02

02

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் முருகேசு சந்திரகுமார் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  முருகேசு சந்திரகுமார், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற சஜித் பிரேமதாஸவை வரவேற்றபோதே முருகேசு சந்திரகுமார் தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். – கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச!

“மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 

கிளிநொசியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் ஆதரவு சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘சமத்துவக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்திக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டி உள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும்.

அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.

வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம்.

அதே போன்று ஒவ்வொறு பிரேதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும். இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம்.

 

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

 

அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும்”இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்தது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது – கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.

குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தற்கு  சஜித் பிரேமதாச தனது நன்றியை தன்னுடையX தளப்பதிவில்  தெரிவித்துள்ளார்.