22

22

டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !

டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !

‘50501’ என்ற போராட்டக்குழுவின் ஏற்பாட்டில் அமெரிக்காவில் மக்கள் வீதிகளில் திரண்டு ஜனாதிபதி ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்பிரல் 5 ஆம் திகதி மற்றும் 19 களில் நியுயோர்க் நகரம் மற்றும் வெள்ளைமாளிகை முன் திரண்ட மக்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கோஷமிட்டனர். ‘50501’ அமைப்பு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது. 50 போராட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘50501’ என இப்போராட்டக்குழுவுக்கு பெயரிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் குடிவரவு கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரச ஊழியர்களின் ஆட்குறைப்பு போன்ற அடாவடியான கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்றனர்.

“அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை“ பதாதைகளை தாங்கிக் கொண்டு கோஷமிடுகின்றனர். ட்ரம்ப் கிட்லர் போன்று செயற்படுவதாகவும் விமர்சிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்பின் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஜார்க்கண்டில் 6 நக்சல்கள் என்கவுண்டரில் கொலை !

ஜார்க்கண்டில் 6 நக்சல்கள் என்கவுண்டரில் கொலை !

இந்தியாவின் மத்திய ரிசேர்வ் படையினரின் தொடர் தாக்குதல்களில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சமீப காலங்களில் பல நக்சல் போராளிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் லுகு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த நக்கசல் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசேர்வ் படை அறிவித்துள்ளது. அத்துடன் தமது தரப்பில் யாரும் காயமுறவில்லை எனவும் கூறியுள்ளது. நக்சல் போராளிகளிடமிருந்த துவக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

பிள்ளையானால் பாதிக்கப்பட்ட தங்கள் தாய் உதயகலாவை மீட்டுத்தர ஜனாதிபதியிடம் மகள் கோரிக்கை !

பிள்ளையானால் பாதிக்கப்பட்ட தங்கள் தாய் உதயகலாவை மீட்டுத்தர ஜனாதிபதியிடம் மகள் கோரிக்கை !

யாழ்ப்பாண சிறையிலிருக்கும் சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா தயாபராஜ்யை விடுதலை செய்யும்படி அவரது மகள் நேற்றைய தினம் யாழ் ஊடகமையத்தில் அளித்த பேட்டியில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று 4 மாதங்களுக்கு முதல் உதயகலாவின் கணவர் தயாபரராஜ் சிறையில் தனது மனைவிக்கு கொடுமைகள் நடப்பதாக புகார் கூறியுள்ளார். பதினொட்டு வயதிற்கு குறைந்த உதயகலாவின் மகள் தனது மூன்று சகோதரர்களுடன் அம்மம்மாவின் வழிகாட்டுதலில் யாழ் ஊடக மையத்தில் பேட்டியளித்துள்ளார்.

தனது தாயார் மட்டக்களப்பில் அரசியல் கட்சி தொடங்கி செயற்பட்டது பிடிக்காமல் சூழ்ச்சி செய்து பிள்ளையான் தனது தாயாரை சிறையிலடைத்துள்ளதாக கூறினார். மேலும் பிள்ளையானால் தனது தாய்க்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார். மேலும் அச்சிறுமி தானும் தனது சகோதரர்களும் அம்மம்மாவின் பராமரிப்பில் பல அசொளகரியங்களுடன் வாழ்வதாகவும் தெரிவித்தார். தனது தாயார் சிறையில் மிகுந்த மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளுடன் அவதிப்படுவதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

பெண் வேடமிட்டு கோவிலில் திருடிய ஆண் ! நால்வர் இணுவிலில் கைது !

பெண் வேடமிட்டு கோவிலில் திருடிய ஆண் ! நால்வர் இணுவிலில் கைது !

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு !

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு !

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை 846,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாட்களில் 123,945 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான 24,776 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,060 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,873 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,387 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,404 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 5,719 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

வெளிவந்தது போலி நாணயத்தாள் !

வெளிவந்தது போலி நாணயத்தாள் !

ஏப்ரல் 21 அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ஒலுவில் – 02 ம் பிரிவில் உள்ள சிறிய சில்லறை கடையில் போலி 5,000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனவே கடை உரிமையாளர்கள், பொது மக்கள் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான நாணயங்கள், இருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குங்கள் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

 

மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் !

மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வந்த மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கத்தின் மோட்டார் சைக்கிள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குழுவினரால் எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், சட்ட விரோத கடற்றொழிலை எதிர்த்து போராடுபவர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவத்தை கண்டித்து, மீனவ சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மக்கள் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்று, மக்களிடம் இருந்து மகஜர் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். அவர், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.

அரசாங்கம் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மே மாதம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் இதனை எதிரொலிக்க செய்வதோடு, ஜனாதிபதி செயலகம், பிரதமர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், மற்றும் கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்கவும் ! தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் !

சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்கவும் ! தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் !

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு நிதி வழங்குவோம் மற்றைய உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கு ஊழல் இல்லை என்பதை ஒன்றுக்கு பத்து தடவை பார்த்துத்தான் நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது போன்ற கருத்துகளை வெளியிடுவதைத்
தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதியின் அறிக்கை உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரிவுகள் 92 சி (தவறான செல்வாக்கு) மற்றும் 82 டி
(அதிகபட்ச நன்மைக்கான வாக்குறுதிகள்) ஆகியவற்றின் தெளிவான மீறலாகும் என்று கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமர சம்பத் தசநாயக்காவை காக்க களத்தில் ரணில் !

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமர சம்பத் தசநாயக்காவை காக்க களத்தில் ரணில் !

ஊவா மாகண சபையின் முதலமைச்சர், மாகாணசபை அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு நிதியை முறைகேடாக எடுத்து, அரசாங்கத்திற்கு 17.3 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் உள்ளார். இந்த விடயத்தில் மூக்கை நுழைத்த ரணில், தான் பிரதமராக இருந்த காலத்திலேயே ஜனாதிபதியாக இருந்த மைத்திரியின் சம்மதத்துடன், அப்பணத்தை எடுத்தாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு சாமர குற்றமற்றவர் கூறுகிறார்.

இந்தவிடயத்தில் விரைந்து செயற்பட்ட, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 17 ஆம் திகதி நேரில் ஆஜராகி அறிக்கை வழங்கும்படி உத்தரவிட்டது. குறிப்பிட்ட நாளில் சமூகம் தர முடியாது என தெரிவித்த ரணிலுக்கு புதிய திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இதேசமயம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை முன்னிலையானார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி யார் என அமெரிக்காவின் எஃப்பிஐ ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டது. அது வேறு யாருமல்ல தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமும் நெளபர் மொளலவி என்றும் உதய கம்மன்பில கூறுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் பிள்ளையானிடம் கட்டாய வாக்கு மூலத்தை வாங்கி ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியென வேறுயாரோ ஒருவரை பலியாக்க இருப்பதாகவும் கம்மன்பில குறிப்பிட்டார். தான் ஒற்றை மனிதனாக பிள்ளையானை சந்தித்து அரசாங்கத்தினுடைய வேடத்தை கலைத்த வீரன் ராம்போவாக உருவெடுத்திருப்பதாகவும் பெருமிதம் அடைந்தார்.

இனவாதியான கம்மன்பில இராணுவ துணைப்படையாக இருந்து பல கொலைகளில் மற்றும் கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படலில் சம்பந்தப்பட்ட பிள்ளையானை நாட்டைக் காப்பாற்றிய தேசபக்தன் என உதய கம்மன்பில பாராட்டி வருவதை அமைச்சர் கண்டித்தமை தெரிந்ததே.

ஒரு பக்கம் ஈஸ்டர் தாக்குதலில் இந்தியாவின் பங்கு என்ன? எனவும், அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற கோத்தபாய மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் சதியெனவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நகருகின்றது.