2009

2009

ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி

kanagaratnam.jpgயுத்த பிரதேசத்தில் இருந்தபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரெத்தினம் குடும்ப சகிதம் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பதாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தினார்.

இவரை விடுவிப்பது குறித்து தான் வன்னி இராணுவ தளபதியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.  இதற்கிடையில், புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை பொறுப்பாளர். கொள்கை முன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளர் பொருளாதார துறை பொறுப்பாளர் முன்னாள் சர்வதேச பேச்சாளர் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட புலி உறுப்பினர்கள் வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுதந்திர பறவைகள் அமைப்பினைச் சேர்ந்த பெண் புலி உறுப்பினர்கள் பலரும் படைத்தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவித்தனர்.நேற்று புதன்கிழமை வவுனியாவில் 90 சதவீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கிடந்தன.

அத்துருகிரியவில் கிளேமோர் குண்டுகள்,செய்மதி தொ.பேசிகள் மீட்பு

claymore.jpgஅத்துரு கிரிய வீடொன்றிலிருந்து கிளேமோர் குண்டுகள், செய்மதி தொலைபேசி, டெடனேட்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொழும்பு, அத்துருகிரிய சுமன மாவத்தையிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கிளேமோர் குண்டுகள், இரண்டு கைக்குண்டுகள், 4 டெடனேட்டர்கள், ரிமோட் கண்ரோல் ஒன்று, செய்மதி தொலைபேசியொன்று என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ். எஸ். பி. ரஞ்ஜித் குணசேக்கர தெரிவித்தார்.

தற்போது புலனாய்வுப் பிரிவில் தடுத்துவைக்கப்பட் டுள்ள சந்தேக நபர் ஒருவர்வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். குறிப்பிட்ட வீட்டில் தற்போது எவரும் இல்லாத நிலையில் வீடு மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடல்கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

அடுத்து வரும் சில தினங்களுக்கு மன்னார் குடா முதல் மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பு கொந்தளிப் பாக இருக்குமென்பதால் இந்த நாட்களில் கடலுக் குச் செல்லுவதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது என்று வானிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்தது.

இக் காலப் பகுதியில் கடல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இது சில சமயம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க முடியும் என்றும் அந் நிலையம் குறிப்பிட்டிருக்கி ன்றது.

தற்போது தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ள தால் மன்னார் குடா, வட மேற்கு, மேற்கு, தெற்கு, தென் கிழக்கு கடற்பரப்பு அடுத்துவரும் சில தினங்க ளுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவில் ஆறு தமிழ் மக்களின் 168 மணித்தியால பட்டினி போராட்டம் நிறைவுபெற்றது

uk000000.jpgகடந்த 7 நாட்களாக பட்டினி போராட்டத்தை மேற்கொண்ட 2 பெண்கள் உட்பட ஆறு தமிழ் மக்களின் உண்ணாநிலை போராட்டத்தை நேற்று இரவு 7 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் பழச்சாறு கொடுத்து நிறைவுசெய்தார். அவர்களில் ஒருவரான நிமலன் கருத்து தெரிவிக்கையில்

“ அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களால் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்று தர முடியும். ஆகவே ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரும் பிரித்தானிய நோக்கியும், கனடாவில் வாழ்பவர்கள் அமெரிக்கா நோக்கியும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தமிழரின் போராட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. நிச்சயம் ஒரு முடிவு காணும” என தெரிவித்துள்ளார்

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஏமாற்றுகிறது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டம் அதன் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* இலங்கையில் சிங்கள ராணுவத்தாக்குதல் காரணமாக 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடி வருகிறார்கள். பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் ராணுவத்தின் பிடியில் அவதிப்படுகிறார்கள்.

* போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.

* ஈழத் தமிழர்களை பாதுகாக்க, ஐ.நா. மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பு ஏற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடு களுக்கு திரும்ப வேண்டும்.

* போரில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, சிங்கள ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா. மன்றம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எழுச்சி பேரணி நடத்துவது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் விடுத்த கோரிக்கையினை அடுத்தே அரசாங்கம் குறித்த பரிசோதனையைச் செய்வதற்கான தீர்மானத்தினை எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

கனகரட்னம் குறித்து உண்மை நிலை என்ன?

kanagaratnam.jpg
முள்ளிவாய்க்கால் மோதல் பகுதியில் அகப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் பிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சதாசி்வம் கனகரட்னம் கடந்த ஒருவார காலத்துக்கு முன்னர் தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததுடன், அதன் பின்னர் அவருக்கும் தமக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தோனேசியாவில் விமான விபத்து-97 பேர் பலி

indo.jpgஇந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

அழகிரி, கனிமொழிக்கு மந்திரி பதவி?

alagiri.jpgமுதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சாலை போக்குவரத்து துறையும், மகள் கனிமொழிக்கு சுகாதாரத்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹெலன் டேவிட்சன் (கன்னியா குமரி), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை) ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் பேரன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது சந்தேகம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீவிரவாத ஒழிப்பில் இலங்கையை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது – அனுர பிரியதர்ஷன யாப்பா.

SL_Army_in_Final_Phaseமூன்று தசாப்தங்களாக நிலவிய தீவிரவாதத்தை  உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதளவுக்கு இலங்கை அரசு இரண்டரை வருடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என தகவல் ஊடகத்துறை அமைசச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்;.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார்  என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதிலும் அவரது கதை முடிந்து விட்டது. அவரது அமைப்பும் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் பிரபாகரனை நிராகரித்து விட்டனர் என்பதை இந்தியாவின் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கர்ட்டுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.