யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வழமையை விடவும் அதிகளவிலான பொலிஸார் கடமையிலீபடுத்தப்பட்டு. யாழ்.நகரின் வீதிகள் அனைத்திலும் வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் ஆவணங்கள் பரிசோனைக்குட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து வீதி ஒழுங்ககளைக் கவனத்தில் கொள்ளாத சாரதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தலைக் கவசத்திற்குள் கைத்தொலைபேசியை செருகிய படி உரையாடிக்கொண்டு செல்வது யாழ்ப்பாணத்தில் வழக்கமாகவுள்ளது. தற்பொது அவ்வாறு செல்பவர்களுக்கு தண்டம் அறிவிடப்படும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களையடுத்து வான் முதலான வாகனங்களும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.