இலங் கையில் யாழ்குடா நாட்டிற்கு சாலை வழியாகக் கொண்டுசெல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பத்து நாட்களுக்கு முன்பே கொழும்பிலிருந்து கிளம்பியிருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாகத்தான் அவை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து வருகின்றன.
பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் கடந்த பல நாட்களாக அநுராதபுரத்தில் தடுத்துவவைக்கப்பட்டிருந்தன. தற்போதுதான் கட்டம் கட்டமாக இந்தப் லாரிகள் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றன.