அயோ துல்லா கமனெய் அவர்களின் கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்க இலண்டனில் உள்ள இரானியத் தூதரை பிரிட்டிஷ் அரசு அழைத்திருக்கிறது.
இரானில் கடந்த சில நாட்களில் காணப்பட்ட ஒடுக்குமுறையும் மூர்க்கத்தனமும் திரும்ப நடக்கக்கூடாது என்று பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்ஸல்சில் கூடி, இரானில் நடந்த எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை ஒருமனதாகக் கண்டித்த கூட்டத்தில் பிரவுன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அயதுல்லாவின் பேச்சு, இனி எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறை வழியில் ஒடுக்க, இரானிய பாதுகாப்புப் படைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல இருப்பதாக இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.