இன்புளு வன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்குதலுக் கிலக்காகி விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 சிறுவ ர்களும் பூரண குணமடைந்து வருகின்றனர். இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.தொற்று நோய் தடுப்புப் பிரிவின் டொக்டர் சுதத் பீரிஸ் நேற்று இதனைத் தெரிவித்தார்.
கடந்த 14ஆம் திகதி இனங்காணப்பட்ட சிறுவன் உட னடியாக விசேட வைத்திய பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் விசேட பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனூடாக அந்தச் சிறுவன் வைரஸ் தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு நன்றிகூறவேண்டும். சிறுவன் காய்ச்சலில் பீடிக்கப்பட்டவுடனேயே எமக்கு அவர்கள் தகவல் தந்தார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்திலும், எமது விமான துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கையின் சுகாதாரத் துறையை கண்டுவியக்கும் இதேவேளை பாராட்டவும் வேண்டும் என்றார்.
இலங்கையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றுதான் இருக்கிறது. இந்தியாவில் 38 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. எந்த வழியாக எவர் வருகிறார்கள் என்பதை கவனிக்கவே முடியாமல் போகும். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. நிலையத்திலும் அறிவுறுத்தப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் என தெரிவித்தார்.
சிறுவனுடன் 4 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வழமைபோன்று சுட்டித்தனத்துடன் துள்ளி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் துவண்டு போவார்கள் என்று கூறுவது உண்மையல்ல என்றும் கூறினார்.
சிறுவனுடன் விமானத்தில் பயணித்த 185 பேரின் விபரங்களை சேகரித்துள்ளோம். அதுமட்டுமல்ல விமானத்தில் அவருக்கு அருகில் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களையும் கண்டுபிடித்து அவர்களைப் பற்றியும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். நாளை 23ம் திகதி வரை அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை சிறுவனுடன் விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் மற்றுமொருவர் வைரஸ் தாக்கம் காரணமாக விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை இவர் அனுமதிக்கப்பட்டதுடன் வைரஸ் தாக்கத்துக்குள்ளான ஐந்தாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.