நீதி மன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று (May 21 2010) விசாரணைகளுக் குட்படுத்தப்பட்ட யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ்வரி மற்றும் அவரது செயலாளர் திரு கு.பற்கணராசா இருவரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதான வழக்குகள் தனித்தனியே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதவானின் சமாதான அறையில் மேயருக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
மேயரின் செயலாளர் மீதான வழக்கு திறந்த நீதி மன்றத்தில் நடைபெற்றது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்து நடத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால் 7 வருடங்களுக்கு சிவில் உரிமையை இழக்க வேண்டி வரும் என தெரிவித்த நீதவான் மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து விடுபடப்போகிறிர்களா அல்லது வழக்கினைத் தொடர்ந்து நடத்தப் போகிறீர்களா என கேட்ட போது வழக்கிலிருந்து விடுபடவிரும்பவதாகத் தெரிவித்த மேயர் நீதிமன்றத்திடம் பகிரங்க மன்னிப்பைக் கோரினார். இதனையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவிடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
மேயருக்குத் தெரிவித்த அதே கருத்தை மேயரின் செயலாளருக்கும் நீதவான் தெரிவித்தார். அவரும் மன்னிப்புக் கோரியதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கிலிருந்து அவரும் விடுவிக்கப்படுவதாக நிதவான் தெரிவித்தார்.