நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை (13) திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காகவும் நோன்பு விடுமுறைக்காகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி மூடப்பட்டது. மூன்றாம் தவணை ஆரம்பமாவதற்கு முன்பு சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற வேண்டுமென கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானமும் இடம்பெறுகிறது.
இதேவேளை, க. பொ. த. (உயர்தர) பரீட்சை விடைத்தாள் இரண்டாம் கட்டதிருத்தும் பணிகளும் நாளை 13ம் திகதி இடம்பெறுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இப்பணிகளுக்கென மூடப்படும் பாடசாலைகள் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.