05

05

வைகோ, விஜயகாந்த், திருமா. புலிகளிடம் பணம் பெற்றனர் – சாமி

swamy1111.jpgவிடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம். அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சாமி கூறுகையில்,

இந்தியாவில் இருக்கும் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது இலங்கையில் இருந்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அடங்குவர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே நீதிமன்றத்துக்கு சென்று இதை அம்பலப்படுத்துவேன்.

கல்முனை வான் விபத்து – படுகாயமடைந்த உதவி கல்வி பணிப்பாளர் மரணம்

bss-ex.jpgகண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயம டைந்திருந்த ஒருவர் நேற்று முன்தினம் வியாழன் இரவு பேராதனை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் கொல்ல ப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது.

தற்போது மரணமடைந்துள்ளவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எஸ். எச். ஏ. அமஸ் (வயது 54) என்பவராவார்.

சாய்ந்தமருதுவைச் சேர்ந்த இவர் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்தைச் சேர்ந்தவர். கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸ¤ம், கொழும்பில் இருந்து பிபிலை நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் ஒன்றும் நேருக்குநேர் கண்டி, பேராதனை யில் கடந்த செவ்வாய் இரவு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வாகனச் சாரதி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தமை குறிப் பிடத்தக்கது. இவ்விபத்தில் ஒருவரின் வலது கை துண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

35 கிராமங்களில் 30,000 பேர் மீள்குடியமர்வு : வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgஇடம் பெயர் மக்களில் 30,000 பேரை 35 கிராமங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி. ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

‘வடக்கில் வசந்தம்’ திட்டப் பணிப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ விடுத்த பணிப்பின் பேரில் 7795 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு 35 கிராமங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கென மங்குளம், நொச்சிமொட்டை, சலம்பைக்குளம், பம்பைமடு ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்ட ஆளுநர், குடியேற்றப்படும் மக்களின் தேவைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூடி ஆராய்ந்துள்ளார்.

இதனிடையே, மேற்படிக் கிராமங்களைத் துப்புரவு செய்து, நீர், மின் விநியோகங்களை ஏற்படுத்தவும் வீதிகளைத் திருத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அடுத்து கடந்த 20 வருடங்களாக இக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மீள்குடியேற்றத் திட்டம் இன்னும் சில வாரங்களில் பூர்த்தியடைந்து விடும் எனக் கூறிய ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, இதற்காகத் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

கிழக்கு ஆயுத குழுக்களுக்கு மேலுமொரு பொது மன்னிப்பு காலம்

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மேலுமொரு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படவுள்ளது.  அவர்களிடமுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க மற்றுமொரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த முடியுமென கிழக்குப் பிராந்திய பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார்.

புதிய பொது மன்னிப்புகால அவகாசத் திகதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தம்மிடமுள்ள ஆயுதங்களை பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் முடிவடைந்தது. இக்காலப் பகுதிக்குள் சொற்ப தொகையான ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டன. எமது கோரிக்கை ஆயுதக் குழுக்களினால் நிராகரிக்கப்பட்டதாகவே கருதுவதாகவும் எடிசன் குணதிலக கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியில் இயங்கிவரும் ஆயுதக் குழுக்களிடம் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் எமக்குத் தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் வழங்கப்படுகின்ற மன்னிப்புக் காலத்தை இறுதிச் சந்தர்ப்பமாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென எடிசன் குணதிலக கூறினார்.

வடக்கு-கிழக்கு அபி. திட்டங்களில் முதலீடு செய்ய தனியாருக்கு அங்கீகாரம்

Sri Lanka Provincesவடக்கு-கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பல தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், ரூபா 9 பில்லியன் நிதியை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அரச முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

கால்நடை அபிவிருத்தி, பழம் மற்றும் மரக்கறிச் செய்கை, அரிசி ஆலைகள், மீன் பதனிடுவதற்கான ஐஸ் உற்பத்தி, பால் உற்பத்தி, விவசாயப் பண்ணை, சிமெந்து, ஹோட்டல்கள், கப்பல் திருத்த வேலைகள், ஆடை உற்பத்தி, ஜெனரேட்டர்கள் உற்பத்தி போன்ற துறைகள் இத்திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.

இவற்றில் சில திட்டங்களை அமுல்படுத்துவதற்குப் பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியாக, மலேசியா, சுவிற்சர்லாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் உதவ முன் வந்துள்ளதாகவும் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் டெங்கு நோயால் 12 பேர் மரணம்; 1500 பேர் பாதிப்பு : டாக்டர் தட்சணாமூர்த்தி

dengue22222.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் 12 பேர் இறந்துள்ளனர். 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோய்த் தடுப்பு நிபுணர் டாக்டர் தட்சணாமூர்த்தி தெரிவித்தார். எனினும் தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுதல் பூரணக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் மாதம் பருவமழை ஆரம்பமாகியதும் மீண்டும் டெங்கு நோய் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நோயை ஒழிக்கும் நோக்கில் தற்போது புகை அடித்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே அதிகமானோர் டெங்கு நோயினால் மரணமாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காலி டின்மீன் உற்பத்திக் கம்பனியின் நிர்மாணப்பணி ஒக்டோபரில் ஆரம்பம் நியூசிலாந்துடன் ஒப்பந்தம்; 50 மில். அ. டொலர் முதலீடு

இலங்கையின் முதலாவது டின் மீன் உற்பத்தி கம்பனி காலி, கதுருதுவ வத்தையில் அமைக்கப்பட உள்ளதோடு, இதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சட்டத்தரணி ஏ. பி. எஸ். ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், டின் மீன் கம்பனி அமைப்பது தொடர்பாக நியூசிலாந்து நாட்டு கம்பனியொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இதனூடாக 1500 பேருக்கு நேரடியாக தொழில்வாய்ப்பு கிட்டும்/ இந்த கம்பனி அமைக்க 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலீட்டு சபை, அமைச்சரவை என்பவற்றின் அனுமதி கிடைத்துள்ளன.

 இங்கு உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் நியூசிலாந்து, இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கம்பனி நிர்மாணப் பணிகள் ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் பூர்த்தி செய்யப்படும். கம்பனிக்குத் தேவையான இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருட இறுதிக்குள் முதலாவது டின் மீன் சந்தைக்கு விடப்படும். இதனூடாக இறக்குமதி செய்யும் டின் மீன்களின் விலைகள் குறைவடையும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்ப விழா பங்களாதேசில்

2nd-test.jpg2011 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மத்திய அமைப்பு குழுக் கூட்டம் மும்பையில் நடந்தது.

ஐ.சி.சி. துணை தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி ஹாரூன் லார்கட், போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட் சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடத்துவது என்றும் தொடக்க ஆட்டத்தை அங்கு பெப்ரவரி 19 ஆம் திகதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பெப்ரவரி 19 ஆம் திகதி தொடக்க விழா மற்றும் தொடக்க ஆட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போட்டி அட்டவணை முழு விவரம் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆய்வு செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் போட்டி அமைப்பு குழு இயக்குனர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், ‘பயன் அளிக்கக் கூடிய கூட்டம் இதுவாகும். போட்டி சிறப்பான முறையில் நடைபெற வேண்டிய நடவடிக்கை முழு வீச்சில் எடுத்து வருகிறோம். போட்டியை நடத்தும் எல்லா நாடுகளும், ஐ.சி.சி. யும் உற்சாகமான ஒத்துழைப்பு எடுத்து வருகிறன’ என்றார்.

யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை நிறுத்திவிட்டதாக வடகொரியா அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை நிறுத்திவிட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை வடகொரியா பகிரங்கமாக அறிவித்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களையடுத்து வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. யுரேனியம் செறிவூட்டல் வேலைகளின் இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் வட கொரியா இவ்வாறு அறிவித்ததாக ஆசியாவுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீபன் பொஸ் வோர்த் ஐ.நா. வுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாக மற்றொரு செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஐ. நா. வின் கடுமையான பொருளாதாரத் தடை காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ. நா. விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால் வட கொரியாவின் பல ஆயுத வியாபாரங்கள் தடைப்பட்டன. சர்வதேசநாடுகள் தொடர்ந்தும் வடகொரியா மீது சந்தேகத்துடனும், தனது அறிக்கைகளை நம்பாமலும் நடந்து கொண்டால் முடிவுகளை மீள் பரிசீலனை செய்யுமென வட கொரியாவின் முக்கிய நபர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வடகொரியா வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா நம்பிக்கையடையவில்லை. இதனால் ஸ்டீபன் பொஸ் வோர்த் ஐ.நா. வுக்கு கடிதம் எழுதியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

யுரேனியத்தை செறிவூட்டுவதனூடாக வட கொரியா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா சந்தேகிப்பதால் வடகொரியா பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. அண்மையில் ஐ.நா.வில் தனக்கெதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது. இவற்றை வடகொரியா கைவிட்டுள்ளது. ஸ்டீபன் பொஸ் வோர்த் செய்த விஜயம் வெற்றியளித்துள்ள தென்பதையே வட கொரியாவின் அறிக்கை காட்டுவதாகவும் சில அவதானிகள் தெரிவிக்கின்றனர். எங்கள் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு ஐ.நா. விடமுள்ளது. பிழையாக வழி நடத்தினால் பாரதூரமான விபரீதங்கள் ஏற்படலாம் என வட கொரியா நிபுணர்கள் கூறினார்.

கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் தீவிரம்!

dengue22222.jpgகண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளதாக டெங்கு நோய் தடுப்பு மத்திய நிலையம் எமது இணையத்துக்கு இன்று அறிவித்தது. கடந்த சில தினங்களில் டெங்கு நோய் பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும் இப்பொது பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் பெருகி நோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை 3249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் இம்மாவட்டத்தில் 30 பேர் இந்நோய் காரணமாக  மரணமாகியுள்ளனர். நாடு முழுவதிலும் இதுவரை 24 ஆயிரத்து 984 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 245 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேகாலை, கம்பஹ, கொழும்பு, குருநாகல்,  களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவுவதாக நோய்த் தடுப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.