11

11

அறிவிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் !

பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

01. பிமல் ரத்நாயக்க

02. பேராசிரியர் வசந்த சுபசிங்க

03. கலாநிதி அனுர கருணாதிலக்க

04. பேராசிரியர் உபாலி பனிலகே

05. எரங்க உதேஷ் வீரரத்ன

06. அருணா ஜெயசேகர

07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

08. ஜனித ருவன் கொடிதுக்கு

09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி

10. ராமலிங்கம் சந்திரசேகர்

11. கலாநிதி நஜித் இந்திக்க

12. சுகத் திலகரத்ன

13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர

14. சுனில் குமார் கமகே

15. காமினி ரத்நாயக்க

16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

17. சுகத் வசந்த டி சில்வா

18. கீர்த்தி வெலிசரகே

19. சமிலா குமுது பிரிஸ்

20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்

21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா

22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்

23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்

24. ரொமேஷ் மோகன் டி மெல்

25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​ெ

26. புபுது நுவன் சமரவீர

27. சரத் லால் பெரேரா

28. அனுர ஹெட்டிகொட கமகே

29. ஹேமதிலக கமகே

யாழ்ப்பாணத்தில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார் அங்கஜன் இராமநாதன்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11.10.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.

கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதன் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள காரணத்தினால் அந்த கட்சியின் பெயரையே அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாகவே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றிருந்தார்.

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய 349 சுயேட்சை குழுக்கள் – வடக்கில் 8 லட்சம் ஓட்டுக்களுக்காக 70 சுயேட்சை குழுக்கள்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 349 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

 

அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 23 வேட்பாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 16 வேட்பாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 16 வேட்பாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 06 வேட்பாளரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 34 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்திலிருந்து 33 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

 

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 33 வேட்பாளர்களும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 50 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 24 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 09 வேட்பாளர்களும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 22 வேட்பாளர்களும் , அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 09 வேட்பாளர்களும் , பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும் , பதுளை மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் , மொனராகலை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 07 வேட்பாளர்களும் , கேகாலை மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தமிழரசுக்கட்சியில் இருந்து விலகிய ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தலைமையில் புதிய கட்சி உதயம் !

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

 

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

 

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

 

இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.