14

14

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – விடுக்கப்ட்டுள்ள சுனாமி எச்சரிக்கை !

இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த  ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.

இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

முன்னதாக, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர்.26-ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

5 கோடி ரூபாய்கு ஏலம் போன கிரிக்கெட்மட்டை – யாருடையது .?

சர் டொனால்ட் பிராட்மேன் பயன்படுத்திய கிரிக்கெட் மட்டை உலகின் மிக பெறுமதிவாய்ந்த கிரிக்கெட் மட்டையாக மாறியுள்ளது.

குறித்த கிரிக்கெட் மட்டை இணையத்தள ஏலத்தில் $245,500க்கு ஏலம் போயுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கை ரூபாய் மதிப்பின் படி, 5 கோடி ரூபாவை விட இது அதிகமாகும்.

பிராட்மேன் - நூற்றாண்டுகள் கடந்தாலும் இவரே கிரிக்கெட்டின் காட்ஃபாதர்!
1934 ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இந்த கிரிக்கெட் மட்டையைப் சர் டொனால்ட் பிராட்மேன் பயன்படுத்தி இருந்தார்.

இந்த கிரிக்கெட் மட்டையின் பின்புறம் சர் டொனால்ட் பிராட்மேனின் குறிப்பு இருப்பது மற்றொரு சிறப்பு. இதில் ஹெடிங்லியில் பெற்றுக் கொண்ட 304 ஓட்டங்களும் மற்றும் ஓவல் மைதானத்தில் பெற்றுக் கொண்ட 244 ஓட்டங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே அவர் பெற்ற அதிகபட்ச ஒட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“சுமந்திரனும், சாணக்கியனும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – கஜேந்திரன் சாடல் !

“சுமந்திரனும், சாணக்கியனும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் , சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்.இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர்.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும்.ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.

ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது.இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது.இச்சபை இணைந்தும் இருந்தது.குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது.அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.இது தான் உண்மையான விடயம்.சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.

என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள்.அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள்.மக்களை அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்கள்.ஜெனிவாக்கு சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள்.இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள்.இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன.மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

புலிகளை மீள உருவாக்க முயற்சி – யாழ்.பல்கலைக்கழக மாணவனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு !

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்தே பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம்  பெற்றுக் கொள்ளும்  நோக்கில் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்டகளுக்கு மணரதண்டனையளிக்கும் யோசனை நிராகரிப்பு !

நீதிமன்றத்தின் கருத்துக்கு அமைய, குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்தல் அல்லது அதனைக் குறித்துக் கொள்ளக் கூடாது எனவும், குறித்த தண்டனைக்குப் பதிலாக ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை அந்நபரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் தண்டனையை வழங்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் உட்சேர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் வழக்கு கோவைச் சட்டத்தில் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி – வெளி நடப்பு செய்த சிறிதரன் !

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனை காரணமாக தான் வெளியேறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேலாக இந்த கோரிக்கை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தாம் அந்த கூட்டத்தில் இருந்து இடைநடுவே வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.