15

15

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !

ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 22 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐஃபோன்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 60 வீதம் அதிகமான உற்பத்தியை அப்பிள் நிறுவனம் இந்தியாவில் செய்துள்ளது. ஒரு வகையில் அப்பிள் நிறுவனம் சீனாவிற்குப் பதில் இந்தியாவில் அதன் தயாரிப்பையும் விநியோகத்தையும் அதிகரித்திருப்பதாக தெரிகின்றது. முன்னர் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஃபோன்களை அமெரிக்கா அனுப்புவது விரைவுபடுத்தப்பட்டது. ஆனால் ஏப்பில் 11 அமெரிக்க ஜனாதிபதி திறன்பேசிகள், கணினிகள் உட்பட்ட மின்னணுப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதனால் இந்தியா சற்று ஆறுதலடைந்துள்ளது.

10.2: ஆகவே ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கும் டொனால்ட் ட்ரம்பின் கனவு விரைவில் பலிக்காது எனவே கூறப்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருள் வசதியின்மை போன்ற இன்ன பல காரணங்களால் அப்பிள் ஐஃபோன்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு இடம்மாற்றுமா? என்பது கேள்விக்குறியேயாகும்.

 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் ஒன்பதாம் திகதி முதல் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது 125 % வரி விதிக்கப்பட்ட்டு தற்போது இவ்வரி 145% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்திருந்தது.

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட சில முக்கிய மின்னணுப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். அமெரிக்க மக்கள் அதிகமாக வாங்கிக் குவிக்கும் இந்த பொருள்களின் விலையேற்றம் பெரும் சுமையாக அமைவதைத் தடுக்கும் வகையில் இந்த வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விலக்கினால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 145% வரி பொருந்தாது. ஆப்பிளின் ஐபோன்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், இது தொழில்நுட்ப முதலீட்டாளர்களுக்கு நன்மையளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடமாகாணத்தில் குறுகிய காலகட்டத்தில் உருவாகவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்ய, அந்த மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் தெரிவித்ததாவது,

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயன தொழிற்சாலை வளாகம் மற்றும் மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகியவை முதலீட்டு வலயங்களாக உருவாக்கப்பட உள்ளன.

வடமாகாணத்தில் அமையவுள்ள இந்த வலயங்களில் விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இவ்வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், மின்சாரம், வீதி வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் வழங்கப்படும். மேலும், 200 வீதம் முதலீட்டுக் கழிவுரிமை வழங்கப்படும் எனவும், தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் இறக்குமதி சலுகைகள் எளிதில் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு முயற்சிகள் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, அதிகளவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைப்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 021 222 1336 அல்லது jeyamanonr@boi.lk என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !

2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சீரமைக்கவென 1,950 மில்லியன் ரூபாயும் இந்திய உதவியாக 300 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் பலாலி விமான நிலையத்தில் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மற்றும் யாழ்ப்பாண விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்கு வந்துள்ள பலாலி விமான நிலையம் தொடர்பில் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. விமானப் பயணத்திற்காக பயணிகள் மரங்களுக்கு கீழ் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளரான தமிழ்ச்செல்வன் கூட குறைப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் தனது சேலம் ஆர் . ஆர். பிரியாணி உணவகத்தை ஆரம்பித்துள்ள அவர் கொடுத்த போட்டியில் யாழ்ப்பாண விமானநிலையம் தற்காலிக கொட்டகையிலேயே இயங்குவதாக குறிப்பிட்டிருந்தார். மலசல கூட வசதி பற்றியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இத்தனை மில்லியன்கள் செலவு செய்து தற்காலிக கொட்டகைதான் போட முடிந்துள்ளது என்பது வேடிக்கை. கடந்தகால ஆட்சியாளர்களின் ஊழல் எத்தகையது என்பதற்கு இவையெல்லாம் சான்றாகவுள்ளது.

தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !

தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !

மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலன் தமிழ்நாடு – கொழும்பு நேரடி ரயில் பாதைக்கு அடிகோலியுள்ளது என “இந்தியா ருடே” இணையத்தளம் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து கொழும்புக்கு நெடுஞ்சாலை அல்லது ரயில் பாதையை அமைக்க தேவையாகவிருந்த 25 கிலோ மீற்றர் பாலத்தை பாம்பன் பாலம் நிறைவு செய்துள்ளது என இந்தியா ருடே புளங்காகிதம் அடைகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம் மேம்படும் என்றும் இந்தியா ருடே ஆரூடம் கூறியுள்ளது.

யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !

யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !

பிறந்த 21 நாளேயான பெண் சிசுவொன்றை எறும்புகள் கடித்துள்ளன. பெற்றோர் எறும்புக்கடி தொடர்பில் அசமந்தமாக இருந்துள்ளனர். நான்கு நாட்கள் கழித்து பால் குடித்த சிசு மரணமடைந்துள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின்படி எறும்புக் கடியால் கிருமித் தொற்று ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. எறும்பு, மட்டத்தேள் மற்றும் பூரான் போன்ற பூச்சிகள் கடிக்கும் போது விரைவாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெறுபேறுகள் வெளியானவுடன் , பின்வரும் முறைகளில் நீங்கள் அவற்றை சரி பார்கலாம் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளமான https://www.doenets.lk இலும், அல்லது https://www.results.exams.gov.lk இலும் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !

கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.

மேலும், கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகள் மக்கள் முன்னிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மக்களே மாற்றத்திற்கான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது என்று சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலற்ற வினைத்திறனான நிர்வாகம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.

மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.

அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.