தமிழ்நாடு அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் இலங்கை செல்ல வேண்டுமானால், “மீண்டும் வரமாட்டேன்” என கியூ பிரிவு பொலிஸாரிடம் உறுதியளிக்க வேண்டுமென தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இலங்கையில் 1983இல் ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பின், ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
தமிழகத்தில் 117 முகாம்களில் தங்கியுள்ள இவர்கள், வெளிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். இதன்போது, முகாமில் தங்கியுள்ள அகதிகள் சிலர் இலங்கைக்குச் செல்ல விரும்புவது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு செல்ல விரும்புபவர்கள், கியூ பிரிவு பொலிஸாரிடம், ” மீண்டும் முகாமுக்கு வரமாட்டேன்…” என்று உறுதிமொழி எழுதி கொடுத்து விட்டு, சான்றிதழ் பெற்று தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்