மட்டக் களப்பு, காத்தான்குடி நகர சபைப் பிரிவில் தீவிரமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் ஆரம்பித்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் 2000 வீடுகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் சுற்றி வளைக்கப்பட்டு பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றும் இன்றும் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 600 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தினங்களுக்குள் தமது இருப்பிடங்களைத் துப்புரவு செய்யாவிட்டால் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதாரப் பணிமணை தெரிவித்துள்ளது