யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !
2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சீரமைக்கவென 1,950 மில்லியன் ரூபாயும் இந்திய உதவியாக 300 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் பலாலி விமான நிலையத்தில் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மற்றும் யாழ்ப்பாண விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு வந்துள்ள பலாலி விமான நிலையம் தொடர்பில் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. விமானப் பயணத்திற்காக பயணிகள் மரங்களுக்கு கீழ் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளரான தமிழ்ச்செல்வன் கூட குறைப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் தனது சேலம் ஆர் . ஆர். பிரியாணி உணவகத்தை ஆரம்பித்துள்ள அவர் கொடுத்த போட்டியில் யாழ்ப்பாண விமானநிலையம் தற்காலிக கொட்டகையிலேயே இயங்குவதாக குறிப்பிட்டிருந்தார். மலசல கூட வசதி பற்றியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இத்தனை மில்லியன்கள் செலவு செய்து தற்காலிக கொட்டகைதான் போட முடிந்துள்ளது என்பது வேடிக்கை. கடந்தகால ஆட்சியாளர்களின் ஊழல் எத்தகையது என்பதற்கு இவையெல்லாம் சான்றாகவுள்ளது.