20

20

கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். – எச்சரிக்கிறார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்  ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வொஷிங்டன் நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய  அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்ம் போட்டியிடுகின்றனர்.

தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இந்நிலையில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள்.

 

கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம். ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் கமலா யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான்” என்றார்.

மேலும், அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.

 

சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் ட்ரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கட்சியின் அகில இலங்கைக் நிறைவேற்றுக் குழு, செயற்குழு, அரசியல் குழு உறுப்புரிமை மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்கிறையானது மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம்!

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ

நாட்டை விட்டு வெளியேறினார் பஷில் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

அதன்படி இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளதுடன் அவர் அங்கு இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேளை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் பெறுமதியான வாக்கை வீணடிக்காமல் வாக்களிப்பது எப்படி..? How vote Srilanka president election!

உங்கள் பெறுமதியான வாக்கை வீணடிக்காமல் வாக்களிப்பது எப்படி..? How vote Srilanka president election!

 

இந்த காணொளியானது பலருக்கும் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான அவதானத்தை வழங்க தேசம் திரை பக்கத்தில் பகிரப்படுகின்றது.

 

காணொளி உருவாக்கம் – யாழ்ப்பாண பிரதேச செயலகம்.

 

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர பொதுச் சபையில் தீர்மானம் !

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

 

மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையின் தலைநகரில் அதிகரிக்கும் காசநோயாளிகளின் எண்ணிக்கை!

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாக காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய  நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

பதிவாகியுள்ள காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்களாகவும், புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் எனவும் வைத்திய  நிபுணர் மிசாயா காதர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்பட்டது புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு !

கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

 

“விசாரணை முடிவடைந்து இறுதி தீர்மானம் வரும் வரை விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை, அதுவரை பரீட்சை முடிவுகள் வெளியிடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது அவற்றை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

 

குறித்த பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல் வௌியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளது உறுதியானால் மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

“மேலும், விதிகளை பின்பற்றாமல், பரீட்சைக்கு முந்தைய நாட்களில், யூக வினாத்தாள்கள் குறித்து ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

 

“வினாத்தாள் கசிந்திருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

 

இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 323,879 பரீட்சார்த்திகள் அதற்குத் தகுதி பெற்றிருந்தனர்