October

October

போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்!

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட 10ஆயிரத்து 323 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வறிக்கையின்படி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளிலும் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. எனினும்இ இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 763 ஆக இருந்தது.

ஐந்து வயதுக்குட்பட்ட 13ஆயிரத்து 1649 சிறார்களை பதிவு செய்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

இந்த மதிப்பீட்டில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய ராஜபக்ச

லலித், குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன்னைய தீர்ப்பினை சவாலுக்குஉட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலா தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல் – எச்சரிக்கும் அமெரிக்கா!

இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

 

இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

 

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது.

 

மறுஅறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.

 

அந்தவகையில் அமெரிக்க பிரஜைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக,

 

அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளை 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதேவேளை, எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளத்தை நம்புங்கள், ஒரு சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து வெளியேறுங்கள்.

 

உங்களிடம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையான தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசிகளை வைத்திருத்தல் வேண்டும்.

 

செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சங்கு களவாடப்பட்டதாக நிலாந்தனும் – யோதிலிங்கமும் கூறியது முழுமையான பொய் – ரெலோ அமைப்பின் பிரித்தானிய அமைப்பாளர் சாம் சம்பந்தன் !

சங்கு களவாடப்பட்டதாக நிலாந்தனும் – யோதிலிங்கமும் கூறியது முழுமையான பொய் – ரெலோ அமைப்பின் பிரித்தானிய அமைப்பாளர் சாம் சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை களமிறக்குவதற்காக சங்கு சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்காக மட்டுமே குறித்த சின்னம் பயன்படுத்தப்படுவதாகவும் இனிவரும் காலங்களில் குறித்த சின்னம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது எனவும் பத்தி எழுத்தாளர் நிலாந்தன், யோதிலிங்கம் ஆகியோர் கூறி வந்த நிலையில் நடப்பு ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் சங்கு சின்னம் போலியாகிவிட்டது எனவும் வேறு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தரப்படுகிறது எனவும் நிலாந்தன் யோதிலிங்கம் ஆகியோர் கூறிவரும் நிலையில் நிலாந்தன் யோதிலிங்கம் ஆகியோரின் பின்னுள்ள அரசியல் பின்னணி தொடர்பிலும் அவர்களின் நிலையில்லாத அரசியல் கருத்துகள் தொடர்பிலும் ரெலோ அமைப்பின் பிரித்தானிய அமைப்பாளர் சாம் சம்பந்தனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் கலந்துரையாடல்..!

 

 

 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக இரண்டு மனுக்களில் பெயரிட உயர்நீதிமன்றம் அனுமதி!

சோசலிச இளைஞர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.

 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

சோசலிச இளைஞர் சங்கம் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் – அனைத்து கணக்குகளையும் முடக்கும் திட்டம் தீவிரம் !

ஹிஸ்புல்லாவை  ஆதரிப்பதாகக் கூறும் வங்கி கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து நேற்றையதினம் (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெய்ரூட்  விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்தாகவும் கூறப்படுகின்றது.

எச்சரிக்க வழங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு முதல் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் அல்-கார்ட் அல்-ஹசன் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த வங்கியின் கிளைகள் பெரும்பாலும் பரபரப்பான மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்களின் தரை தளத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் முழுவதும் இந்த வங்கியின் 34 கிளைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிஸ்புல்லா அமைப்பு அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்த தளங்களை குறிவைத்தது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) நேற்று (21.10.2024) காலை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

அல்-கார்ட் அல்-ஹசன் ” ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றது. ஆயுதங்கள் கொள்வனவு மற்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் உள்ள செயல்பாட்டாளர்களுக்கு பணம் செலுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த வங்கியூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்ட BMW கார் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் CID விசாரணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

தெற்கு பெய்ரூட் மீது தாக்குதல் – நால்வர் பலி !

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட 13 வான்வழித்தாக்குதல்களில், இந்த தாக்குதலும் ஒன்றென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 மாதங்களில் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள், 3 காதி நீதிபதிகள், இரண்டு வருமான பரிசோதகர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், இந்த சுற்றிவளைப்புக்களில் 22 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காலப்பகுதியில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வருடத்தில் 19 பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமையை செய்யாத பொலிஸார் பற்றி அறிவிக்க புதிய இலக்கம் !

பொலிசார் பொதுமக்களுக்காக அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

பொலிஸார் தனது சேவையை ஒழுங்காக செய்யாமை அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி, 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பில் அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.