மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் !

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் !

வடமாகாணத்தில் உள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் பிரச்சினையில், வடக்கில் உள்ள தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனத்தைக் கலைக்க வேண்டும், என மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பகீரங்க அழைப்பு விடுத்துள்ளனர். கடல்தொழில் அமைச்சர் மீனவர்களுடைய பிரச்சினைகளை அணுகி, அதனை ஜனாதிபதிக்கும் கொண்டு சென்று, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இப்பிரச்சினை பேசப்பட்டது. ஆனாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகும்படி கோரியிருந்தார். அதற்கு மறுப்புச் சொல்லும் வகையில் 17 இந்திய மீனவர்களும் அவர்களுடைய மீன்பிடி படகும்; கைப்பற்றப்பட்டு, ஜனவரி ஏழவரை தடுத்தவைக்கப்பட்டு உள்ளனர். தண்டனைக்கூடாகவே இவ்விடயத்தை கையாளமுடியும் என வடக்கு மீனவர்களைப் போன்று இலங்கை அரசும் நம்புகின்றது.

ஆனால் வடக்கில் உள்ள தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் பற்றி பேச மறுக்கின்றனர். அதனாலேயே மீனவர்கள் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி இக்கோரிக்கையை வைத்தள்ளனர். வடக்கில் உள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் முகவர்கள் போல் செயல்படுவதால் மீனவர் பிரச்சினைகளில் இவர்கள் தலையீடு செய்வதில்லை. மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் சொத்துக்களும் உண்டு. அதுமட்டுமல்ல மாகாணசபை, 13வது திருத்தம் என்ற விடயங்களில் தமிழ் மக்களுக்கு கதையளப்பதற்கு இந்தியா இவர்களுக்கு அவசியமாகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *