07

07

இவ்வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இ.போ.ச தலைவர் எம். டி. பந்துசேன தெரிவித்தார். இதில் முதற் கட்டமாக நூறு பஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தவணை அடிப்படையில் பணம் செலுத்தி பஸ்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கூறிய அவர் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வீதிகளில் அவற்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை டிப்போக்களில் திருத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் திட்டமொன்று போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 25 பஸ்கள் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று

nallur.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று 7ம் திகதி காலை ஏழு மணியளவில் நடைபெறுகிறது. தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் நாடெங்கும் இருந்து பெருந்தொகையான மக்கள் நல்லூர்க் கந்தன் உற்சவத்துக்கு வருகை தந்திருப்ப தனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை யாழ். மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குடிநீர், மலசல கூட வசதிகள் என்ப வற்றையும் மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் முக்கியமான சில இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியால யத்தில் திருவிழாக் காலத்திற்கான தற்கா லிக பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் விசேட சேவைகளை நடத்துகின்றன.

தென் இலங்கையில் உள்ள பெருமளவு வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஆலய வீதிகளில் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. தாகசாந்தி நிலை யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு

அரசியலமைப்பின் 18வது திருத்த த்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதென இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பினும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது அரச அதிபர்களின் பொறுப்பு

jhon.jpgவடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப்பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியுமென குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

கோஷ்டி மோதலில் தப்பி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி மரணம்

கட்டுநாயக்க பொறியியல் தொழில் நுட்ப நிறுவன மாணவர்களுக்கும் வெளியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறின் போது சிதறி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி இறந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெளியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழு தாக்கியுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் ஏற் பட்ட மோதலில் இரு மாணவர்க ளும் வெளியார் மூவரும் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மோதலின் போது சிதறி ஓடிய கேகாலை மற்றும் கெகிராவையைச் சேர்ந்த இரு மாணவர்களே விபத் தில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டவிரோதமாக தொழில்நுட்ப நிறுவனத்தில் நுழை ந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவ த்துடன் மாணவர்களுக்கு தொடர்பு ள்ளதா என அறிய விசாரணை நடத்தப்படுகிறது.

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

வெள்ளவத்தை மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தவருமான செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கூறியதாவது;

வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு பார்வைக்கோளாறு உட்பட பல நோய்கள் இருப்பதாகவும் அதனால் தான் தனது குடும்பத்திற்குப் பாராமாக இருக்க விரும்பாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவரின் தற்கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.