கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் உடனடியாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு தற்காலிக கடமைக்கு செல்லுமாறு மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் கேட்டுள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள அனைத்து அரச அலுவலர்களும் செட்டிகுளம் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட மகாநாட்டில் தெரிவித்தார்.