க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இப்பரீட்சையில் மோசடிகள் இடம்பெறாது தடுப்பதற்கு இம்முறையும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு ஒன்று இயங்கும் எனவும் இப்பரீட்சையில் ஆள்மாறாட்டம் அல்லது வேறு மோசடிகள் இடம்பெற்றால் இப்பிரிவுக்குத் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பரீட்சை மண்டபம் மற்றும் பரீட்சை அதிகாரிகள் தொடர்பாகவும் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0112784208 அல்லது 0112785220 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 1,827 பரீட்சை மண்டபங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள 1,263 மாணவர்களுக்கு வவுனியாவில் 10 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.