12

12

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுங்கள் – நாடாளுமன்றில் இரா. சாணக்கியன் கோரிக்கை !

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி அதில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனை  நீங்கள் துரிதப்படுத்தி தரவேண்டும் .

அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம். அதே போல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அவ் ஊர் மக்கள் மலசலம் அமைப்பதக்காக கேட்கின்றார்கள்.

இவற்றினையும் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றன. இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.

நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இவ் காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் காணப்படும் என்பதனை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மின்சார உற்பத்தி குறித்து பகிரங்கப்படுத்துங்கள் – அனுரகுமார திசாநாயக்க

கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்வது குறித்து முழுமையான விளக்கத்தினை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி பூநகரி குளத்திலிருந்து 700 மெகாவொட் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மின்உற்பத்தியை மேற்கொண்டு நமக்கு மின்சாரம் வழங்குவதற்காக நாம் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாம் கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் பெறுமதி எவ்வளவு என்பதை அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன். இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக ஒரு அலகு மின்சாரத்தின் பெறுமதி 50 ரூபாவாகும்.

சூரிய மின் உற்பத்தி நாட்டில் அதிகாரித்தால் மின்சார கட்டணங்கள் குறைவடையும் என்ற பாரிய எதிர்பார்ப்பு ஒன்று நம் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. ஆகவே இது தொடர்பில் தெளிவுப்படுத்துங்கள். அதேநேரம் இவற்றுக்கு வெளிப்படையான விலைமனுக்கோரல்கள் முன்வைக்கப்படுவதில்லை.

அனைத்தும் மறைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தை நடாத்த நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா செலவு !

பாராளுமன்றத்தை நடத்த ஒரு நாளைக்கு   ஒரு கோடி ரூபா  செலவிடப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே  ஞாயிற்றுக்கிழமை விவாதத்தை  ”கூட்ட நடப்பெண்” கோரி இடைநிறுத்தியதாக  அரச தரப்பின் பிரதம கொறடாவும்  அமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க  குற்றம்சாட்டினார்.

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய  முன்னெடுக்கப்படும் – Presidential Secretariat of Sri Lanka

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த  கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

டிசம்பர் 20ஆம் திகதி திங்கட்கிழமை சபை நடவடிக்கைகளின் அறிக்கை என்னிடம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக்கிழமை வற் வரி சட்டமூலம் மீதான பாராளுமன்ற  விவாதம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தை நடத்த ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா  செலவிடப்படுகிறது. ஆனால் இந்த விவாதத்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் விவாதத்தை நடத்த விரும்பினோம்.

பாராளுமன்ற ஊழியர்கள்   தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இது எளிதானது அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இந்த விவாதத்தை முறியடித்தன.

அதனால் தான் அவர்கள் ”நடப்பெண்” கோரினார்கள்   எதிர்க்கட்சியினர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர் என்றார்.

இதன்போது எழுந்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  பிரசன்ன ரணதுங்க  சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துகிறார்.

தெரிவுக்  குழுவின் போது விவாதத்தை நடத்துவது எதிர்க்கட்சியின் பொறுப்பு. ஆனால் ஞாயிற்றுக்கிழமை  குழுநிலை நிகழ்வு அல்ல என்றார்.

மீண்டும் எழுந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ,  எதிர்க்கட்சித் தலைவருக்கு புத்தி சாதுர்யம் இல்லை என மக்கள் கூறுகின்றனர்.

நான் அதை ஏற்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுத்தான் ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் விவாதம் நடத்துவோம் என்று தான் நாங்கள் சொன்னோம் என்றார்.

இதன்போது சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன, தயவுசெய்து இந்த விவாதத்தை நிறுத்துங்கள். இன்றும் நேரத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள் என்றார்.

மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பேசுவதற்கு உரிமை உண்டு. எங்களுக்கும் பதில் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல் வரான , அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   இந்த குழுநிலையில் எதிர்க்கட்சிகளுக்கு நேரம் கிடைக்கும். அது  குறையாது. அது முடிந்தவுடன், ஞாயிற்றுக்கிழமையின்  மீதி நேரம்   எடுக்கப்படும்  என்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் !

யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் டொலர் பங்கான நிதி அனுசரணையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலைமனு கோரப்பட்டுள்ளது.

அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை சோலார் க்ளீன் எனர்ஜி கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்களுக்கு வரி விலக்கு – அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன

பெறுமதி சேர் வரி பூச்சியத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவில்லை. 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படுகிறது. இது தொடர்பில் போலியான செய்திகள் பகிரப்படுகின்றன. மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (12)  இடம்பெற்றபோது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய 15 சதவீதமாகக் காணப்பட்ட வற் வரி 3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. வற் வரி தொடர்பில் போலியான தகவல்கள் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பரப்பப்படுகின்றன.

வரவு மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையிலேயே இம்முறை வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அரசாங்கத்தை நிர்வகித்துச் செல்ல முடியாது. யார் ஆட்சியைப் பொறுப்பேற்றாலும் இரு வாரங்களுக்கு மேல் அவர்களால் ஆட்சியைக் கொண்டு செல்லவும் முடியாது.

இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் என்பவை எமக்கு கடன் சலுகைகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வற் வரியை குறைக்க முடியும். அதற்கமைய முடிந்தளவு மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்றார்.