2009

2009

“உதயன்”ஆசிரியர் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்

uthayan_logo.gifதாம் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து “உதயன்”,”சுடர் ஒளி”பத்திரிகைகளின் ஆசிரியர்  ந.வித்தியாதரனினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அசேõக சில்வா, சலீம் மர்சூக், பி.ஏ.இரத்னாயக்கா ஆகியோர் முன்னிலையில் இந்தமனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. தாம் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவைத் தொடர்வதற்குத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து மனுதாரர் அனுப்பிய கடிதம் அவரது சட்டத்தரணியால் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது.

இதேசமயம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வித்தியாதரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து முற்றாகப் பரிசீலித்து முடிவு செய்யும் விவகாரம் பொலிஸ் மா அதிபரின் பரிசீலனையில் இருப்பதால், அதற்குத் தேவையான நடவடிக்கையை அவர் எடுப்பதற்கு இடமளித்து உயர்நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவின் அனுசரணையுடன் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார். 

ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு பயணிகள் கப்பல் சேவை

green-ocean2.jpg
காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வழமை போல் ஒன்று விட்ட ஒருநாள் நடைபெறவிருக்கிறது. யாழ். அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலைத் தெரிவித்தார். இந்த நடைமுறை இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று  பயணம் மேற்கொள்வதற்காக அனுமதிச்சீட்டினை பெற்றுக்கொண்டவர்களும் அவசர தேவையின் நிமித்தம் செல்ல இருப்பவர்களும் காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் கேட்டுள்ளார். 

பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா,கனடா நாடுகளில் இன்று துக்கதினம் அனுஷ்டிப்பு

nothice.jpgசிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து பிரான்ஸ், டென்மார்க்,அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இன்று (மே 22)  புதன்கிழமை துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தேசிய படைவீரர்களை பாராட்டும் விழா

last-mulli.jpgதேசிய படைவீரர்களைப் பாராட்டும் விழா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையில் பாரா ளுமன்றத்திடலில் இடம்பெற வுள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்வதுடன் பிற்பகல் மூன்று மணிக்கு இவ்விழா ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் பாராளுமன்றத் திடலைச் சென்றடைந்ததும் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிகழ்வையொட்டி கொழும்பு மற்றும் ஸ்ரீஜய வர்தனபுர கல்வி வலயத் திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள் ளதுடன் சில பாதைகள் மூடப்படுவதால் போக்குவரத் துக்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளில் விசேட போக்குவரத்து செயற்திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதற்கிணங்க கொழும்பு பிரதேசத்தில் பேலியகொடையிலிருந்து பழைய களனி பாலம் ஊடாக ஊறுகொடவத்தை வழியாக பொரளைக்குச் செல்லும் சகல வாகனங்களும் பேஸ்லைன் வீதி ஹிங்கம் சந்தியூடாகச் செல்ல முடியும். அங்கிருந்து சந்தர்ம வீதியூடாக சங்கராஜ மாவத்தை சுற்றுவட்டத்திற்கு வருவதுடன் அங்கிருந்து பஞ்சிகாவத்தை, மருதானைச் சந்தி, டீன்ஸ் வீதியூடாகப் பயணிக்க முடியும்.

பேஸ்லைன் வீதி புல்லர்ஸ்வீதி கனத்தையூடாக பயணிக்க வேண்டிய வாகனங்கள் கனத்தை சந்தியிலிருந்து கிங்ஸ் வீதி கேரி கல்லூரிவீதியூடாக புஞ்சிபொரல்லை மருதானைச் சந்தியூடாக கொழும்பு வடக்குப் பகுதிக்குள் பயணிக்க முடியும்.

பேஸ்லைன் வீதி கனத்தைச் சந்தியிலிருந்து ஹிங்கம் சந்தி வரையிலான குடியிருப்பாளர்கள் வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட வீதியில் பயணிப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ள னர். கொட்டா வீதி ஆயுர்வேத வைத்தியசாலைச் சந்தியிலிருந்து பொரளைப் பக்கமாக எந்தவொரு வாகனமும் செல்வாக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அதேவேளை, கொட்டாவீதி பொரளைச் சந்தியிலிருந்து ராஜகிரிய அப்பகுதியில் குடியிருப்போரின் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொல்துடுவ வீதியிலிருந்து பாராளுமன்ற வீதி ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான வீதி இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மூடப்படவுள்ளது. பெலவத்தையிலிருந்து பாராளுமன்ற சந்தி வரையிலான வீதிகளும் முற்றாக மூடப்படுமெனவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, படையினரை வாழ்த்தும் வைபவங்கள் நேற்று பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களிலும் இடம்பெற்றதுடன் யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடு; சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசு பேசும் – பிரியதர்சன யாப்பா

anurapriyadarsanayapa.jpgவெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துமென்று அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையின் கீழும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கே. பீ. என்பவர், புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி, போராட்டத்தைத் தொடர்வார் எனக் கூறப்படுகிறதே” என்று செய்தியாளர் கேட்டபோது,

“கே. பீ.யைப் பற்றித் தெரியாது அவர் அவசியமும் இல்லை புலிகள் இயக்கம் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கே. பீ.க்கும் பிடிவிறாந்து உள்ளது. இலங்கையில் தீவிரவாதம் தோன்றுவதற்கான மூலாதாரமே அழிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாட்டை முடக்குவது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். குற்றவாளிகளைப் பரிமாறும் நடைமுறையும் உண்டு. இனி எவ்வகையிலும் தீவிரவாதம் வளர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது” என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

மலாய் மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறையைக் கைவிடப்போவதாக மலேஷியப் பிரதமர் அறிவிப்பு

razak.jpgமலேஷியாவில், தற்போது அங்குள்ள பெரும்பான்மை மலாய் இனமக்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை நடைமுறைகளை கைவிடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரஜாக் தெரிவித்துள்ளார். அங்கு பெரும்பான்மை மலாய் மக்களுக்கு முன்னுரிமை என்பது நவீன மலேஷியாவின் ஒரு முக்கிய விடயமாக இருந்து வருகிறது.

மலேஷியர்கள் மேலும் சமத்துவம் மிக்க ஒரு சமுதாயத்தை பலமாக ஆதரிக்கிறார்கள் என்று சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே இந்தக் கருத்தை நஜீப் ரஜாக் வெளியிட்டுள்ளார்.

மலாய் இன மக்களுக்கு ஒதுக்கீடு என்பது அங்கு வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மலேஷியாவில் பெரும்பான்மை இன மக்களுக்கு ஆதரவாக தனித்துவமான கொள்கை இருந்து வருகிறது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான ஒரு நடைமுறை காலாவதியாகிப் போன ஒரு நடைமுறை என்றும், இது ஊழலுக்கு வழிவகுக்கிறது என்றும் சீன மற்றும் இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

ஐ.நா விசேட பிரதிநிதி நம்பியார் நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்

menikfarm_nambiyar.jpgஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விஷேட பிரதிநிதி கே.டி. நம்பியார் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் வசிக்கும் மக்களை சந்தித்து தற்போது அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்பு அங்கு கருத்துரைத்த நம்பியார் கூறுகையில்:

இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன் தனது இன்றைய விஜயம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு தற்போதைய நிலவரம் குறித்து அறிவிப்பதாகவே அமைந்துள்ளது எனவும் கூறினார்.

இங்கு வருகை தந்த விஷேட பிரதிநிதியை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றதுடன் இடைத்தங்கல், நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம் உட்பட தற்போதைய நிவா ரணப் பணிகள் குறித்தும் அமைச்சர் நம்பியாருக்கு சுட்டிக்காட்டினார்.

பாடசாலை அதிபர்களுக்கு பதவி உயர்வு

susil_prem_minister.jpg நாட்டிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி கடந்த 13 வருடங்களாகப் பதவி உயர்வு கிடைக்காமையினால் பாதிக்கப்பட்ட அதிபர் பிரிவு 2-2 இலுள்ள 1743 அதிபர்கள் அதிபர் பிரிவு 2-1 க்கும், அதிபர் பிரிவு 2-1 இல் இருந்த 2582 அதிபர்கள் அதிபர் பிரிவு 1 க்கும் தரமுயர்த்தப்படவுள்ளனர்.

அரச சேவை ஆணைக் குழு நியமிக்கப்படும்வரை இவர்களுக்கான பதவி உயர்வை வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் -பூகற்பவியலாளர் எச்சரிக்கை

earth-slip.jpg தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற் படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய நேற்றுத் தெரிவித்தார். இப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறும் காலங்களில் மலையகப் பிரதேசங்களிலும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், கம்பஹா, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் இம்மழை வீழ்ச்சி காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் இப்பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ள பல இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மே மாதம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையும் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு தொடர்பாக ஆய்வு செய்யவென நேரில் சென்று திரும்பிய பூகற்பவியலாளர் சமந்தா போகபிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேநேரம், நோட்டன் பிரிஜ், விதுளபுர மண்சரிவு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மண் சரிவுக்கு உள்ளான பிரதேசத்திற்கு மேலாக அமைந்திருக்கும் வீதியில் சேருகின்ற தண்ணீரை, இப்பிரதேசத்திற்கு அருகில் கீழாக ஓடிக்கொண்டிருக்கின்ற களனி கங்கையுடன் ஒழுங்கு முறையாக சேர்வதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தால் இந்த அனர்த்தத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இம்மண் சரிவு ஏற்பட்ட பிரதேசத்திற்கு இரு பக்கத்திலும் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஒரே விதமான மண் அமைப்பே காணப்படுகின்றது. அதன் காரணத்தினால் இப்பிரதேசத்திலுள்ள ஐந்து வீடுகளில் வாழுகின்ற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கும் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

விதுலிபுர மண்சரிவுக்கு மேலதிகமாக வேறு வேறு இடங்களிலும் சிறுசிறு மண் சரிவுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

அதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண் சரிவுகள் மேலும் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றும் அவர் கூறினார்.

கல்முனை மாநகரசபை உருவாக்கப்பட்டதால் தமிழ், முஸ்லிம் நல்லுறவு மேம்பட்டுள்ளது

kalmunai.jpgகல்முனை மாநகரசபை உருவாகியதையடுத்து, கடந்த 3 வருடங்களில் தமிழ், முஸ்லிம் நல்லுறவு மேலோங்கி வருகின்றது. இந்த நிலைமையை மாநகரசபையின் செயற்பாடுகள் மூலம் மேலும் கட்டிவளர்க்க வேண்டும். இவ்வாறு கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் கூறினார். மாநகர முதல்வர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சபா மண்டபத்தில் அமர்வு நடைபெற்றது. உறுப்பினர் அமிர்தலிங்கம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

” இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக தமிழ், முஸ்லிம் மக்கள் இன ஒற்றுமையுடனும் அந்நியோன்னியத்துடனுமே வாழ்ந்து வந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் தனியாக உருவாகுவதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ் பாணமைப்பற்றாக இருந்த காலகட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், 1964 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தான் இப் பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிறு சிறு பிணக்குகள் முளைவிடத் தொடங்கி இன முறுகல் நிலைமைகள் அவ்வப்போது ஏற்பட்டுவந்தன. ஆனால், கல்முனை மாநகரசபை உருவாகி மக்கள் பிரதிநிதிகளாக இரு இனத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கிய பின்னர் நல்லுறவுமிக்க சௌஜன்ய நிலைமை தோற்றுவிக்கப்பட்டு அது வளர்ச்சி கண்டு வருகின்றது.

அமைதி, சமாதானம் மிளிரும் பிரதேசமாக இன்று இந்த மண் திகழ்கின்றது. இன்று பல்வேறு துறைகளிலும் கல்முனை மாநகர சபைப் பிரிவிலுள்ள தமிழ்க் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் வளரக்கூடாது.

குறிப்பாக, கரைவாகு மேற்கைச் சேர்ந்த சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, துரவந்தியமேடு போன்ற கிராமங்களின் அபிவிருத்தியில் சபை முழு அக்கறை காட்டவேண்டும். வீணான சந்தேகங்கள் எழுவதற்கு இடமளிக்காது சபைச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். நற்பிட்டிமுனை வேம்படி வீதிக்கு கிரவலிட்டுத் தருமாறு நான் கோரியிருந்தேன். இதற்கும் ஆவனசெய்ய சபை முன்வர வேண்டும் என்றார்.