15

15

இலங்கையுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி !

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 166 ஓட்டங்களையும் சுப்மன் கில் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 391 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் 42.5 ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற ஜெப்ரி வென்டர்ஸே மற்றும் அஷேன் பண்டார ஆகியோரே ஒருவருடன் ஒருவர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதை அடுத்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து உபாதைக்கு உள்ளான ஜெப்ரி வென்டர்ஸேவிற்கு பதிலாக துனித் வெல்லாலகே அணியில் இணைக்கப்பட்ட போதிலும் அஷேன் பண்டாரவிற்கு பதிலாக யாரும் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

எனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3 – 0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

குத்துவிளக்கு சின்னத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி !

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முடிவுக்கமைய ஒப்பந்தம் கைச்சாத்தானது.

அதன்படி எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.

சின்னம் தொடர்பாக ஏற்பட்ட இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அங்கஜன் இராமநாதன் வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்தது..? – வாக்கு கேட்டு வந்தால் செருப்பால் அடிப்போம்.” – வலி. வடக்கு மக்கள்

அரசியல்வாதிகள் யாராவது வாக்கு கேட்டு வந்தால் செருப்பைக் கழற்றி அடிப்போம் என வலி. வடக்கு மக்கள் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளனர்.

இதேவேளை அங்கஜன் இராமநாதன் வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்தது எனவும் மீள்குடியேற்றப்படாத பலாலி வடக்கு மக்கள் கேள்வியெழுபபியுள்ளனர்.

32 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உள்ளிட்ட படைப் பிரிவினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அடாத்தாக பிடித்து வைத்துள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி பலாலி மருதடி அம்மன் ஆலயத்தில் (பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக) வலி. வடக்கு மக்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தனர். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொங்கல் பரிசாக தமது காணிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை விடுத்தனர். சொந்தக் காணி கண் முன்னே இருந்தும் அகதிகளாக ஆட்டுக்கொட்டிலில் வாழ்ந்து வருவதாகவும் அடிமைகளாக வாழ வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்போது..? – யாழ்ப்பாணத்தில் வைத்து திகதியை அறிவித்தார் ஜனாதிபதி ரணில்!

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பகிரங்க அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்;

நல்லிணக்கத்தை காண்பித்தே இந்த நிகழ்வின் இறுதி நடனம் இடம்பெற்றிருந்தது. நல்லிணக்கம் இந்த நாட்டிற்கு அவசியமாகும். 25 , 30, 40 ஆண்டுகளாக யுத்தம் இருந்தது. கலகம் இருந்தது.

அதேபோன்று அரசியல் ரீதியான பிரிவினைவாதம், இனவாத அரசியல் மத வாத அரசியல், வங்குரொத்து அரசியல் ஆகியவற்றால் எமது நாடு பிளவுபட்டுள்ளது.

நாம் அனைவரும் ஒரு நாட்டில் வாழ்வதனால், ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதால், இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்பதனால், ஒரே நாடு என்ற வகையில் நாம் மீண்டும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய சிறிலங்காவின் தனித்துவம் நோக்கி பயணிப்போம்.

ஆகவே இந்த தருணத்தில் இந்த மேடையில் எனக்கு தைப்பொங்கல் பண்டிகையே நினைவுவந்தது. நெருப்பின் மேல் பானை வைக்கப்படுகின்றது.நீர் ஊற்றப்படுகின்றது. பால் ஊற்பபடுகின்றது. அரிசி போடப்படுகின்றது.சக்கரை போடப்படுகின்றது. இறுதியில் பொங்கல் வருகின்றது.

இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் சிங்களவர்களை போடுவோம், தமிழர்களை போடுவோம், முஸ்லிம்களை போடுவோம். பறங்கியர்களையும் போடுவோம். தனித்துவமான இலங்கையை உருவாக்குவோம்.

சில பிரச்சினைகள் குறித்து வடக்கிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் பேச்சு நடத்திவருகின்றோம்.

நான் நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்தேன்.நாம் மீண்டும் இந்த நாட்டை ஒன்றிணைக்க பணியாற்ற வேண்டும் என அனைவரிடமும் கூறினேன்.

நல்லிணத்தை மீண்டும் ஏற்படுத்துவோம் என நான் குறிப்பிட்டேன். நான் நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டவுள்ளேன். பெப்ரவரி 8 ஆம் திகதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை கூறுவேன்.

இந்த பிரச்சினையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அல்லது தாமதப்படுத்தி கால்பந்து போன்று அடித்து விளையாடி தீர்க்க முடியாது.

தீர்வு என்ன என்பதை நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் கூற வேண்டும்.ஆகவேதான் முதலில் நாடாளுமன்றத்தின் கருத்தை கேட்கவுள்ளேன். நாம் பல பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம்.

காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்.

அதேபோன்று இது தொடர்பில் ஆராய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் அமைக்கவுள்ளோம். விசேடமாக என்ன நடந்தது ? யாரேனும் தவறு செய்துள்ளார்களா என்பதை இந்த ஆணைக்குழு ஊடாக ஆராயவுள்ளோம்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கவுள்ளோம். இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன என இராணுவ கட்டளை தளபதியிடம் நாம் வினவினோம். உண்மையை கண்டறிய தாமும் விரும்பத்துடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எமக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நாம் கொண்டுவருவோம்.

இது வடக்கிற்கு எதிராக பிரயோகிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். எனினும் இது நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கே பிரயோகிக்கப்படுகின்றது.இதனை கடந்த ஆண்டு தெற்கிற்கு பிரயோகிக் வேண்டி ஏற்பட்டது” – என்றார்.

ராஜபக்சக்கள் மீதான தடையின் பின்னணியில் கனேடிய பிரதமர்..?

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு தலைமை வகித்தவர்களும் இணைக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் அலுவலகம் கருதுகின்றது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு கனடா பயணத் தடை விதித்திருந்தது.

இதேவேளை கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையை அவர் பின்பற்றவில்லை என்பதனாலேயே இந்த நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது.” – எம்.ஏ. சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவில் உருவாகியுள்ள புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து முகங்கொடுப்பதென சிபாரிசு செய்திருந்த நிலையில் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பங்காளிகளுடன் கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.

சம்பந்தன் ஐயாவின் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் சிபாரிசினை முன்வைத்து உரையாடியபோது, பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அதனை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் தனித்தோ அல்லது கூட்டாகவோ செல்வதாக அறிவித்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் ஐயா, கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் வினவியிருந்தார்.

அதனையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்துவதில்லை என்று இணக்கம் காணப்பட்டது.

எனினும், தற்போது ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தினை அப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அது தொடர்பில் நாம் உரிய நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு தேசிய பொங்கல் கொண்டாட வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து மக்கள் போராட்டம் – நீர்த்தாரை பிரயோகித்த பொலிஸ் !

ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த போராட்டத்தை அரசடி சந்தியில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை!

வாரியபொல, வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 33 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த “எட்டிகுப்பா” என அழைக்கப்படும் சமரு ருவன் பத்திரன என்பதுடன் மோதலின் போது அவரது சகோதரர், மூத்த சகோதரி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக் கோரி பிரதேச மக்கள் நேற்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

In memory of Former Governor of Northern Province Rginold Cooray

What did former governor of Northern province’s view on Tamil Political Leadership – Exclusive Interview with Reginold Kuree

Former Governor of Northern Province and former Chief Minister of Western Province, Reginald Kure has passed away on Friday 13th of January 2023, at the age of 74. The former governor who suffered a heart attack while discussing the upcoming local council election and candidate selection at a restaurant in Vattuvai yesterday (12th January) passed away while being admitted to the hospital.

Reginald Kure started his political career as a JVP activist and served jail terms and ended up as the chairman of Sri Lanka Freedom Party Kalutura District. The left leaning Sinhala politician who always has a soft corner for Tamils which was the reason for him to be appointed as governor of Northern Province.

While he was the governor, he visited the UK and other European countries and during the visit he gave ThesamNet an interview, in which he openly criticized the inefficiency of the Tamil political leaders. The interview was recorded at his family friend and left leaning political activist Thamilalahan Nadarajah’s home in Harrow, London.