21

21

தமிழ் அரசுக் கட்சியும் ஜேவிபியும் – அன்றும் இன்றும் முன்னாள் கழகப் போராளி அரசியல் ஆய்வாளர் யோகன் கண்ணமுத்து

தமிழ் அரசுக் கட்சியும் ஜேவிபியும் – அன்றும் இன்றும்
முன்னாள் கழகப் போராளி அரசியல் ஆய்வாளர் யோகன் கண்ணமுத்து

வாகனங்களை மீள ஒப்படைத்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை அடங்கியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

இந்த 13 புலனாய்வு தகவல்களும் அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ரவி செனவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.

 

கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையே நான் தற்போது முன்வைக்கின்றேன்.

 

இந்த விசாரணை அறிக்கையானது, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் முன்வைத்துள்ள 25 குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை அறியும் வகையில், சனல் 4இன் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் போது பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் ஆகியோர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பதை ஆராயும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

 

இந்த அறிக்கையின் 40வது பக்கத்தில் ரவி செனவிரத்னவுக்கு, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி தவ்ஹித்ஜமாத் என்ற அமைப்பு கத்தோலிக்கர்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக முன்னாள் பிரபோவோ சுபியாண்டோ !

முன்னாள் இராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக ஞாயிற்றுக்கிழமை (20) பதவியேற்றுள்ளார்.

 

பதவியேற்பின் பின் உரையாற்றிய அவர், நாட்டைப் பாதிக்கும் ஊழல் போன்ற உள் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், மேலும் தன்னிறைவு பெறுவதாகவும் உறுதியளித்தார்.

 

பிரபோவோவின் அமைச்சரவையில் 100 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் 48 அமைச்சகங்கள் உள்ளன.

 

இதில் ஸ்ரீ முல்யானி இந்திராவதி மீண்டும் நிதியமைச்சராகவும், பஹ்லில் லஹடாலியா எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

 

இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரபோவோ இறுதியாக பிப்ரவரி தேர்தலில் இரண்டு போட்டியாளர்களுக்கு எதிராக 58% வாக்குகளைப் பெற்ற பின்னர் மிக உயர்ந்த பதவிக்கு சென்றார்.

 

73 வயதான அவர், ஒரு முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்து, உரிமை மீறல்களில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, 280 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டை வழிநடத்துவது வரை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்..? பகிரங்கப்படுத்தினார் உதய கம்மன்பில!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவி ரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமாரவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை!

நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனிய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தினசரி முறைப்பாடுகள் – 400 ஐ கடந்த முறைப்பாடுகள்!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான திறனில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேறு கட்சியில் இருந்தும் அரசாங்க உறுப்பினர்கள் வேறு கட்சியில் இருந்தும் நாட்டுக்கு செயற்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்படி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை தமது அணி கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இஸ்ரேலை கண்டித்து கையெழுத்திட்ட இலங்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய சிலி தூதரகத்திடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தமது பெயரையும் இணைத்துக்கொள்ள நியூயோர்க்கில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகம் (ஐ.நா.) கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கையொப்பமிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆளுமை அல்லாதவர் என்று அறிவித்திருந்தது.

 

மேலும் இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை ஐநா செயலாளர் நாயகம் போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா, உகண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும், பிரான்ஸ், சுவீடன் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டன.

 

இஸ்ரேலுக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.