05

05

கிளிநொச்சி, முல்லை, பூநகரி, பரந்தனில் சுதந்திர தின நிகழ்வுகள்

kilimullai.jpgஇலங்கையின் 61வது சுதந்திர தின வைபவங்கள் வன்னி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்றுக் காலை கொண்டாடப்பட்டது.

புலிகளின் பிடியிலிருந்து அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பூநகரி, மற்றும் ஆனையிறவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடியுள்ளனர். பூநகரி சந்தியில் படையினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சமாதான பூங்காவையும் ஞாபகச்சின்னமாக அமைக்கப்பட்டுள்ள வெண்புறாவைக் கொண்ட நினைவுத் தூபியையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு திறந்து வைத்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை அணிவகுப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

கிளிநொச்சி, முல்லை அரச ஊழியர்கள் செட்டிகுளம் பிரதேச செயலகத்துடன் இணைப்பு

risard.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் உடனடியாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு தற்காலிக கடமைக்கு செல்லுமாறு மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் கேட்டுள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள அனைத்து அரச அலுவலர்களும் செட்டிகுளம் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட மகாநாட்டில் தெரிவித்தார்.

398 சிவிலியன்கள் இராணுவத்திடம் நேற்று தஞ்சம்

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த 398 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஓமந்தை மற்றும் சாலைக்கு மேற்கு பிரதேசங்களை நோக்கி மூன்று கட்டங்களாக 398 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சாலைக்கு மேற்கே உள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 92 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 32 பெண்களும், 30 ஆண்களும், 30 பிள்ளைகளும் அடங்குவர். இதேவேளை, மேலும் 15 பேர் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர். இதேவேளை, ஓமந்தை சோதனைச் சாவடியை நோக்கி 23 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 22 பெண்கள், 20 ஆண்கள், 23 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களும் இவர்களில் அடங்குவர்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள 184 சிவிலியன்களும் வழக்கமான விசாரணைகளுக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணை அமைப்பு

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக உலகநாடுகளுடன் தொடர்புகொள்ள இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணை அமைப்பு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும், அதிகாரப்பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட; தமிழ்நாட்டில் திமுக செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட; இப்போது அமைக்கப் பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கு துணை அமைப்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கு தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அமைப்பாளராக இருப்பார். தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயலாளர்களாக இருந்து இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு நாடுகளில் உள்ள ஆர்வலர்களோடு தொடர்புகொண்டு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதியரசர்கள் மோகன், பி.ஆர். கோகுல கிருஷ்ணன், பாஸ்கரன், சிவசுப்ரமணியம், ஏ.கே.இராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆகியோர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்த அமைப்பு எண்.24, காந்தி மண்டபம் ரோடு, கோட்டூர்புரம், அடையார், சென்னை 600 085, தென்னிந்தியா என்ற முகவரியில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக சாதனையை சமப்படுத்தியுள்ள முத்தையா முரளிதரன்

muttaih_muralitharan.jpgஇலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் பெற்ற 502 விக்கெட்டுகளை நேற்று முன்தினம் இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ்சிங்கின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் 502 விக்கெட் சாதனையை சமப்படுத்தியுள்ளார். முத்தையா முரளிதரன் குறைந்த போட்டிகளில் பங்கு பற்றியே இவ் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்திற்காக இனவாதம், மதவாதத்தை தூண்டிவிடக் கூடாது – எஸ்.பி.திஸாநாயக்க

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தை பெறமுடியும். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளால் நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் வாதிகளும் குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மை சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பீ.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நானுஓயா காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ஐ.தே.கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

வடக்கு மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள அதிகாரப் பகிர்வு கேட்டுவந்தனர். அதை வழங்க எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் அதிகாரப் பகிர்வை வழங்க முன் வந்தனர். ஆனால் அன்றிருந்த ஒரு சில பிற்போக்கு மதகுருமார்கள் தடுத்தனர். 1957 ஆம் ஆண்டு அமரர் பண்டார நாயக்கவினால் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் கூட இன்று இருக்கின்ற பிரதேச சபைக்குள்ள அதிகாரங்கள் கூட அன்று இருக்கவில்லை.

1967 ஆம் ஆண்டில் அமரர் டட்லி சேனாநாயக்க கொண்டுவந்த அரசியல் சட்டத்திலும் இன்று நகரசபைகளுக்குள்ள அதிகாரங்கள் கூட அன்று இருக்கவில்லை. இந்நாட்டில் தொடர்ந்து அதிகார பகிர்வு இல்லாததால் தனிநாடு கேட்டு வடக்கில் தற்கொலைக் குண்டுதாரிகள் உருவாகினார்கள். இதனாலேயே இன்று இந்நாடு யுத்தத்தால் அழிந்து கொண்டிருக்கின்றது. இன்று இந்நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர்கள் வாழுகின்றனர். அவர்களுக்குள்ள உரிமைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். அப்போது தான் நாடு பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழமுடியும்.

இன்று மலையக பெருந்தோட்ட மக்கள் துன்பம், துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களை வழிநடத்தும் தலைவர்கள் அரசாங்கத்துக்கு அடிமைகளாக இருப்பதால் இம்மக்களின் பிரச்சினைகளை தட்டிக் கேட்டு தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறினார்.

“பெருந்தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்’

Estate Workersபெருந் தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை கீழ் மட்ட அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும் என்று பிரிடோ வெளிக்கள இணைப்பதிகாரி எஸ். கே. சந்திரசேகரன் தெரிவித்தார். பிரிடோ பணியாளர்களுக்காக அட்டன் பிரிடோ பணிமனையில் பிரிடோ தலைவர் மைக்கல் ஜோக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; அனைத்துலக தேயிலை தினத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான கருப் பொருள் பெருந்தோட்ட பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவது என்பதாகவும் அந்த நோக்கத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வருட தேயிலைதினத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நோக்கங்களை அடைய தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அத்தீர்மானங்கள் வெற்றுத் தீர்மானங்களாக இருக்குமேயன்றி மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை.

அதேவேளை, தங்களால் அந்த பொறுப்புகளை திறமையாக நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியிலும் நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அவசியமாகும். இதற்காக முக்கியமான முதற்கட்ட நடவடிக்கை பெண்களை பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கீழ் மட்ட அதிகார அமைப்புகள் நிர்வாக பொறுப்புகளில் நியமிப்பதாகும். பெருந்தோட்டங்களில் கோயில் நிர்வாக சபைகள், முன்பள்ளி அபிவிருத்தி சபைகள்,தொழிற்சங்க அமைப்புகள், மரண உதவி சங்கங்கள் என்பன போன்ற அதிகாரத்தை பிரயோகிக்கும் எல்லா அமைப்புகளுக்கும் பெண்கள் நியமிக்கப்படவேண்டும்.

அரச பாடசாலை அபிவிருத்தி சபைகளிலும் நிர்வாக குழுக்களில் பெண்கள் நியமிக்கப்படவேண்டும். முதலில் இவ்வாறான அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் சமூக அங்கீகாரம் பெற உதவுதல் வேண்டும். இந்த முதற் படியை அடைய பெண்களுக்கு உதவி செய்யாமல் பெண்கள் தலைமைத்துவ மேம்பாடு பற்றி பேசுவதில் அர்த்தமில்ல