தேசிய படைவீரர்களை பாராட்டும் விழா

last-mulli.jpgதேசிய படைவீரர்களைப் பாராட்டும் விழா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையில் பாரா ளுமன்றத்திடலில் இடம்பெற வுள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்வதுடன் பிற்பகல் மூன்று மணிக்கு இவ்விழா ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் பாராளுமன்றத் திடலைச் சென்றடைந்ததும் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிகழ்வையொட்டி கொழும்பு மற்றும் ஸ்ரீஜய வர்தனபுர கல்வி வலயத் திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள் ளதுடன் சில பாதைகள் மூடப்படுவதால் போக்குவரத் துக்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளில் விசேட போக்குவரத்து செயற்திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதற்கிணங்க கொழும்பு பிரதேசத்தில் பேலியகொடையிலிருந்து பழைய களனி பாலம் ஊடாக ஊறுகொடவத்தை வழியாக பொரளைக்குச் செல்லும் சகல வாகனங்களும் பேஸ்லைன் வீதி ஹிங்கம் சந்தியூடாகச் செல்ல முடியும். அங்கிருந்து சந்தர்ம வீதியூடாக சங்கராஜ மாவத்தை சுற்றுவட்டத்திற்கு வருவதுடன் அங்கிருந்து பஞ்சிகாவத்தை, மருதானைச் சந்தி, டீன்ஸ் வீதியூடாகப் பயணிக்க முடியும்.

பேஸ்லைன் வீதி புல்லர்ஸ்வீதி கனத்தையூடாக பயணிக்க வேண்டிய வாகனங்கள் கனத்தை சந்தியிலிருந்து கிங்ஸ் வீதி கேரி கல்லூரிவீதியூடாக புஞ்சிபொரல்லை மருதானைச் சந்தியூடாக கொழும்பு வடக்குப் பகுதிக்குள் பயணிக்க முடியும்.

பேஸ்லைன் வீதி கனத்தைச் சந்தியிலிருந்து ஹிங்கம் சந்தி வரையிலான குடியிருப்பாளர்கள் வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட வீதியில் பயணிப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ள னர். கொட்டா வீதி ஆயுர்வேத வைத்தியசாலைச் சந்தியிலிருந்து பொரளைப் பக்கமாக எந்தவொரு வாகனமும் செல்வாக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அதேவேளை, கொட்டாவீதி பொரளைச் சந்தியிலிருந்து ராஜகிரிய அப்பகுதியில் குடியிருப்போரின் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொல்துடுவ வீதியிலிருந்து பாராளுமன்ற வீதி ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான வீதி இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மூடப்படவுள்ளது. பெலவத்தையிலிருந்து பாராளுமன்ற சந்தி வரையிலான வீதிகளும் முற்றாக மூடப்படுமெனவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, படையினரை வாழ்த்தும் வைபவங்கள் நேற்று பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களிலும் இடம்பெற்றதுடன் யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *