12

12

“ராஜபக்ஷ அரசினுடைய நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன” – கலாநிதி குணதாஸ அமரசேகர

தவறுகளை ராஜபக்ச அரசு உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது:-

“பல்வேறு எதிர்பார்ப்புக்களை கொண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், இந்த அரசு தற்போது முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிப்பவையாக அமைகின்றன. குறிப்பாக அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் குறிப்பிட வேண்டும்.

நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பொருந்தும் விதத்தில் அரசமைப்பைத் திருத்தம் செய்ய வேண்டுமே தவிர இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்களுக்குச் சாதகமாக அமையும் விதத்தில் ஏற்பாடுகள் கொண்டுவரக் கூடாது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய பல விடயங்கள் காணப்பட்டாலும், புறக்கணிக்கும் பல ஏற்பாடுகளும் காணப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“குட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக வழங்கப்படாத அனுமதி மரணதண்டனை கைதி ஜயசேகரவுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது…? – பாராளுமன்றில் சஜித் கேள்வி.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், 1982 ஆம் ஆண்டில் ‘ரெலோ’ அமைப்பின் தலைவரான குட்டிமணி என்ற செல்வராஜா யோகச்சந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராகக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அப்போதைய சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசமைப்பின் 89 மற்றும் 91ஆம் உறுப்புரைகளை காட்டி அவரின் எம்.பி. பதவி நிராகரிக்கப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே அவருக்கு பதவி நிராகரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த பிரேமலால் ஜயசேகர எம்.பியாகியுள்ளார்.
அப்படியாயின் தற்போதைய சபாநாயகர் அரசமைப்பை மீறி நடந்துகொண்டுள்ளார் என்றே அர்த்தப்படும்” – என்றார்.

20வது திருத்தம், மரண தண்டனை கைதியின் பாராளுமன்ற பிரவேசம் போன்ற கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில்!

19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதே 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, இதன் முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், பிரேமலால் ஜயசேக்கர எம்.பியின் விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி, கரு ஜயசூரிய, தலதா அத்துகோரள, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையே தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் மேன் முறையீட்டு நீதிபதியையும் நியமித்தது என்றும் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெ ளியிட்டார்.

20 ஆவது சீர்திருத்தம் மற்றும் பிரேமலால் ஜயசேக்கர எம்.பி பற்றிய விடயங்களுக்கு ஜனாதிபதி இதன் போது (நேற்று முன்தினம்) பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் பேசும் போது, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கம் 19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதாகும். அனைத்தையும் ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

19ஆவது சீர்திருத்தத்தின் சில விடயங்களை அவ்வாறே வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும். பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்க்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லையென்று குறிப்பிட்டார்.

தலையீடு செய்வதாயின் உயர் நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டி இருந்தது.

அவ்வாறானதொரு விடயம் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை அரசியலமைப்பு பேரவையே நியமித்தது. எதிர்க்கட்சி பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை” – மேஐர் ஜெனரல் செனரத் பண்டார

யாழ்ப்பாணத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பானம் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன்முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன் சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக பதவியேற்றபின் இன்றைய தினம் முதன் முதலாக விஜயம் மேற்கொண்டு இந்த இந்து மதகுருவிடம் ஆசியினைப் பெற்றுள்ளேன்.

ராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி லோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துதலாகும் இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

இராணுவமானது எப்போது அதாவது குறிப்பாக யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அத்தோடு இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை இராணுவம் செயற்படுத்தும் அத்தோடு எமது பிரதேசத்தில் சமாதானம் முக்கியமானது இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள் தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம் இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்கு இடமில்லை.

ஆகவே நான் இராணுவ கட்டளைத் தளபதிஎன்ற வகையில் யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன். அத்தோடு மக்களை சந்தோஷமாக வாழ்வதற்கு உரிய வழிவகை நான் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.86 கோடியை தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.86 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.16 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.05 கோடியைக் கடந்துள்ளது.

“தமிழ் மக்களின் மனங்களில் அமைதியையும் மகிழ்வையும் ஏற்படுத்துங்கள். இனவாதத்ததைம் மதவாதத்தையும் ஏற்படுத்தாதீர்கள்” – சி.வி.விக்னேஸ்வரனிடம் டயனா கமகே வேண்டுகோள்!

“தமிழ் மக்களின் மனங்களில் அமைதியையும் மகிழ்வையும் ஏற்படுத்துங்கள். இனவாதத்ததைம் மதவாதத்தையும் ஏற்படுத்தாதீர்கள்” என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போதே டயனா கமகே இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கு வேண்டுகோளை விடுத்தார்.

அவர் அதன்போது தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் படும் துன்பங்களை அவதானித்துள்ளேன்.வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் மிகவும் இனவாத , மத வாத பேதத்துடன் பேசுவதை கடந்த காலங்களில் அவதானித்தோம். அவருக்கு கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் எமக்கு இல்லாமல் போன ஆறுமுகன் தொண்டமானின் புத்தகத்தில் பக்கமொன்றை எடுங்கள். அவர் அவரின் மக்களுக்காக சேவை செய்வதற்காக ஜனநாயகத்தை தெரிவு செய்த சிறந்த நபராகும்.

வடக்கு மக்களுக்கு வவுனியா தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் இணைந்து பணியாற்றியுள்ளேன். வடக்கு கிழக்கிற்கும் நான் யுத்தத்தின் பின்னர் சென்றுள்ளேன். சுதந்திரமடைந்து 73 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதில் 43 வருடங்களை மாத்திரமே அனுபவித்தோம். மிகுதி 30 வருடங்களையும் கொடும் யுத்தத்திலேயே கழித்தோம்.

நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழ் மக்களுக்கு யுத்த மனநிலை அவசியமில்லை. இனவாதம் , மதவாதம் அவசியமில்லை. இது ஒருமித்த நாடு, இலங்கையர் என்ற ரீதியில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறான நிலைப்பாட்டிலேயே ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டார். அவர் சமாதானம் , நல்லிணக்கத்துடனேயே செயற்பட விரும்பினார்.

இந்நிலையில் விக்கேனஸ்வரனுக்கு சொல்ல விரும்புவது, நீங்கள் இந்த இடத்திற்கு மக்களின் வாக்குகளை பெற்று வந்துள்ளமையானது அந்த மக்களுக்காக வேலை செய்வதற்கே ஆகும். அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் , அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியையும் , நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே உங்களின் கடமையாகும். அதனை விடுத்து இனவாதம் , மத வாதத்தை அந்த மக்களின் மனங்களில் உருவாக்கி பெற்றுள்ள அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம். நாங்கள் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார். ”

மருத்துவக்கழிவுகளை செம்மணி பகுதியில் கொட்டுவதை கண்டித்து மக்கள் போராட்டம்!

செம்மணி சிந்துபாத்தி இந்துமயானத்தின் பகுதிகளில் மருத்துவக்கழிவுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் ,யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் நேரில் வந்து உண்மை நிலையை ஆராய்ந்துள்ளார்கள்.

குறித்த மாயான பகுதியில் பெரிய குழிகள் தோண்டப்பட்டு மருத்து கழிவுகள் நிரப்பப்பட்டிருப்பதையும் காணக்கூடியவாறு உள்ளது. இதனை மக்கள் கண்டித்து தங்களுடைய எதிர்ப்பை நேற்றையதினம் காட்டினர். இதனை தொடர்ந்து நல்லூர் பிரதேச சபை, யாழ்.மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தோருமாக இணைந்து ஏ9 வீதியை மறைத்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மருத்துவக் கழிவுகளை சட்டத்துக்குப் புறம்பாகக் கொட்டுவதைக் கண்டித்து  யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம் | Muthalvan News

 

 

பொலிஸார் அங்கு வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து சட்ட ரீதியாக இதற்கு முடிவெடுக்க வேண்டும் என வருகை தந்தோரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான மருத்துவ முறைகளிற்குட்பட்டு மருத்துவக் கழிகள் அழிக்கப்படாது போனால் அது எமது மண்ணை பேராபத்தை நோக்கி தள்ளும் என்பதில் சந்தேகமேயில்லை. இது தொடர்பாக வேகமாக ஒரு முடிவு எட்டப்படாது விடின் நிலை பன்மடங்கு மோசமாக வாய்ப்புள்ளது.

“தேவையானால் அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும் ‘ – சரத் பொன்சேகா

“தேவையானால் சபாநாயகர் தூக்கு மேடையை பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்து பொருத்தி சபாநாயகர் அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும்“  என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது,

தற்போதைய நிலவரத்துக்கு அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும் எனவும், அதேவேளை 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போகும் விதத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்பதால் 20 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம் எனவும், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இது 19 ஆவது திருத்தச் சட்டத்தின் தவறல்ல.
அன்றைய தலைவர்களாக இருந்த ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரின் பலவீனம் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போனது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரிமாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு !

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரில் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் கனடாவிலுள்ள முதலீட்டாளர்களான சுகந்தன், சண்முகநாதன் மற்றும் சதீஸ் இராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய இந்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்வாங்கியதற்காக பிரதமர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். தற்போது நாட்டிலுள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்குள்ள மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்தார்.

‘ஆறுமுகம் தொண்டமான், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டார்” – மஹிந்த ராஜபக்ஷ

நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான் செயற்பட்டார்  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்  நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெற்றது.

இதன்போது, குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகம் தொண்டமானை நினைவுகூறும்போது சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.

அதனால் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கும் போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.

1964ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பாட்டனாரின் வழியில் சென்று ஆறுமுகம் தொண்டமான், 1985ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினூடாக தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர் 26 வருட காலங்கள் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் பாக்கியத்தை கொண்டிருந்தார்.

1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அக்கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்ட ஆறுமுகம் தொண்டமான் தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக, சம்பள உயர்விற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவராவார். குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகம் தொண்டமான்,  தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது.

ஆறுமுகம் தொண்டமான், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான்,  பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார். சம்பளத்திற்கான போராட்டங்களின் போது மட்டுமன்றி தோட்ட வீடமைப்பு, சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளல், வைத்தியசாலை, நெடுஞ்சாலை, மின்சாரம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகமொன்றை பெற்றுக் கொள்வது வரை பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு மாறுபட்ட அரசியல் நோக்கை அவர் கொண்டிருந்தார்.

அதேபோன்று ஆறுமுகம் தொண்டமான், நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார். இன, மத, சாதி பாகுபாடின்றி செயற்பட்ட அவர் எப்போதும் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மதிப்பளித்தார். பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எம்மை கைவிடாத அவர் அரசியலில் நம்பிக்கைக்குரிய நண்பராவார்.

இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவருக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளதாக நான் இந்த வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் அவரது பூட்டனாரின் வழியில் சென்று பெருந்தோட்ட மக்களுக்கும்,நாட்டிற்கும் சேவையாற்றுவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.