05

05

“அரசு வெளிநாட்டில் ஒரு விதமாக பேசிவிட்டு உள்நாட்டில் வேறு விதமாக செயற்படுகிறது.” – இரா.சாணக்கியன்

“அரசு வெளிநாட்டில் ஒரு விதமாக பேசிவிட்டு உள்நாட்டில் வேறு விதமாக செயற்படுகிறது.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்றைய தினம் பாராளுமன்றத்தில். 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வினை பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றனர்.  அதற்கான உதாரணம் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரத்திற்கு உட்படாத தலையீட்டினால் பல பிரச்சனைகளை அவ் சபையானது முகம் கொடுத்து வருகின்றது மற்றும் வாழைச்சேனை உள்ளூராட்சி சபையையும் இப்படியான பிரச்சனைகள் காணப்படுகின்றன.
நாம் நீதியை மதித்து நீதிமன்றம் சென்று அதற்குரிய தீர்ப்பைப் பெற்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாது தீர்ப்பையும் மதியாது செயற்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது எமது மக்களே.
இவ் குறைந்த பட்ச அதிகாரங்களுடனே எம்மை செயல்பட விடாமல் தடுக்கும் இவ் அரசானது எமக்கான சுயநிர்ணயத்தை எவ்வாறு பெற்றுத்தர போகின்றது. வெளிநாடுகளில் இவ் அரசானது கதைக்கும் விடயம் வேறு இங்கு நடைமுறைப்படுத்தும் விடயங்கள் வேறாக காணப்படுகின்றது. என அவர் தெரித்துள்ளார்.

பாலகன் பாலச்சந்திரனை இரக்கமற்ற வகையில் இராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறிய ஸ்ரீதரன் – இராஜாங்க அமைச்சர் கூறியுள்ள விளக்கம் !

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் இனவாதக் கருத்துக்களை பதிவு செய்வதாகவும், அவற்றை நாடாளுமன்ற பதிவேற்றிலிருந்து நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அதேவேளை பாலகன் பாலச்சந்திரனை இரக்கமற்ற வகையில் இராணுவம் சுட்டுக்கொன்றதாக ஸ்ரீதரன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இடையில் குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்திருந்தார்.

குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை எனவும், மாறாக பயங்கரவாத்திற்கு எதிராகவே யுத்தத்தினை நடத்தியிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு இனவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய கருத்துக்களை நாடாளுமன்ற பதிவேற்றிலிருந்து நீக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

காணாமல் போனவர்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள்,” – கோவிந்தன் கருணாகரம் ஜனா

காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள்,” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஐநா உரை மற்றும், ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் சந்திப்பு போன்றன தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலரிடம் இரண்டு முகங்கள் இருக்கும். ஒருவருக்கு ஒரு முகமும், இன்னொருவருக்கு இன்னொரு முகத்தையும் காட்ட முடியும். ஆனால் இந்த ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் பல முகங்களை வைத்திருக்கிறார்கள்.
தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு விருப்பமான முகத்தைக் காட்டிக் கொள்கின்றார்கள். அந்தவகையிலே ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சென்று உரையாற்றும் போது ஏதோ தான் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யத் தயாராக இருப்பதாகவும், புலம்பெயர் அமைப்புகள் என்னுடன் பேச வாருங்கள், இலங்கைக்கு வாருங்கள் என்றெல்லாம் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

உண்மையிலேயே மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியிலே புலம்பெயர் பல அமைப்புகளுக்கும், புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கும் தடையுத்தரவு விதித்தவர்கள் இவர்கள். 2015ல் ஏற்பட்ட நல்லாட்சியில் அந்தத் தடையுத்தரவுகள் தளர்த்தப்பட்டாலும், கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்பு மீண்டும் அவர்களுக்குத் தடையுத்தரைவைப் போட்டுவிட்டு தற்போது இலங்கைக்கு வாருங்கள் என்னுடன் பேசுங்கள் என்பது ஒரு வேடிக்கையான விடயம்.

காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? தங்களது மனைவிமார், பெற்றோர்கள் முன்னிலையில் அவர்களினால் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள், முன்னணிப் போராளிகள், முக்கிய விடுதலைப் போராட்ட இயக்கமான ஈரோஸின் தலைவராக இருந்த பாலகுமார் மற்றும் அவரது மகன் போன்றோலெல்லாம் உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள் என்பதுதான் உண்மை. எனவே நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள். நீங்கள் அப்பட்டமான கொலையைச் செய்து விட்டு அவர்களுக்கு மரணச்சான்றிதழ் கொடுக்கின்றீர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள். என்ற வகையிலேயே இந்த மரணச் சான்றிதழ் விடயத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

அதற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறுகின்றீர்கள். ஐரோபிய ஒன்றியப் பாராளுமன்றம் உங்களுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை அடுத்த சித்திரையில் இருந்து நிறுத்துவதற்கு இருக்கின்றார்கள். அதற்கிடையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கேட்டிருக்கின்றார்கள். நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கேட்டுள்ள விடயம் பயங்கரவாத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வது அல்லது அதில் ஏதாவது திருத்தத்தைக் கொண்டு வருவதல்ல, முற்றுமுழுதாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

வெள்ளைப்பூடு ஊழல் மோசடி நடைபெற்றுள்ளமை உண்மையே.. ! – அமைச்சர் பந்துல

சதொச நிறுவனத்தில் பாரியளவில் வெள்ளைப்பூடு ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தில் இவ்வாறான மோசடி நடந்தது குறித்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்றும்  துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளைப்பூடு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ வெள்ளைப்பூடை 350 ரூபா பெறுமதிக்கு சதொச மொத்த நிறுவனத்துக்கு விநியோகிக்கும் போது குறித்த வெள்ளைப்பூடை தனியாருக்கு  130 ரூபாவுக்கு விநியோகம் செய்தமை குறித்து அரசாங்கம் கூற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் பாரியளவில் வெள்ளைப்பூடு ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் வழங்கியுள்ளார்.

தற்போது வெள்ளைப்பூடு மோசடி தொடர்பாக வெளிவந்த தகவல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் குற்றத்தடுப்பு பிரிவினர் ஆராய்ந்து செய்து வருவதாகவும், இந்த மோசடி குறித்து நாளை பாராளுமன்றத்தில் அறிக்கை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஊழல் மோசடி முதல் மற்றும் கடைசியுமான சந்தர்ப்பம் இது இல்லை. இதற்கு முன்னரும் இவ்வாறான ஊழல்கள் இடம்பெற்றள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொசவில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான 06 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

சில மணிநேரம் முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் – 700 கோடி டொலர்கள் வரை இழப்பாம் !

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது.

உலகம் முழுவதும் பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 4) இரவு 9.15 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு செட்டிங்களை மாற்றி சோதனை செய்தனர். பலர் செயலிகள் இயங்காததை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின் சில நிமிடங்களில் Server Down எனும் Hashtag ட்விட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைத்தளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதேபோன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.

‘முடங்கிய சேவையை திரும்ப செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் சேவை முடங்கி, பின் செயற்பாட்டுக்கு வந்தது.

7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 700 கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சக்கர்பர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“நாட்டில் பணம் இல்லாததே பெரும் பிரச்சினை.” – அமைச்சர் நாமல்

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பரில் உலக செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது அதன்படி விளையாட்டுத் துறையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உள்ள சில விளையாட்டுகளில் முறைகேடான இலாபத்தை முதலீடு செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

சமிந்த விஜேசிறி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.

கறுப்பு பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுகிறது என்றும் அனைத்து விளையாட்டு சங்கங்களும் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை நிதிப் பற்றாக்குறையாகும் என நாமல் பதில் வழங்கியுள்ளார்.

அனைத்து விளையாட்டு சங்கங்களையும் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடுமாறு நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இயற்பியலுக்கான நோபல்பரிசு மூவருக்கு !

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல்பரிசுகள் நேற்றைய தினத்தில் இருந்து வருகிற 11-ந்திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல்பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

2021 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல்பரிசுபகிர்ந்தளிக்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.