அன்பே சிவம், ஆனால் லூசியம் சிவன் ஆலயத்தில் ஏன் சமரசம் உலாவவில்லை? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை!
ஆலயத்தின் ஆரம்ப உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல்..!
சர்ச்சைக்குரிய லண்டன் லூசியம் சிவன் கோயிலில் மீண்டும் மருத்துவ கலாநிதி துரைராஜா சிறீஸ்கந்தராஜா ஆலயத்தின் செயற்குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பதவியில் இருக்கும் தன்னோடு போட்டியிடும், போட்டியாளர்களோடு பேசி அவர்களை ஒதுங்கச் செய்து பதவியிலிருப்பதாக தில்லைநாயகம் அருள்தாஸ், விஸ்வலிங்கம் கணேசமூர்த்தி மற்றும் என் சர்ச்சிதானந்தன் ஆகியோர் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர். அவர்கள் தொர்ந்தும் குறிப்பிடுகையில் நியாயமற்ற முறையில் அறங்காவல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட தில்லைநாயகம் அருள்தாஸ், விஸ்வலிங்கம் கணேசமூர்த்தி மற்றும் ஒருவரையும், மீள உள்வாங்குமாறு பிரித்தானிய நீதிமன்றம் ஆலய அறங்காவல் சபைக்குத் தெரிவித்து இருந்தது. ஆனால் துரைராஜா சிறீஸ்கந்தராஜா தொடர்ந்தும் தங்களை மீள உள்வாங்காமல் தடுப்பதாகத் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் துரைராஜா சிறீஸ்கந்தராஜாவின் நடவடிக்கைகளால் ஆலயம் நீதிமன்றத்திற்குச் செல்கின்றபோது ஏற்படும் பெரும் நிதிச் செலவுகள் ஆலயத்தின் நிதியிலிருந்தே செலவிடப்படுகின்றது என்றும் இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குத்தகைக் காணியில் 1.6 மில்லியன் பவுண்செலவில் ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. லூசியம் சிவன் கோவில் மட்டுமல்ல புலம்பெயர்நாடுகளில் உள்ள சிவன் கோவில்களில் இவ்வாறான எதேச்சை அதிகாரங்களைக் காணலாம். ஏனைய ஆலயங்களும் இதற்கு விதி விலக்கல்ல.




வடக்கில் 3 லட்சம் மெட்ரிக் தொன் நெல் விளையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதில்; ஆகக் குறைந்தது 30 ஆயிரம் மெட்ரிக் தொன்னையாவது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் வடக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கலாநிதி அகிலன் கதிர்காமர் முன்வைத்தார். வடமாகாணம் நெல் விளையும் பூமியாக இருந்தாலும் இதுவரை நெல் காயவிடுதல், களஞ்சியப்படுத்தல் வசதிகள் இங்கு இல்லை என்பதும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்தவுடனேயே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதையும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.


கிளிநொச்சியில் நேற்று டிப்பர் மோதி 2வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். தாய், தந்தை மற்றும் 7 வயது மகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை முன்பாக நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. மதுபோதையிலிருந்த டிப்பர் வாகன சாரதி மோட்டார் சைக்கிளில் குடும்பமாக வந்தவர்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிய வருகின்றது. சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றார்கள். தென்னாசியாவில் இலங்கையின் வீதிகள் உயிராபத்தானவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

