உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல்பரிசுகள் நேற்றைய தினத்தில் இருந்து வருகிற 11-ந்திகதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல்பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல்பரிசுபகிர்ந்தளிக்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.