இன்புஃ ளுவன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்க த்தை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் வியப்புக்குரியதும், பாராட்டத்தக்கதுமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் பிர்தோஸி ருஸ்டம் மெஹ்தா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநா டொன்றின் போதே அவர் நேற்று இதனைத் தெரிவித்தார்.
குறிப்பிடப்பட்ட (ஏ) எச்1 என்1 வைரஸ் என்பது ஆட் கொல்லி வைரஸ் அல்ல, டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் ஒன்றே, அச்சமோ பதற்றமோ படத் தேவையி ல்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையர்கள் மிகவும் அதிர்ஷ்டசாளிகள் என்றே நான் கூறு வேன் என்றும் கூறினார்.
மெக்ஷிகோவில் வைரஸ்தாக்கம் ஏற்பட்டதையடுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியதையடுத்து இலங்கை இதற்கு முகம்கொடு ப்பதற்கு ஆயத்தமாகிவிட் டது. தேவையான மருந்து வகைகள், தடுப்பூசிகள் மட்டு மல்லாது. தாக்கம் ஏற்படும் நோயாளிகளை தனியாக பராமரிக்க சகல வசதிகளையும் கொண்ட மருத்துவ மனைகளையும் ஆயத்த நிலையில் வைத்துவிட்டது.
மேலும் விமான நிலையத்தில் பயோ ஸ்கேனர்கள் மூலம் வைரஸ் தாக்கமுள்ளவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சகலரையும் அறிவுறுத்தும் விதத்தில் மும்பாயில் 38 பேரும், சிங்கப்பூரில் 49 பேரும், மலேஷியாவில் 17 பேரும், பாங்கொக்கில் 405 பேரும் மேற்படி வைரஸ் தாக்கம் உள்ளவர்களாக பதிவாகியுள்ளனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபன இலங்கைக்கான பிரதிநிதி மெஹ்தி தெரிவித்தார்.