வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடமாகாணத்தில் குறுகிய காலகட்டத்தில் உருவாகவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்ய, அந்த மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் தெரிவித்ததாவது,

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயன தொழிற்சாலை வளாகம் மற்றும் மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகியவை முதலீட்டு வலயங்களாக உருவாக்கப்பட உள்ளன.

வடமாகாணத்தில் அமையவுள்ள இந்த வலயங்களில் விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இவ்வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், மின்சாரம், வீதி வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் வழங்கப்படும். மேலும், 200 வீதம் முதலீட்டுக் கழிவுரிமை வழங்கப்படும் எனவும், தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் இறக்குமதி சலுகைகள் எளிதில் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு முயற்சிகள் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, அதிகளவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைப்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 021 222 1336 அல்லது jeyamanonr@boi.lk என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *