அத்துரு கிரிய வீடொன்றிலிருந்து கிளேமோர் குண்டுகள், செய்மதி தொலைபேசி, டெடனேட்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொழும்பு, அத்துருகிரிய சுமன மாவத்தையிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கிளேமோர் குண்டுகள், இரண்டு கைக்குண்டுகள், 4 டெடனேட்டர்கள், ரிமோட் கண்ரோல் ஒன்று, செய்மதி தொலைபேசியொன்று என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ். எஸ். பி. ரஞ்ஜித் குணசேக்கர தெரிவித்தார்.
தற்போது புலனாய்வுப் பிரிவில் தடுத்துவைக்கப்பட் டுள்ள சந்தேக நபர் ஒருவர்வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். குறிப்பிட்ட வீட்டில் தற்போது எவரும் இல்லாத நிலையில் வீடு மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.