இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட 10ஆயிரத்து 323 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வறிக்கையின்படி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளிலும் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. எனினும்இ இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 763 ஆக இருந்தது.
ஐந்து வயதுக்குட்பட்ட 13ஆயிரத்து 1649 சிறார்களை பதிவு செய்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
இந்த மதிப்பீட்டில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.