20

20

இந்தியாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட 18 ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் – இருவர் கைது !

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) காலை மன்னாரில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18 ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை ஏமாற்றிவிட்டார். அவரை நான் சந்திக்க மாட்டேன்” – க.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவருடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். எனது முடிவை அதிபருக்கு தெரிவிக்கவும் – என்றுள்ளது.

 

13வது திருத்தச் சட்டத்தை

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் அதிபரால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் !

2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“2022ஆம் ஆண்டில், இணையவழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் தொடர்பில் 146,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

 

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றது.

 

இதனை தடுப்பதற்காக பராமரிக்கப்படும் சர்வதேச தரவு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

நபரொருவர் சமூக ஊடகங்களில் அல்லது இணைய தளத்தில் சிறுவர்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளியை பதிவிடுதல், பகிர்தல் அல்லது பார்வையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவாராயின் அது குறித்த தகவல் விடயத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்பட்டு, குறித்த தரவு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும்

பின்னர் குறித்த தரவு அமைப்பினால், அவ்வாறான தகவல் அடங்கிய விபரங்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பப்படும்.

 

இந்த தரவு அமைப்பின் ஊடாக இலங்கைக்கும் இது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் கைது !

அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் அநுராதபுரம் – ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

மேலும் மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் குறித்த மாணவரிடம் இருந்து 11 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட லேகியப் பொதிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

அதனை அடுத்து மாணவனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனார்.