September

September

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

260909tamilnadugovtlogo.jpgஹெச். ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்றதொரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அரசு ஆணை கூறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்கனவே இது போன்று விடுப்பு கொடுக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் BBCதமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விபரம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

. ஜனாதிபதியின் மகனுக்கு ரிக்கற்: முன்னாள் அமைச்சர் வெளியே

மகாராஷ்டிர மாநில சட்ட சபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நிதி இணை அமைச்சர் சுனில் தேஷ்முக்குக்கு இடமளிக்கப்படவில்லை இவர் அமராவதித் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். அந்தத் தொகுதி ஜனாதிபதி பிரதிபா பட்டேலின் மகன் ராஜேந்திர ஷெகாவத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.

தனது வழமையான தொகுதி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதை ஆட்சேபித்து அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக சுனில் தேஷ்முக் கூறுகின்றார்.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டாகப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 174 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச விருது

Tissanayagam_S_J20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையினால் திஸ்ஸநாயகம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சோமாலியா, டுயுனிசியா, அஸர்பய்ஜான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளது ஊடகவியலாளர்களுக்கு 2009ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் வைபவத்தில் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரைப் பணயமாக வைத்து கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்ட இந்த ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதென ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் போல் ஸ்டிகர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், அடக்குமுறைகள் போன்றவற்றினால் குறித்த ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட்டர் என்று குற்றஞ்சாட்டி ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு இருபதாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர் திறைசேரி சொத்துக்களில் முதலீடு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு சாதகமான பதில் – சியம்பலாபிட்டிய

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களில் சுமார் 202 பேர் இலங்கையில் திறை சேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் 322 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்வதற்காக பதிவு செய்துள்ளனர் என அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

திறைசேரி உண்டியல்கள், சொத்துக்களில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 01ஆம் திகதி புலம் பெயர்ந்தோரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இத் தொகை முதலீடு செய்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள தாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டினர் 150 பேரும் இலங்கையர் சுமார் 65,000  பேரும் திறைசேரி உண்டியல்களை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட வாய் மொழி மூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்

அணு ஆயுத பரவல் ஒப்பந்த தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் கைச்சாத்திட வேண்டும் – ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்

250909un-council.jpgஅணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகள் அனைத்தும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வியாழக்கிழமை ஒரு மனதாக நிறைவேறியது. இந்தக் கூட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் குறி வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதில் கையெழுத்திட மாட்டோம் என்று இந்திய அரசு சார்பில் கூறப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அணு சக்தியைப் பயன்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண் டிருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைக்க வேண்டும் என்பதிலும் சர்வதேச அணு விசை ஏஜென்சியின் கண்காணிப்பில் இந்திய அணு நிலையங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருப்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

பாகிஸ்தானையும், இஸ்ரேலையும் அமெரிக்காவால் எந்த அளவுக்கு நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு அணு சக்தி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்கள், தொழில்நுட்பம், ஆகியவற்றுக்காக இனி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாகவே சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ள அனைத்து நாடு ளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டே தீர வேண்டும். ஒருங்கிணைந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் (என்.டி.பி.டி.) கையெழுத்திட வேண்டும். உலக நன்மையைக் கருதி இதைச் செய்ய வேண்டும்.

அணு ஆயுதங்கள் பெருகுவது நல்லதல்ல. உலகின் எந்தப் பகுதியில் அணுகுண்டு வீசப்பட்டாலும் அது மனித குலத்தின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.  இப்போது அணு ஆயுதங்களைத் தயாரித்து கையிருப்பில் வைத்துள்ள நாடுகள் அவற்றைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அணு குண்டுகளை வெடித்துச் சோதனை நடத்தும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் மூலப் பொருள்களைத் தயாரிப்பதையே நிறுத்திவிடவும், உலக நாடுகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்று இத் தீர்மானம் கோருகிறது. இதற்கு 1887 வது தீர்மானம் என்று பெயர்.

ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய 1945 லிருந்து பாது காப்பு கவுன்சிலின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்றோடு இதுவரை 5 முறை தான் கூடியிருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. இதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பான். கி. மூன் புதியதொரு வரலாற்றுக்கு உலக நாடுகளை இட்டுச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகு பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் ரஷ்யா தலைமையிலான வார்சா இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் எதிர் எதிர் முகாம்களில் இருந்த போதிலும் கூட அணு ஆயுதச் சண்டை நடை பெறாமல் தவிர்த்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

உலகம் முழுக்க பல பயங்கரவாத குழுக்கள் தோன்றி ஆதிக்கம் பெற்று வருகின்றன. அணு ஆயுதமோ அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் மூலப் பொருள்களுமோ அவற்றின் கைகளில் கிடைத்தால் அதை விட பெரிய அச் சுறுத்தல் மனித சமூகத்துக்கு இருக்க முடியாது என்பதால் தான் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தீர்மானத்தின் நோக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இனி கையெழுத்திடுவதை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நியூயோர்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மன்னாரில் நீரோடையிலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்பு

மன்னாரில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று (25) கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பரிவின் பேச்சாளர் தெரிவித்தார். புளியங்குளம் விடத்தல்தீவு வீதியில் நீரோடை ஒன்றை சுத்திகரித்துக் கொண்டிருந்த ஊழியர்களே இந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை ‘பெகோ’ இயந்திரத்தைக் கொண்டு நீரோடையைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே எலும்புக்கூடுகளை மீட்டதாகவும் அவை பழுதடைந்து உக்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

எலும்புக் கூடுகளுடன் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பயன்படுத் இரண்டு, வெடி மருந்துகள், ஆயுதங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த எலும்புக்கூடுகள் புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

260909malabe.jpgஇலங் கையின் மாலபே பகுதியில் நிறுவப்பட்டுவரும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.

“இலங்கையில் உயர்கல்வியைத் தொடர, குறைந்தபட்ச தகுதியாக உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் கோரப்படுகின்றன. ஆனால் மாலபே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியில் இணைந்து கொள்ள, உயர்தர தகுதி அற்றவர்களுக்கும் உயர்தரத்திற்கு ஈடான தகைமையுடையவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நாட்டில் நிலவும் பல்கலைகழகங்களின் இலவச கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.

மேலும் 2010 ஆம் ஆண்டு பல்கலைகக் கழகங்களிருந்து வெளியேறவுள்ள மருத்துவ பீட மாணவர்கள், அரசு மருத்துவ மனைகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, மாலபே தனியார் கல்லூரி மாணவர்களும் அவ்வாறு பயிற்சியை முடித்து வெளியேறும் போது, பலருக்கு வேலையில்லாப் பிரச்சினை ஏற்படும் நிலை தோன்றலாம் என அனைத்து மருத்துவ பீட மாணவர்களும்   தெரிவித்தனர்.

இவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

260909wanted_mans.jpgபல்வேறு பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் இப்படத்தில் காணப்படுபவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

‘கிரி’என அழைக்கப்படும் கிரிதரன் எனும் பெயரையுடைய இந்நபர் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 5 அடி 4 அங்குல உயரமுடைய இவர் பம்பலப்பிட்டி,  வெள்ளவத்தை,  தெஹிவலை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் நடமாடி வருவதாகத் தெரிய வந்துள்ளதால் இவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் உதவியை பொலிஸார் எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதமாக ஒக்டோபர் மாதம் பிரகடனம்

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் 2009 ஒக்டோபர், தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இம் மாதத்தில் விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன. பிரதேச மக்கள் மத்தியில் வாசிப்பினை ஊக்குவித்தல் நூலகங்களை அபிவிருத்தி செய்தல், வளங்களை அதிகரித்தல் போன்ற செயற்றிட்டங்களும் நடை முறைப்படுத்தப்படவுள்ளன.

தேசிய வாசிப்பு மாதத்தினை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வாசிப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

சம்பியன் கிண்ணம் – நான்காவது ஆட்டம். England won by 6 wickets

120909sanath-jayasuriya.jpgஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான பி பிரிவில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பகல் இரவு ஆட்டமாக தென்னாபிரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் உடனுக்குடன் தொகுத்துத் தர தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது

Friday, September 25, 2009
Played at New Wanderers Stadium, Johannesburg
Start time 2:30 pm, 12:30 GMT {Srilanka time 6.00 pm)

England team
AJ Strauss*, JL Denly, OA Shah, PD Collingwood, EJG Morgan, MJ Prior†, LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 

Sri Lanka team
TM Dilshan, ST Jayasuriya, KC Sangakkara*†, DPMD Jayawardene, SHT Kandamby, TT Samaraweera, AD Mathews, KMDN Kulasekara, M Muralitharan, SL Malinga, BAW Mendis 

Umpires Aleem Dar (Pakistan) and BF Bowden (New Zealand)
TV umpire AL Hill (New Zealand)
Match referee J Srinath (India)
Reserve umpire SJA Taufel (Australia)

Sri Lanka innings (50 overs maximum)

 Sri Lanka innings (50 overs maximum)
 TM Dilshan  c Morgan b Anderson  2
 ST Jayasuriya  c †Prior b Onions  0
 KC Sangakkara*†  c Strauss b Onions  1 
 DPMD Jayawardene  lbw b Anderson  9 
 TT Samaraweera c Collingwood b Broad 30
 SHT Kandamby  run out (†Prior/Wright)  53 
 AD Mathews  c †Prior b Wright  52 
 KMDN Kulasekara  not out  17  
 M Muralitharan  b Broad  18
 SL Malinga  b Broad  0 
 BAW Mendis  c Strauss b Anderson  5
 47.3 caught Strauss 212/10
 
 Extras (lb 4, w 21) 25     
      
 Total (10 wickets; 47.3 overs) 212 (4.46 runs per over)
Fall of wickets1-7 (Jayasuriya, 1.5 ov), 2-7 (Dilshan, 2.3 ov), 3-17 (Jayawardene, 4.6 ov), 4-17 (Sangakkara, 5.2 ov), 5-81 (Samaraweera, 19.5 ov), 6-163 (Kandamby, 37.4 ov), 7-176 (Mathews, 40.5 ov), 8-197 (Muralitharan, 43.2 ov), 9-197 (Malinga, 43.3 ov), 10-212 (Mendis, 47.3 ov) 
        
 Bowling  
 JM Anderson 9.3 2 20 3
 G Onions 10 0 58 2
 SCJ Broad 10 0 49 3
 LJ Wright 6 0 34 1 
 PD Collingwood 8 0 24 0
 GP Swann 4 0 23 0 

England innings (target: 213 runs from 50 overs)
 AJ Strauss*  c Kandamby b Kulasekara  9
 JL Denly  lbw b Kulasekara  5 
 OA Shah  c †Sangakkara b Muralitharan  44 
 PD Collingwood  b Malinga  46 
 EJG Morgan  not out  62  
 MJ Prior†  not out  28
 Extras (lb 7, w 11, nb 1) 19     
      
 Total (4 wickets; 45 overs) 213 (4.73 runs per over)
Did not bat LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 
Fall of wickets1-9 (Denly, 3.5 ov), 2-19 (Strauss, 7.3 ov), 3-82 (Collingwood, 19.5 ov), 4-158 (Shah, 34.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 SL Malinga 9 0 43 1
 KMDN Kulasekara 9 1 42 2
 AD Mathews 8 2 26 0  
 BAW Mendis 9 0 35 0  
 M Muralitharan 10 0 60 1
 
Match details
Player of the match PD Collingwood (England)