22

22

”வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு நாட்டை எழுதிக்கொடுத்தது ” – மஹிந்தானந்த அழுத்தகமே

20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு இன்று(22.09.2020) எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய மஹிந்தானந்த அழுத்தகமே ”வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு நாட்டை எழுதிக்கொடுத்தது” என குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டா- மஹிந்த ஆட்சி காலத்தில் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது.

2015 இல் வெற்றி பெற்று, எமது இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முற்பட்டீர்கள். அரச சொத்துக்களை விற்றீர்கள். இதனைத் தான் நீங்கள் கடந்த காலத்தில் செய்தீர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஆடை விவகாரத்தால் பாராளுமன்றை விட்டு வெளியேறிய அதாவுல்லா !

தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை, எந்த வகையிலும் பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக சக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து தாம் வெளியேறுவதாக அறிவித்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா | Puthithu

எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு , போராட்டங்களுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் சமர்ப்பிப்பு !

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு தயாரித்த அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் குறித்த திருத்தச் சட்ட வரைவு இன்று பிற்பகல் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை அதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உடனடியாக 20ஆவது திருத்த வரைவை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, எதிர்க்கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்கு நடுவே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், திருத்த வரைவு வாபஸ் பெறப்படவில்லை.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்தத் திருத்த வரைவுக்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின்போது முன்வைக்கப்படவுள்ளன. இதையடுத்து அந்தச் திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

1 15 4

இதேவேளை, 20ஆவது திருத்த  வரைவு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்மூலம் 20ஆவது திருத்தச் சட்ட வரைவின் அரசமைப்பு ரீதியான செல்லுப்படித் தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும்.

அதிகரிக்கும் உலகின் வெப்பநிலை – உருகும் பனிப்பாறைகளால் ஏற்படவுள்ள அபாயம் !

பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலக கடல் மட்ட உயர்வுகளில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. கிரிலாந்தில் 2000-ம் ஆண்டு முதல் 2100-ம் ஆண்டுக்குள் இடையில் உலக கடல் மட்ட உயர்வு 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும் அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை  || Global Sea Levels to Rise Drastically by 2100 due to Greenland,  Antarctica's melting ice Sheetsவெப்ப மயமாதலால் காற்று வெப்ப நிலையுடன் பனிக்கட்டிகளின் மேற்பரப்பு உருகும் மற்றும் கடும் வெப்ப நிலை வெப்ப மயமாக்குவதால் கடலில் பனிப்பாறைகள் உருகுகின்றன. கிரிலாந்தின் பனிக்கட்டிகள் கடல் மட்ட உயர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

மேலும் மேற்கில் சூடான கடல் நீரோட்டங்கள் பெரிதாக மிதக்கும் பனிக்கட்டிகளின் அடிப்பகுதியை அழிக்கின்றன. இதனால் நீர் இழப்பு ஏற்படுகிறது. கிழக்கு அண்டார்டிகா கடல் அடர்ந்த பனிக்கட்டிகளை பெறக்கூடும். ஏனெனில் வெப்ப நிலை அதிகரித்து பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது. எனவே அண்டார்டிகா பனிக்கட்டிகளில் இருந்து பனி இழப்பை கணிப்பது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பல்லோ பல்கலைக்கழகத்தின் திட்ட தலைவர் நோவிக்கி கூறும் போது, பனிக்கட்டிகள் எவ்வளவு உருகும் என்பதை பொறுத்துதான் எதிர் காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பது தெரியவரும் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது !

அண்மையில் வெள்ளை மாளிக்கைக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியமை தொடர்பாக வெள்ளைமாளிகைப்பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்றபட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கடிதத்தை அனுப்பிய  பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “ வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடித்தத்தை அனுப்பிய பெண் அமெரிக்கா-கனடா எல்லை அருகே கைது செய்யப்பட்டார். அந்த பெண் கையில் துப்பாக்கி வைத்திருந்தார். தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு ரைசின் எனும் விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் ஒன்று வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே வழக்கமான சோதனையில் கடிதத்தில் விஷம் தடவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரணமாக பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

”20ஆம் திருத்தத்தின் மூலம் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தருவார்கள்” – அரசை எச்சரிக்கிறார் ருவன் விஜேவர்தன!

20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் இரட்டைக்குடியுரிமையை பயன்படுத்தி  எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன  எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்  இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆம் திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ருவன் விஜேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரட்டைக் குடியுரிமையுடைய ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வாய்ப்பை அரசாங்கம் அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கான காரணம் என்ன? இதனூடாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் வடக்கு- கிழக்கிற்கு வந்து இனவாதத்தைப் பரப்பி, அதிகாரபீடத்திற்கு வருவார்களாயின், அதற்கு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேபோன்று 20ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையையும் இல்லாமல் செய்வதற்கு தயாராகியிருக்கிறார்கள் . ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக ஐந்து வருட காலத்திற்கு ஜனாதிபதியொருவரும் பொதுத்தேர்தலின் ஊடாக ஐந்து வருட காலத்திற்கு நாடாளுமன்றம் நியமிக்கப்படுவதை மறந்துவிட்டு, ஜனநாயகத்தை முற்றிலும் புறந்தள்ளி அனைத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவர் தான் விரும்பியவாறு நிர்வகிக்கக்கூடியவாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அமைச்சரவைக்கு அதிகளவானோர் நியமிக்கப்படுவதன் காரணமாக ஏற்படக்கூடிய வீண்செலவுகள், முகாமைத்துவ சிக்கல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே 19 வது திருத்தத்தின் மூலமாக அமைச்சரவை அமைச்சர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டது.

எனினும் அதனையும் நீக்கும் வகையிலான திருத்தத்தை சமர்ப்பித்திருப்பதன் ஊடாக பலருக்கும் வெவ்வேறு வரப்பிரசாதங்களுடன் கூடிய அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொடுத்து, தமது அணியைப் பலப்படுத்திக்கொள்வதையே இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந்நிலையில் அரசியலமைப்பிற்கான 20ஆவது திருத்தம், ஒட்டுமொத்தமாக நாட்டை சீரழிப்பதாகவே அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”20 வது திருத்தத்தை நிறைவேற்றி கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்து வருகின்ற அவசரம் ஆச்சரியம் அளிக்கின்றது” – கரு ஜயசூரிய

அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அது குறித்த கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்கால தோல்விக்கு வழிவகுப்பதுடன் அதனை உருவாக்கியவர்களையே அது பிரதிநிதித்துவப்படுத்தும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் அவசரம் காண்பிக்கக்கூடாது என்றும், முதலில் அந்த யோசனை விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அது மாத்திரமன்றி 19 வது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்புக்கள் 20 வது திருத்தத்தின் மூலம் நீக்கப்படுவது குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தங்களின் உருவாக்கம் என்பது அதனுடன் தொடர்புடைய தரப்பினர் மத்தியில் பொறுமையையும் பணிவையும் உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டிய மிகவும் கடினமானதொரு கலந்தாராய்வு செயன்முறையாகும் என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

அது மாத்திரமன்றி அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அதனை முன்நிறுத்திய கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்கால தோல்விக்கு வழிவகுப்பதுடன் அதனை உருவாக்கியவர்களையே அது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றி கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்து வருகின்ற அவசரம் ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அச்சுறுத்தும் கொரோனா. – 10லட்சத்தை நெருங்கும் உலகின் கொரோனா உயிர்ப்பலி !

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரத்து 62 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 7 ஆயிரத்து 885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 688 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,04,475
பிரேசில் – 1,37,350
இந்தியா – 87,882
மெக்சிகோ – 73,493
இங்கிலாந்து – 41,788
இத்தாலி – 35,724
பெரு – 31,369
பிரான்ஸ் – 31,338
ஸ்பெயின் – 30,663
ஈரான் – 24,478
கொலம்பியா – 24,397

”இங்கிலாந்தில் கொரோனா பலியும், பாதிப்பும் அதிக வேகத்தில் பல மடங்கு உயரக்கூடும்” – எச்சரிக்கிறார் நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர்!

பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,899 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,94,257 ஆக உயர்ந்தது. சாவு எண்ணிக்கையும் 41,777 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் இங்கிலாந்து தவறான திசையில் செல்வதாகவும், அங்கு அடுத்த மாதத்துக்குள் 50 ஆயிரம் புதிய பாதிப்பை பார்க்க முடியும் என நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வல்லன்சுடன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஒப்பீட்டளவில் என்றாலும் சமீபத்தில் நாம் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இது தொடர்ந்தால் கொரோனா பலியும், பாதிப்பும் அதிக வேகத்தில் பல மடங்கு உயரக்கூடும். மற்ற நாடுகளில் பார்க்கும் பாதிப்பு தற்போது இங்கிலாந்திலும் இருக்கிறது’ என்று கூறினார்.

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தலைமை மருத்துவ அதிகாரியின் இந்த எச்சரிக்கை அரசுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலி ஓபின் டென்னிஸில் மகுடம் சூடினர் நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹாலெப் !

இத்தாலி ஓபின் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார்.

இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.

இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை

இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.