2009

2009

ஈஎன்டிஎல்எப் இந்தியப் பிரதமரை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பாக முறையிட்டுள்ளது : வி அருட்செல்வன்

Indiain PM Manmohan Singhஈழம் தேசிய ஜனநாயக முன்னணித் (ஈஎன்டிஎல்எப்) தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓகஸ்ட் 7ல் சந்தித்தார். இந்தச் சந்திப்பினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற செயலருமான இரா. அன்பரசு ஏற்பாடு செய்திருந்தார். அன்பரசு இச்சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

‘இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள வரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும்” என்று ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமரிடம் கோரி உள்ளார்.

இச் சந்திப்பின் போது பின்வரும் கோரிக்கைகளை ஈஎன்டிஎல்எப் முன்வைத்தது.

(01) ‘இந்திய – இலங்கை’ ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) இலங்கை அரசு ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அனுபவரீதியாக நாங்கள் கண்டுள்ளோம். எனவே இந்தியா அமைதிப் படையை அனுப்புவதன் மூலமாகத்தான் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியும். இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாதப்பட்சத்தில் இந்தியா ஐ.நா.வின் அமைதிப்படையை அனுப்பும்படி ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும்.

(03) இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோருகிறோம்.

(04) வடக்கு மாகாணத்தில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றரை லட்சம் தமிழர்களை நிபந்தனை எதுவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தங்களது பகுதியில் குடியமர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

(05) தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய கல்வி அறிவு இல்லாமலும்;இ தொழிற்பயிற்சி பெறாமலும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வியும்இ தொழில்; வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

(06) புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தியாவில் ஒரு மகாநாடு நடத்துவதற்கு இந்திய அரசும்இ தமிழக அரசும் அனுமதி வழங்கவேண்டும்.

இதற்க்கு பதிலித்த இந்தியா பிரதமர் ‘வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தாக ஈஎன்டிஎல் தெரிவித்துள்ளது.
ஓகஸட் 7; நடைபெற்ற சந்திப்பின் போது இந்தியப் பிரதமர்இ ஈ.என்.டி.எல்.எப் க்கு கீழ்கண்டவாறு உறுதிமொழியழித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்து உள்ளது.

* இந்திய-இலங்கை ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

* வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் அதற்கான உதவித் தொகைகளை கொடுப்போம். மீளக்குடியேற்றங்களையும் நேரடியாக அவதானித்து வருகிறோம்.

* தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான கல்வியும்இ தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.

* நிச்சயமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமான ஒரு நல்லத் தீர்வினை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கும்.

* புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான மாநாட்டிற்கு இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களிடம் கலந்து பேசி அதற்கான ஆவணம் செய்யப்படும்
என்ற உறுதிமொழிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்  ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரக்கு வழங்கி உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விசேட கருத்தரங்கு

housemaids.jpg
இலங்கையில் வீட்டுப் பணியாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் செங்கொடிச் சங்கம் அதன் மகளிர் பிரிவுடன் இணைந்து கருத்தரங்கொன்றை நடத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. இவர்கள் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களாகவுள்ளதால் தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. புதிதாத அத்தொழிலாளர்களின் தேவைகளுக்கு அமைய சட்டத்தை உருவாக்கும் நோக்கில் கொழும்பு,ஜானகி ஹோட்டலில்  நடைபெற்றபோது பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரச தனியார் தொழிற்சங்கங்கள் பங்குபற்றின.

வீட்டுப் பணியாளருக்கு உரிய சட்டமொன்று அவசியமானது. எனினும், இவர்கள் வரையறையற்றிருப்பதால் சட்டத்தை உருவாக்க சிரமமாகவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் இங்கு பேசுகையில் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்களின் சில உரிமைகள் மீறப்படுமெனின் நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணாக வயது குறைந்த பணியாளர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேநேரம், முக்கியமாக வீட்டுப் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக உள்ளதாக செங்கொடிச் சங்கத்தின் மகளிர் பிரிவு தெரிவித்தது.

எனவே, சம்பள ரீதியில் பாதுகாப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகிறது

000stud.jpgக.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இப்பரீட்சையில் மோசடிகள் இடம்பெறாது தடுப்பதற்கு இம்முறையும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு ஒன்று இயங்கும் எனவும் இப்பரீட்சையில் ஆள்மாறாட்டம் அல்லது வேறு மோசடிகள் இடம்பெற்றால் இப்பிரிவுக்குத் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பரீட்சை மண்டபம் மற்றும் பரீட்சை அதிகாரிகள் தொடர்பாகவும் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0112784208 அல்லது 0112785220 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 1,827 பரீட்சை மண்டபங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள 1,263 மாணவர்களுக்கு வவுனியாவில் 10 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையின் பின் 1991 இல் தாய்லாந்து சென்றார் கே.பி.’

pathmanathan.jpg விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் பிளாஸ்ரிக் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் 1991 இல் தாய்லாந்துக்குச் சென்று அங்கு திருமணம் செய்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாகப் பயங்கரவாதக் குழுக்களுக்கு கே.பி. ஆயுத விற்பனை செய்தவர் என்றும் ரோலர்களைப் பயன்படுத்தி திறமையாக சமாளித்து ஆயுதங்களைக் கொண்டு செல்பவர் எனவும் அதேசமயம் மிகவும் நவீனமான ஆயுதக் கொள்வனவு முறைமைகளை மேற்கொண்டு பிரதான ஆயுத வியாபாரிகளின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர் என்றும் இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.யின் பயண முறைமைகளால் விடுதலைப் புலிகளின் கப்பல்களில் நடமாட்டம் அதிகரித்திருந்தது. விமான நிலையங்கள், துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று மிகவும் சுலபமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர் ஆயுதத் தயாரிப்பு நாடுகளுக்கும் சென்று வந்தார். முன்னாள் சோவியத் நாடுகள் , மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய ஆயுத உற்பத்தி நாடுகளுக்கு அவர் சென்றுவந்தார். அத்துடன், ஹொங்கொங், சிங்கப்பூர், லெபனான், தாய்லாந்து, சைப்பிரஸ் போன்ற நாடுகளிலுள்ள ஆயுத வியாபாரிகளிடமும் அவர் தொடர்புகளை விருத்தி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு அறிக்கையின் பிரகாரம் கே.பி. பிரான்ஸ், சைப்பிரஸ், தாய்லாந்து, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, கம்போடியா, பாகிஸ்தான், நோர்வே, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். வன்னி நடவடிக்கைகளின் பிந்திய கட்டத்தில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு கொழும்புக்கு சர்வதேச அழுத்தத்தைக் கொடுப்பதற்கு கே.பி. செயற்பட்டு வந்தார். இலங்கை அரசுக்கு எதிராக மேற்குலக தலை நகரங்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதற்கு ஊக்குவித்தும் நிதி ஆதரவு வழங்கியும் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பிரிவினைவாதம் அவரின் அறிக்கைகளில் காணப்பட்டதாகவும் புலம்பெயர்ந்த சமூகத்தை ஈழத்தமிழர்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தை அந்நிய ஆட்சியென கருதப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  2007 செப்டெம்பர் 10 இல் தாய்லாந்து பொலிஸாரால் கே.பி. கைது செய்யப்பட்டதாக தாய்லாந்தின் பாங்கொங் போஸ்ட் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக இந்திய, இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்துவதற்காக அணுகிய போது அந்தச் செய்தி சரியானதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009 மே 18 இல் துரிதமாக விடுக்கப்பட்ட அறிவிப்பில் பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கே.பி. தெரிவித்திருந்தார். பின்னர் தனது அறிக்கையை அவர் திருத்திக்கொண்டார். முதலாவது அறிக்கை தொடர்பாகவும் பின்னர் அவர் விடுத்த அறிவிப்பு தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றச்செயல்கள் குறித்து இலங்கை, இந்தியா மற்றும் இன்ரர் போலின் தேடுதல் பட்டியலில் கே.பி.இருந்தார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உட்பட அதி முக்கிய பிரமுகர்களின் படுகொலைச்சதி மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் பில்லியன் டொலர் நிதியை கே.பி.தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பதவி வழங்குவோரிடமிருந்து இதனைப் பெற்றுக்கொண்டதாகவும் இந்த நிதியில் சில பகுதி வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து கப்பமாகப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்க்குமாறு கணினி நிலையங்களில் அறிவித்தல்கள்

இணையத்தளங்கள் மூலம் ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர். தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில் இணையத்தளங்களை பயன்படுத்துவது குறித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள் இணையத்தளங்களைப் பயன்படுத்தும் நிலையங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எவராவது ஆபாசப்படங்களைப் பார்ப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த நிலையங்கள் மூடப்படும் எனவும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இந்த நிலையங்களின் உரிமையாளர்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அரசு அண்மையில் ஆபாசப்படங்கள் தொடர்பான சில இணையத்தளங்களை தடை செய்துள்ளதையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  இதேவேளை, சில தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள், கணினி பயிற்சி நிலையங்கள், கணினி நிலையங்கள் என்பவற்றில் “ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் பொலிஸார் அறிவித்தல்’ என்ற விளம்பரங்களும் காணப்படுகின்றன.

இலங்கைத் தமிழருக்கு மாகாண சுயாட்சி கோருகிறார் சுவாமி

இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை ஒத்ததாக மாகாண சுயாட்சியுடனான அதிகாரப் பகிர்வு இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் தெற்காசியா, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கைச் சந்தித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி அதிகாரப்பகிர்வை அமுல்படுத்த தனது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளவும் பாதுகாப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை ஆரம்பிப்பதில் தீர்வு தங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். பின்னர் சில மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சில ஏற்பாடுகளுக்கு அத்திவாரமாக இவற்றை மேற்கொண்டு சாத்தியமான அளவு பரந்துபட்ட கருத்தொருமைப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா அதிகளவுக்குச் செயற்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன் வைக்குமாறு அமெரிக்காவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இந்த அதிகாரப்பகிர்வானது தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாகவும் அரசியல் பொதுக் கூட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதாகவும் இருப்பதற்கு துணை நிற்பதாக இருக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சங்கரி ஐயா, தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்! : த ஜெயபாலன்

Anandasangaree V._._._._._.
”சங்கரி ஐயாவுக்கு எனது பகிரங்க 75வது பிறந்தநாள் வாழ்த்து மடல்”  என்ற தலைப்பில் யூன் 15 2008ல் எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையின் சாரம்சத்தின் அடிப்படையில் அதன் தலைப்பு மாற்றப்பட்டு இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது.
._._._._._.

சங்கரி ஐயா வணக்கம்.

இன்று யூன் 15 (2008), உங்கள் 75வது பிறந்த தினத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு என் குடும்பத்தில் எல்லோரும் நலம். உங்களுக்கும் அவ்வாறே என்று நம்புகிறேன். ஐயா நீங்கள் கடிதம் எழுதுவதில் படுபிசியாக இருப்பது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற வாசகர்களையும் படுபிசியாக வைத்திருக்கிறீர்கள். நிற்க.

ஐயா 14 மே 1976 அன்று நீங்களெல்லாம் வட்டுக்கோட்டையில் கூடி ஒரு தீர்மானம் போட்டியல், அது உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். இதுவொரு பகிரங்கக் கடிதம் என்ற படியால மற்றவைக்கும் விளங்குவதற்காக ”….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவால் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.”’ இது தான் ஐயா நீங்களும் உங்கள் கட்சியும் எடுத்த தீர்மானம்.

ஐயா நீங்கள் ”இது ஒரு ரக்ரிகல் மூவ் (tactical move)” என்றும் ”இது ஒரு நியாயமான தீர்வாக உங்களுக்கு படவில்லை” என்றும் தேசம் சஞ்சிகைக்கு 2006 நவம்பரில் அளித்த பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தம்பிக்கு இன்னும் இந்த விசயம் புரியவில்லை. அல்லது புரிந்துகொண்டாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டது, இவ்வளவிற்கும் பிறகு எப்படி மக்கள் முன் வந்து அதை ஒத்துக்கொள்வது.

1980க்களின் நடுப்பகுதியில் பிரபாகரனிடம் இந்திய உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த சந்திரன், ‘தமிழீழத்தை கைவிடலாமே’ என்று கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் ‘என்னை நம்பி 120 பெடியள் உயிரை விட்டுள்ளார்கள்’ என்று பதில் சொல்லியதாக, அண்மையில் லண்டன் வந்திருந்த சந்திரன் தெரிவித்திருந்தார். இன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் மட்டும் 20,000க்கும் அதிகமான போராளிகள் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பல மடங்கு மக்கள் உயிரிழந்து உள்ளனர். உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது.

1976ல் இந்த தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்ட மாநாட்டை சுற்றியுள்ள மதில்சுவர்களில் ‘தமிழ் முதலாளி தமிழீழம் கேட்கிறான்’ என்பது போன்ற கூட்டணியின் தமிழீழக் கோசத்திற்கு எதிரான சுவரொட்டிகளை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி ஒட்டியது. தமிழீழம் சாத்தியமா? இல்லையா? என்ற வாதம் யாழ்ப்பாணமெங்கும் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டணியின் தமிழீழ கோசத்தை எதிர்த்தவர்கள் மிகச் சிறுபான்மையினரான இடதுசாரிகள். அவர்களது அரசியல் எதிர்வு கூறல் இன்று யதார்த்தமாகிவிட்டது.

ஐயா உங்களுடையதும் உங்கள் கட்சியினதும் அரசியல் தவறுகளுக்கு தமிழ் மக்கள் செலுத்துகின்ற விலை மிக மிக அதிகம். ”நாங்களோ போய் அடிபடச் சொன்னாங்கள், டக்ளஸ் தேவானந்தாவைப் போல் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை” என்று நீங்கள் சொல்லலாம். ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் உங்கள் முகம் முழுக்க இரத்தக்கறை இருப்பதை நீங்கள் காணவில்லை. தமிழீழக் கோசம் போட்டு உங்களால் உசுப்பி விடப்பட்ட ஆயிரம், ஆயிரம் இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள நாடி, நரம்புகளைக் கீறி இரத்தத் திலகம் இட்டார்களே. அதில் எனது சொந்த சகோதரனும் ஒருவன். 25 வயதிலேயே அவனும் கொல்லப்பட்டு 20 வருடங்கள் கடந்துவிட்டது. அந்த இளைஞர்களின் இரத்தக் கறைகளை நான் உங்கள் முகத்தினில் காண்கிறேன் ஐயா.

ஐயா உங்களுடைய அரசியல் வாழ்க்கை 1950க்களில் இடதுசாரி அரசியலிலேயே ஆரம்பித்தது. 1965ல் தேர்தலில் தோல்வியடையும் வரை நீங்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிர்கள். பிறகு கொங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1970ல் பாராளுமன்றம் சென்றீர்கள் பிற்பாடு சமஸ்டிக்கட்சியில் 1972ல் இணைந்து கொண்டிர்கள். அது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழீழம் கேட்டது வரலாறு. இன்று வளர்த்த கிடாய் மார்பினில் பாய்ந்தது போல் உங்களதும் கூட்டணியினதும் நிலை.

சங்கரி ஐயா, அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்ட’ நீஙகள் இன்று செய்கின்ற அரசியல் என்ன? நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாதது உள்முரண்பாடு. ஒரு விபத்து. சம்பந்தன் ஐயாவின் சதியும். அதற்கு அப்பால் கொள்கை வேறுபாடு எதுவும் இருக்க நியாயம்மில்லை. எழுபதுக்களின் நடுப்பகுதியில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய இளைஞர் படையணி அடியாள் குழுக்கள் தான், நீங்கள் இன்று கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் டக்ளஸ், பிரபாகரன் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய இளைஞர் தலைவர்கள். யாழப்பாண மாநகரசபையை அபிவிருத்தி செய்த அல்பேட் துரையப்பாவை கூட்டணி தனது சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் பெயரால் பழிவாங்கியது. இது இன்றும் தொடர்கிறது. இன்னும் தொடரும் நிலையே உள்ளது.

ஐயா கூட்டணி துவக்கு தூக்காத புலி. புலி துவக்கு தூக்கிய கூட்டணி என்றதை மறந்திடாதைங்கோ.

‘காங்கரஸ் காரன் சட்டை போடாமல் இருந்தாலும் இருப்பானே தவிர பதவி இல்லாமல் இருக்க மாட்டான்’ என்பது இந்திய அரசியல் வழக்கு. நீங்கள் ஆடும் அரசியல் சதுரங்கத்தை அரசியலில் அரிவரி தெரிந்தவர்களே புரிந்துகொள்வார்கள். தென்னையில ஏறியாச்சு தேங்காயை (சமஸ்டி) பிடுங்கிறதா? இல்லையா? என்று நீங்கள் விட்ட றீல், பிறகு கிழக்கு தேர்தலில் முக்கூட்டணி. ஆளுநர் பதவிக்கு ஆசையில்லை என்று அறிக்கை விடுற மாதிரி விடுறதும், மற்றையவை கேக்கிற மாதிரி கேக்கிறதும், பிறகு எடுக்கிற மாதிரி எடுக்கிறதும் என்னையா விளையாட்டு. இன்றைக்கு என்ன ஆச்சு உங்கள் அரசியல்?

டக்ளஸ்க்கு கடிதம் எழுதி இருக்கிறீங்கள் ஐயா. டக்ளசை அம்பலப்படுத்துவது சரி. அது அதுக்கு என்று ஒரு நேரகாலம் இருக்கு. உங்களுக்கு பதவி வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் எழுதிய கடிதம் அதில் இருந்த உண்மைகளையும் வலு இல்லாமல் செய்துவிட்டது. ஐயா சின்ன வயதில பள்ளிக் கூடத்தில் பெடியல் வாங்குக்கு சண்டை பிடித்து ரீச்சரிட்டை கோள்மூட்டுவாங்கள் தெரியுமோ? அதுக்கும் நீங்கள் செய்ததுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஐயா தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் சராசரியிலும் அதிகம். பரீட்சையில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பத்தில் தோல்வி என்று பல தோல்விகளுக்காக தமிழர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஒரு கடித்தையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வார். நான் அறிந்தவரை யாரும் அரசியல் தோல்விக்காக தற்கொலை செய்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதிய கடிதங்கள் உங்கள் அரசியல் வாழ்வின் தற்கொலையாகவே இருக்கிறது.

Anandasangaree_UNESCO_Prizeபெரும்பாலும் ஒருவர் தனது வாழ்வின் உச்சநிலையில் இருக்கும் போதே ஒய்வுபெற விரும்புவார். அப்படிச் செய்வதன் மூலம் அவர்களது அந்த வரலாறு அந்த உச்சநிலையை உறுதியாக பதிவு செய்துகொள்ளும். அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. யுனஸ்கோ விருது வழங்கப்பட்டதும் அதனைப் பெற்றுக்கொண்டு நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்க வேண்டும். அரசியல் சாராது சமாதானத்திற்கு மட்டும் குரல் கொடுப்பவராக போராடியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள், பலர் கூறியும் அந்த யோசனையைத் தட்டிக்கழித்துவிட்டிர்கள். இன்று நீங்களே உங்கள் மீது சேற்றை வாரியிறைத்து இருக்கிறீர்கள்.

இறுதியாக ஐயா, தயவு செய்து நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நல்லது.

ஐயா, மீண்டும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
த ஜெயபாலன்

15 யூன் 2008

 இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :

சங்கரி ஐயாவுக்கு எனது 75வது ஆண்டு பகிரங்க பிறந்தநாள் வாழ்த்து மடல் : த ஜெயபாலன் : http://thesamnet.co.uk/?p=1431

அண்ணன் ஜெயபாலனிற்கு கூட்டணித் தம்பி எழுதும் பதில் : எஸ் அரவிந்தன் (தவிகூ லண்டன் கிளை) : http://thesamnet.co.uk/?p=1491

ஆனந்தசங்கரி – டக்ளஸ் மோதல் புலிகள் மீண்டும் பலம்பெறுவதற்கே உதவும் : குரு : http://thesamnet.co.uk/?p=1430

”வேற்றுமைக்குள் ஒற்றுமைதான் தேவையானது.” அண்ணன் சங்கரிக்கு தம்பி டக்ளஸின் அன்புக் கடிதம் : http://thesamnet.co.uk/?p=1368

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றி ஆனந்தசங்கரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய கடிதங்கள் : http://thesamnet.co.uk/?p=1272

ஆனந்தசங்கரி ஜயா, ஆளுனர் பதவிக்கு அலைவது மெய்யா? : ஆர் புதியவன் : http://thesamnet.co.uk/?p=578

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத கூட்டணியினர் வானம் ஏறி வைகுண்டம் போகினமாம்…….” ரி கொன்ஸ்ரன்ரைன் : http://thesamnet.co.uk/?p=176

“ஆயுதப் பொதிகளை சுமந்து வந்து சேர்த்ததால்’ கே.பி.க்கு பிரபாகரன் வைத்த செல்லப் பெயர் கழுதை

kp_vp_bala.jpgகைது செய்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கே.பி. என்ற பெயராலேயே பரவலாக அறியப்பட்டிருந்த போதிலும் அவருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வைத்திருந்த பெயர் “கழுதை’ என்பதாகும். செல்லமாக இந்தப் பெயரை பிரபாகரன் கே.பி.க்குச் சூட்டியிருந்தார்.  இத்தகவலை பற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் தமது இணையத்தளத்தில் எழுதியுள்ளார். கே.பி.யின் கைது தொடர்பாக ஜெயராஜ் மேலும் எழுதியிருப்பதாவது;

கழுதையானது தனது முதுகில் பொதிகளை சுமந்துவரும். தனது முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத மூடைகளை விநியோகித்தவர் கே.பி. அதனால், அவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருந்தது.

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்

09-thiruvalluvar.jpgபெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார். விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.

முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார். சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர். இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார். சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

09-rahman.jpgஎன் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார்.  சரிகம ஆடியோ நிறுவனம், ‘ஊலலலா’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: உங்கள் மகன் ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா?

என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்