கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
மேலும், கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகள் மக்கள் முன்னிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மக்களே மாற்றத்திற்கான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது என்று சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலற்ற வினைத்திறனான நிர்வாகம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.