ட விடயம் பட்டதாரிப்பட்டம் பெற்றும் ஒரு கார் சைக்கிள் களட்டிப்பூட்ட முடியவில்லையே என்பது தான். ஒரு தொழிற்கல்வி கற்கவில்லை என்ற குறைதான். அதற்காகப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் கல்லுமண் சுமக்கவேணும் என்று சொல்வது அடிமுட்டாள்தனமானது. ஒருநாட்டின் பிரதம மந்திரி உழைக்க வில்லை என்கிறீர்களா? நித்திரை கொள்ள நேரமின்றித் திரிகிறார்கள். ஐரோப்பாவில் அரசிலைவிட்டே ஓடுகிறார்கள் ஏன்? நீங்கள் நினைப்பது போல் சொத்தைப் பாதுகாப்பதும் ஒரு உழைப்புத்தான்.

  ஒரு முதலாளி தன் மூலதனத்தை போட்டு சும்மா உங்களிடம் தந்து விட்டுப் போகச்சொல்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் சுடண்ட விரும்புகிறீர்கள் என்று அர்த்தப்படும். மூலதனமிட்டவான் தனக்குச் சம்பளமாக ஒரு ஊதியமில்லாமல் இருக்க முடியுமா? என்னைப் பொறுத்தமுறையில் உதவிப்பணம் என்று வைத்திருக்கம் உதவிப்பண சிஸ்டமும் ஒரு சுரண்டல் முறையே. உழைப்பனிடம் உருவி சோம்பேறிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். இதுவே உலகின் படுசுரண்டலாகும். இதே உழைத்தவன் ஓருமாத ஓய்வு வேண்டும் என்றால் சம்பளம் வெட்டு. சந்திரன் ஜதார்த்தத்துடன் வாழ்வது முக்கியம். எனது அனுபவமும் ஜதார்த்தமும் “உழைத்தால்தான் சேகரிக்க முடியும். உழைத்த அனைத்தையும் தேவையில்லாமல் கொட்டிவிட்டு உழைத்தேன் காணவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பாக இயலாது.” உழைகாதவனிடம் இருக்கும் சொத்து விரைவில் ஒழிந்து விடும்.

  சந்திரன் நீங்கள் முன்னுக்கு பின் முரணாகக் கதைக்கிறீர்கள் இப்படி முதல் எழுதியிருக்கிறீர்கள் /சகல செல்வங்களின் தோற்றுவாய் உழைப்பே என அரசியல் பொருளியல்வாதிகள் அறைந்து கூறுகிறார்கள்./
  பின்பு இப்படி எழுதியுள்ளீர்கள்/ “இவ்வுலகில் உழைப்பவன் சொத்து சேர்ப்பதில்லை சொத்துசேர்பவன் உழைப்பதில்லை” / நீங்கள் மாக்சிசத்தை போட்டு குளப்புகிறீர்கள். எனக்கு கொஞ்சமாக்சிசம் விளங்கியது நீங்கள் எழுதத் தொடங்கியதும் உள்ளதும் போய்விட்டது. விடுங்கோ சந்திரன் சனங்கள் பாவம். பின்னிப்பினல் எடுக்கிறீர்களே.

  Reply
 • பல்லி
  பல்லி

  குசும்புவா இது?? இது சந்திராவுக்காக எழுதவேண்டிய விடயமல்ல ஒரு கட்டுரையாகவே எழுத வேண்டியது;
  நிறைய எழுதுங்கள் குசும்பு;

  Reply
 • chandran .raja
  chandran .raja

  குசும்பு நீங்கள் சொல்லும் உழைப்பு முகேஷ் அம்பானி பில்கேட் உழைப்பு. அதை சின்னதாகப் பார்த்தால் தியாகராஜா மகேஸ்வரன் என்று ஒருவர் இருந்து நாற்தியொரு வயதில் புலிகளால் கொலைசெய்யப்பட்டாரே! அவர் அவரின் குறைந்தகால உழைப்பின் சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?5000 கோடி ரூபாவாம். அதற்கு தமிழ்மக்களின் பஞ்சமும் தட்டுப்பாடும் இறப்புகளும் தான் கொடுக்கப்பட்ட விலை. உங்கள் ஒருசிலரின் வாழ்க்கையை வைத்து எல்லோருக்கும் நீதி வழங்காதீர்கள். அதைவிட வறுமையில் வாடும் எல்லோரும் அரசியல் தஞ்சம் கோரமுடியுமென்று நீங்கள் சிந்தித்தீர்களே யானால் …… .

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்/இல்லையேல் டக்கிலஸ்-மகிந்தாவை எப்படி புகழ்ந்த போதிலும் நீங்கள் சங்கமமாவது நந்திக்கடலே!/ இங்கே நீங்கள் கூறிய இருவரும் ஒருகாலத்தில் மாக்சிசத்தை கொண்டு திரிந்தவர்கள்தான். மாக்சிசம் இடதுசாரித்துவம் போசாமல் எந்த இயக்கமும் இருக்கவில்லை என்பதை சந்திரன்ராசா கவனத்தில் கொள்வது முக்கியம். இந்தவரிசையில் தாங்களும் சேராமல் இருந்தால் நல்லது. மகிந்தாவிடம் இடதுசாரித்துவத்தில் தொங்கிக் கொண்டிருப்பது சிவப்புச் சால்லை ஒன்று மட்டுமே. நந்திக்கடல் சங்கமம் கூட மாக்சிசத்தின் ஆரம்பம்தான். மாக்சிசம் பேசாத ஒரு தமிழ் இயக்கத்தை சொல்லமுடியுமா? அப்படிச் சொல்வீர்களாயின் உங்களுக்கு இயக்கங்களின் அடிப்படையே தெரியாது எனலாம்.

  /அதை சின்னதாகப் பார்த்தால் தியாகராஜா மகேஸ்வரன் என்று ஒருவர் இருந்து நாற்தியொரு வயதில் புலிகளால் கொலைசெய்யப்பட்டாரே! அவர் அவரின் குறைந்தகால உழைப்பின் சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?5000 கோடி ரூபாவாம்/ இந்த மகேஸ்வரனின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் தெரியும் உழைப்பின் கனதி. இப்படியான கோடிகளைப்பற்றிக் கதைக்கும் போது இவர்பின்னால் நிற்கும் உழைப்பை மறந்துவிடவில்லை. 5000கோடியை யாரும் சும்மா கொடுக்கவில்லையே. அவர்பரம்பரை தீவுப்பகுதியைச்சேர்ந்ததாம். கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்தது அவர் பரம்பரை அதிஸ்டம் கடினஉழைப்பின் பலன் என்று ஏன்பார்க்க முடியவில்லை. பாட்டாளி ஒருவன் முதலாளியாகி இருக்கிறான் என்றால் பாட்டாளி பெருமைக்படுவதை விட்டுவிட்டு இழுத்து விழுத்த நினைப்பதை பொறாமை என்றே கூறவேண்டும். அதோ மகேஸ்வரன் எத்தனை பாட்டாளிகளுக்கு வாழ்வு கொடுத்தார் ஏழைகளுக்கு படிப்புக்கொடுத்தார் என்ற விடயங்களை ஏன் மறைக்கிறீர்கள் மறுக்கிறீர்கள். தான் பிறந்து விளையாடிய மண்ணுக்கு அவர் செய்தது அதிகம். இதையிட்டு நாம் பெருமைப்படவேண்டுமே தவிர பொறாமைப்படுவதற்கு எதுவும் இல்லை.
  /அதற்கு தமிழ்மக்களின் பஞ்சமும் தட்டுப்பாடும் இறப்புகளும் தான் கொடுக்கப்பட்ட விலை/ இது மாக்சிசம் மாவோ இஸ்சம் என்று இரஸ்சியா சீனா கியூபா போன்ற இடதுசாரிநாடுகளில் கொடுத்த விலையை விட இது மிக மிகக் கம்பிதான் சந்திரன்.

  இந்த இடதுசாரிப்போக்கத்தவர்களால் ஈழத்தமிழர் கொடுத்தவிலையை விடவா இது பெரியவிலை. தமிழர் கொடுத்த விலை சுமார் இராணுவத்துடன் சேர்த்து 200000 உயிர் உடமைகள் பஞ்சம் பசி பட்டிணி இனவளிப்பு இதற்கு உங்கள் மாக்சிசமும் இடதுசாரித்தவமும்தான் பதில் சொல்ல வேண்டும். புலிகளை சுட்டிக்காட்டினீர்கள் அவர்களும் உங்கள் சிவப்புப் புத்தகங்களுடன் திரிந்தவர்கள் தான். நாங்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து நிம்மதியாக போர் பொட்டம்மான் என்று இல்லாமல் மனிதர்களாக வாழவிரும்புகிறோம். அங்குள்ள மக்களுக்கு குறைந்த பட்சம் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு வசதி இருந்தால் போதும் அது முதலாளி செய்தாலும் சரி தொழிலாளி செய்தாலும் சரி. ஒரு விசடம் நிச்சியம் தொழிலாளி செய்யமாட்டான் ஒரு தொழிலாளியை மற்றத் தொழிலாளி பிடுங்குவானே தவிர தூக்கி விடுவான் என்பது சந்தேகம் தான். அங்குள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை எவன் எந்த அரசு நிறைவேற்றுகிறதோ அவர்களை ஆதரிக்க நான்தயார்.

  மாக்சிசம் கதைத்தவர்கள் நான்கண்டது முழுப்புளிச்சல் ஏவறைக்காரர்களே. இந்தப்பட்டியலில் நீங்களும் சேரமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இப்போது இருப்பது மாக்சின் காலமல்ல. உடலுழைப்புக்களை இயந்திரங்கள் பொறுப்பேற்று விட்டன. இல்லை பாட்டாளி கூட்டாளி என்று நின்றீர்களானால் தொடர்ந்தும் சிவப்புக்கொடியை இரத்தத்தில் தோய்த்து தூக்கிப்பிடிக்க வேண்டியதுதான்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பல்லி /குசும்புவா இது?? இது சந்திராவுக்காக எழுதவேண்டிய விடயமல்ல ஒரு கட்டுரையாகவே எழுத வேண்டியது;
  நிறைய எழுதுங்கள் குசும்பு/ பல்லி குசும்புவுடன் பகிடி விடக்கூடாது. உண்மையாகவே குசும்புத்தனமாய் கட்டுரை எழுதிவிடுவேன் பின் தேசத்தைத் தேடவேண்டி வந்துவிடும். அதாவது இழுத்துப் பூட்டவேண்டி வந்துவிடும். உங்களுக்கு தேசத்துடன் ஏதாவது பிணக்கு என்றால் சொல்லுங்கள் கட்டுரை எழுதுகிறேன். பல்லி! நீங்களே சொல்லுங்கள் இயக்கங்கள் வளர்கிற காலத்தில் இந்த மாக்சைத்தானே கொண்டு திரிந்தார்கள். ஏன் நானும்தான் கொண்டு திரிந்தேன். எவன் சொன்னபடி நடந்தான். புலிகளில் நாகராசா வாத்தி சைட் பையுக்கு என்ன பகவற்கீதையா கொண்டு திரிந்தார். சுந்தரம் என்ன கொண்டு திரிந்தார்? புதியபாதையில் எழுதப்பட்டது என்ன சிவபுராணமா? இரத்தவெறிபிடித்து சனத்தையும் வாழ்வையும் முள்ளிவாய்கால்வரை கொண்டுபோய் சேர்த்தபின்னும் இரத்தவெறி அடங்கவில்லை என்றால் என்ன செய்வது. நானும் தேவைக் கேற்ற ஊதியம் தகுதிக்கேற்ற தொழில் என்று கத்தியவன்தான். மாக்சிசம் படிக்க நன்றாகத்தான் இருக்கும். நடமுறைக்கு சரியாக இருக்குமா. சரி நாகம் அழகாக இருக்கிறது என்பதற்காகப் பிடித்து கொஞ்ச இயலுமா? சும்மா நடக்கக் கூடிய விசயங்களை கதைப்பதை விட்டுவிட்டு கதைப்பதற்காகவே கதையளப்பது விசமாத்தமாகவே தெரிகிறது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்ராசா- உங்கள் இடதுசாரித்துவச மாக்சி அறிவை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் மாக்ஸ் மாவே எல்லோரும் கிட்லருடன் எம்பிள்ளைகளின் பாடப்புத்தகங்களில் நின்று விளையாடுகிறார்கள். புத்தகங்களில்தான் இருக்கச்சரி என்பதால் ஜதார்த்தத்துக்கு மாறான வற்றை அழிக்க தொடங்கிவிட்டார்கள். லெலின் பாவம் சிலையாகக் கூட நிற்க முடியவில்லை. மாவோவை வைத்துக் கொண்டு முதலாளித்துவ ஆட்சி நடக்கிறது. அயல்நாடுகளை ஆக்கிரமிப்பதோ முதலாளித்துவம் இல்லையா? இலங்கையில் ஏழைகளை நிராயுதபாணிகளை அழித்தமை இடதுசாரித்துவம் மாவேசியம் என்கிறீர்களா? சந்திரன் ராசா இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நீங்கள் ஏதாவது புதிசாய் சொல்லுங்கள் சரியெனப்பட்டால் நானும் என் நண்பர்களும் உங்கள் பின்னால் வருகிறோம். சிலவேளை பல்லியையும் கேட்டுப்பார்க்கலாம்.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  முதலாளித்துவ வர்கத்தின் ஒருபகுதி முதாலித்தவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்களே பொருளியாளர்களும் கொடைவள்ளல்களும் மனிதாபிமானிகளும் உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும் தருமபணித்துறையாளரும் ஜீவகாருணிய சங்கத்தாரும் மதுக்குறைப்பு வீரர்களும் எல்லாவிதமான துக்கடா சீர்திருத்தக்காரர்களும்.இந்த முதாலித்துவ சோசலிஸம் முழுநிறைத் தத்துவ அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது. புரூத்தோன் (வறுமையின் மெய்யறிவு)என்ற புத்தகத்தை இவ்வகை சோசலிசத்திற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
  சோசலிஸ நாட்டம் கொண்ட முதலாளிமார்கள் நவீனசமூக நிலைமைகளின் எல்லா அனுகூலங்களும் வேண்டும். ஆனால் இந்த நிலைமைகளின் தவர்கமுடியாத விளைவுகளாகிய போராட்டங்களும் அபாயங்களும் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தற்போதுள்ள சமூகமுறையை அப்படியே வைத்துக் கொண்டு அதன் புரட்சிகரகூறுகளையும் சிதைவுகளையும் நீக்கவேண்டுமென்பதே இவர்களது விருப்பம். பாட்டாளிவர்கம் இல்லாமல் முதலாளிவர்கம் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். முதலாளிவர்கம் தான் அதிபதியாய் அமைந்திருக்கும் உலகே யாவற்றிலும் சிறந்தது என இயல்பாகவே கருதுகிறது. இந்த வசதியான கருத்தை முதாலித்தவ சோசலிஸம் அதிகமாகவோ குறைவாகவோ நிறைவுபெற்ற தத்தவ அமைப்பாய் வளர்த்திடுகிறது.இம்மாதியான அமைப்பைப் பாட்டாளிவர்க்கம் செயல்படுத்தி ஒரேவழியில் நேரே ஒரு புதிய ஜெருசேலத்தை நோக்கி நடைபோட வேண்டுமென கோருவதின் மூலம் உண்மையில் அது கேட்பது என்னவெனில் பாட்டாளிவர்க்கம் தற்போதைய சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாய் இருந்து கொண்டு அதேபோது முதாலித்தவ வர்க்கத்தைப் பற்றி அதற்குள்ள வெறுக்கதக்க கருத்துக்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும் என்பது தான்….

  Reply
 • chandran .raja
  chandran .raja

  இவ்வகை சோசலிசத்தின் இன்னெருவடிவம் குறைவாகவே முறைப்படுத்தப் பட்டிருக்கிறது.ஆனால் அதிகமாய் நடைமுறை தன்மை வாய்ந்தது. தொழிலாளி வர்க்கத்திற்கு அனுகூலமாக இருக்கக்கூடிய பொருளாதார வாழ்நிலைமைகளில் பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள் மட்டுமே.வெறும் அரசியல் சீர்திருத்தால் பயன் ஏதும் இல்லையென எடுத்துரைப்பதன் மூலம் தொழிலாளிவர்கத்தின் கண்களில் எவ்விதமான புரட்சிஇயக்கமும் மதிப்பிழந்து விடும்படி செய்ய முயன்றது இது.ஆனால் பொருளாதார வாழ்நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்பதின் மூலம் இவ்வகைப்பட்ட சோசலிசம் எவ்வகையிலும் முதாலித்துவ பொருள்யுற்பத்தி உறவுகளின் உறவுகளின் ஒழிப்பை குறிக்கவில்லை. நிர்வாக சீர்திருத்தங்களையே குறிக்கிறது.இந்த நிர்வாகசீர்திருத்தங்கள் முதாலித்துவ பொருள்உற்பத்தி உறவுகள் தொடர்ந்து நீடிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. ஆகவே மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான உறவுகளை எவ்விதத்திலும் பாதிக்காதவை.அரசாங்க செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்வாக பணியை எளிமையாக்குவதற்கும் மேல் அதிகமாய் ஒனஇறும் செய்ய முடியாதவை. முதாலித்துவ சோசலிசம் வெறும் சொல் அலங்காரமாகும் போது மட்டும் தன்னை சரியானபடி வெளிப்படுத்தி கொள்ளுகிறது. தடையில்லா வாணிபம்:தொழிலாளி வர்க்க நலனுக்காக. காப்பு சுங்கவரிகள்: தொழிலாளவர்க்க நலனுக்காக.சிறை சீர்திருத்தம்: தொழிலாள வர்கநலனுக்காக. இதுதான் முதாலித்துவ சோசலிஸத்தின் இறுதிநிலையை குறிக்கும் சொல்.விளையாட்டாய் அமையாத ஒரே சொல். முதாலித்துவ சோசலிஸம் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லி விடலாம்.முதலாளி முதலாளியாய் இருப்பது தொழிலாளி வர்க்க நலனுக்காக. பழைமைவாத-முதாலித்துவ சோசலிசம் பற்றி.. -கால்மாக்ஸ்-

  Reply
 • நந்தா
  நந்தா

  குசும்பு:
  கொள்ளையடித்தும், கொள்ளைக்காரர்களுடனும் சேர்ந்தும் சொத்து சேர்க்கலாம். அதுவும் கஷ்டபட்ட “உழைப்பு” மரியாதை வேண்டும் என்று நீங்கள் வாதிடுவதைப் பார்த்தால் மார்க்சியம் மாத்திரமல்ல, முதலாளித்துவம் கூட ஓட்டம் பிடித்துவிடும்!

  இயக்கங்கள் மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை என்பதால் மார்க்சியம் பொய்யாகி விடவில்லை!

  இன்றைய தொழிலாளர்களின் வசதிகள், மதிப்பு என்பன ஆட்சியாளர்களால் அமுல் படுத்தப்பட்டிருப்பதின் “மூல” காரணம் மார்க்சிய அடிப்படைத் தத்துவங்களே!

  புலிகளுக்கும் மார்க்சியத்துக்கும் என்ன சம்பந்தம்? வெறும் கொள்ளைக்காரர்களும், கள்ளக்கடத்தல்காரர்களும் தமிழர்களுக்கு தலைமை கொண்டதன் விளைவிற்கு மார்க்சிசம் மீது பாய்ந்து கடித்துக் குதறி ஒன்றும் சாதிக்க முடியாது!

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நந்தா/கொள்ளையடித்தும், கொள்ளைக்காரர்களுடனும் சேர்ந்தும் சொத்து சேர்க்கலாம்/ இப்படியான ஒரு பின்நோட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன். மகேஸ்வரனிடம் ஆரம்பகாலங்களில் உழைப்பு இருந்தது என்றும் வறியகுடும்பத்தவர்கள் என்றும் அறிந்தேன் உண்மை பொய் தெரியாது. நேர்மையான வழியில் பணம் பண்ணுவதுதான் உழைப்பு. எல்லாவற்றையும் மாக்சிசத்துக்குள் ஒரு சிலர் பார்க்க முயல்வதின் விளைவே மேற்கண்ட என்எழுத்து. நிச்சயம் அது பிழை.

  /இயக்கங்கள் மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை என்பதால் மார்க்சியம் பொய்யாகி விடவில்லை/ இது உண்மையான வார்த்தை. இயக்கங்கள் மட்டுமல்ல உலகம் முழுக்கவே பிழையாகப் பாவிக்கப்பட்டுள்ளது. சிலதத்துவங்கள் தத்துவங்கள் உயரியதும் நல்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் சிலவிசயங்கள் சாத்தியப்படுவதில்லை. எனதுபார்வையில் மாக்சின் உயர்தத்துவம் யார் அதனை தலைமேற்கொண்டு திரிந்தார்களோ அவர்களே போட்டும் உடைத்திருக்கிறார்கள்.
  /புலிகளுக்கும் மார்க்சியத்துக்கும் என்ன சம்பந்தம்?/ இது நியாயமான கேள்வி ஆனால் அவர்களும் ஆரம்பகாலங்களில் இடதுசாரித்துவத்தை ஒழித்துக் படித்தவர்கள். காரணம் கெளரவக்குறை. பிரபா ஒரு பேட்டியில் செல்கிறார் செக்கோ போன்று அதாவது தீதோ போன்று ஒரு அரசு. வேடிக்கையானதுதான் ஆனால் உண்மை.

  Reply
 • BC
  BC

  //இவ்வுலகில் உழைப்பவன் சொத்து சேர்ப்பதில்லை சொத்துசேர்பவன் உழைப்பதில்லை”
  குசும்பு – ஜதார்த்தத்துடன் வாழ்வது முக்கியம். எனது அனுபவமும் ஜதார்த்தமும் உழைத்தால்தான் சேகரிக்க முடியும். //

  உண்மை தான் குசும்பு. மார்க்சியவாதிகள் இங்கே என்ன மாதிரி ஆடி பாடி வேலை செய்து சொத்து எல்லாம் சேர்க்கிறார்கள் ,எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை கண்ணாலே பார்த்திருப்பீர்கள் தானே. ஆனால் ஓய்வு நேரம் கிடைக்கும் போது கொம்புடெரை எடுத்து வைத்து தமிழில் மார்க்சிசம், முதலாளித்து ஏகாதிபத்தியநாடுகள்,வர்க்கப் போராட்டம் என்று தமிழருக்கு தட்ட தொடங்கிவிடுவார்கள்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்ராசா! உண்மையில் உங்கள் மாக்சிச அறிவை மட்டுமல்ல இடதுசாரித்துவம் பொருளாதாரம் பாட்டாளிவர்கப்புரட்சி போன்ற புரட்சிவாதங்களை நான் மனமார மெச்சுகிறேன். உங்களிடம் இருந்து இன்னும் வரவேணும் என்பதான் என்நோக்கம். இதை நான் பல்லிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். இதை ரால்போட்டு சுறாப்பிடிப்பது என்பார்கள். உலகம் என்பதும் இயற்கை என்பதும் எல்லாருக்கும் உரியதே. இதை ஒருசிலர் தனதாக்கிக் கொள்வது அடாவடித்தனமும் அனியாயமும் ஆகும். நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் இவற்றை சொல்லும் முறையில்தான் மற்றவர்கள் ஏற்கும் தன்மை தங்கியிருக்கிறது. இந்தத் தத்துவங்களும் தத்துவார்த்துங்களும் பாமர மக்களை எட்டாது போனால் மாக்சிசம் தோல்வியடையும். உதாரணத்துக்குக் சொல்லப்போனால் பட்டணத்தார் பாடல்களை கண்ணதாசன் கொப்பியடித்தாலும் பாமரமக்களுக்குப் போய்சேருமாறு இலகுநடையில் சொன்னார். அதனால் கருத்துக்கள் அனைவரையும் சென்று சேர்ந்தன. பாமரமக்களே அடிமட்டத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். நீங்கள் எழுதுவதோ மாக்சின் வார்த்தைகளோ அவர்களுக்கு விளங்காது. இடதுசாரிகளின் நோக்கம் உண்மையானதாக இருந்தால் பாமரமக்களுக்கும் புரியுமாறு சொல்வது முக்கியம். இல்லையேன்றால் மாக்சிசம் தத்துவமாக இருப்பதற்கு மட்டுமே அருகதையுடையது.

  மக்களிடையே மாக்சிசம் ஊடுருவம்போது மக்கள் மதம், கலை, கலாச்சாரம், உடமை, பரம்பரை, இப்படி விழுமியக் காவிகளாகவே இருப்பார்கள். உடனடியாக அனைத்தும் பிழையானது மாக்ஸ்சிசம் மட்டும்தான் சரியானது என்று தொடங்கினால் மாக்சிசத்துக்கு தோல்விதான் ஏற்படும். நெகிழ்வத்தன்மை இல்லாவிடல் மாக்ஸ் தத்துவமாக மட்டும் இருப்பதற்குத் தகுதி உடையது. எல்லாவற்றையும் மாக்சின் கண்களால் பார்க்காது பாமரமக்களின் பாட்டாளின் மக்களின் கண்களாலும் பாருங்கள்.இதை நான் இப்படி எழுதுவது கொச்சைப்படுத்த அல்ல உயர்மைப்படுத்தவே. சாதாரணமாக எம்மைபோன்ற கணனியில் தொழில்புரிவோரும் உண்மையில் பாட்டாளிகளே. ஆனால் ஒத்துக் கொள்ளாமாட்டோம். காரணம் சலுகைகள் போன்றிருக்கும் சலுகைகளும் மாயையுமே. மாக்சிசத்தை உண்மையாக நீங்கள் நேசிப்பீர்களானால் தயவு செய்து இலகுநடையில் எல்லோருக்கும் விளங்குமாறு புத்தகங்களை அடியுங்கள். ஊடகங்களூடகக் கூட மக்களை அடையுங்கள்.

  இந்துமதத்தில் கூட சில இடதுசாரித்தத்துவத்தக் கண்டேன் பண்டையகாலத்தில் இருந்து அன்னதானம் நடக்கிறது. பணக்காரன் பொருள் படைத்தவன் கடவுள் என்ற பெயரில் கோவிலுக்குக் கொடுக்கிறார். இதைத்தையும் திரட்டி அன்னதானானம் என்று ஏழைகளுக்குக் கொடுத்தார்கள். அதிகமுள்ளவனிடம் எழுத்து இல்லாதவனுக்கு தேவையானவனுக்குக் கொடுத்தார்கள். அதற்காக நாம் போய்நின்று சண்டை பிடிக்கக் கூடாது மாக்ஸ் மதங்களூடாக சமதர்ம உலககைக் காணவில்லை என்று. சமதர்ம உலகுதான் நோக்கம் என்றால் மாக்ஸ் சொன்னால் என்ன நீங்கள் சொன்னால் என்ன இந்தமதம் சொன்னால் என்ன நோக்கம் ஒன்றுதான். அன்னதானம் சும்மா உதாரணத்துக்கு எடுத்ததே தவிர அதைவைத்து விவாதத்தை ஆரம்பித்து விடாதீர்கள். ஐரோப்போ வட அமெரிக்காவில் அன்னதானம் பணக்காரர்களுக்கோ கொடுக்கப்படுகிறது வன்னியில் சனம் பட்டிணியால் சாகும் போது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பிசி! உண்மைதான்; உழைப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தல் அவசியம். தொழில் ஒருசிலருக்கு மட்டும் என்று வரையறுப்பது அபத்தமே. நல்ல உழைக்கட்டும் மற்றவனைச் சுரண்டாதவரை ஓகே தானே. நான் கண்ட மாக்சிசவாதிகள் பலர் வெறும் சித்தாந்தவாதிகளாகவும் நடைமுறையில் மாக்சின் தத்துவத்துக்கு எதிரிகளாகவே இருந்திருக்கிறார்கள். கட்சிகள் இயக்கங்கள் தனிநபர்கள் என்று எழுத்தால் மாக்சிகத்தை ஒருகேடயமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பொருளியலில் மட்டுமல்ல மனிதவாழ்விலும் உயர்வு என்பது உழைப்பின் பரிசளிப்போ என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. மனிதர் எவருமே ஒரேமாதிரியானவர்கள் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். வேடிக்கையான விசயம் ஒன்று என்னவென்றால் கிட்லரின் எஸ் எஸ் படையின் பெயரை செவிப்புற்றால் தெரியும் இடதுசாரித்துவம் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்று. மாக்சிசம் பேசியவர்களும் அதைக்காவியவர்களும் அதையே தனது அடையாளமாகக் கொண்டவர்களும் மாக்சிசத்துக்கு மாறாகவே பலர் நடந்துள்ளமை எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. ஒரு சாதாரண மனச்சாட்சியுடைய நல்ல மனிதனாக வாழ்வதற்கு மாக்சிசப் பூதக்கண்ணாடி தேவை இல்லை என்பது என்கருத்து. மதங்கள் கூடத்தேவையில்லை. மனிதராய் இருப்போம் மற்ற மனிதர்களையும் நேசிப்போம். எனக்கு மாக்சிசம் தேவையும் இல்லை மாக்சிசக் கண்ணாடியூடு பார்க்க விரும்பவும் இல்லை. கண்ணில் குறைபாடுள்ளவர்கள் அதைப்போட்டுப்பார்க்கட்டும். மாக்சிசம் மட்டும்தான் சரி என நிற்பதும் மதங்களில் பனாற்றிசியம் அதாவது அடிப்படைவாதம் போன்றதே. மனிதனுக்கு தெரிவுகளும் மாற்றுக் கருத்துக்களும் தேவை அப்போதுதான் ஒரு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்கலாம் என்பது என்கருத்து. அதுமட்டுமல்ல என்கருத்துடன்தான் எல்லோரும் ஒத்துப்போகவேண்டும் என்று நான் வலியுறுத்தியதும் இல்லை.

  நந்தாவிடம் குசும்புவின் குசும்புத்தனமான ஒரு கேள்வி. //கொள்ளையடித்தும், கொள்ளைக்காரர்களுடனும் சேர்ந்தும் சொத்து சேர்க்கலாம். அதுவும் கஷ்டபட்ட “உழைப்பு” மரியாதை வேண்டும் என்று நீங்கள் வாதிடுவதைப் பார்த்தால் மார்க்சியம் மாத்திரமல்ல, முதலாளித்துவம் கூட ஓட்டம் பிடித்துவிடும்// இதை ஒத்துக்கொள்ளும் வேளை கொள்ளை என்று வரும்போது யாரோ ஒருவன் முதலே தேவைக்கு அதிகமாக வைத்திருந்ததைத்தானே கொள்ளை அடிக்கமுடியும். அதற்காகக் கொள்ளை அடிப்பை நியாயப்படுத்தவில்லை.
  பின்னோட்டதாரர்க்கு:-
  “உழைப்பின்” அழகை நான் உலகத்தின் உயிர்கள் அனைத்தும் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு. என்ன இருந்தாலும் உழைப்புக்கு நிகர் உழைப்புத்தான். இதனால்தான் போலிகள் உதவிப்பணத்தில் தொங்குவதை அடியோடு வெறுக்கிறேன். உதவிப்பணத்தில் இருப்பவர்களும் உழைக்கவேண்டும் என்பது என்விருப்பம். உடலூனமுற்றவர்கள் உழைக்கும் போது போதைவஸ்து பாவிப்பவர்களும் பிள்ளைபெறும் மிசன்களும் உழைப்புக்கு மதிப்பளியாமல் உழைப்பவர்களின் வரிப்பணத்தைச் சுரண்டுவதை நான் வெறுக்கிறேன். சின்ன எழும்புகூட தன்சிறுவயிற்றுக்கு உழைக்கிறதே. தத்துவங்கள் ஒற்றைவளிப் பாதையாக இல்லாமல் மாற்றுவழி கொண்டதாக இருப்பது அவசியம் காரணம் மனிதன் ஒரே மிசினில் அடித்து விட்ட பொம்மைகளல்ல.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சுட்டிக்காட்டி “அபரிமித உற்பத்தியினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள்” என்பது எவ்வளவு சரியானது என்பதை நிரூபித்தது. உலகம் முழுவதும் அதன் பாதிப்பு ஏற்பட்டது. சோவியத்யூனியன் தவிர முதாலித்தவ அமைப்பில் இருந்த அனைத்து நாடுகளும் அந்த நெருக்கடி சூறாவளியில் சிக்கித்தவித்தன. ஒரு பக்கம் வேலையின்மை மறுபக்கம் ஆலைமூடல். ஒருபக்கம் மலைபோல் பொருட்கள் தேங்கி கிடக்கின்றன. மறுபக்கம் வாங்கும் சக்தியற்ற மக்கள்கூட்டம் பட்டினியால் வாடுகின்றனர். பட்டினிசாவுக்கு இரையாகின்றனர். இந்நிலையில் மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க ஈவிரக்கமற்ற முதலாளிவர்க்கம் உணவுப்பொருள்களையும் இன்னும் பலவகையான உபயோகப் பண்டங்களையும் அழிக்கிறார்கள். அதை பற்றிய விபரங்கள் அதிர்ச்சி தரக்கூடியன. ஏற்கனவே குறிப்பிட்ட லியான்டியோவின் நுலில் இருந்து சில விபரங்கள்.

  “ஓர் அமெரிக்க செய்தித்தாள் கீழ்வரும் கணக்கீட்டை வெளியிட்டது:1923-33 அழிவுமிக்க காலத்திற்கு பின்வந்த1934-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2400 000 மக்கள் முதாலித்துவநாடுகளில பட்டினியால் செத்தார்கள்.அதே ஆண்டில் பத்து லட்சம் லாறி எடையுள்ள தானியம் 27 லாறி எடையுள்ள காப்பிக் கொட்டை 258000 டன் சக்கரை 26000 டன் அரிசி 25000 டன் இறைச்சி இதுபோன்ற பண்டங்கள் வேண்மென்றே கொட்டப்பட்டன அல்லது அழிக்கப் பட்டன. மேலும் கூறுகிறார் லியான்….1929-33இல் தோன்றிய நெருக்கடி காலத்தில் அமெரிக்கஐக்கிய நாட்டில் கோதுமையும் மக்காசோளமும் நிலக்கரிக்கு பதிலாக எரிபொருளாகப் பயன்படுத்தப் பட்டன. பல லட்சக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன. பருத்தி மகசூலில் ஏராளமான பாகம் மக்கிப்போகும்படி தோட்டத்தில் விடப்பட்டன. பிரேசில் நாட்டில் பலலட்சக்கணக்காண காப்பி மூட்டைகள் கடலில் தூக்கிவீசப் பட்டன. டென்மாக்நாட்டில் கால்நடைகள் அழிக்கப்பட்டன. பிரான்சிலும் இத்தாலியிலும் ஆயிரக்கணக்கான டன்நிறையுள்ள பழங்கள் அழிக்கப் பட்டன” இதுதான் முதாலித்துவம். எந்தமனிதர்கள் இவையெல்லாம் உழைத்து குவித்தார்களோ அந்தமனிதர்கள் பட்டினியால் செத்துமடிந்தபோது உணவுபண்டங்களை கடலில் கொட்டி அழித்தார்கள். இதுதான் அபரிமித உற்பத்தியின் விளைவாக முதாலித்தவ சமுதாயத்தில் மக்கள் கண்ட பலன்.
  இத்தகைய ஒரு நிலையைப்பற்றி இதற்குமுந்திய காலத்தில் மனிதன் கற்பனை கூட செய்துயிருக்க முடியாது. அன்று உழைத்து உற்பத்திசெய்ததை மக்கள் பயன்படுத்தினார்கள். இன்று உழைப்பின் மூலம் குவிந்த செல்வம் ஒருபக்கம் அழிக்கப்படுகிறபோது மறுபக்கம் அதை உழைத்து குவித்தவர்கள் பட்டினியால் செத்து மடிகிறார்கள்.சுரண்டல் மூலம்மக்கள் வாங்கும் சக்தி சுருக்கப்படதினால்-பறிக்கப்பட்டதினால் ஏற்பட்டநிலை இது.

  -மூலதனத்தின் மூலாதாரம் என்ன?-
  -பி.ஆர்.பரமேஸ்வரன்-

  Reply
 • பல்லி
  பல்லி

  //நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் இவற்றை சொல்லும் முறையில்தான் மற்றவர்கள் ஏற்கும் தன்மை தங்கியிருக்கிறது. இந்தத் தத்துவங்களும் தத்துவார்த்துங்களும் பாமர மக்களை எட்டாது போனால் மாக்சிசம் தோல்வியடையும்.//
  இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன்: புலிகளின் வளர்ச்சிக்கு கூட இந்த புரியாத வேதங்களும் ஒரு காரணம், தயவுசெய்து சந்திரராஜா இதை கவனத்தில் எடுக்கவும், எதையும் புரியும்படி சொன்னால் என்னைபோல் பலர் புரிய வாய்ப்புக்கள் அதிகம்; உதாரணத்துக்கு மார்க்ஸ்ய நணபர்கள் பக்கத்து கட்டுரையில் (நாவலர் ரயாகரன் தேசம் இனிஒரு) பேசும் வார்த்தைகளை கவனிக்கவும்; இதுதான் மார்க்ஸ்சிசமா??

  //சந்திரன் ராசா இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நீங்கள் ஏதாவது புதிசாய் சொல்லுங்கள் சரியெனப்பட்டால் நானும் என் நண்பர்களும் உங்கள் பின்னால் வருகிறோம். சிலவேளை பல்லியையும் கேட்டுப்பார்க்கலாம்.//
  படித்தவர்களே பின்னால் போகும்போது பல்லி ஓடி வந்திடமாட்டேனா??

  Reply
 • chandran .raja
  chandran .raja

  மதம் இனம் நிறம் கண்டம் பிரிவினை போன்ற மேல் தோல்களை உரித்துவிட்டு பார்த்தீர்களே யானால் அங்கு மனிதம் தான் மிஞ்சும். அங்கு ஒரு மனிதப் புழு நெழிந்து கொண்டிருப்பதை கண்டு கொள்வீர்கள். இந்த மனிதப்புழு மற்றைய மனிதப்புழுக்களை திண்று வாழும் வல்லமை படைத்தது வரலாற்று ரீதியாக. ஏன் மனிதனை மனிதன் தின்று ஏப்பம் விடவேண்டும் என்பதை கேள்வி எழுப்புவதே மாக்ஸியம்.
  உலக-சமூக சூழ்நிலையில் நாம் எல்லோரும் ஒரு கண்ணாடி விம்பங்களே. இந்த சூழ்நிலைகளே எம்மை புரட்சிவாதியாகவும் சொந்தஇனத்தை கொல்லுவதற்கும் துணைபோயின. அல்லது கடந்தகாலத்தில் மனிதகொலையில் ஆர்பரித்தெழுந்திருப்பார்களா? இந்த புலம்பெயர் மக்கள்? எவ்வளவு வீச்சுடன் பந்தை எறிந்தாலும் அந்த பந்து திரும்பி வரும்போது தனது வீச்சை காட்டியே தீரும் இது விஞ்யாணத்திலும் ஒப்புகொண்ட உண்மை. முப்பதுவருடம் ரணகளபடுத்திய வீச்சு அதன் எதிர்விணை இன்னொரு இடத்தில் வெளிப்பட்டுத்தானே! தீரவேண்டும்?. மாக்ஸியத்திற்கெதிரான தாக்குதல் ஒன்றும் புதியவையல்ல. யேசுநாதர் சுமந்த முள்முடியைவிட கல்லெறியைவிட அதிகமாகவே அவரும் அவர் தோழர்களும் பட்டிருக்கிறார்கள். உங்களால் வலுவுள்ளவரை ஊண்டி எறியுங்கள் துவண்டு விடமாட்டோம். ஏனெனில் சில மணிநேரத்தில் எமது மனத்தை எண்ணத்தையும் மாற்றுகிற அறிவை சமூகவிஞ்யாணத்தை கற்றுதந்த அந்த மூலவர்கள் விட்டு போகவில்லை.

  Reply
 • நந்தா
  நந்தா

  “மார்க்சிசத்தின்” இறுதி விளைவு என்ன என்று யாரும் நினைப்பதில்லை. சகல மனித உழைப்பாளர்களும் சகலதும் பெற வேண்டும் என்பதே!

  ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என்பதே ஆகும். ஒரு சில மனிதர்கள் “எல்லவற்றையும்” பெற வேண்டும் என்று மதங்களுமி முதலாளித்துவமும் போராடுகின்றன. சாதாரண வார்த்தையில் மார்க்ஸின் “சமத்துவம்” என்பதன் அர்த்தம் இதுதான். இதனைப் புரிந்து கொள்ள “காலனித்துவமிநவீன முதலாளித்துவமி எகாதிபத்திய திரிபு வாதம்” என்றெல்லாம் குழப்பம் செய்ய நான் விரும்பவில்லை.

  ‘முதலிடுபவன்” லாபத்தை மாத்திரம் எதிர்பார்க்கிறான். தன்னிடம் வேலை செய்பவர்களின் “வாழ்வுத்” தேவைகள் பற்றி அக்கறைப்படுவதில்லை! அங்குதான் “மார்க்ஸிஸத்தின்” தேவை வருகிறது.

  மார்க்சிசத்துடன் “சமரசம் செய்துள்ளநாடுகளில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் மாத்திரம் கொடுக்க முதலாளிகள்நிர்பந்திக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு அரசுகள் குறைந்த படச சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளன. வேலையில்லா காலங்களில் தொழிலாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை நிவாரணமாக வழங்க அரசுகள் சட்டங்களை கொண்டு வந்துள்ளன. அந்தநிதியத்துக்கு முதலாளியும் தொழிலாளியும் ஒரு விகிதத்தை சம்பளத்தின் அடிப்படையில் வழங்க நிபந்திக்கப்பட்டுள்ளனர். அது எப்பொழுதும் முதலாளி அதிகமாகவும் தொழிலாளி குறைவாகவும் கொடுக்கிறார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை சமூக உதவிப்பணம் வழங்கப்படுகிறது.

  இந்த முறைகள் மேற்குநாட்டு மார்க்சிசத்துடன் மேற்குநாடுகள் செய்துள்ள சமரசங்கள். இந்த முறைகள் நம்முடைய நாட்டில் இல்லாதது ஏன்?

  அரசுகளும் தொழிலாளர் யூனியன்களும் முதலாளிகளுடன் பேசித் தீர்வு கண்டு கொள்ளுகிறார்கள். இவை மார்க்சிசத்துக்கு எதிரானவை அல்ல.

  இவைகளுக்கு அதிகமாக அரசு வரி விதிப்பை கையாளுகிறது. அதிக வருமானமி அதிக சொத்துக்கள் என்ற அடிப்படைகள் உபயோகத்திலுள்ளன. இவற்றைக் கூட “ஏமாற்றுகிறார்கள்”.

  முதலாளித்துவ நாடுகளில் அமுல் படுத்தப்படும் இந்த மக்கள் சார் நலன்கள் சார்பான விதிமுறைகளை எப்பொழுது அமுலுக்குக் கொண்டு வரப் போகிறோம்?

  Reply
 • chandran .raja
  chandran .raja

  நான் என்ன வைத்துக் கொண்டு வஞ்சகம் பண்ணுகிறேனா? இதைவிட இதற்கு வேறுபாஷையில்லை. இதுவும் தமிழ் பாஷைதான். இந்த முதாலித்துவ சமுதாயத்தின் ஊத்தைசிந்தனைகள் மனத்தில் குடிகொண்டிருப்பதும் ஏற்கமறுப்பது கொஞ்சம் கஷ்ரமாகவே இருக்கும்.இதற்காக யாரும் என்மீது கோபப்படாதீர்கள். ஏழை- பணக்காரன் அடக்கிறவன்- அடக்கப்படுகிறவன் வயிறுபுடைக்க தின்பவன்- பட்டினியோடுயிருப்பவன் இதுபோன்ற எத்தனையோ இருவேறு கருத்துக்களை வைத்து தானேகால்மாக்ஸ் வர்க்கம் என்று குறிப்பிட்டார். எத்தனையோ படிப்பாளிகள் இந்தவர்க்கம் என்கிற வார்த்தையே ஏற்றுக்கொள்வதில் சிரமப்படுகிறார்களே அல்லது அலட்சியப் படுத்துகிறார்கள்.இந்த வார்த்தைகளில் கவனம் செலுத்தாத போது அங்கு மாக்ஸியமும் வலுவிழந்த போவதில் வியப்பில்லையே!இருந்தும் உங்கள் ஆலோசனைகளை கவனத்தில் எடுக்கிறேன்.
  ஆங்கிலமோ பிரான்சோ ஜேர்மன் பாஷைகளோ வளங்குறைந்த மொழிகளா? பாண்டித்தியம் பெறவேண்டுமென்றால் ஏன் லத்தீன்மொழியையும் கற்கிறார்கள்? மாக்ஸியம் புரியமறுக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது தான். இது வேறுபாடன சமுதாயசிந்தனையால் ஏற்படுபவதாகவே கருதுகிறேன். இதற்கு தலைசிறந்த உதாரணம் என்னிடம் இருக்கிறது. நேரம் வரும் போது இத்தளத்தில் அதையும் பொதுவுடைமையாக்குவேன்.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  கிறீஸ்தவத்தையே தம் வாழ்வாய்கொண்ட வி.ஹோவிட் கிறீஸ்தவக் காலனித்துவ அமைப்பு பற்றி சொல்லுகிறார்: “கிறீஸ்தவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைபடுத்த முடிந்த எல்லாமக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டி செயல்களும் வெறித்தனமான அட்டுழியங்களும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும் அவர்கள் எவ்வளவுதான் மூர்க்கர்களாகவும் நெறிபுகட்ட பெறாதவர்களாகவும் கருணை வெட்கம் எல்லாம் பற்றியெல்லாம் கவலைப்படதவர்களாக இருந்தாலும் சரி எந்தக் காலத்திலும் இவற்றிக்கு ஒப்பான அட்டுளியங்களை புரிந்ததில்லை”. ஹாலந்தின் காலனி நிர்வாகத்தின் வரலாறு-17 நுhற்றாண்டில் தலையாய முதாலித்துவ நாடாக இருந்தது. ஹாலந்து “துரோகம் லஞ்சம் லாவண்யமும் படுகொலைகளும் இழித்தன்மையும் தாண்டமாடும் அசாதரண சரித்திரங்களில் ஒன்றாகும்”.

  அவர்கள் ஜாவாத்தீவுக்கு அடிமைகள் வேண்டுமென்று செலிபிஸ் தீவிலிருந்து ஆட்களை திருடிக்கொண்டுவர கையாண்டமுறை அவர்கள்
  எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவாகப் புலப்படுத்தியது. இத் திருட்டுக்காக ஆள்திருடர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். திருடனும் மொழி பெயர்பாளனும் விற்பனை யாளனும் இத்தொழில் முக்கியமானவர்கள். சுதேசி மன்னர்களே! பிரதான விற்பனையாளர்கள். திருடப்பட்ட இளைஞர்களை அடிமைக் கப்பலுக்கு அனுப்புவரை செலிபிசில் இரகசியச்சிறையில் அடைத்துவைகப் பட்டனர். அதிகாரபூர்வஅறிக்கை ஒன்றில் காணப்படுவது: உதாரணமாக மக்காசர் என்ற இந்நகரம் எங்கிலும் இரகசியசிறைகள் உள்ளன. கொடுமைகளில் இவைகள, ஒன்றிக்கு ஒன்று குறைந்தவைகள் அல்ல. போராசைக்கும் கொடும்கோன்மைக்கும் இரையான துர்பாக்கியசாலிகளான இவர்களை குடும்பத்திடமிருந்து பலவந்தமாகப் பிரித்து இச்சிறையில் சங்கிலியில் பூட்டி அடைத்து வைத்திருந்தனர்.
  மலாக்காவை பிடிப்பதற்கா டச்சுக்காரர்ர்கள் போத்துக்கீச கவர்னரை ஆசைகாட்டி வசப்படுத்தினார்கள். 1641-ல் அவர்களை அவர் நகருக்குள் வரவிட்டார்.அவாகள் உடனே அவரது வீட்டுக்கு விரைந்து அவரை கொலை செய்தார்கள்.அவரது துரோகத்தின் விலையாக………. அவர்கள் கால்வைத்த இடமெல்லாம் பேரழிவும் மக்கள் தொகை சுருக்கமும் நேரிட்டன. ஜவாவைச் சேர்ந்த பாஞ்சுவாங்கி மகாணத்தில் 1750-இல் 80 000 பேர் வசித்தனர். 1811-இல் 18 000 பேர் மட்டுமே இருந்தனர். வாணிபத்தின் பெருமையே பெருமை!. -ஜாவாவின் சரித்திரம்- “கவனர்தாமஸ்” 1817.
  ஆங்கிலேய கிழக்கிந்தியகம்பனி இந்தியாவில் அரசியல்ஆட்சி நடத்தியதோடு தேயிலைவர்த்தகத்திலும் பொதுவாக சீனவர்த்தகத்திலும் ஐரோபாவுக்கும்- ஐரோப்பாவில்லிருந்துமான சரக்குப் போக்குவரத்திலும் தனிஏகபோகம் பெற்றது தெரிந்ததே ஆனால் இந்தியாவின் கரையோர வர்த்தகம் கிழக்கிந்தியதீவுகளுக்கான வர்த்தகமும் அதோடு இந்தியஉள்நாட்டு வர்த்தகமும் கம்பனியின் உயர்அதிகாரிகளது ஏகபோகமாக இருந்தது.
  உப்பு அபின் பாக்கு போன்ற ஏகபோகமானது வற்றா செல்வஊற்றாக இருந்தது. அதிகாரிகள் தாமே விலைநியர்ணயத்து பரிதாபத்திற்குரிய இந்தியர்களை இஷ்டம்போல் கொள்ளையிட்டனர். 1769-1790 க்கும் இடையில் ஆங்கியலேயர் அரிசி முழுவதையும் வாங்கிவைத்து கொள்ளைவிலை கிடைத்தால் அன்றி விற்க மறுத்து பஞ்சத்தையே உண்டாக்கி விட்டார்கள். 1866 ஆம் ஆண்டில் பட்டினியால் மாண்ட இந்துக்கள் தொகை ஒரிசா மகாணத்தில் மட்டும் பத்துலட்சதிற்கும் அதிகம். பட்டினி கிடந்தமக்களிடம் அவசியபண்டங்களை அதிக விலைக்கு விற்று இந்தி கருவூலத்தை நிரப்பும் முயற்சி நடந்தது. -இது தியாகுவின் மொழிபெயர்ப்பு மொஸ்கோ மொழிபெயர்ப்பில் ஒரிசாவில் ஏற்படுத்தப் பஞ்சம் கிழக்கிந்திய கொம்பனி தமது ஆதாயவெறிக்காக செயற்கையாக ஏற்படுத்தப் பட்டது என குறிபிடப்பட்டுள்ளது-
  -மூலதனம் கால்மாக்ஸ்-

  Reply
 • Kusumpu
  Kusumpu

  ///சந்திரன் ராசா இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நீங்கள் ஏதாவது புதிசாய் சொல்லுங்கள் சரியெனப்பட்டால் நானும் என் நண்பர்களும் உங்கள் பின்னால் வருகிறோம். சிலவேளை பல்லியையும் கேட்டுப்பார்க்கலாம்.// படித்தவர்களே பின்னால் போகும்போது பல்லி ஓடி வந்திடமாட்டேனா??// பல்லி! யார் படித்தவர்கள் நாங்களா மாக்ஸ்சிசம் படித்தவர்களா? பல்லி நீங்கள் உப்படிச் சொல்லக்கூடாது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்ராசா- //நான் என்ன வைத்துக் கொண்டு வஞ்சகம் பண்ணுகிறேனா? இதைவிட இதற்கு வேறுபாஷையில்லை. இதுவும் தமிழ் பாஷைதான்// இது பொய். நீங்கள் ஒருபுத்தகத்தை அப்படி பார்த்து பின்நோட்டமாக விடுகிறீர்கள் என்பது தெரிகிறது. கல்லூரிப்படிப்புக்காகவும் பட்டப்படிப்புகளுக்காகவும் தனிய இடதுசாரிகளுக்கேன்றே எழுதப்பட்ட புத்தகங்களை இங்கே அப்படியே பதிவு செய்யும் போது பின்நோட்டத்தின் இயல்புத்தன்மை கெட்டுவிடுகிறது.

  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒருபண்டிதன் தன்புலமையைக் காட்டுவதற்காக என்றும் சுத்ததமிழில்தான் கதைப்பாராம். ஒருநாள் அவருடைய மனைவி கிணற்றினுள் தவறி விழுந்து விட்டார். அந்த அவலத்திலும் தன்கெளரத்துக்காக இப்படி கத்தினார்” ஐ ஐயோ என்னில்லத்தாடியாள் பாழ்கிணற்றினுள் வீழ்தணளே!” யாருக்கும் விளங்கவில்லை யாரும் உதவிக்கு வரவில்லை. மொழிதமிழாக இருந்தாலும் தரங்களில் பாகுபாடு உண்டு. மக்களுக்காக கதைப்பவர்கள் மக்களுக்கு விளங்குமாறு கதைக்காவிட்டால் அது செவிடன் காதில் ஊதிய சங்கே. இக்கருத்தை வேறு முறையில் இரவி சுந்தரலிங்கத்திற்கும் வைத்தேன். இங்கு நான் எழுதிய கருந்து அவருக்கும் பொருந்தும். அதற்காக எனக்கு விளக்கம் குறைவென்று நினைத்தால் மாக்சிசம் கதைப்பதற்கு நீங்கள் உரிமையற்றவர்கள்.
  இலகுபட எழுதியவை வாசிப்பதற்கு உசிதமாக இருக்கின்றன. நல்ல கருத்துக்கள் மக்களிடையே செல்ல வேண்டும் என்றால் நீங்களோ மாக்சிசவாதிகளே மொழித்துவத்தில் இறங்கி வந்தே ஆகவேண்டும். பாட்டாளி என்ற பதத்தை பாமரமக்கள் மத்தியில் சொல்லிப்பாருங்கள் என்ன பாட்டாவின் ஆளோ என்பார்கள். தொழிலாளர் என்று கூறுங்கள் குறைந்தது 10ல் குறைந்தது 8பேருக்காவது விளங்கும். இவ்விருசொற்களும் பெரிய வேறுபாடுகளைக் கொண்டவை அல்ல.
  நல்ல ஒரு மனிதனாக வாழ்வதற்கு மாக்சிசம்தான் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவில் மாக்சிசம் தெரியாதவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் அல்ல என்று எண்ணுவதைத் தவிர்க்கவும்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //முதலிடுபவன்” லாபத்தை மாத்திரம் எதிர்பார்க்கிறான். தன்னிடம் வேலை செய்பவர்களின் “வாழ்வுத்” தேவைகள் பற்றி அக்கறைப்படுவதில்லை! அங்குதான் “மார்க்ஸிஸத்தின்” தேவை வருகிறது//
  இது உண்மை ஆனால் எவருமே முதலுலே போகும் என்றால் யாரும் முதலிட வரமாட்டார்கள். என்றும் முதலிடுவன் தன் இலாபத்தைத்தான் பார்ப்பான் என்றால் அரசு தனது தலையீடை செய்யலாம் முதலுக்கு அம்போ ஆகாமல். இலகுநடையில் சொல்வதானால் சோசலிசமுறையில் சங்கக்கடை ஒரு நல்ல உதாரணம். உற்பத்தியாளரும் (உம். விவசாயிகளும்) நுகர்வோரும் (பொருட்களை வாங்குவோரும்) சந்திக்கும் நேரக்களம் என்றுமோ சாலச்சிறந்ததுதான். காரணம் தரகுமுதலாளியரின் பிடியில் இருந்த தவறிக் கொள்ளலாம். முதலாளியாவது முதலை இட்டு இலாபத்தை எதிர்பார்க்கிறான். தரகு முதலாளியோ முதலே இல்லாமல் இலாபம் சேர்ப்பான். இதைப்பற்றி மாக்ஸ்சும் பேசியுள்ளார். இப்படியான சங்கக்கடைக்களங்கள் தமது இலாபத்தைப் பன்மடங்காகிய விசயங்களை அறிந்திருப்பீர்கள். சங்கக்கடைகளே தரகுமுதலாளியாகும் நிலை உருவானது. முதலிடுபவன் இலாபத்தை எதிர்பார்க்கக் கூடாது என்பது தவறு. கொள்ளை இலாபத்தை அனியாயமான முறையில் எதிர்பார்ப்பதுதான் தவறு.

  ஐயோ எனக்கு மாக்சையும் தெரியாது மண்ணாங்கட்டியையும் தெரியாது. தெரிந்தோ தெரியாமலோ இடதுசாரித்துவம் பற்றி எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கோ

  Reply
 • chandran .raja
  chandran .raja

  குசும்பு! கேள்விகள் கேட்ககூடாதுதல்ல. கேள்விகள் கேட்பதால் தான் நியாயம் பிறக்கும் சந்தேகம் தீரும். ஆனால் உங்கள் கேள்விகள் முழுமையான குசும்புத்தனமானதும் மற்றவர்களை பைத்திகாரதனமாக்கிற கேள்விகளுமே! உதாரணம் தியாகராஜா மகேஸ்வரன் ஐக்கியதேசிய கட்சியோடும் புலிகளேடு வைத்த கள்ள உறவுளே அவரை நாலுகப்பலுக்கும் பலகோடி ஆயிரம்கோடி சொத்துகளுக்கும் அதிபதியாக்கியது. இதுதெல்லாம் மக்களின் அவலங்களில் இருந்து திருடிய சொத்தாகவே நான் கருதுகிறேன். எந்த ஒரு இடதுசாரியும் அந்தக்கருத்தையே கொண்டிருப்பான். நீங்களோ அது உழைப்பால் வந்தது என வியாக்கியாணம் செய்கிறீர்கள். உங்களுக்கு என்ன தேவையிருக்கிறது இடதுசாரிதத்துவங்களை அறிந்து கொள்வதற்கு?.
  உழைப்பைப் பற்றியே அறிந்தகொள்ள முடியாத உங்களுக்கு அபரிமிதஉற்பத்தி தேக்கநிலை மந்தநிலை உபரிலாபம் சுரண்டல் வர்க்கம் தொழிலாளர் ஐக்கியம் முதாலித்தவத்திற்கு எதிரானபோராட்டம் உலகபோராட்ட வரலாறு எல்லாம் என்ன தேவையிருக்கிறது உங்களுக்கு?
  தொழிலாளிஎன்று சொன்னால் பத்தில் எட்டுபேர் கேட்பார்கள் என்று கதையளக்கிறீர்கள். உங்கள் பதில் இப்படி இருக்கிறது. முப்பது வருடபுலிகள் தொழிலாளி என்று குரல் எழுப்பிய இடதுசாரிகளைத்தான் முதல் போட்டுதள்ளினார்கள். கையில் அகப்படாதவர்கள் தப்பி வெளிநாட்டுக் ஓடினார்கள். இதில் தென்இலங்கையில் உள்ள இடதுசாரிகள் ஓர்ரளவுக்கு மெளனம் காத்தார்கள் என்பது தான் கவலைக்குரிய இடம்.
  இது ஏன்? எதற்கு என்பதை?? விவாதம் கலந்துரையாடல் மூலம் இப்படியான தளங்களை பாவிப்பதன் மூலமே வெளிக்கொண்டுவர முடியும். இதுவெல்லாம் உங்களுக்கு தெரியாது அல்ல. இத்தளத்தை நையாண்டி பாதைக்கு இழுத்தது கொண்டு போகிற முயற்சி எவ்வளவுஉங்களுக்கு அரசியலை கற்றுத்தரும் என்று எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நீங்கள் ….. ……….

  Reply
 • பல்லி
  பல்லி

  புலம்பெயர் தேசத்தில் இடதுசாரிகள் அதுவும் தமிழில் இருப்பதாக நான் அறியவில்லை, என்ன பொறுத்தமட்டில் உன்மையான இடதுசாரிக்கு தான் இடதுசாரி என்பது தெரியாமலே இருக்க வேண்டும்; அவனது செயல் வடிவமே அவனை இடதுசாரியாக சமூகத்துக்கு காட்ட வேண்டும்;
  அதைவிட்டு படையப்பாவில் சிவப்பை கண்டால் மாடு முட்டுவதுபோல் முதலாளிமீது முட்டுவதால் இடதுசாரி என்பது சரியல்ல என்பது எனது கருத்து; இது என் பார்வை மட்டுமே,

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்ராசா! மகேஸ்வரனுக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை. உழைப்பு என்பது எம்பிடமும் இருக்கிறது இருப்பினும் அது கடிக்கிறது. உழைப்பு என்பது தொழிலாளர்களிடம் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளிலும் இருக்கிறது என்பதை தாங்கள் தயவு செய்து அறிவது முக்கியம். இந்த இடதுசாரிகள் எனத்தம்மை வரையறுக்துக் கொண்டவர்கள் பலர் அரச உதவிப்பணத்தில்; மற்றவர் வரிப்பணத்தில் தங்கியிருப்பதை எமது கண்களால் பார்க்கிறேன். சோசலிசம் பேசுவதே சோம்பேறியாக இருப்பதற்கென்ற ஜதார்த்த நிலை உள்ளது. நான் கற்பனையில் வாழவிரும்பவில்லை. குசும்பின் கேள்விகள் குசும்புத்தனமாக இருந்தாலும் அர்த்தபுஸ்டியாக இருக்கும் என்பதை மறந்து போகவேண்டாம்.

  காமராஜரோ பெரியாரோ இடதுசாரிகள் அல்ல அப்படி வாழ்ந்தவர்கள். ஒருதரம் கியூபா போய்வாருங்கள் சோசலிசம் எப்படிச் சோம்பேறிகளை உருவாக்கியுள்ளது என்பதை அறிவீர்கள். அதற்கா மாக்சை பிழை கூறவில்லை. தத்துவம் எப்படி இருந்தாலும் நடைமுறை எப்படி உள்ளது என்பதுதான் கேள்வி. சோசலிச நாடுகள் மண்கவ்வியதற்கு இதுவே காரணம். கொள்ளை இலாபம் அடிக்காது முதலாளியா இருப்பது தப்பு என்கிறீர்களா? இந்த இடதுசாரிநாடுகள் சோசலிசத்தை பயிற்சித்த நாடுகள் வலதுபக்கம் சாய்வதற்குக் காரணம் என்ன? மற்றவலதுசாரி நாடுகளைக் குற்றம் சொல்லாமல் இடதுசாரித்துவத்தால் முழுமையாக நின்று பிடிப்ப முடியவில்லை என்பதை மனதார ஒப்புக்கொள்ளுங்கள். என்னைப் பொறுத்துமுறையில் மதவாதிகள் போல் எத்தனையோ வருடங்களின் முன் எழுதப்பட்ட புனிதநூல்கள் எனும் புத்தெடுத்த நூல்களை உண்மை வாழ்க்கையை மழுங்கடிக்கப் பாவிப்பது போல் மாக்சிசத்தையும் மழுங்கக்கிறார்கள். நந்தா எழுதியது போல் மாக்சித்துடன் கைகோத்த சிலநாடுகள் தொழிற்சங்கம அமைப்புக்குக் கொடுக்கும் அதிகாரத்தை இடதுசாரிநாடுகள் கொடுக்கவில்லை. மாக்சிசத்தை தமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு எற்ப மாற்றி அமைத்துள்ளார்கள். உ.ம் வரி அறவிடும் முறை. இதில் நல்லது கெட்ட இருந்தாலும் முயற்சி வெற்றி கண்டுள்ளது.

  மகேஸ்வரன் கொள்ளைக்காரன் தான் அவர் அரச உதவிப்பணத்தில் சோம்பேறியாக இருந்து கொண்டு சோலிசம் பேசிக்கொண்டிருப்பது தான் சரி என்கிறீர்களா? இலாபமில்லாது யார் முதல்போட வருவார்கள்? நீங்கள் வருவீர்களா? அப்படி முதல்போடுவது தானம் கொடுப்பது என்றே கருதப்படும். அந்த இந்த மாக்ஸ் மண்ணாங்கட்டிகள் எமக்கு வேண்டாம். ஜதார்த்தம் என்பது தான் இன்றை தேவை. அன்று கிரகாம் பெல் தொலைபேசியைக் கட்டுபிடித்தார். வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் நன்றியாக நினைவு கூறுகிறோம். அதற்காக அவர்கண்டுபிடித்த அதே தொலைபேசியைத்தான் பாவிப்போம் என்று அடம்பிடித்தால் இன்று எமக்குக் கையடக்கத் தொலைபேசிகள் கிடைத்திருக்காது. இதைப்போலவே வளர்ந்த ஐரொப்பிய நாடுகள் மாக்சின் தத்துவங்களை தனிமனித முயற்சியை: இலாபத்தை ஏன் முதலுள்ளோரையும் சமூக அங்கங்களாகக் கொண்டு வெற்றி கண்டுள்ளன. இதற்கு எதிர்மாறானதே யு எஸ் எஸ் ஆர் இன் லாடா கார்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன்- ஒவ்வோரு மனிதனும் சுயநலம் கொண்டவன் தான். பொதுநலம் கூட சுயநலத்தில் தான் எழுந்த நிற்கிறது. ஏன் தியாகங்களும் அப்படியே. தனக்கு இலாபம் இல்லாதவரை தொழில் என்பது கூலிக்கு மாரடிப்பது போன்றதே. இதன் விளைவுதான் இடதுசாரிநாடுகள் பொருளாதார ரீதியில் மண்கவ்வியதற்குக் காரணம். மற்றைய நாடுகளில் உழைப்பதற்கு ஊக்குவிக்கும் தனிமனித யுக்தி இடதுசாரித் துவத்துவத்துதில் இல்லை. தத்துவங்களைத் தூக்கிப்போடலாம். இதுதான் நடைமுறை உண்மை. பத்துவருடம் படித்தவன் அவன் அறிவுக்கேற்ப தொழிலில் தேவைக்கேற்ற ஊதியம் (எல்லோருக்கும் ஒரே சம்பளம்) என்று வரும்போது ஊக்குவிப்பு எப்படி இருக்கிறது. தனிமனிதர்களின் கூட்டமே ஒரு சமூகம் தனிமனிதன் தனது செய்கைக்கு போதியபலன் இல்லை என்னும்போது ஆர்வர் ஊக்கம் என்பன கூலிக்கு மாரடிப்பாகத்தான் இருக்கும். மீண்டும் நான் சொல்லமுயல்வதை ஆணித்தரமாக ஆணிக்கவிதையின் கீழ் சொல்கிறேன். காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கிரகிக்க முடியாத தத்துவங்களோ மதங்களோ தனிமனிதர்களோ தோல்வியையே சந்திப்பர் என்பது தவிர்க்க முடியாதது. புலிகளின் தோல்விக்கும் இந்த ஜதார்த்த உண்மையே காரணம். நான் மாக்ஸ் இல்லை தத்துவம் எழுதுவதற்கு. இருந்தாலும் ஜதார்த்த உண்மையை எழுதியுள்ளேன்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //அவனது செயல் வடிவமே அவனை இடதுசாரியாக சமூகத்துக்கு காட்ட வேண்டும்; அதைவிட்டு படையப்பாவில் சிவப்பை கண்டால் மாடு முட்டுவதுபோல் முதலாளிமீது முட்டுவதால் இடதுசாரி என்பது சரியல்ல என்பது எனது கருத்து;// பல்லி

  இதுதான் உண்மை. மாக்ஸ் சொன்னதை அப்படியோதான் கடைப்பிடிப்போம் சமூக கலாச்சார புவியியல் நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களையோ மாக்சின் கருத்தை புதிய படிகளுக்கு உயர்த்தமாட்டோம் என்று அடம்பிடித்ததின் விளைவுகள்தான் சோவித்யூனியனின், யுகோசிலாவியா, போன்ற இடதுசாரி நாடுகளின் உடைவும் பொருளாதார அழிவும் இன்று கியூபா வடகொறியா போன்றவை என்ன நிலையில் உள்ளன என்பதை எல்லோரும் தான் பார்க்கிறோம். கிழக்குயேமனி போலந்தின் மாற்றங்களும் நாம் பார்க்கும் உண்மைகள். இரஸ்சிய லாடா கார் எத்தனையோ வருடங்களாக ஒரேமாதிரி மாற்றம் வளர்ச்சிகள் இன்றி இருந்து. அதை ஐரொப்பா எடுத்ததும் அதன் மாற்றம் பொருளீட்டும் தன்மை தரம் எப்படி மாறுபட்டுள்ளது என்பதை பார்க்கலாம். சட்டரீதியாக வளர்ந்த ஐரொப்பிய நாடுகள் மாக்சின் கொள்கையுடன் உடன்பட்டுள்ளன. ஆனால் அதை வேறுமுகமாக தொழிற்சங்க அதிகாரம், வரி, உதவிப்பணம் இப்படி வேறுவடிவங்களுக்கு மாற்றிப் பயன்படுத்துவதுடன் தனிமனிதசுதந்திரம் பாதிக்காதவாறு பயன்படுத்துகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன். பல்லி எடுத்ததுக் கெல்ல்லாம் முட்டினால் கவிண்டு கிடக்க வேண்டியதுதான். பல்லியின் பாசையில் மல்லாந்து கிடந்த வானத்தை நோக்கித் துப்புவது எனலாம். குசும்புவின் பாசையில் சொல்வது என்றால் கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் கட்டிவைத்தா அடிக்க முடியும். இந்த இடதுசாரிநாடுகளுக்குப் போய் தமது கருத்துக்களுடன் சீவிக்க வேண்டியது தானே. சும்மா இங்கிருந்து கொண்டு எங்கள் கழுத்துக்களை ஏன் அறுக்கிறார்கள். இது குசும்புவின் மொழி

  Reply
 • மாயா
  மாயா

  சமத்துவம் பேசுவற்கு அழகானது. ஆனால் அதைப் பேசுபவர்களே கடைப் பிடிப்பதில்லை. ரசியாவுக்கு படிக்கப் போக கமியுனிசவாதிகளான பலரை எனக்குத் தெரியும். பேசிக் கொண்டே வாழ்வார்கள். எந்த வேலை வெட்டியும் செய்ய மாட்டார்கள். புலத்திலும் அரசு கொடுக்கும் உதவிப் பணத்தில் வாழும் பலர் சோசலிசம் பேசுவோர்தான் என்றால் அது பொய்யில்லை. எழுதுவார்கள். கதைப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேளுங்கள். ஒன்றுமில்லை என்பார்கள். பேசிப் பேசியே காலத்தை கழிக்கும் சோம்பேறிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

  மாக்சும் – லெனினும் – எங்கெல்சும் அன்று சொன்ன தத்துவங்கள் நல்லவைதான். அதையே கொண்டு போய் எல்லா இடத்திலும் திணிக்க முயல்வது படு மொக்குத் தனம். அங்க அப்படி ; இங்க இப்படி என்பார்கள். நமக்கு எப்படி என்று சொல்லவே மாட்டார்கள். மத போதகர்களே தமது மதங்களை காலத்துக்கு காலம் மெருகு பண்ணியிருக்கிறார்கள். இந்த சோசலிசவாதிகள் அதே கோட்பாட்டுக்குள் ( கோட்டுக்குள்) இறுகி வெளியே வருவதேயில்லை. எந்தவொரு மாற்றத்தையும் செய்வதுமில்லை. அங்கேயே நின்று லெப்ட் றைட்தான் போடுவார்கள்.

  Reply
 • நந்தா
  நந்தா

  “மூலதனம்”, “லாபம்” என்பன பற்றி பேசுபவர்கள் மூலதனத்தின் “திரட்சி” எப்படி நடை பெறுகிறது என்பதனை ஆராயாது முதலிட்டவர்கள் என்று ஒரு சாராரை உயர்த்துவது சரியாகப் படவில்லை.

  யாழ்ப்பாணத்தில் கள்ளக்கடத்தல் மூலம் திரண்ட மூலதனம் “எதனையும் சாதிக்கலாம் என்று ஒரு வரட்டு சித்தாந்தத்தை உருவாக்கியதையும், அதனால் “தமிழ் ஈழம்” என்று ஒரு அடங்காப் பிடாரித்தனத்தையும் அதன் அழிவுகளையும் இந்த நேரத்தில் ஆராய்வது நல்லது.

  யாழ்ப்பாணத்தில் “கள்ளக்கடத்தலோடு” தொடர்பில்லாத வியாபாரிகளையும், “பெரிய மனிதர்களையும்” காண முடியாத ஒரு சூழல் இருந்தது.

  சிங்களப் பகுதிகளில் வியாபரம் செய்யப் போன தமிழர்கள், பெரும்பாலும் தீவுப்பகுதியினர், எப்படிநடந்து கொண்டனர் என்பதையும் அவர்களைப் போலவே சகல தமிழர்களும் இருப்பார்கள் என்று சிங்கள மக்கள் நம்பியதும் வகுப்புக் கலவரங்கலுக்கு அவர்களுடைய செயல்பாடுகளும் காரணங்களாக அமைந்தன என்பதையும் சிந்திப்பது நல்லது.

  தமிழர்கள் என்ற ரீதியில் இலங்கையில் பரிதாப வாழ்வு வாழ்பவர்கள் மலையகத் தமிழர்கள். அவர்களுக்கு இல்லாத இந்த “வீரம்” கள்ளக் கடத்தல் கோஷ்டிகளுக்கும், யாழ்ப்பானத்து வியாபாரிகளுக்கும் எப்படி வந்தது?

  குறுக்கு வழியில் எற்பட்ட “மூலதன” வளர்ச்சி அரசியலிலும், அநியாயம் மூலமாக அதிகாரம் பெறலாம் என்பது வரை இட்டுச் சென்றுள்ளது.

  அந்த “மூலதனத்துக்கு” இன்றுநடந்தது என்ன? திரும்பவும் 1965க்கு வந்துநிற்கிறோம். ஆனால் கிடைத்த இழப்புக்களை யார் கொடுப்பார்கள்?

  மார்க்சிசம் புரியாதவர்கள் அல்லது மார்க்சிசத்துடன் சமரசம் செய்துள்ள மேற்கு நாடுகளின் நடைமுறைகள் அல்லது அரசியலை அறியாது விடும் விமர்சனங்கள் பரிதாபகரமானவை.

  வியட்னாமில் லட்சக் கணக்கில் மக்களைக் கொன்று கம்யூனிசத்தை அழிப்பதாக கங்கணம் கட்டிய அமெரிக்க இன்று சீனாவுடன் மல்லுக்கு நிற்கவில்லை, மண்டியிட்டு நிற்கிறது.

  இதனால் சீனா தொலைந்தது கம்யூனிசம் அழிந்து விட்டது என்று யாரும் கொட்டாவி விட வேண்டாம்! கம்யூனிசத்துடன் சமரசம் செய்யவே இப்பொழுது அமெரிக்காவும் சகபாடிகழும் அலைகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது.

  முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் இலங்கயில்நடந்து முடிந்துள்ள அழிவுகளுக்கு என்ன காரணத்தைக் கண்டு பிடித்துள்ளனர்?

  Reply
 • chandran .raja
  chandran .raja

  குசும்புவின் கேள்விகள் குசும்புத்தனமாக இருந்தாலும் அர்த்தபுஷ்யாக இருக்கும் என்பதை குசும்பு நீர்சொல்லக் கூடாது. இதை இன்னொருவர் சொல்வதே அர்த்தம் நிறைந்தாக இருக்கும் என்ற விபரத்தையாவது குசும்பு அறிந்து கொள்ள வேண்டும்.

  இடதுசாரிகள் யகோவாவின் சாட்சிகளாக மாறி குசும்புவின் கதவை தட்டி கழுத்தறுக்க முற்பட்டால் அது கண்டிக்கப் படவேண்டியதே!.
  குசும்புக்கு அறியாத ஒன்றையும் சொல்லித்தான் தீரவேண்டும் சோவியத் யூனியனாக இருக்கட்டும் சீனவாக இருக்கட்டும் கொறியா கீயூபாவாக இருக்கட்டும் உலகத்தில் எந்தநாட்டையும் தமது பணவலிமையினால் ஒருகாலனிநிலைக்கு இதுவரை தள்ளியதில்லை. கடந்த பத்துவருடங்கள் இந்த நிலைக்கு சீனாமாற்றப்பட்டுவருகிறது என்பது யதார்தம். சிறியநாடான கீயூபா அமெரிக்காவின் பொருளாதரதடையூடாகத் தன்னை நிலைநிறுத்தி தனது சமூகநிலகளை கட்டமைத்து வைத்திருக்கிறது.விகிதாசாரத்தில் பலவைத்ததியர்களை முதாலித்துவநாடுகளைவிட பயிற்றுவித்திருக்கிறது. அதைவிட தனதுநட்பு நாடுகளுக்கு நிபந்தனையில்லாத உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறது. மாடிவீடுகள் புதியபுதிய வாகனங்கள் அந்த நாட்டில் இல்லைத்தான்.ஆனால் வீடுகள் இல்லாமல் தெருவில் படுத்துறங்குபவர்கள்அமெரிக்காவின் சிறுநகரத்தில் இருக்கும் தொகையை விட மிகமிக குறைவானதே. மனிதனையும் மற்றைய ஜீராசிகளையும் ஒப்பிடுகிற உமக்கு ஜீவராசிகள் உற்பத்தியில் ஈடுபவதில்லை என்பதும் தமது உழைப்புசக்தியை விற்பதில்லை என்பதும் தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரிமில்லை.

  Reply
 • BC
  BC

  //குசும்பு – சட்டரீதியாக வளர்ந்த ஐரொப்பிய நாடுகள் மாக்சின் கொள்கையுடன் உடன்பட்டுள்ளன. //
  அது மட்டுமல்ல பண்டையகாலத்தில் இந்துமதம் அன்னதானம் செய்வதற்க்கும் கார்ல் மார்க்ஸ்சுடன் அந்த மதத்தை சார்ந்தோர் உடன் பாடு செய்து கொண்டனர்.கனடா போன்ற ஜனநாயக தவறு முதலாளித்துவ நாடுகளில் நடத்தப்படும் சிறந்த சமூக நலதிட்டங்கள் கூட கார்ல் மார்க்ஸ்சுடன் உடன் பாடு செய்து தான் நடத்தபடுகிறது. உலகத்தில் நடக்கும் நல்ல விடயங்கள் எல்லாம் கார்ல் மார்க்ஸ்சுடன் உடன் பாடு செய்து தான் நடத்தபடுகிறது.கடி தாங்க முடியவில்லை.

  Reply
 • kamal
  kamal

  குசும்புவின் கேள்விகள் அர்த்தபுஷ்டியானவையே

  Reply
 • பல்லி
  பல்லி

  குசும்பு இது வாதமல்ல உன்மை சம்பவம்;
  சிலவேளை நீங்களும் பார்த்திருக்கலாம்; (சந்திரராஜா இது உங்களை வம்புக்கு இழுப்பதுக்காக அல்ல நீங்களே எங்கள் மூலதனம்) பல்லி (ஆண்டு வேண்டாம்) ஒருமுறை தமிழகத்தில் ஒரு கம்யுனிச தோழர்(நண்பர்தான்) பட்டுகோட்டையில் அவரை சந்திக்க போயிருந்தேன்; அவர் என்னை மதிய சாப்பாட்டுக்கு தனது தோழரின் உணவு விடுதிக்கு கூட்டி சென்றார், பலதையும் சமூகம் பற்றி பேசினோம்; விடுதிக்கு சென்றது விடுதி உரிமையாளர் வந்து கைகட்டி நின்றார் (கவனிக்கவும் கை கட்டி நின்றார்) அதுவே எனக்கு சங்கடமாக இருந்தது, அதன்பின் ஒரு 08 வயது நிரம்பிய ஒரு குழந்தை தொழிலாழி எம் இருவருக்கும் சாப்பாட்டுக்கு இலை போட்டான்; ( என் மனநிலை மோசமாக மாறியது) நேரடியாகவே அந்த தலமையிடம் இது தவறு இல்லையா என கேட்டேன், பல்லி இது நானோ நீங்களோ முடிவு செய்யும் விடயமல்ல; அவனது வறுமையே அவனை இங்கு இலை பொறுக்க அனுப்பியது என சொன்னவர் மிக சக்த்திவாய்ந்த ஒரு இடதுசாரி, சாப்பிட்டு முடிந்ததும் அந்த சிறுவன் வந்து இலை எடுத்தான், அவன் கவனம் இலை எடுப்பதை விட அந்த இலையில் உள்ள மிகுதி உணவிலேயே இருந்தது, என்னை சாப்பாடுக்கு கூட்டி சென்றது மிக பேயர் பெற்ற இடதுசாரி, உணவக உரிமையாளர் ஒரு இடதுசாரி, ஆனால் அங்கு எச்சில் இலை எடுப்பது ஓர் ஏழை சிறுவன் வாழ்க இடதுசாரி நாமம்: இந்த அனுபவம் எனது கணிப்பு சரியாக இருக்குமானால் குசும்புவுக்கும் கிடைத்திருக்கும்;

  Reply
 • chandran .raja
  chandran .raja

  முதாலித்துவத்திற்கு முந்திய காலத்தில் பிறரை கூலிக்கமத்துக் கூடிய உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கக்கூடிய மூலதனம் தோன்றவில்லை.
  விவசாயத்திலும் கைதொழிலும் ஈடுபட்டவர்கள் தங்களின் உபயோகம்போக உபரியாக இருந்த சிறுதளவு பொருள்களை விற்பனை செய்தார்கள். இந்த விற்பனைமூலம் சிறிதளவு பணம் சம்பாதித்தார்கள். இன்றைய காகிதநோட்டுகள் அன்று இருக்கவில்லை. உலோகநாணயங்கள் தான் இருந்தன.
  சுய உழைப்பு உற்பத்தியாளர்கள் களிடம் இருந்த பொருட்களை வாங்கி அவைகள் தேவைப் பட்டவர்களுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட வர்த்தகர்களும் ஓரளவு பணம் சம்பாதித்தார்கள். அவர்கள் விற்பனை செய்த பொருளின் விலைக்கு அதன் மூலம் கிடைத்த லாபத்திற்கு அடிப்படை. இந்த காலத்தில் மூலதனம் பெருகவில்லை.

  பட்டறைதொழில் வளர்ச்சி அடைந்த பொழுது தான் சிலர் உடமையாளர்கள் ஆகவும் பலர் உடமையற்ற உழைப்பாளர்களாகவும் ஆனபோது தான் உழைப்புசக்தி விற்பனை பொருள் ஆகிறது. உழைப்பின் ஒருபகுதிமட்டும் கூலியாகவும் இன்னொரு பகுதி உபரிமதிப்பு-லாபமாகவும் மாறியது. உடமையாளர்களிடம் உபரிகுவிந்து மூலதனம் பெருகிறது. உழைப்பாளி கூலிக்காரனாகவே வறுமை நிலையில் காலம் பூராகவும் வாழ்ந்தான். இந்த முறையில் தான் மூலதனம் பெருகியது. உழைப்புசக்தியை விலைக்கு வாங்கும் பணம்தான் மூலதனத்தை பெருக்கும் மூலதனம். வர்த்தகர் வட்டிக்காரர்களிடம் உள்ளபணம் மூலதனம்மல்ல. கைமாறக்கூடிய பணம்மட்டும்தான். பெருகாது.

  எட்டாவது ஹென்றி 1530-இல் வெளியிட்ட ஆணைக்கு ஏற்ப வேலைமுடியாதவர் ஆன வயோதிப பிச்சைக்காரர் லைசன்ஸ் பெற்றனர்.மறுபுறம் திடமான நாடோடி களுக்கு கசையடியும் சிறைத்தண்டணையும் கிடைத்தது.அவர்கள் வண்டியும் பின் புறம்கட்டி வைக்கப்பட்டு உடம்பில் இரத்தம் பீறிடும்வரை கசையடி பெறுவர். பிறகு தாங்கள் வாழ்ந்த ஊருக்கோ அல்லது கடந்த மூன்றுறாண்டுகள் அவர்கள் எங்கே வாழ்ந்தார்களோ அங்கே போய் “உழைப்பில்ஈடுபடுவதாக” வாக்குறுதியளித்து சபதம் ஏற்கவேண்டும். என்ன பயங்கரகேலிக் கூத்து! எட்டாம்ஹென்றியின் ஆட்சியில்27ஆவது ஆண்டில் பிறப்பித்த சட்டம் மீண்டும் புதிய பிரிவுகள் சேர்கப்பட்டு வலுப்ப்படுத்தப் பட்டது.நாடோடியாகத் திரிந்த ஒருவர் இரண்டாம் முறையாக் கைது
  செய்யப் பட்டால் மீண்டும் கசையடி பெறுவதோடு அவரது பாதிக்காதும் அறுக்கபடும். மூன்றாவது தடவையாக கைது செய்தால் இந்த நபர் காய்த்துபோன குற்றவாளி பொதுநலத்தின் விரோதி என்பதாக கருதப்பட்டு மரணதண்டணை விதிக்கப்படும். இதுதான் முதாலித்துவம் தோன்றிய காலத்தின் வரலாற்றின்நிலை.முதாலித்தவ சமூகம் என்பது நிலப்பிரபுத்தவத்தடன் ஒப்பிடும் போது வரலாற்றுரீதியாக ஒரு
  முன்னேற்றம்மதான். ஆனால் நிலப்பிரவுத்துவ விவசாயபண்ணையிலும் கைத்தொழில் பட்டறைகளிலும் உழைத்ததைக் காட்டிலும் முதாலிகளின் ஆலைகளில் மிகவும் கடுமையாக 15/16 மணிநேரம் “சுகந்திர” தொழிலாளி உழைக்க வேண்டியிருந்தது.இந்தகொடுமையில் இருந்து விடுதலை பெறவே அவர்கள் நாடோடிகளாக பிச்சைக்காரர்களாக திருடர்களாக சுற்றித்திரிந்தார்கள்.ஆனால் அவர்களின் உழைப்பு மூலதனவளர்ச்சிக்கு இன்றியமையாதது.ஆகவே சித்திரவதை செய்து காட்டாயப்படுத்தி வேலைவாங்கப் பட்டார்கள்.மறுப்பவர்களை கொல்லவும் அவர்கள் தயங்கவில்லை.இத்தகைய கொடுமைகளைப் புரிந்து மனித உழைப்பைச் சுரண்டித்தான் மூலதனத்தை பெருக்கினார்கள்.முதாலித்துவவர்க்க ஆய்வாளர்கள் சொல்வது போல “சிக்கனமாக வாழ்ந்து” சேமித்தல்ல மூலதனம்.
  மூலதனத்தை பெருக்குவதற்கு உழைப்பை சுரண்டுவது தான் ஒரேவழி. மூலதனத்தின் உடமையாளர்கள் உடமை ஏதும் இல்லாத உழைப்பாளிகள்
  என்ற வேற்றுமைதான் முதாலித்துவ சமுதாயத்தின் அடிப்படை அம்சம். ஆகவே உடமைகள் ஏதும்இல்லாத உழைப்பாளிகள் கூட்டத்தை உருவாக்குவது தான் முதாலித்துவ வளர்ச்சியின் முதல் தேவையாகிறது. நிலப்பிரவுத்தவ காலத்தில் பண்ணையடிமையாக இருந்த விவசாயிகள் கூட நிலப்பிரபுகளினால் அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து வாழ்வும் வசதியும் பெற்றான் இதற்காக அவன் நிலப்பிரபுவின் பண்ணையில் கூலிபெறாமல்உழைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் இருப்பினும் வாழ்கைக்கு உரியசொந்த உடமைகளை கொண்டிருந்தான்.கைத்தொழில் பட்டறைத்தொழில் யந்திரதொழில் ஆலைகளாக மாறியகாலத்தில் நிலத்திலிருந்து பண்ணை விவசாயதொழிலாளி வெளியேற்றப்பட்டு அவனது பிழைப்புகாக சாகுபடியிருந்தநிலம் மேச்சல் நிலமாக மாற்றப்பட்டது. ”நிலத்திலான சொத்துடமை ஒழிக்கப்பட்டதே அவன் பாட்டாளியானத்திற்கான காரணம். இறுதியாக ஒட்டாண்டியாவதந்கும் காரணம்”.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  மாக்சியக்கருத்துக்களை எதிர்த்து முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன் என்ற அர்த்தத்தில் பின்னோட்டங்கள் வருவது முற்றிலும் தவறு. எதை எடுத்தாலும் மதத்தினுள் புதைத்த மதக்கண்ணாடியினூடு பூதாகாரம் பண்ணுபவர்களைப்போல் எதை எழுத்தாலும் மாக்சை இழுத்து தெருவில்போட்டடிக்கும் நிலைதான் வேண்டாம் என்கிறோம். இடதுசாரித்துவத்துடன் உடன்பாடு வெற்றிகண்ட ஐரொப்பிய நாடுகள் மாக்கிசத்தை முழுமையாக அப்படியே அச்சுத்தவறாமல் பயன்படுத்தவில்லை. தமக்குத் தேவையானவற்றை எழுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட்டார்கள். தொழிலாளி தொழிலாளி என்கிறீர்களே முதலாளி என்ற ஒருவன் இருந்தால்தான் தொழிலாளி என்பவன் இருக்க முடியும்.
  கள்ளக்கடத்தல் கொள்ளைக்காரர்களுக்குள் தான் அடங்குவார்கள். ஒரு சில தீவுப்பகுதயினரின் செயல்களை பொதுமைப்படுத்துவது சரி என்று எனக்குப் புரியவில்லை. மேலும் இடதுசாரித்துவப்படி இவர்கள் உற்பத்தியாளர்களோ பாவனையாளர்ளோ அல்லது. முலாளித்துவத்தின் உச்சக்கட்ட தரகு முதலாளிகள். அதாவது முதலே இல்லாத முதலாளிகள்.

  மாயவின் கருத்துடன் உடன்படுவதோடு எந்த ஒரு சிறுபிரச்சனையையும் மாக்சின் கண்ணால் பார்க்காதீர்கள் என்று தான் சொல்லவருகிறோம். சரி கவிதையின் ஆரியவதியின் பிரச்சனையில் இடதுசாரித்துவம் என்ன பண்ணியது. குறைந்தபட்சம் ஒரு குரல்? ஐக்கியவாதிகள் எங்கே? சரி தேசிய சிங்களவாதிகள்தான் எங்கோ? தமிழ் இடதுசாரிகள் எங்கே. ஈபிஆர்எல்எவ் இல் இருந்து வந்த ஈபிடிபி எங்கே. எல்லாம் வாய்வீரம்தான் செயலளவில் தனிய அரோகராவேதான்.

  //குறுக்கு வழியில் எற்பட்ட “மூலதன” வளர்ச்சி அரசியலிலும், அநியாயம் மூலமாக அதிகாரம் பெறலாம் என்பது வரை இட்டுச் சென்றுள்ளது// நந்தா இக்கருத்துடன் மறுதலிப்பு எனக்கில்லை என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன். தத்தவங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை அப்படியே பயன்படுத்தும் போது தவறுகள் ஏற்படின் அவற்றை சூழலுக்கேற்ப மாற்றியமைப்பது அவசியம். சீனாவில் கமினிசம் அழிந்துவிடவில்லை ஆனால் மாவேயிசம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்ற கேள்வி முன்னிலைப்படுத்தப்படுகிறது. மாவேவினால் எற்படுத்துப்பட்ட கலாச்சாரப்புரட்சி தடம்புரண்டு போய் இருக்கிறது. உ.ம். உகுரு முஸலீங்கள். தொழிலாளர்களுக்கும் அரசியல் பீடங்களில் இருப்பவர்களுக்குமான வித்தியாசங்கள் அங்கே பொதுபுடமைச் சமன்பாடு தவறியுள்ளதை உணரலாம். வெளிநாட்டு மூலதனங்களின் உள்ளுளைவு சீனாவுக்குத் தேவைப்பட்டது அங்குள்ள பொருளாதார நிலையைச் சீர்படுத்த. தாய்வான், தீபேத், நேபாளம், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை ஒரு இடதுசாரித்துவப் போக்கைக்காட்டுகிறதா என்று உண்மையாக நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். உண்மையா நீங்கள் மாக்சையோ மாவோவையோ நேசித்திருந்தால். அமெரிக்காவோ ஐரோப்பாவோ சீனாவுடன் கூட்டுச் சேர்வது சீனாவின் கமியூனிசத்தை விரும்பியல்ல. சீனா முதலாளித்துத்தின் பக்கம் சாய்கிறது என்பதுதான் உண்மை. சீனாவுடன் அமெரிக்கா கைகோர்ப்பது சீனாவின் நலனிலோ அல்லது கம்யூனிசத்தை விரும்பியோ அல்ல. எல்லாம் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதகதைதான். மூலவளங்களை சுரண்டுவதுடன் தன் முதலை பெருக்குவதேயாகும்.

  ஐரோப்பாவில் அமெரிக்கா போதிய ஆட்டம் கட்டுவிட்டது ஈயு வும் ஒரு முக்கியகாரணம். இனிச் சொரியாலான நாடுகள்தான் மூலவளச் சுரண்டலுக்கு அத்திவாரம். ஐரொப்பாவோ அமெரிக்காவோ மூலவள உற்பத்தி நாடாக இருந்ததில்லை. மூன்றாம் உலகநாடுகளின் மூலவளங்களைச் சுரண்டி தம்தயாரிப்புகளை அவர்களுக்கே விற்று இரட்டை இலாபம் சம்பாதித்த தரகு முதலாளிகளாகவே இவை இருந்து வந்துள்ளன. உலகமயமாதல் என்ற போர்வையில் காலணித்துவ வரலாறு மீண்டும் தொடர்கிறது என்பதே என்கருத்து. மேலும் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை சரியான இடதுசாரித்துவத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்று சொல்ல முடியுமா? அமெரிக்காவுக்குச் சமனான முதலாளித்துவப்போக்கையே காட்டி நிற்கிறது. உலகில் எங்கும் இடதுசாரித்துவம் சாகவில்லை. ஆனால் எங்கும் அது முழுமையாக வெற்றிபெறவில்லை என்பதுதான் உண்மை.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பிசி- ஒருவர் ஒருசில நல்லவிசயங்களைச் சொன்னார் என்பதற்காக அவர் சொல்லும் அத்தனையும் சரி என்றாகாது. கால்மாக்ஸ் சென்ன சிலவிசயங்களுடன் ஐரொப்பா உடன்பட்டதால் சிலவிசயத்தை தமது அரசியலில் நாட்டுச்சட்டங்களில் புகுத்தினர். சந்தரன்ராசாவைப்போல் மனிசியோடை பிரச்சனை என்றாலும் மாக்சை எழுப்பதுதான் தவறு என்கிறேன். பிசி//நல்ல விடயங்கள் எல்லாம் கார்ல் மார்க்ஸ்சுடன் உடன் பாடு செய்து தான் நடத்தபடுகிறது.கடி தாங்க முடியவில்லை.// இதுதான் எனதும், பல்லி, மாயா போன்றோரின் கேள்விகள். இடதுசாரித்துவம் தான் சரி என்பவர்கள் ஏன் வலதுசாரிப்போக்குடைய நாடுகளில் தொங்குகிறீர்கள். மாக்ஸ் இதற்கும் ஏதாவது சொல்லியிருப்பாரே உங்களுக்காக பார்த்துச் சொல்கிறீர்களா சந்திரன்?

  சந்திரன்! //குசும்புவின் கேள்விகள் குசும்புத்தனமாக இருந்தாலும் அர்த்தபுஷ்யாக இருக்கும் என்பதை குசும்பு நீர்சொல்லக் கூடாது. இதை இன்னொருவர் சொல்வதே அர்த்தம் நிறைந்தாக இருக்கும் என்ற விபரத்தையாவது குசும்பு அறிந்து கொள்ள வேண்டும்// இதற்குப்பதில் கமல் என்று ஒருவர் எழுதியிருக்கிறார் ஒருவரிதான் நறுக்காக இருக்கிறது. வாசிக்கவும்.

  பிசி கூறியது போல் சந்திரன்ராசாவின் கடிதாங்க இயலாமல்தான் மல்லுக்கு வந்தேன்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன் //குசும்புக்கு அறியாத ஒன்றையும் சொல்லித்தான் தீரவேண்டும் சோவியத் யூனியனாக இருக்கட்டும் சீனவாக இருக்கட்டும் கொறியா கீயூபாவாக இருக்கட்டும் உலகத்தில் எந்தநாட்டையும் தமது பணவலிமையினால் ஒருகாலனிநிலைக்கு இதுவரை தள்ளியதில்லை// இதை உங்களது முழுச்சுய நினைவுடன்தான் சொல்கிறீர்களா? இடதுசாரித்துவம் சோவியத்யூனியனில் இருந்த நாடுகள் காலணித்துவக் கணக்கெடுப்பில் இருந்தபடியால்தான் பிரிந்தன என்பது புரியவில்லையா. உக்கிரேனியாவில் தயாரிக்கப்பட்ட மின்சாரம் அம்மக்களுக்கே கொடுக்காமல் அரசியலில் இருந்த உயர்மட்டத்தால் சுரண்டப்பட்டது இப்படிப்பல உதாரணங்கள் உண்டு. வடகொரியா தென்கொரியா பிரிந்ததற்கு யார் காரணம். இது சோவியத்தின் காலணித்துவப்பின்னணி இல்லை என்கிறீர்களா. சரி இன்று சீனாவின் வெளிநாட்டுக்கொள்கை என்ன மாவே இசமா? இதைவிட பிரபாகரனிசமே மேல் எனலாம்.

  // பணவலிமையினால் ஒருகாலனிநிலைக்கு இதுவரை தள்ளியதில்லை/ பணவலிமை இடதுசாரி நாடுகளுக்கு இருக்காது. உந்தப்பணத்தினால்தானே சோவியத் சீனா திறக்கப்பட்டது ஏன் நீங்கள் கூட ஐரொப்பாவில் இருப்பது அந்தப் பணத்துக்காகத்தானே. ஏன் பணம்சம்பாதிப்பதே தவறு என்று மாக்ஸ் எங்காவது சொல்லியிருக்கிறாரா? இதனால்தான் சோசலிசம் பேசுபவர்கள் பலர் சோசலிலும் சோம்பேறியாகவும் இருக்கிறார்கள். ஏதாவது மாக்ஸ் சொல்லியிருந்தால் சொல்லுங்கள் இன்னும் சில சோம்பேறிகளை உருவாக்குபோம். கியூபாவைப்பற்றி வெளியில் இருந்து சொல்லும் நீங்கள் சொல்வது ஆகா ஓகோ என்பது போல் இருக்கிறது. நான் போய் இருந்து வந்தவன் என்பதால் சொல்கிறேன் ஐந்துபேருக்கு ஒரு வைத்தியன் என்று உள்ளனர் ஆனால் தொழில் இல்லையே. றோட்டில் டொலரைக்காண்டால் போதும். வெள்ளையரைக் கண்டவுடன் காதலிக்கம் நிலை. நேரில் கண்டவன் என்பது மட்டுமல்ல குந்துரஞ்சும் சனம் மிக அதிகம்.

  தயவுசெய்து யாருக்காவது இதுவிளங்குகிறதா? விளங்கினால் இதுசரியா என்று பாருங்கள் இதோ//மனிதனையும் மற்றைய ஜீராசிகளையும் ஒப்பிடுகிற உமக்கு ஜீவராசிகள் உற்பத்தியில் ஈடுபவதில்லை என்பதும் தமது உழைப்புசக்தியை விற்பதில்லை என்பதும் தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரிமில்லை// சோசலிசம்பேசும் மனிதஜீவன்களையும் மதத்தை மண்டையில் கொண்ட மனிதஜீவன்களையும் தவிர எந்த ஜீவன் உற்பத்தியில் ஈடுபடவில்லை. யாராவது சொல்லங்கள். சந்திரன் இதற்குப்பதில் சொல்லுங்கள். எனக்கு இப்பதான் புரிகிறது சோசலிசம் பேசுவோர் ஏன் சோம்பேறிகளாக உள்ளார்கள் என்று. மண்புழுக்கூட உற்பத்தி செய்கிறது சந்திரன். ஒருசாண் வயிற்றுக்காக உழைப்பு எங்கும் எல்லா ஜீவன்களாலும் விற்கப்படுகிறது. உழைக்காதவரை வயிறு பட்டிணி. என்னவிதமான சமூகத்தை உருவாக்க முயல்கிறீர்கள்? உங்கள்க்கு வானத்தில் இருந்து மாக்ஸ் ஏதாவது போட்டுக்கொண்டிருக்கிறாரா உங்கள் வயிற்றை நிரப்புவதற்கு. இப்படியா உழைப்பை வெறுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க முயலும் உங்களைப் போனறோருக்கு பின்நோட்டம் எழுதுவதே பாவமாகப்போய்விடும். சோசிலிச நாடு என்றாலும் சரி முதலாளித்துவ நாடு என்றாலும் சரி ஒரு நேர்முகப்பரீட்சை என்பது உங்களை நீங்கள் விற்பதே. கேட்கப்படும் சான்றிதழ்களினூடாக உங்களது பெறுமதி கணிக்கப்படுகிறது. திறமை இருந்தும் நேர்முகப்பரீட்சையில் உங்களை சரியாக விற்காத வரை வேலை கிடைக்காது சோசியல்தான் தஞ்சம். உற்பத்தி என்ற ஒன்று இருக்குமானால் உழைப்பு என்ற ஒன்று இருந்தே ஆகவேண்டும். இது மாற்ற முடியாத நியதி.

  Reply
 • நந்தா
  நந்தா

  மேற்குநாடுகளின் அடிமைநாடுகளாக இருந்த இலங்கை போன்றநாடுகளில் மேற்குநாடுகளின் வசதிகள், பொருளாதாரம் என்பன இல்லாது போனது எப்படி என்று குசும்பு போன்றவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை!

  அதேநாடுகளின் எடுபிடிகளாக இருந்த இலங்கை அரசியல்வாதிகள் இலங்கை மக்களுக்காக எதை கொடுத்தனர்? துப்பாக்கிகள், கொலை, கொள்ளை கலாச்சாரம்?

  புலிகளை அழித்தது “மனிதாபிமானம்” இல்லை என்று குதிக்கும் மேற்குநாடுகள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்ப்பதுநல்லது.

  சுரண்டல் என்பதை அந்த நாடுகள் செய்வதனை நிறுத்தவில்லை. தங்களின் அடியாட்கள் மூலமாக பழைய காலனித்துவ சுரண்டலை தொடர்கிறார்கள்.

  கனடா,நோர்வே, பிரிட்டன் போன்றநாடுகள் உற்பத்தி செய்யும் ஆயுதங்கள் எங்கு போய் சேர்கின்றன என்பதை உங்களால் சிந்திக்க முடியாது இருப்பது ஏன்?

  இயக்கங்கள் வீட்டுக்கு “ஒரு பவுண்” என்று கேட்டு அடித்தெடுத்த அந்த “பொன்” எங்கே? பொன் தான் இன்னமும் சர்வதேசரீதியில் முதன்மை பெறும் கரன்சி என்பதை அறிந்து கொள்ளாமல் மேற்கு நாடுகளின் “சுபீடசம்” பற்றிய வரட்டு வேதாந்தம் இலங்கை மக்களின் வாழ்வுக்கு எதனைச் சாதிக்கப் போகிறது?

  “பொன் கொள்ளையடிப்பு” போர்த்துக்கீசர் காலம் தொடக்கம் நடைபெறும் சுரண்டல் என்பதை முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //மேற்குநாடுகளின் அடிமைநாடுகளாக இருந்த இலங்கை போன்றநாடுகளில் மேற்குநாடுகளின் வசதிகள், பொருளாதாரம் என்பன இல்லாது போனது எப்படி என்று குசும்பு போன்றவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை// nantha
  நிச்சயமாகச் சிந்தித்தேன். நாடுபிடிப்பது என்ற பெயரில் நுளைந்து சுரண்டல் அல்ல கொள்ளை அடித்தவர்கள் வெள்ளையர்கள் இறுதியல் சொந்தநோடே பறிபோகும் நிலை ஏற்பட்டபோது (2 உலகயுத்ததம்) தலைதெறிக்க ஓடிவந்தவர்கள். உங்கள் கருத்துக்கு எதிரான கருத்தை நான் வைக்கவில்லையே. நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி அன்று காலணித்துவம் இன்று உலகமயமாதல் இன்று கொள்ளை இன்று சுரண்டல். ஐரொப்பிய வட அமெரிக்கர்கள் என்றும் மூலவளங்களை அன்றுமட்டுமல்ல இன்றும் 3ம் உலகநாடுகளிலேயே சுரண்டினார்கள். சுரண்டுகிறார்கள். அதோ மூலப்பொருட்களை பொருட்களாக்கி கழிவானபொருட்களை அதி உயர்விலையில் 3ம் உலகநாடுகளுக்கே விற்கிறார்கள். திறமான தயாரிப்புளை மேற்கில் வைத்துக் கொள்கிறார்கள். மாக்சிசம் சொல்வதுபோல் தங்கிவாழும் தன்மையை உருவாக்கினார்கள். உலகமயமாதல் என்ற பெயரில் இந்தியக் கணனித்தொழிலாளருக்கு கொடுக்கப்படம் சம்பளம் அடிமைச்சம்பளமே. ஒரு ஐரி தொழிலாளி தன்உயர்படிப்பை முடிப்பதற்கு எத்தனையோ இலட்சம் கோடிக்கணக்கில் பெற்றோர் செலவிடுகின்றனர். பிறந்ததில் இருந்து படிப்பு முடியும்வரை. எந்தமுதலுமே போடாமல் அவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அர்த்துவதை விட பெரிய கொள்ளை எங்கு இருக்க முடியும். இந்த உலகமயமாதல் 3ம் உலகநாடுகளுக்கு தொழில்வாய்ப்பைக் கொடுக்கிற தெய்வமாகத் தோன்றலாம். ஆனால் தொழற்சாலைகளிவுகளும் உழைப்புச்சுரண்டல்களும் அங்கே பணமும் நல்ல பொருட்களும் இங்கே. இதை சீனாவில் இருந்து 3ம் உலகநாடுகள் சிந்திக்க வேண்டியனவாக உள்ளன. சிந்திக்குமா?

  ஐயோ நந்தா நான் உங்கள் கருத்துடன் முரண்படவில்லை ஆனால் சிலமாக்சிசவாதிகளால் மாக்சிசம் வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதைத் தான் தவிர்க்கவும் என்கிறேன். இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் வீட்டுக்குத் தெரியாமல் நாம் சிவப்புப் புத்தகங்களுடன் தான் ஓடித்திரிந்தோம். இப்புத்தகங்களை வைத்திருந்தவர்களுடன் மட்டுமே தான் எமது சகவாசமே இருந்தது. மீண்டும் எழுதுகிறேன் காலணித்துவம் வேறுவடித்தை எழுத்துள்ளதே தவிர பெரிய மாற்றங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தமதுநாடுகளை எப்படி வைத்துருக்கிறார்கள் என்று பாருங்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  சமத்துவம் என்ற பெயரில் என்ன தத்துவத்தை சொன்னார்கள்? அனைவரும் எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்றார்கள். பரவாயில்லை. நல்லது. ஆனால் எப்படி? இருக்கிறவனிடம் பறித்து இல்லாதவனிடம் கொடுக்க வேணும். சுரண்டியவனிடம் உள்ளதை பறித்துக் கொடுத்தால் பரவாயில்லை. உழைத்து வாழ்பனிடமிருப்பதையும் பறித்து கொடுக்க வேண்டும். அடடா நல்லாயிருக்கு. இனி நாம் வேலைக்கு போக வேண்டாம். உழைக்க வேண்டாம். ஆயுதம் தூக்குவோம். சேகுவேராவின் புத்தகங்களை எடுத்துக் கொண்டு திரிவோம். பணக்காரனைக் கொன்று அவன் பணத்தை ஏழைகளுக்கு கொடுப்போம். கற்றவனும் கல்லாதவனும் , உழைப்பவனும் சோம்பேறியும் ஒரே நிலையில் இருக்கப் பண்ணுவோம். அகா அற்புதம். உழைத்தவன் சோம்பேறியாகிறான். உழைத்து என்ன பயன்? நான் சும்மா இருந்து சாப்பிடலாமே? மேற்கத்திய நாடுகளில் சும்மா இருந்து வயிறு வளர்க்கும் அதிகமானவர்கள் இந்த கம்யுனிசம் பேசும் ஆட்கள்தான். சிலர் மனைவியரை வேலைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் சோசலிசம் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் இப்படி அநேகரை பார்த்திருக்கிறேன். ஏன் இவர்கள் முதலாளித்துவ நாடுகளில் பிச்சைப் பணம் எடுக்கிறார்கள். போய் சோசலிச நாடுகளில் வாழலாமே?

  சமத்துவம் பேசிய என்.எம்.பெரேரா என்ற அரசியல்வாதி, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியதை சிறிமாவோ கால அரசின் காலத்தில் கண்டோம். ஈழப் போராட்டம் கள்ளக் கடத்தலில் தொடங்கி கமியுனிச வடிவில் வளர்ந்து முதலாளித்துவ தன்மையோடு முற்றுப் பெற்றதுதான் வரலாறு. இந்திராவின் காலத்தில் இந்தியா இடதுசாரி போக்கு கொண்ட ரசிய ஆதரவு நாடாக இருந்தது. அப்போதுதான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இது முதலாளித்துவ இலங்கைக்கு எதிரான தன்மையாக இருந்தது. இந்திராவுக்கு பின் இந்தியா தன் நிலையை அமெரிக்க சார்பாக மெதுவாக மாற்றிக் கொண்டது. ரசியாவின் மாற்றம் அனைத்து தேசங்களின் மாற்றமாக மாறியது. அதற்கு காரணம் அந்நாட்டின் பலவீனமேயாகும். பணம் இருந்த நாடுகளின் அணுசரணை தேவையானது. சோசலிசம் சரியானதாக இருந்திருந்தால் ரசியாவோடு அமெரிக்கா இணைந்திருக்கும். சீனா இணைந்திருக்கும். அது வேறு விதமாகவல்லவா மாறியது.

  உலகெங்கும் பரந்து வியாபித்துள்ள விலைமாதுக்கள் இந்த கம்யுனிச நாடுகளிலிருந்து வந்துள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களது எண்ணிக்கை முதலாளித்துவ நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகம். ஏன்? எல்லோருக்கும் எல்லாம் சமம் என்றால் இவர்கள் ஏன் வீதிக்கு வந்தார்கள்? தன் உடலை விற்று வாழ அவர்களுக்கு என்ன ஆசையா? இல்லை. எங்கோ தவறு இருக்கிறது?

  சமத்துவம் பேச அழகாயிருக்கும். வாழ்கைக்கு வழி காட்டாது.

  Reply
 • BC
  BC

  குசும்பு, சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு ஒற்றுமையை மாக்சிய/மதவாதிகளுக்கிடையில் கவனித்திருப்பீர்கள் மத வாதிகளுக்கு நோய் வந்து மாறினால் அது ஆண்டவர் செயல். வானத்தில் வானவில் வந்தாலும் ஆண்டவனின் அற்புதம். அது மாதிரி ஒரு நாடு தனது மக்களுக்கு நல்ல திட்டங்கள் செய்தாலும் அது மாக்சினால் தான் வந்தது. ஆனால் கார்ல் மார்க்ஸ்சை பின் பற்றிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை தவிர நல்ல விடயங்கள் இல்லை.
  மாயா, மிக நன்றாக கருத்து சொல்லியுள்ளீர்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //சந்திரன்ராசா! உழைப்பு உழைப்பு என்று அழுகிறீர்களே உடலுளைப்புத்தான் உழைப்பா? அவர்களுக்கு மட்டும் தான் களைப்பு என்கிறீர்களா? உடலுழைப்பை விட மூளையுழைப்பே களைப்பானது. உடலுபாதைகளை விட மனெளபாதைகளே வலிகூடியவை. தன்னம்பிக்கை அற்றவன் கடவுளை நம்புகிறான்.//

  எனக்கும் இந்த முதலாளி தொழிலாளி என்பதில் குசும்பு போல்நம்பிக்கை இல்லை; காரணம் உண்மையில் நான் இலங்கையில் இருந்தபோது இதை நம்பினேன்; ஆனால் புலம்பெயர்ந்த பின் இங்கே பல நாடுகள் சென்றும் உள்ளேன், அவர்கள் இந்த தொழிலாளர் பிரச்சனையை பார்ப்பது வேறுவிதம் நாம் பார்ப்பது வேறுவிதம், நாம் முதலாளிகள் மீது தவறு மட்டும் சொல்லுவதும் அப்படி யாரும் முதலளியாகி விட்டால் அவனை கடத்தல்காரன் அல்லது திருடன் என பலமொழியில் பேசுவோம்; அதுக்காகவே பிறந்ததுபோல் சிலர் இந்த சோசலிச வேதத்தை தாம் படித்துவிட்டு அதை இந்த பரப்புவார்கள்? குசும்பு சொல்லியிருந்தார் காமராஜர் பெரியார் உன்மையில் மார்க்ஸ்சிசவாதிகள் என, உண்மைதான் ஆனால் அவர்களால் வளர்க்கபட்டவர்கள் போலியாக வளர்ந்து இன்று ஒருபகுதி சத்தியராஜ்க்கு மோதிரம் (பெரியாரின்) போடுவதிலும் இன்னொரு பகுதி சோனியாவின் காலடியிலும்(காமராஜர் ஆட்ச்சி அமைக்க) உள்ளனர்; எனது வாதம் தீவுபகுதி மக்கள் உனமையில் உளைப்பாளிகள்தான்; அன்றும் சரி இன்றும் சரி, ஏமாற்றுகிறார்கள் எனில் நாம் ஏன் ஏமாருவான், இங்கேதான் எனக்கு இந்த சிவப்புசட்டைகாரர் மீது கோபம் வருகிறது; தொழிலாளர்க்கு போராட்டத்தை மட்டும் சொல்லி கொடுத்தால் போதுமா?? அவனுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டாமா? இன்று புலம் பெயர் தேசத்தில் வாழும் எமக்கு யார் உபதேசம் செய்தார்கள்? நாம் அனைவரும் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையா?? இதுக்கான காரனம் என்ன?? மாயா சொன்னதுபோல் நாம் சோம்பேறியாக இருந்து கொண்டு முன்னுக்கு வந்தவனை தவறு சொல்லுவது சரியானதா?? எமது முயற்ச்சி என்ன, அன்று கல்வி அறிவு குறைந்த சமுதாயம்(இன்றையவிட) அதனால் இப்படி சிலரது அறிவுரைகள் தேவைப்பட்டது, ஆனல் இன்று எனக்கும் ;குசும்புவுக்கும் சந்திராவுக்கும் நந்தாவுக்கும் புரியும் விடயத்தை விட பல மடங்கு விடயங்கள் எம்மினத்துக்கோ அல்லது உலக மக்களுக்கோ புரியாதா?? இந்த சிவப்புசட்டைகாரர் தொழிலாளரை போராட்டத்துக்கு மட்டுமே பாவிப்பார்கள்? இந்த பாளாய் போன போராட்டங்கள் நடத்தும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தையாவது தொழில் கல்வி தொழிலாளருக்கு உரிய சட்டதிட்டங்கள் வேலை வாய்ப்புக்கான கல்வி இப்படி பலத்தை சொல்லலாம் (இதையே நான் சந்திரராஜாவிடம் எதிர் பார்க்கிறேன்)

  இங்கேயும் தொழிலாளர் போராட்டம் நடக்கிறது நானும் சிலதில் கலந்து கொண்டுள்ளேன், ஆனால் அது செய்யும் வேலைக்கான சில சலுகைகள் அல்லது ஊதியம்; பாதுகாப்பு இப்படியானவைக்குதான், ஆனால் நாம் திரும்பவும் மாயா சொன்னது போல்தான் வேலைக்கு போகாமலே வேலைக்கான போராட்டம் ; இதில் ஓடி திரிந்து குடும்பத்தை விட்டு பல தீவு பகுதி வாலிபர்கள் கொழும்பில் கோப்பை கழுவி தமது வேலையை தொடங்கி பின்பு பலரை வைத்து வேலை வாங்கும் முதலாளியாக உருவானார்கள். அன்று அவர்கள் கொழும்பு சென்றனர் ,நாம் இன்று புலத்துக்கு வந்துள்ளோம்: இங்கு முன்னுக்கு வந்த எவருக்குமே இந்த சிவப்பு மட்டை சமாஜாரம் தெரியாது, அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் அவர்களது முயற்ச்சி; இந்த சந்தர்ப்பத்தை மேலும் உருவாக்க உங்கள் அறிவை தாருங்கள் என்பதே என் வாதம்; எம்மவரில் மார்க்ஸ்சியம் தமக்குதான் தெரியும் என சொன்னவர்கள் யார்?? அவர்களின் இன்றய போக்கு என்ன? இதுதான் உன்மையில் கார்ல்மார்க்ஸ் போதித்தவையா? இப்படி பல கேள்விக்கு பதில் தேடுவோம்; இதே தளத்தில் சிறிரங்கன் (மார்க்ஸ்சியவாதிதானாம்) வந்து சொல்லுகிறார் தனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் தானும் பெண்களை இன்பமயபடுத்துவாராம்; இதே இவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துமுதலாளி ஆனால் நிலை என்ன; ? சோசலிஸ நாட்டு அரசதலைவருக்கு வல்லரசில் மருத்துவம் நடந்தது நாம் அறியாததா?? சீனாவில் ஒரு சீனாநாட்டு காரன் மட்டுமே முன்னுக்கு வரலாம், ஆனால் அமெரிக்காவில் ஒரு தமிழனும் முன்னுக்கு வரலாம், ஏன் ஒரு கறுப்பின மகன் கூட அரசதலைவர் ஆகலாம்; இது சோவியத் அல்லது சீனாவில் சாத்தியம் அற்றது; சீனாவின் வளர்ச்சி மிக பெரியதுதான் இல்லை என சொல்லவில்லை ஆனால் அந்த நாட்டு சனதொகையின் படி பார்த்தால் அவர்கள் வளர்ச்சி சொல்லும்படி இல்லை; மிகவும் ஏழைகள் வாழும் நாட்டில் இந்தியா சீனா பங்கு கொள்வதும் உண்மைதானே;

  நான் இன்று வாழும் நாடு ஒரு வல்லரசுதான், ஆனால் எனது முயற்ச்சியால் எனது வளர்ச்சி போதுமானதாகவே இருக்கிறது, வரிபணம் செலுத்தும் அளவுக்கு உழைக்கிறேன்; எனக்கு முதலாளி தொழிலாளி பிரச்சனை இல்லை(பல்லி என்றுமே தொழிலாளிதான்) ஆனால் வேலைதளத்தில் சில பிரச்சனைகள் வரும் அதை நான் சட்ட மூலமோ அல்லது பேசியோ தீர்த்து கொள்கிறேன்; எனது கருத்து நாம் முதலாளியை திட்டும் அல்லது கவனிக்கும் அளவுக்கு தொழிலாளரை கவனிப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை;

  Reply
 • chandran .raja
  chandran .raja

  பிள்ளையாருக்கு எலிவாகனம் அமைந்தது மாதிரி எனக்கு பல்லி அகப்பட்டுள்ளார். விக்கினத்திற்கு பிள்ளையாரேயே யாரும் முதல்வணங்கி தமது காரியத்தை தொடங்குவார்கள். விதிவழியாக வந்ததோ தெரியாது? உங்கள் நம்பிக்கை வீண்போகாது மாதிரியே நடந்து கொள்வேன் என நம்பலாம். உங்கள் சந்தேகத்திற்கான பதில் இனி தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும். தேசம்நெற்றில் வரும் ஒவ்வொரு சொல்லையும் விழுங்கி தண்ணி குடிப்பவராச்சே! எதைதான் உங்களுக்கு மறைக்க முடியும்?. உங்கள் நம்பிக்கைக்கு என்றும் விசுவாசமாகவே இருப்பேன்.
  முதாலித்துவத்திற்கான போராட்டத்தில் உறுதியான நிலையில் நிற்கும் போது நம்பிக்கைகள் தளிர்விடுகிறது. இந்த நம்பிக்கை மட்டுமே எம்மை ஓர்ரணி சேர்க்கும் நந்தா!.
  குசும்பு மனிதனில்லா ஜீவராசிகள் கால்மாக்ஸ் உற்பத்தியில் ஈடுபடுகிறதாக வரையறை செய்யவில்லை. முதாலித்துவத்தை இந்த பூமியிலிருந்து துடைத்தெறிவதற்கு மற்றைய ஜீவராசிகளும் அணிதிரட்ட வேண்டுமென்றால் அவதார் போன்ற அமெரிக்க கனவாகத்தான் இருக்கும். இப்படியான கனவில் உள்ளவர்கள். சோசலிஸ ஆரம்பபடியில் உள்ள நாடுகளை குறைகாண்பதில் வியப்பில்லை. அதோடு இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணும் காட்சிகள் தற்போதய வாழ்வு மாக்ஸியவரை முறையில் முதாலித்துவம் திட்டமிட்டு ஏற்படுத்தி வைத்திருக்கிற “றிசேவ்பட்டினி பட்டாளம்”. அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அத்தியாவசிய நிபந்தனை. அதற்கு மற்றொருபெயர். மலிந்தகூலி. அரசியல் தஞ்சம். ஆகாயத்தின் உச்சியை எட்டிவிட்டதாக கற்பனை செய்யாதீர்கள். இது பொதுயுடைமைக்கும் தனியுடைமைக்கும் காத வழி தூரம். மாயா: தொடரும்.

  Reply
 • BC
  BC

  பல்லி, சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நன்றி பிசி – பின்னோட்டகாரர்களை ஊக்குவிக்கிறீர்கள்.

  பல்லி-அமர்களமாக இதுக்கிறது. நாங்கள் சொல்வதை திருப்பிச் சொன்னால் “ஜதார்த்தத்தை ஜீரணக்கும் எமக்கு கற்பனை வாதம் வேண்டாம். பல்லி //இதே தளத்தில் சிறிரங்கன் (மார்க்ஸ்சியவாதிதானாம்) வந்து சொல்லுகிறார் தனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் தானும் பெண்களை இன்பமயபடுத்துவாராம்;// புரியவில்லையா பல்லி- எல்லாம் பொதுவுடமை என்று வந்தபின் பெண்கள் என்ன மனைவி என்ன? (மன்னிக்கவும்)
  /சீனாவில் ஒரு சீனாநாட்டு காரன் மட்டுமே முன்னுக்கு வரலாம்இ ஆனால் அமெரிக்காவில் ஒரு தமிழனும் முன்னுக்கு வரலாம்/
  அருமை சீனாவில் சீனநாட்டுக்காரனே முன்னுக்கு வரவியலாது. அரச பாசிசம் தலைநிமிர்ந்து இருக்கும். தனித்தன்மையுள்ள சீனன் அரசின் சொத்து. ஒருபிள்ளைக்கு மேல் இரண்டாவது பிள்ளை பெற்ற சீன பேராசிரியருக்கு சுமார் 40000டொலர் அபராதம் (சரிய தொகை நினைவில்லை) தனிமனிதசுதந்திரத்தின் உச்சக்கட்டம் இதுவா? இது பாசிசம் இல்லையா? /சீனாவில் ஒரு சீனாநாட்டு காரன் மட்டுமே முன்னுக்கு வரலாம், ஆனால் அமெரிக்காவில் ஒரு தமிழனும் முன்னுக்கு வரலாம்/ ஜனநாயகத்துக்குள் கொமினிசயம் முதாலளித்துவம் எதுவும் நிற்கலாம் ஆனால் கொமினிசியத்துக்குள் எதுவும் நிற்க முடியாது. இதை என்ன என்று சொல்வது? சோசலிசச் சோம்பேறிகளுக்கு மனித வளர்ச்சி பொறுக்கவில்லை என்பதே எனது கருத்து.
  இடதுசாரித்துவ நாடாக இருந்த ரஸ்சியாவில் கறுப்பர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள். /இது சோவியத் அல்லது சீனாவில் சாத்தியம் அற்றது; சீனாவின் வளர்ச்சி மிக பெரியதுதான் இல்லை என சொல்லவில்லை ஆனால் அந்த நாட்டு சனதொகையின் படி பார்த்தால் அவர்கள்/ சீனாவளர்ச்சி அடைந்தது எப்போ? என்று தனது பொருளாதாரக் கொள்கையில் இடதுசாரித்துவத் தளர்வை ஏற்படுத்தி வலதுபக்கம் சாய முயன்றதோ அன்று தான் சீனா பொருளாதாரத்தின் வளர்ச்சி கண்டது. இதை யாரும் மறுக்க இயலாது. சோவியத்தின் தோல்வி சீனாவுக்கு ஒருபாடமாக இருந்தது.

  Reply
 • நந்தா
  நந்தா

  யதார்த்தம் என்பது எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது அது பற்றிப் பேசுபவர்கள் எப்படி பல யதார்த்தமற்ற செயல்பாடுகளையும், சட்டம், ஒழுங்கு என்பனவற்றை மறந்து போனார்கள் என்பதுதான் வேடிக்கை!

  ஆள்கடத்தல், கள்ளக்கடத்தல் போன்றவற்றை ஆதரிப்பது “தங்களுக்குக்” கிடைத்த லாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு வெளியிடப்படும் “சுயநல” சித்தாந்தம். இதற்கு தமிழையும், தமிழரையும் இழுக்க என்ன அவசியம் வந்துள்ளது?

  இந்த இரண்டு தொழிலையும் செய்து தமிழகள் “வளத்துடன்” வாழ முடியும் என்று மாயாவும், பல்லியும் வாதிக்கிறார்களா? இவர்களது அரசியல் பற்றிய எழுத்துக்கள் யாருக்காக? உங்களுக்கு “லாபம்” கிடைக்கும் என்றால் எதையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க நீங்கள் தயார் என்பதையே உங்களது எழுத்துக்கள் காட்டுகின்றன!

  இடதுசாரி அரசியலுக்கு எதிராக பாதிரிகளாலும், மேற்குநாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்படும் செய்திகளை வாசித்துவிட்டு அதை எழுதுவது வெறும் சந்தர்ப்பவாதமும், வரட்டு சித்தாந்தமும் ஆகும்.

  உங்களால் “பெரிது” படுத்தப்படும் அரசியலும் தத்துவங்களும் இலங்கை மக்களைப் பொறுத்தளவில் தோல்வி கண்டவை. தற்போது வாழும் நாட்டின் வசதிகளை நினைத்து அதுவே இலங்கை மக்களுக்கு வாழ்வளிக்கும் என்பது வெறும் பிரச்சாரமே ஆகும்! பிறந்த மண்ணில் “வேலையே” செய்யாமல் அங்குள்ள மக்களுக்கு வழி காட்டுகிறோம் என்பது சுத்த சவடால்த்தனம்! இலங்கயில் மார்க்சிஸ்டுக்களால்த்தான் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று யாருக்குக் காது குத்துகிறீர்கள்?

  சீனத்தைக் கரடி என்று காட்டி ஏமாற்றும் அமெரிக்கா சீனாவைநோக்கி ஏன் ஓடுகிறது என்பதற்கு உங்களால் பதில் தர முடியவில்லை. இன்று கோடிக்கணக்கில் இலங்கை மற்றும் பலநாடுகளுக்கு சீனத்தினால் உதவ முடிகிறது.

  அமெரிக்கன் இலவசமாக “மாவைக்” கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக இலங்கை ரூபாவின் மதிப்பை ஐம்பது சதவீதம் குறை என்று ஆணையிட்டு அது ஜே ஆர் ஜெயவர்த்தனாவினால் நிறைவேற்றப்பட்டதைப் பற்றியும் அதன் பக்க விளைவுகளையும் உணராது இலங்கயின் பொருளாதாரம் பற்றி கதைத்து யாருக்கு சேவகம் செய்கிறீர்கள்?

  இடது சாரி அரசுகள் எந்தக் காலத்திலும் எமது நாணைய மதிப்பை “குறை” என்று கேட்டது கிடையாது. அதுதான் அந்த நாடுகளின் நாணையம்!

  சீனத்து “யுவான்”நாணையத்தை அமெரிக்க டாலரோடு இணைக்க முடியாது என்று சீனா கூறுவது பலருக்குப் புரியாமல் இருக்கிறது. இன்று அமெரிக்க டாலர் தள்ளாடுகிறது. இன்று அமெரிக்கா சீனாவுக்குப் பெருங் கடனாளி என்பதை அறியாமல் சீனா பற்றி எழுதும் எழுத்துக்கள் சிரிப்புக்கிடமானவை!

  இலங்கை, இந்தியா போன்றநாடுகளில் புலி, காலிஸ்தான் என்று ஆயுதக் குண்டர்களை அனுப்பி மிரட்டி அடி பணிவிக்கலாம். சீனத்தில் அந்த “பாச்சா” பலிக்காது. அணுகுண்டு மிரட்டல் கூட செய்ய முடியாது.

  சீனாவில் “பெரும்” பணக்காரர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் பெரும் அரசியல் தலைவர் மாவோவின் சிந்தனைகள் அந்தநாட்டைத் தலைநிமிரச் செய்துள்ளன.

  ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது சநதித்த ஏழு பிள்ளைகளின் தாய்க்கு சொன்ன புத்திமதி. பிள்ளைகளைப் பராமரிக்க முடியாவிடின் பிள்ளைகளை உற்பத்தி செய்வதை நிறுத்து என்பதுதான். அது சில வேளைகளில் “சீனா”விடமிருந்து படித்த பாடமாக இருக்கலாம்!

  சீனத்து மக்களை சோம்பேறிகள் என்று முத்திரை குத்த முடியுமா? கடவுள் எல்லாம் தருவார் என்று நம்பும் மக்களே சோம்பேறிகள்! அது மாத்திரமல்ல அவர்கள்தான் தங்கள் மக்களின் உழைப்புக்களை சூறையாடுபவர்கள்!

  அமெரிக்கா என்பது “வந்தேறு குடிகளின்” நாடு. சீனா அப்படியல்ல. அமெரிக்காவின் “ஒரிஜினல்” மக்கள் எங்கே என்று தேடிப் பார்த்துவிட்டு அமெரிக்க புகழ் புராணம் பாடுவது நல்லது!

  Reply
 • chandran .raja
  chandran .raja

  மாயா://உலககெங்கும் பரந்து வியாபித்துள்ள விலைமாதுக்கள் இந்த கம்யூனிசநாடுகளில் இருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள்//
  இதை மறுக்கவில்லைநான். ஆனால் கோபாச்சோவ்வின் அறிவுறுத்தலின் பெயரில் இணைக்கப் பட்டநாடுகள் கலைக்பபட்ட தாகவும் இனி கம்யூனிச பெயருக்கு பொருந்தாதது என்றும் இணைந்த நாடுகளுக்கு சுகந்திரம் கொடுத்து விட்டதாகவும் சொல்லியும் கலைத்தும இருபது வருடங்களுக்கு மேல்லாகிறதே! அதை கம்யூனிச நாடுகள் என்று இன்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மேற்குலக வானொலிகளும் பத்திரிக்கைளும் சொல்லும் பிரசாரத்தை நம்பியா வாசகர்களுக்கு கதையக்கிறீர்கள்?
  ஸ்டாலின் ஆட்சியில் சோவியத்யூனியலில் என்ன? நடந்தது என்பதை அறிவதினால் மட்டுமே மாக்ஸியத்தையும் வரப்போகும் போராட்டங்களையும் நிர்ணயிக்க முடியும். முதாலித்துவ பிரச்சாரங்களில் தங்கிநின்று கருத்தச் சொல்வது தேர்ந்த கருத்தாக இருக்க முடியாது மட்டுமல்ல சர்வதேச தொழிலாளிவர்கத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்கு காட்டிக் கொடுப்பதும்மாகும்.

  உலகத்தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!! என்று கம்யூனிச சித்தாந்தம் சொல்ல நீங்கள் உலகத்தமிழர்களே ஒன்று படுங்கள் என்று கலண்டரையும் அடித்துவிட்டு வங்கியையும் கொள்ளையடித்து மாலைதீவையும் கைப்பற்ற போனதிற்கு ஏன் மாக்ஸியத்தில் பழியைப் போடுகிறீர்கள்?

  இலங்கையில் நடந்த பொதுவுடமை அரசியல்தவைர்களுக்கு உலகஅரசியலில் பொதுவுடமைக் கட்சிகளுக்கு சர்வதேசகட்சிகளுக்கு என்ன விதிநடந்ததோ அதே தான் இலங்கையிலும் நடந்தது. முதாலித்தவத்திற்கு வக்காளத்து வாங்கவேண்டுமென்று முடிவெடுத்தால்.. நாம் ஒன்றும் செய்ய முடியாது.

  Reply
 • BC
  BC

  சந்திரன் ராசா அல்லது நந்தா தேசம்நெற்றில் மாக்சிசம் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் அங்கே இது பற்றி சுதந்திரமாக கதைக்க வசதியாக இருக்கும். சந்திரன் ராசா மாக்சிசத்துக்கு ஒத்துவராதவர் நந்தா என்ற மாதிரி சொன்னதால் நந்தா கட்டுரை எழுதலாமோ தெரியாது.
  சீனா ஆட்சி செய்வதற்க்கு சர்வாதிகாரமும் பொருளாதாரத்திற்கு முதலாளித்துவத்தையும் பயன்படுத்துவது தெரியும். மாக்சிசவாதிகளும் கம்யூனிச ஆட்சி சீனாவில் இருப்பதனால் அதை ஒரு சோசலிச நாடு என்று நம்பிவிடாதீர்கள்,அது எப்பவோ கம்யூனிசத்தை கைவிட்டுவிட்டது என்கிறார்கள். நந்தா சீனாவின் காலடியில் அமெரிக்கா என்கிறார்.

  Reply
 • பல்லி
  பல்லி

  நந்தா இது ஆரோக்கியமான வாதம் ஆகையால் உங்களுடன் நான் வாதம் செய்ய தயாராகவே இருக்கிறேன், ஆனால் எனது வேலை பளு காரணமாய் உங்கள் கேள்விக்கு உடன் பதில் தரமுடியவில்லை பின்பு தருகிறேன்,

  //சீனத்தைக் கரடி என்று காட்டி ஏமாற்றும் அமெரிக்கா சீனாவைநோக்கி ஏன் ஓடுகிறது என்பதற்கு உங்களால் பதில் தர முடியவில்லை. //
  அமெரிக்கா சீனாவை நோக்கி ஓடுவது முயற்சி; ஆனால் சீனா தனக்குள்ளேயே தடங்குவது வீழ்ச்சி, நம்ம தமிழர்தான் சொல்லியுள்ளனர் திரைகடல் ஓடியாவது திரவியம் தேடு என, அதனால் அதை அறிந்த அமெரிக்கா ஓடுகிறதோ தெரியவில்லை;

  //இந்த இரண்டு தொழிலையும் செய்து தமிழகள் “வளத்துடன்” வாழ முடியும் என்று மாயாவும், பல்லியும் வாதிக்கிறார்களா? //
  என்ன இது ஏதோ நானும் மாயாவும் தொழில் செய்வதாக நந்தா சொல்லுறியள். நாம் இருவரும் மாத வருவாய்க்காக உழைக்கிறோம்; அதுசரி இந்த இரண்டு பிரச்சனையும்தான் உலகத்தை இப்படி ஆட்டுகிறதா?? மாவியாவின் பிறப்பிடம் இத்தாலி; அது வளர்வது எங்கே??

  Reply
 • chandran .raja
  chandran .raja

  யாழ்ப்பாண மீன்காறியின் தூணவார்தைகளுக்கு ஒப்பானதே! குசும்பு மாயாவின் வாதங்கள். விலைமாது சோம்பேறி என்ற வார்தைகளை சோசலிச்கான பாதையில் பயணத்தில் எதை சாதித்தார்கள் எதை இழந்தார்கள்கள்?.அவர்கள் உலகத் தொழிலாளவர்கத்திற்கு என்ன அனுபவத்தை விட்டுச் சென்றார்கள்? என்பது போன்ற கேள்விகள் எதையும் எழுப்பாமல்.. இது தான் விலை சம்மதமோ? என்று கேட்டால்.. அவள் சினிமாப் பாட்டிலேயே பதில் சொல்வாள்.சம்மதமா? நான் உந்தன் கூடவரச் சம்மதமா? இல்லை பச்சையான தூசண வார்த்தை.கறிவாங்கப் போன பையையும்
  தூக்கி எறிந்து போட்டு வந்ததாக மாமா சொல்லுவார். விலைமாது சோம்பேறி போன்ற வார்த்தைகளை பாவிப்பது கடந்தகாலத்தில் அவர்கள்
  போராட்டங்களும் தியாகங்களும் எவ்வளவு தூரம் பயன் அளித்தது.பிற்காலத்தில் ஏன் வறுமையில் தள்ளப்பட்டார்கள்.இதில் அதில் நாட்டுத் தலைவர்களின் வகித்த பாத்திரம் என்ன? வல்லரசு என்று சொல்லுகிற முதலாளி-ஏகாதிபத்தியநாடுகள் என்னென்ன நெருக்கடிகளை அழுத்துங்களை கொடுத்தார்கள் என்பதை ஆய்வுக்குள்ளாகாமல் இப்படியான பட்டங்களை சூட்டிவிடுகிற இந்த முதாலித்துவ தாசர்கள்களை கறிக்காறிக்கு ஒப்பிடுவதில் ஏதும் தப்பிருக்க முடியுமா?

  ஜேர்மமனி பிரான்ஸ் பிரித்தானியா அல்லது அமெரிக்கா கனடாவாக இருக்கட்டும் எங்கிருக்கிறார்களோ தெரியாது. இந்த நாட்டுமக்கள் ஒவ்வொருநாளும் என்ன பிரச்சனையை எதிர்நோக்கிறார்கள் என்பதைப் பற்றி கருசரனை கொண்டிருக்கிறார்களா? ஏன் தாம் வாழும் நாட்டில் வேலையில்லாதவர்கள் வீதம்நாளுக்கு நாள் உயர்வடைந்த வருகிறது என்றாவது சிந்தித்தது உண்டா? சமூகவெட்டுக்கள் மருத்துவசேவைகள் நாளுக்குநாள் விழ்ச்சியடைந்து போவது இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

  உலகத்திலேயே அதிகதேசியகடனைக் கொண்ட நாடு அமெரிக்காவே! பதின்மூன்று திரிலியன்டொலர்கள். பிரித்தானியாவின் தேசியக்கடன் நான்கு திரிலியன் பவுன்ஸ். சீனாவின் தேசியக்கடன் அடுத்தவருடம் ஏழு திறிலியனை எட்டுமென கணகிடப் பட்டிருக்கிறது. இந்த கடன் பெருக்கம் என்ன விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பதை விட முதாலித்துவ-ஆதாயத்திற்கான உற்பத்தியால் அந்ததந்த நாடு தொழிலாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்ட சுமையல்லவா? இதை எல்லாம் அந்தநாட்டு தொழிலாளிவர்ககம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு பொறுமையுடன் காத்திருக்க போகிறார்கள்?

  இவ்வளவு பிரச்சனைகளும் முதாலித்தவநாடுகள் தம்முள் வைத்திருக்க ஏதோ சோசலிசநாடுகளில் தான் வறுமையும் விலைமாதர் சோம்பேறிகள் இருப்பதாக சொல்வது தமிழ் தொழிலாளவர்கத்தை ஏமாற்றுவதற்கே!.

  Reply
 • மாயா
  மாயா

  //உலகத்தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!! என்று கம்யூனிச சித்தாந்தம் சொல்ல நீங்கள் உலகத்தமிழர்களே ஒன்று படுங்கள் என்று கலண்டரையும் அடித்துவிட்டு வங்கியையும் கொள்ளையடித்து மாலைதீவையும் கைப்பற்ற போனதிற்கு ஏன் மாக்ஸியத்தில் பழியைப் போடுகிறீர்கள்? – chandran .raja //

  என்ன செய்வது சந்திரன் ? உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என உலகத்தை பிடிக்க கம்யூனிசவாதிகள் வழி காட்டியதால் ; ஆகக் குறைந்தது மாலைதீவையாவது பிடிக்கலாம் என அதே கம்யூனிசத்தை வாசித்த புளொட் நினைத்திருக்கலாம். எல்லாம் கம்யூனிச சித்தாந்தம் செய்த வினைதான் என நினைக்கிறேன்.

  //விலைமாது சோம்பேறி போன்ற வார்த்தைகளை பாவிப்பது கடந்தகாலத்தில் அவர்கள் போராட்டங்களும் தியாகங்களும் எவ்வளவு தூரம் பயன் அளித்தது.பிற்காலத்தில் ஏன் வறுமையில் தள்ளப்பட்டார்கள்.இதில் அதில் நாட்டுத் தலைவர்களின் வகித்த பாத்திரம் என்ன? வல்லரசு என்று சொல்லுகிற முதலாளி-ஏகாதிபத்தியநாடுகள் என்னென்ன நெருக்கடிகளை அழுத்துங்களை கொடுத்தார்கள் என்பதை ஆய்வுக்குள்ளாகாமல் இப்படியான பட்டங்களை சூட்டிவிடுகிற இந்த முதாலித்துவ தாசர்கள்களை கறிக்காறிக்கு ஒப்பிடுவதில் ஏதும் தப்பிருக்க முடியுமா? – chandran .raja //

  “கறிக்காறிக்கு ஒப்பிடுவதில் ஏதும் தப்பிருக்க முடியுமா?” என்பதில் உங்கள் அடி மனதில் உள்ள முதாளித்துவம் வெளிப்படுகிறதே ஐயா? *கறிக்காறி* என்பவரும் ஒரு தொழிலாளிதானே? அவரை கேவலப்படுத்துகிறீர்களா? நாங்களும் தொழிளிகள்தான் என புகழ்கிறீர்களா? எமக்கு அனைவரும் மக்களே. அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. அனைவரும் மனம் மகிழ்ந்து வாழும் உலகம் ஒன்று வேணும். அம்புட்டுதேன்.

  Reply
 • indiani
  indiani

  நன்றி மாயா. சந்திரன் ராஜாவின் மனதில் சாதிய வாதம் பிரதேசவாதம் ஊன்றியுள்தின் வெளிப்பாடே இந்த கறிக்காறி என்ற உதாரணத்திற்கான முனைவாகும் இப்படி பல விடயங்கள் சமூகத்தில் உண்டு. இதில் முக்கியவிடயம் என்னவென்றால் சந்திரன் ராசா போன்றவர்கள் மாக்சீயம் பற்றி தாம் கூறும்போது இவர்கள் மனதிலும் மாக்சீயப் புத்தகமே முன்வருகின்றது இவர்கள் மாக்சீயம் மக்களிடம் இருந்தே ஆரம்பிக்கின்றது மக்களுக்காக மக்களால் என்பதை மறந்து புத்தகத்திற்காக என்று, மதங்கள் சமயங்கள் போன்று விளங்கிவைத்துள்ளனர்.

  Reply
 • நந்தா
  நந்தா

  இலங்கயில் இந்த “கள்ளக்கடத்தல், ஆள் கடத்தல்” வேலைகளினால் நடந்த விளைவுகளும், மோசடிகளும் எவ்வளவு என்பது பல்லிக்குப் புரியவில்லையோ?

  புலிகளின் செயல்பாட்டில் “கள்ளக்கடத்தலின்” பங்கு சாதாரணமானதா?

  இந்த “கிரிமினல்” கோஷ்டிகளுக்கு ஆதரவு கொடுத்து நாணம் கெட்டு எழுதி விட்டு இப்பொளுது “அப்படியா” என்று காது குத்தும் பாணி “தமிழ்” மனிதாபிமானம் என்று பல்லி கயிறு இழுக்கிறாரா?

  இலங்கையில்நடக்கும் பிரச்சனைகளை உங்கள் சித்தாந்த அடிப்படயில் விளக்கம் கொடுக்க முடியாமல் இருந்து கொண்டு “சாட வேண்டும்” என்பதற்காக சம்பந்தமில்லாத விஷயங்களை எழுதி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

  Reply
 • நந்தா
  நந்தா

  “கறிக்காறி” என்றதும் என்ன துள்ளல்? அது என்ன கேவலமான வார்த்தையா? யாழ் மீன் சந்தையில் கறிக்காரிகளின் “தூஷணங்கள்” பலவேளைகளில் பலரை ஓட வைக்கும். பேரம் பேசி விற்பனை செய்யும் பொளுது வாங்குபவர் விலயை குறைக்க முயல்வார். விற்பவர் கூடச் சொல்லுவார். அதற்காக வீட்டிலிருக்கும் பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் இழுத்து வசை பாடும் உரிமை கறிக்காரிகளுக்கு யார் கொடுத்தது?

  வடமராட்சியில் தலைச் சுமையாக கொண்டு வந்து மீன் விற்கும் பெண்கள் (இப்பொழுதும்நடை பெறுகிறதா என்று தெரியவில்லை) மரியாதையுடன் பேசுவதும், வீட்டு வாசலில் “கறிக்காறி” என்று கூவுவதும் சாதாரணநிகழ்வு.

  அதில் ஏற்றம் இறக்கம் கிடையாது. அந்தப் பெண்கள் தங்களின் குடும்ப பிரச்சனைகள் பற்றிப் பேசுவதும், “பிள்ளை” ஒரு சுடுதண்ணி தா, இன்னும்நாலு வீட்டுக்குப் போகோணும்” என்று தேநீர் வாங்கிக் குடிப்பதும் பெண்களுடன் “பெண்கள்” விவகாரஙகள் பேசுவதும் பரஸ்பர மதிப்புடன்நடந்து கொள்ளுவதும் சாதாரணமாக நடை பெற்றதைக் கண்ணால் கண்டிருக்கிறேன்.

  நகரத்து கறிக்காரிகள் “சண்டியன்” பின்னணியில் சாதாரணமானவர்களை தூற்றுவதை எந்த நாகரீகத்தில் சேர்த்துக் கொள்ள மாயா அலைகிறார்?

  இனி திருடனை “திருடர்” என்று தமிழில் அழைக்க வேண்டும் என்று தொடங்கினால் நாம் எங்கே போய் நிற்கப் போகிறோம்?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /இதில் முக்கியவிடயம் என்னவென்றால் சந்திரன் ராசா போன்றவர்கள் மாக்சீயம் பற்றி தாம் கூறும்போது இவர்கள் மனதிலும் மாக்சீயப் புத்தகமே முன்வருகின்றது இவர்கள் மாக்சீயம் மக்களிடம் இருந்தே ஆரம்பிக்கின்றது மக்களுக்காக மக்களால் என்பதை மறந்து புத்தகத்திற்காக என்றுஇ மதங்கள் சமயங்கள் போன்று விளங்கிவைத்துள்ளனர்./ இந்தியானி- உண்மை கனக்கும் வரிகள். இதைத்தான் குசும்புவும் மற்றவர்களும் சொல்கிறார்கள். புரிமாட்டோம் என்று அடம்பிக்கிறார்களே. உலகம் எல்லாத் தத்துவங்களையும் பரீட்சித்துப் பார்க்கிறது. தோல்வி என்று கட்டபின்னும் தூக்கிவைத்துக் கொண்டாடவேண்டும் என்றால் அது சமூகத்தையும் இனத்தையும் அழிக்கும் வேலைதான். மாக்சிசொன்னது அத்தனையும் உண்மை உண்மையைத்தவிர வேறில்லை என்பவர்கள் கதவுகள் தட்டித்திரியும் கிறிஸ்தவர்களுடன் அல்லது குரானை படித்துவிட்டு தலையை மூடிக்கொண்டு திரிபவர்களுடன் அல்லது காமசாத்திரச் கள்ளச்சாமிகளுடன் திரிவதே மேல். தமது காரியமாக புத்தகங்களைச் சாட்சிக்கு அழைப்பவர்கள் இவர்களே.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /அமெரிக்கா சீனாவை நோக்கி ஓடுவது முயற்சி; ஆனால் சீனா தனக்குள்ளேயே தடங்குவது வீழ்ச்சி நம்ம தமிழர்தான் சொல்லியுள்ளனர் திரைகடல் ஓடியாவது திரவியம் தேடு எனஇ அதனால் அதை அறிந்த அமெரிக்கா ஓடுகிறதோ தெரியவில்லை/பல்லியின் வார்த்தையுடன் ஒருசில வார்த்தைகள். சீனா அமெரிக்காவிடம் இருந்து மாவியாக்க கூடாக விஞ்ஞானக்கண்டு பிடிப்புக்களை திருடியதை சுரண்டல் என்பதா கொள்ளை என்பதா? சீனா ஸ்ரலின் கதைகளில் இருந்து புரிகிறது இன்நாடுகளை எப்படி அறிந்து வைத்திருந்திருக்கிறீர்கள் என்று.

  / ஈழப் போராட்டம் கள்ளக் கடத்தலில் தொடங்கி கமியுனிச வடிவில் வளர்ந்து முதலாளித்துவ தன்மையோடு முற்றுப் பெற்றதுதான் வரலாறு./ சரியாகச் சொன்னீர்கள் மாயா. எறிமாடன் மாதிரி எதைக்கண்டாலும் எழுதி எறிவேன் என்று சிலர் யாருடனோ பந்தையம் கட்டியிருக்கிறார்கள் போல் இருக்கிறது.

  சந்திரன் /மேற்குலக வானொலிகளும் பத்திரிக்கைளும் சொல்லும் பிரசாரத்தை நம்பியா வாசகர்களுக்கு கதையக்கிறீர்கள்?/ நீங்களும் அதையே நம்பித்தானே கதைக்கிறீர்கள்.
  /ஸ்டாலின் ஆட்சியில் சோவியத்யூனியலில் என்ன? நடந்தது என்பதை அறிவதினால் மட்டுமே மாக்ஸியத்தையும் வரப்போகும் போராட்டங்களையும் நிர்ணயிக்க முடியும்./ சந்திரன் இதுவேடிக்கையான விசயம். சோசலிசத்தை எதிர்த்துக்கதைத்தவர்களை இரவிரவாக வீடுதட்டி எழுப்பி போட்டுகத்தள்ளியது ஸ்ரலின்காலம் என்பதை மறந்தீர்களா? மறைக்கிறீர்களா? மக்களுக்கா மாக்சீசம் என்ற எந்தநாடு அங்குள் மக்களை சுதந்திரமாகப் பேசவிட்டது. உகுரு இன முஸ்லீங்களை சீனா பேசவிடுகிறதா? மாவோ சதுக்கத்தில் ஜனநாயகம் பேசிய இளைஞர்கள் தூக்கப்பட்டார்கள். இதூன் மாக்சிசமா மாவோ இசமா. இந்த இசங்கள் எமக்கு வேண்டாம் எமக்கு நிசங்கள் தான் தேவை.

  /முதாலித்துவ பிரச்சாரங்களில் தங்கிநின்று கருத்தச் சொல்வது தேர்ந்த கருத்தாக இருக்க முடியாது /சந்திரன் நீங்கள் மட்டும் மாக்சின் புத்தகத்தில் நின்று ஜதார்த்தம் தவறி கதைப்பது எப்படி கருத்தாக முடியும். நீங்கள தூக்கிப்பிடித்தீர்களே கியூபா. அதற்குப் பதில் தந்திருந்தேன். இப்போதும் சொல்கிறேன் ஒரு நூறு அமெரிக்கன் டொலர்களைக் கொண்டு கியூபாவின் நடந்து வாருங்கள் கொமியூனிசத்தின் மதிப்புத் தெரியும். அப்படிச் செய்துபோட்டு பழியை என்தலையில் போட்டுவிடாதீர்கள். ஊர் திரும்பமாட்டீரையா. அமெரிக்கன் டொலருக்கு ஆலாய் பறக்கிறார்கள்.

  /இந்த அனுபவம் எனது கணிப்பு சரியாக இருக்குமானால் குசும்புவுக்கும் கிடைத்திருக்கும்/ பல்லி நானும் இந்தக் கூட்டங்களுடன் திரிந்தவன்தான். தத்துவஞானிகள் எவருமே தத்துவப்படி நடந்தில்லை. உங்களின் கதையில் ஒருவிசித்திரம் என்னவென்றார். இடதுசாரி கடைமுதலாளி அடுத்து தத்துவப்படி உழைப்போருக்கு வருமானத்தை பகிந்து கொடுக்கலாமே. சமத்துவம் அல்லவா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது இதை மற்றை மாக்சிச மதவாதிகள் உணரவேண்டும். மாக்சிசம் ஆட்சி நடத்திய நாடுகளின் நடந்தது சர்வாதிகாரமே தவிர சமத்துவமோ தொழிலாளர்கள் நலன்களோ அல்ல. சீனாவில் அடிக்கடி நடக்கும் நிலக்கரிச்சுரங்க விபத்துக்களைப்பற்று அனைவரும் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள் தொழிலாளர் தோழன் சீனா போதிய பாதுகாப்போ உத்தரவாதமே இன்றித்தான் அந்த கரிச்சுரங்கத் தொழிலாளரை சுரங்கங்களுக்குள் வேலைக்கு அனுப்புகிறார்கள். கற்பனை வாதத்தை என்மால் எற்றுக் கொள்ள முடியாது. இலங்கைக்கு அபிவிருத்தி உதவியை சீனா செய்கிறதாம். சேளியன் குடும்பி சும்மா ஆடாது. வன்னியில் கொன்று குவித்த குழந்தை குட்டிகளுக்கு சீனா என்ன பதில் சொல்லப்போகிறது. அயல்நாடுகளை ஆக்கிரமி என்று மாக்சிசம் மாவோ இசத்தில் சொல்லியிருக்கா? எதற்கா சீனா இதைச்செய்கிறது. இடதுசாரி நாடுகளில் அரசியல் தலைமைகளில் இருப்பவர்கள் படு சர்வாதிகாரிகளே. மாக்சிசம் சர்வாதிகாரத்தைத் தான் உருவாக்குகிறது. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து வாசியுங்கள்.

  Reply
 • chandran .raja
  chandran .raja

  அரசியல் தஞ்சத்திற்கு அர்த்தம் தெரியாதயாதவர்களே குசும்பு போன்றவர்கள். இவர்களுக்கு உண்மைகள் சுடத்தான் செய்யும் என்பதில் வியப்பில்லை. சிகப்பு புத்தகங்களை கொண்டு திருந்தாரம் தமது பழமைவாத போக்கிற்கு ஒத்துவரவில்லை ஆகையால் முதாலித்தவ குடாரத்திற்குள் புகுந்து கொண்டு சோசஸிச-சோம்பேறிகளை தனதுவயிறு நிறைக்கப்பட்ட தத்துவத்தை ஒய்யாரமாக புகழ்கிறார்.

  உங்களப் போன்றவர்களுக்கு எந்த தத்துவமும் தேவையில்லைதான். இவருக்கும் “பருப்புப்போடுங்கள்” பந்தியில் உள்ள பக்கத்தவனை சுட்டிக் காட்டாதீர்கள். கொஞ்ச நேர்மையுடனாவது நடந்து கொள்ளுங்கள். தற்போது நீங்கள் வாழ்ழும்நாட்டில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்துகொண்டிருகிறது என்ற விழிப்புணர்வோடு வாழ்க்கை நடத்துங்கள். ஆகக் குறைந்தது. நுhறுவருட வருடவரலாற்றையாவது கற்றுக் கொள்ள முயற்சியுங்கள்.

  நான் கொஞ்சம் சேமித்துவைத்திருக்கிறேன். என்வயிறு நிறைந்து விட்டது ஆகவே எல்லோரும்கும் அப்படித்தான் இருக்கும் என்ற நினைவு எப்படியென்றால்….. உலகத்தின் பலபாகங்களிலும் குடியேறி தமதுவாழ்வை சீர்செய்துகொண்டு தமிழ் மக்களும் சிங்களமக்களும் கூடிவாழமுடியாது என்று கோஷம் எழுப்பும் புலம்பெயர் தமிழருடைய சுயநல-சிற்றறிவு போன்றதே!. மனிதன் ஒரு “அரசியல்பிராணி” என்கிற ஒரு சிறுயுண்மையாவது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் உங்கள் மனச்சாட்சி இல்லையேல்….?.

  Reply
 • நந்தா
  நந்தா

  குசும்பு:
  இலங்கையில் தோற்றுப்போனது என்ன? மார்க்சிசமா அல்லது தமிழரின் அடாவடி முதலாளித்துவமா?

  “ஈழம்” என்ற கருத்தை எதிர்த்த மாக்சிஸ்டுகள் அனைவரும் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதனையும், புலிகளுக்கு ஆதரவு கொடுத்த “முதலாளித்துவ” சக்திகள் இன்னமும் புலிகள் பக்கம்நியாயம் தேடி அலைவதையும் காணவில்லையா?

  ஜனநாயகம் என்பதற்குப் புத்தகமும் கிடையாது. வரைவிலக்கணமும் கிடையாது. “எழுத்தில்” கொடுக்கப்பட்ட சங்கதிகளுக்கே இன்னமும் விசாரணைகளும், தேடுதல்களும் நடக்கின்றன.

  இலங்கைப் பிரச்சனையில் யாரைக் குற்றம் சாட்டுகிறீர்கள்?

  Reply
 • chandran .raja
  chandran .raja

  கிழக்கிந்தியக் கம்பனியின் மூலமும் அதற்குப் பிறகும் பிரிடிஷ் அரசு இந்தியாவில் நடத்திய ஆட்சி எந்த அளவுக்கு ஊழல் மலிந்ததாக இருந்தது!?.
  கவனர் முதற்கொண்டு அத்தனை அதிகாரிகளும் எவ்வாறு எவ்வாறு பெரும் தொகையினை சம்பாதிக்தார்கள்?. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் 60 லட்சம் பவுன்ஸ் இந்தியரிடமிருந்து பிரிடிஸ்அதிகாரிகள் பிரிசாகப் பெற்றார்களாம். யார் இந்த இந்தியர்கள்? பிரிட்ஷ்சாரின் துணையோடு இந்தியமக்களை கூரண்டிக் கொழுத்த மன்னர்கள் பிரிஷ்சாரால் ஜமீன்தார்ராக்காப் பட்டவர்கள் அவர்களுடைய வியாபார ஏஜன்டுகள்
  தான் ஆகியோர் தான் இந்த பரிசுகளை வழங்கியவர்கள்.

  உண்மையில் இது பரிசல்ல. பிரிட்ஷ்அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் தான். இப்பொழுது அன்பளிப்பென்றாலே லஞ்சம் என்றுதான் புரிந்துகொள்ளும் நிலை நம்நாட்டில் ஏற்பட்டுள்ளது. நமது மக்கள் உழைத்துவிளைவித்த உணவு தானியத்தை அவர்கள் வாங்கிப்பதுக்கி வைத்து விலையேற்றிதன் மூலம் செய்கையான பஞ்சத்தையும் ஏற்படுத்தி பத்துலட்சம் மக்களை பட்டினியால் சாகடித்து கொள்ளை லாபம் சம்பாதித்து கொடுமைகள் புரிந்துள்ளார்கள். இந்தியாவில் மட்டுமின்றி அவர்கள் ஆக்கிரமித்த அனைத்து காலனிகளையும் இதேபோல் சுரண்டித்தான் பிரிஷ்ஸ் முதாலித்துவவர்க்கம் வளர்ச்சியடைந்தது.ஏகாதிபத்தியமாக மாறியது. உலகசக்தியாக உயர்ந்தது.

  முதாலித்துவசமுதாயத்தில் தொழிலாளர் சட்டங்கள் அல்லது தொழில்தகராறு சட்டங்கள் என்பதெல்லாம் பொதுவாக தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் முதாலிகளுக்கு சாதகமாகவும் தான் அமையும்.ஆனால் அது வெளிப்படையாக தெரியாத முறையில் உருவாக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் போராட்டபலம் அரசின்தன்மை அதன் கொள்கை ஆகியவை பொறுத்து தொழிலாளர் சில சலுகைகள் பெறக்கூடிய முறையில் சிலநேரங்களில் அமையலாம்.

  14-ம் நுற்றாண்டில் முதாலித்துவம் தோன்றிய காலத்தில் தவிர்கமுடியாமல் அதனுடன் தொழிலாளிவர்கமும் தோன்றியது. நீண்டகாலத்திற்கு பிறகேதான் தொழில்சங்க இயக்கம் தோன்றியது. ஆனால் சுரண்டலை தீவிரப்படுத்தவும் அதற்கான மூலதனத்தை திரட்டவும் முதலாளிவர்க்கம் ஆரம்பத்தில் இருந்தே முயற்ச்சி செய்து வந்தது. ஆரம்கால தொழிலாளர்சட்டம் அதற்கு சான்றாக உள்ளன. 1349இல் இங்கிலாந்தில் 3ஆவது எட்வர்ட்காலத்தில் இயற்றப்பட்டது. 1350-ல் பிரான்சில் ஜான் மன்னன் பெயரால் ஓர் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது இரண்டும் வேலைநேரத்தை நீடிப்பதாக நோக்கமாகக் கொண்டது.

  இவ்வாறு வேலைநேரத்தை கூட்டுவதை நியாயப்படுத்த பிளேக்நோய் ஜனங்களை கொன்றொழித்துவிட்டது என்பது காரணமாகக் கூறப்பட்டது. 1946இல் 7ஆவது ஹென்றியின் காலத்தில் மார்ச்-செப்டம்பர் மாதங்களில் காலை 5மணி தொடக்கம் இரவு7அல்லது எட்டுமணி வரை மூன்று மணிநேர இடைவெளியுடன் வேலை செய்ய வேண்டுமென்று ஒருசட்டம் இயற்றப்பட்டது. இதன்படி காலை மதியம் இரவு உணவு இடைவெளிக்கான 3மணி நேரம் போக 12மணிநேரம் வேலை செய்யவேண்டும். ஆக மொத்தம் 15 மணிநேரம்.

  தொழிலாளர் இயக்கம் தோன்றிய பிறகு தான் வேலைநேரத்தை ஓரளவு குறைக்க முதலாளிகள் ஒப்புக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.1833இல் பஞ்சாலைகளில் ஒன்றரை மணிநேர இடைவெளியுடன் 12மணிநேர வேலை செய்யவேண்டும் என்றும் 13-18 வயதினர் இங்