June

June

இரானியத் தலைவரின் கருத்துக்கு பிரிட்டன் விளக்கம் கோரியுள்ளது

uk-pm.jpgஅயோ துல்லா கமனெய் அவர்களின் கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்க இலண்டனில் உள்ள இரானியத் தூதரை பிரிட்டிஷ் அரசு அழைத்திருக்கிறது.

இரானில் கடந்த சில நாட்களில் காணப்பட்ட ஒடுக்குமுறையும் மூர்க்கத்தனமும் திரும்ப நடக்கக்கூடாது என்று பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்ஸல்சில் கூடி, இரானில் நடந்த எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை ஒருமனதாகக் கண்டித்த கூட்டத்தில் பிரவுன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அயதுல்லாவின் பேச்சு, இனி எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறை வழியில் ஒடுக்க, இரானிய பாதுகாப்புப் படைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல இருப்பதாக இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.

டெங்கு: மரணம் 139 – பாதிப்பு: 10,417

aedes_aegypti.jpgநாட ளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தொகை 139 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் உயரதிகாரி, சுரங்கனி பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில் :-டெங்கு நோயினால் இதுவரை 10,417 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்கு நோய் பாதிப்பினால் நேற்று முன்தினம் நாடளாவிய ரீதியில் அறுவர் மரணமடைந்துள்ளதுடன், இவர்கள் களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்கள் இனங்காணப்பட்டு டெங்கு நுளம்பு தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர்.

நோய் காணப்படும் பிரதேச சுகாதார அத்தியட்சகர் பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய குழுக்களும் செயற்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் நேற்றுமுன்தினம் வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயினால் கொழும்பு மாவட்டத்தில் 1558 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1198 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1288 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 1601 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ஏ) எச்1 என்1: சிகிச்சை பெறும் நால்வரும் பூரண சுகம்; 2 வாரங்களில் வீடு திரும்புவர்

19swine-flu.jpgஇன்புளு வன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்குதலுக் கிலக்காகி விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 சிறுவ ர்களும் பூரண குணமடைந்து வருகின்றனர். இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.தொற்று நோய் தடுப்புப் பிரிவின் டொக்டர் சுதத் பீரிஸ் நேற்று இதனைத் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி இனங்காணப்பட்ட சிறுவன் உட னடியாக விசேட வைத்திய பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் விசேட பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனூடாக அந்தச் சிறுவன் வைரஸ் தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு நன்றிகூறவேண்டும். சிறுவன் காய்ச்சலில் பீடிக்கப்பட்டவுடனேயே எமக்கு அவர்கள் தகவல் தந்தார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்திலும், எமது விமான துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கையின் சுகாதாரத் துறையை கண்டுவியக்கும் இதேவேளை பாராட்டவும் வேண்டும் என்றார்.

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றுதான் இருக்கிறது. இந்தியாவில் 38 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. எந்த வழியாக எவர் வருகிறார்கள் என்பதை கவனிக்கவே முடியாமல் போகும். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. நிலையத்திலும் அறிவுறுத்தப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் என தெரிவித்தார்.

சிறுவனுடன் 4 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வழமைபோன்று சுட்டித்தனத்துடன் துள்ளி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் துவண்டு போவார்கள் என்று கூறுவது உண்மையல்ல என்றும் கூறினார்.

சிறுவனுடன் விமானத்தில் பயணித்த 185 பேரின் விபரங்களை சேகரித்துள்ளோம். அதுமட்டுமல்ல விமானத்தில் அவருக்கு அருகில் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களையும் கண்டுபிடித்து அவர்களைப் பற்றியும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். நாளை 23ம் திகதி வரை அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனுடன் விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் மற்றுமொருவர் வைரஸ் தாக்கம் காரணமாக விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை இவர் அனுமதிக்கப்பட்டதுடன் வைரஸ் தாக்கத்துக்குள்ளான ஐந்தாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஜேதவனாராமய தூபி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

jethawana_stupa3.pngஅநுராத புரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜேதவனாராமய தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.செங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரியதும் மிக உயரமானதுமான இந்தத் தூபியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

யுனெஸ்கோ நிறுவனம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பவற்றின்; ஒத்துழைப்புடன் 1980ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைய சுமார் மூன்று தசாப்தங்கள் சென்றுள்ளன. இலங்கையில் குளங்களை நிர்மாணிப்பதில் புகழ்பெற்ற மன்னராக விளங்கிய மஹகாசேன மன்னனால் கி.மு 276-300 காலப் பிரிவில் இத்தூபி கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. 1600 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை அழிவுகளுக்கு மத்தியில் முற்றாக இடிந்து விடாது காணப்பட்ட இத்தூபி இலங்கை கட்டடக் கலையின் தேர்ச்சிமிக்க பொறியியல் ஆற்றலுக்கு சிறந்த சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வைரஸை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைக்கு சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

swine_flu.jpgஇன்புஃ ளுவன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்க த்தை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் வியப்புக்குரியதும், பாராட்டத்தக்கதுமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் பிர்தோஸி ருஸ்டம் மெஹ்தா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநா டொன்றின் போதே அவர் நேற்று இதனைத் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட (ஏ) எச்1 என்1 வைரஸ் என்பது ஆட் கொல்லி வைரஸ் அல்ல, டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் ஒன்றே, அச்சமோ பதற்றமோ படத் தேவையி ல்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையர்கள் மிகவும் அதிர்ஷ்டசாளிகள் என்றே நான் கூறு வேன் என்றும் கூறினார்.

மெக்ஷிகோவில் வைரஸ்தாக்கம் ஏற்பட்டதையடுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியதையடுத்து இலங்கை இதற்கு முகம்கொடு ப்பதற்கு ஆயத்தமாகிவிட் டது. தேவையான மருந்து வகைகள், தடுப்பூசிகள் மட்டு மல்லாது. தாக்கம் ஏற்படும் நோயாளிகளை தனியாக பராமரிக்க சகல வசதிகளையும் கொண்ட மருத்துவ மனைகளையும் ஆயத்த நிலையில் வைத்துவிட்டது.

மேலும் விமான நிலையத்தில் பயோ ஸ்கேனர்கள் மூலம் வைரஸ் தாக்கமுள்ளவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சகலரையும் அறிவுறுத்தும் விதத்தில் மும்பாயில் 38 பேரும், சிங்கப்பூரில் 49 பேரும், மலேஷியாவில் 17 பேரும், பாங்கொக்கில் 405 பேரும் மேற்படி வைரஸ் தாக்கம் உள்ளவர்களாக பதிவாகியுள்ளனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபன இலங்கைக்கான பிரதிநிதி மெஹ்தி தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு திடீர் நிபந்தனை

india-refuge.jpgதமிழ்நாடு அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் இலங்கை செல்ல வேண்டுமானால், “மீண்டும் வரமாட்டேன்” என கியூ பிரிவு பொலிஸாரிடம் உறுதியளிக்க வேண்டுமென தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இலங்கையில் 1983இல் ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பின், ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

தமிழகத்தில் 117 முகாம்களில் தங்கியுள்ள இவர்கள், வெளிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். இதன்போது, முகாமில் தங்கியுள்ள அகதிகள் சிலர் இலங்கைக்குச் செல்ல விரும்புவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு செல்ல விரும்புபவர்கள், கியூ பிரிவு பொலிஸாரிடம், ” மீண்டும் முகாமுக்கு வரமாட்டேன்…” என்று உறுதிமொழி எழுதி கொடுத்து விட்டு, சான்றிதழ் பெற்று தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

டெங்கு பரவும் 2000 வீடுகள் பொலிஸ்-இராணுவத்தால் சுற்றி வளைப்பு

aedes_aegypti.jpgமட்டக் களப்பு, காத்தான்குடி நகர சபைப் பிரிவில் தீவிரமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் ஆரம்பித்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் 2000 வீடுகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் சுற்றி வளைக்கப்பட்டு பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்றும் இன்றும் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 600 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தினங்களுக்குள் தமது இருப்பிடங்களைத் துப்புரவு செய்யாவிட்டால் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதாரப் பணிமணை தெரிவித்துள்ளது

யாழ்குடாவுக்கு சாலை வழியாக அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம்

a-9-loorys.jpgஇலங் கையில் யாழ்குடா நாட்டிற்கு சாலை வழியாகக் கொண்டுசெல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பத்து நாட்களுக்கு முன்பே கொழும்பிலிருந்து கிளம்பியிருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாகத்தான் அவை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து வருகின்றன.

பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் கடந்த பல நாட்களாக அநுராதபுரத்தில் தடுத்துவவைக்கப்பட்டிருந்தன. தற்போதுதான் கட்டம் கட்டமாக இந்தப் லாரிகள் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றன.

காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது

இலங் கையின் கிழக்கே மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில முஸ்லிம் பிரதேசங்களில் மறைத்து வைக்கப்டப்டிருப்பதாகக் கூறப்படும் சட்ட விரோத ஆயுதங்களை களைவதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை எதிர்வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்ட விரோத ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க இதனை அறிவித்துள்ளார். ஆயுதங்கள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.