2009

2009

மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

260909malabe.jpgஇலங் கையின் மாலபே பகுதியில் நிறுவப்பட்டுவரும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.

“இலங்கையில் உயர்கல்வியைத் தொடர, குறைந்தபட்ச தகுதியாக உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் கோரப்படுகின்றன. ஆனால் மாலபே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியில் இணைந்து கொள்ள, உயர்தர தகுதி அற்றவர்களுக்கும் உயர்தரத்திற்கு ஈடான தகைமையுடையவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நாட்டில் நிலவும் பல்கலைகழகங்களின் இலவச கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.

மேலும் 2010 ஆம் ஆண்டு பல்கலைகக் கழகங்களிருந்து வெளியேறவுள்ள மருத்துவ பீட மாணவர்கள், அரசு மருத்துவ மனைகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, மாலபே தனியார் கல்லூரி மாணவர்களும் அவ்வாறு பயிற்சியை முடித்து வெளியேறும் போது, பலருக்கு வேலையில்லாப் பிரச்சினை ஏற்படும் நிலை தோன்றலாம் என அனைத்து மருத்துவ பீட மாணவர்களும்   தெரிவித்தனர்.

இவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

260909wanted_mans.jpgபல்வேறு பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் இப்படத்தில் காணப்படுபவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

‘கிரி’என அழைக்கப்படும் கிரிதரன் எனும் பெயரையுடைய இந்நபர் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 5 அடி 4 அங்குல உயரமுடைய இவர் பம்பலப்பிட்டி,  வெள்ளவத்தை,  தெஹிவலை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் நடமாடி வருவதாகத் தெரிய வந்துள்ளதால் இவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் உதவியை பொலிஸார் எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதமாக ஒக்டோபர் மாதம் பிரகடனம்

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் 2009 ஒக்டோபர், தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இம் மாதத்தில் விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன. பிரதேச மக்கள் மத்தியில் வாசிப்பினை ஊக்குவித்தல் நூலகங்களை அபிவிருத்தி செய்தல், வளங்களை அதிகரித்தல் போன்ற செயற்றிட்டங்களும் நடை முறைப்படுத்தப்படவுள்ளன.

தேசிய வாசிப்பு மாதத்தினை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வாசிப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

சம்பியன் கிண்ணம் – நான்காவது ஆட்டம். England won by 6 wickets

120909sanath-jayasuriya.jpgஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான பி பிரிவில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பகல் இரவு ஆட்டமாக தென்னாபிரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் உடனுக்குடன் தொகுத்துத் தர தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது

Friday, September 25, 2009
Played at New Wanderers Stadium, Johannesburg
Start time 2:30 pm, 12:30 GMT {Srilanka time 6.00 pm)

England team
AJ Strauss*, JL Denly, OA Shah, PD Collingwood, EJG Morgan, MJ Prior†, LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 

Sri Lanka team
TM Dilshan, ST Jayasuriya, KC Sangakkara*†, DPMD Jayawardene, SHT Kandamby, TT Samaraweera, AD Mathews, KMDN Kulasekara, M Muralitharan, SL Malinga, BAW Mendis 

Umpires Aleem Dar (Pakistan) and BF Bowden (New Zealand)
TV umpire AL Hill (New Zealand)
Match referee J Srinath (India)
Reserve umpire SJA Taufel (Australia)

Sri Lanka innings (50 overs maximum)

 Sri Lanka innings (50 overs maximum)
 TM Dilshan  c Morgan b Anderson  2
 ST Jayasuriya  c †Prior b Onions  0
 KC Sangakkara*†  c Strauss b Onions  1 
 DPMD Jayawardene  lbw b Anderson  9 
 TT Samaraweera c Collingwood b Broad 30
 SHT Kandamby  run out (†Prior/Wright)  53 
 AD Mathews  c †Prior b Wright  52 
 KMDN Kulasekara  not out  17  
 M Muralitharan  b Broad  18
 SL Malinga  b Broad  0 
 BAW Mendis  c Strauss b Anderson  5
 47.3 caught Strauss 212/10
 
 Extras (lb 4, w 21) 25     
      
 Total (10 wickets; 47.3 overs) 212 (4.46 runs per over)
Fall of wickets1-7 (Jayasuriya, 1.5 ov), 2-7 (Dilshan, 2.3 ov), 3-17 (Jayawardene, 4.6 ov), 4-17 (Sangakkara, 5.2 ov), 5-81 (Samaraweera, 19.5 ov), 6-163 (Kandamby, 37.4 ov), 7-176 (Mathews, 40.5 ov), 8-197 (Muralitharan, 43.2 ov), 9-197 (Malinga, 43.3 ov), 10-212 (Mendis, 47.3 ov) 
        
 Bowling  
 JM Anderson 9.3 2 20 3
 G Onions 10 0 58 2
 SCJ Broad 10 0 49 3
 LJ Wright 6 0 34 1 
 PD Collingwood 8 0 24 0
 GP Swann 4 0 23 0 

England innings (target: 213 runs from 50 overs)
 AJ Strauss*  c Kandamby b Kulasekara  9
 JL Denly  lbw b Kulasekara  5 
 OA Shah  c †Sangakkara b Muralitharan  44 
 PD Collingwood  b Malinga  46 
 EJG Morgan  not out  62  
 MJ Prior†  not out  28
 Extras (lb 7, w 11, nb 1) 19     
      
 Total (4 wickets; 45 overs) 213 (4.73 runs per over)
Did not bat LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 
Fall of wickets1-9 (Denly, 3.5 ov), 2-19 (Strauss, 7.3 ov), 3-82 (Collingwood, 19.5 ov), 4-158 (Shah, 34.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 SL Malinga 9 0 43 1
 KMDN Kulasekara 9 1 42 2
 AD Mathews 8 2 26 0  
 BAW Mendis 9 0 35 0  
 M Muralitharan 10 0 60 1
 
Match details
Player of the match PD Collingwood (England)

ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன் பட்டத்தை சீனா கைப்பற்றியது.

1509fiba-news203a.jpgசென்னை யில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனா 91-71 என நடப்புச் சாம்பியன் கொரியாவை வீழ்த்தியது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த 3 முறையும் சீனாவை கொரியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த சீனா, கொரியா,  ஜப்பான் ஆகியவை செக். குடியரசில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இப்போட்டியில் இந்தியா 6-வது இடம் பிடித்ததுடன் அந்த அணியின்; கீது அன்னா ஜோஸ் 132 புள்ளிகள் குவித்து,  அதிக புள்ளிகள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக லெபனான் வீராங்கனைகள் சான்டெலே டெனிஸ் ஆன்டர்சன் 118 புள்ளிகளும்,  சடா நாசர் 101 புள்ளிகளும் குவித்துள்ளனர். இறுதி ஆட்டத்தின்போது,  அரங்கில் குழுமியிருந்த சீன,  திபெத் ஆதரவாளர்கள் எதிரெதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால்,  இரு குழுவினரிடையே 2 முறை கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்தி வேறு இடங்களில் இரு குழுவினரையும் உட்கார வைத்தனர்

இன்றும் 10 குடும்பங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பு

101009displacedidps.gifவவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு அக்கறைப்பற்று இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் மேலும் 10 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் இன்று அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் பலர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பேலியகொடையில் லொறி-தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 25 பேர் காயம்

250909accident.jpgஇன்று காலை 6.45 மணியளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த லொறி ஒன்றும் கொழும்பு- மூதூர் இடையிலான தனியார் பஸ் ஒன்றும் மோதி பேலியகொடை நுகத்தன்ன சந்தியில் விபத்துக்குள்ளாயின.  இதனிடையே மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்தில் சிக்கிக் கொண்டது.

விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பேலியகொட பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 25 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பஸ் சாரதியும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வைன்: ஒரே நாளில் 13 பேர் பலி- இந்தியாவில் 277 ஆக உயர்வு

16-swine-flu.jpgபன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 5, மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 3, உத்தரகண்டில் 1 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் சுமார் 283 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 113 பேருக்கு தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 65 பேர் பள்ளி மாணவர்கள் என்பதலா டெல்லியில் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

அறிக்கையில் காலதாமதம் – ஆளும்தரப்பும் எதிர்தரப்பும் சபையில் பெரும் சர்ச்சை

26parliament.jpgஎதிர்க் கட்சியினர் சபையில் சமர்ப்பிக்கவிருந்த பத்து நிமிட அறிக்கையொன்றுக்கு ஆளுந்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 20 நிமிடங்கள் சர்ச்சை ஏற்பட்டது. குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு காலம் தாமதித்துச் சமர்ப்பித்ததால், அதனை சபையில் முன்வைக்க அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா, 20 நிமிடங்கள் தாமதமாகி குறித்த அறிக்கையைப் பல்வேறு கேள்வித் தொடர்களைக் கொண்டதாகக் கையளித்திருப்பதால் அதனை இன்று (24) (நேற்று) சமர்ப்பிக்க முடியாதென அமைச்சர் குணவர்தன மறுப்பு தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி.  நாளைய தினம் (இன்று) அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இதனால் ஆளுந் தரப்பினருக்கும் எதிர்க் கட்சியினருக்குமிடையில் சுமார் 20 நிமிடம் சர்ச்சை உருவானது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இல்லை கேள்விக் கணைகளைத் தொடுக்கவில்லை. ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டுள்ளோம்.  ‘ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபத்தில் இயங்கிய நிலையிலிருந்து, 900 கோடி நட்டமடையும் அளவுக்குச் சென்றது ஏன்? என்றுதான் கேட்கிறோம்” என்றார்.

இதன்போது குறுக்கீட செய்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்தடிச்சாட்டில், அந்த அறிக்கையில் உள்ள கேள்வியைக் கூறிவிட்டார்.  அவர் சபையைத் தவறாக வழிநடத்துகிறார்.  இதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.

இவ்வாறு மாறிமாறி ஒழுங்குப் பிரச்சினைகளும், தர்க்கங்களும் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றன. ஈற்றில், எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதில் பெற்றுத்தர முடியுமென்று தெரிவித்த அமைச்சர் தினேஷ், இவ்வாறு முறைகேடாக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டால் எதிர்க்கட்சித் தலைவரின் சார்பில் கேள்வி கேட்க அவரை அனுமதிப்பது தொடர்பாக மீள் பரிசீலணை செய்யவேண்டி வருமென்றும் எச்சரித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை வோல்டர் கெலின் மன்னார் விஜயம்

210909walter-kalin.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள ஐநா அகதிகள் நலன்களுக்கான உயரதிகாரி வோல்டர் கெலின் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்கிறார். அங்கு அவர் மக்கள் மீள்குடியேறியுள்ள இடங்களைப் பார்வையிடுவார்.

அதன் பிறகு வவுனியாவிலுள்ள மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.  மன்னார் மற்றும் வவுனியாவுக்கான தனது கள விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் சனிக்கிழமையன்று கொழும்பு திரும்பும் அவர், மீண்டும் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அகதிகளுக்கான அலுவலக அதிகாரியான எலிசபெத் டான் தெரிவித்தார்