14

14

வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் – கட்டாரிடம் லஞ்சம் பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவர் கைது !

மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கட்டார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

Eva Kylie, Vice President of the Council of Europe, was arrested. Qatari  cash hidden ~ News Directory 3

ஆனால் கட்டார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த நிலையில் கட்டார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்பட 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சுமாா் 6 லட்சம் யுரோ பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

“நிபந்தனைகள் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய நினைவேந்தலில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ரணில் விக்கிரமசிங்க ஒரு இனவாத கூட்டத்திற்கு கடமைப்பட்டிருக்கிநார் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர் ஒட்டுமொத்தமாக சிங்கள தேசத்தாலேயே நிராகரிக்கப்பட்டவர். அவருடைய பேச்சுவார்த்தையை நம்பி தமிழினம் சென்று ஒரு விட்டுக்கொடுப்பினைச்செய்தால் அது ஒரு நிரந்தர விட்டுக்கொடுப்பு.

அதிலிருந்து நாங்கள் மீளவே முடியதா அளவிற்குத்தான் நிலைமைகள் இருக்கின்றது. ஆகவே இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதால் தமிழினத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. மாறாக போராடிக்கொண்டிருக்கின்ற சிங்கள இனத்திற்கு, அவர்கள் நிராகரித்தவருக்கு நாங்கள் ஆதரவளிப்பதாக காட்டுவதாகவே இந்த நிலைமை அமைந்து விடுகிறது.

அதே போன்று ரணில் விக்கிரமசிங்க அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதாக இருந்தால் சிங்கள மக்கள் மட்டத்தில் மீண்டும் இனவாதத்தை கட்டியெழுப்பி, தான் சிங்கள மக்களின் காவலனாக வெளிக்காட்ட முனைவதே இவ்வாறான செயற்பாடுகளின் உள்நோக்காக இருக்கிறது.

இவ்வாறான ஒரு நேரத்தில் தமிழினத்திற்கு எற்தவிதமான சாதகமான நிலைப்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதென்பது இனத்தினுடைய நன்மைக்காகவா என்கின்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.

பேச்சுவாரத்தைக்கு போவதற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம் அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை.

முன்றாம்தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் பேசிக்கொண்டு பேச்சுவார்த்தையில் அவர்கள் வாயே திறக்கவில்லை என்பதையே இன்று ஊ்டகங்களுடைய தலைப்புச்செய்திகளும் வெளிப்படுத்தியிருக்கிறது.

பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அதைத்தவிர்த்த எங்களை விமர்சித்துக்கொண்டிருந்த ஊடகங்களே இன்று இதை வெளிப்படுத்தியிருக்கின்றன.
பேச்சுவார்த்தை மேசையில் நீங்கள் போய் அமர்ந்து கொள்வதனூடாகவே ரணிலுக்கான அங்கீகாரத்தை கொடுப்பதாக அமையும் என்பதை இவர்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் கூறினோம்.அவர் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்.

ஆகக்குறைந்தது அந்த அங்கீகாரத்தை கொடுப்பதாக இருந்தால் இனத்திற்காக கொள்ளை ரீதியிலாகவாவது எங்களுக்கொரு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய சூழலையாவது உருவாக்காமல் அந்த அதிகாரத்தை கொடுப்பதானது எதிர்காலத்தில் எங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் நிறையதடைவைகள் கூறியிருந்தோம்.

ஸ்ரீலங்கா அரசு பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்ற இந்த தருணத்தில் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு சென்றது இனத்திற்கும் இந்த தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம்.

இவ்வாறான தருணத்தில், தமிழ் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எந்த சந்தர்ப்பத்திலும் மேற்கொண்டுவருகி்ன்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் அதே பாதையிலேயே பயணிக்கும் என்பதோடு மக்கள் நலன் கருதாத எந்தவொரு இடத்திலேயும் எவருக்காகவேனும் எந்தவொரு விட்டுக்கொடுப்மையும் கொள்ளைகள் சார்ந்து மேற்கொள்ளப்போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் !

நுவரெலியாவில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கொட்டகலை நகரம் மற்றும் அதனை அண்மித்த தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலர், போதைப்பொருட்களை பாவித்து வருகின்றனர் என சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களால், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் வர்த்தக சங்கத்தினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையிலேயே மாணவர்களை பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை அமைத்து, அதன் ஊடாக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் நுவரெலியா மாவட்ட இணைப்பதிகாரி எஸ்.எஸ்.டபிள்யூ. விஜேரத்னவால், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுக்கு இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் இடங்களை அடையாளம் கண்டு, சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும், போதைக்கு அடிமையான மாணவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் எஸ்.எஸ்.டபிள்யூ. விஜேரத்ன கூறியுள்ளார்.

பாடசாலைக்குள் போதைப்பொருட்கள் உள்நுழைவதை முற்றாக தடுப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தினர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

பாடசாலை உபகரணங்களை அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை

பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அப்பியாசக் கொப்பிகளின் விலையை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தும் அதிக விலைக்கு அவற்றினதும் பாடசாலை உபகரணங்களினதும் விலைகளை மாற்றி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அப்பியாசக் கொப்பிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பெற்றோரிடமிருந்து பலமுறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை அவதானித்த நிலையிலேயே சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூபா 11 லட்சத்தை தாண்டிய இலங்கை தனிநபர் கடன் தொகை !

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாவாக இருந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின்படி, 2022 ஒகஸ்ட் மாத இறுதியில் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 24,69 பில்லியன் ரூபா அல்லது 24 டிரில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டுக் கடன் 13,119.4 பில்லியனும், வெளிநாட்டுக் கடன்கள் 11,574 பில்லியனும் அடங்கும்.

தனிநபர் கடன் சுமையின் கணக்கீடு வருடாந்த மொத்தக் கடனை சராசரி வருடாந்த சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. அதன்படி இந்நாட்டில் தனிநபர் கடன் சுமை 11 இலட்சத்து 14,551 ரூபாவாகும்.

இதேவேளை, அரசாங்கத்தின் வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் இன்று (13) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அத்துடன், இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம், ஏற்றுமதி வருமானத்தை கொண்டு வருவதற்கு முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கோரி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வலியுறுத்தியிருந்தது.

யுத்தத்தின் பின்னரும் மாற்றியமைக்கப்படாத பொருளாதார முறை சிக்கலுக்க காரணம் – ஜனாதிபதி ரணில்

யுத்தத்திற்கு பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலக கிண்ண கால்பந்து போட்டி 2022 – குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா !

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜென்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதியதால் களத்தில் சூடுபறந்தது.

இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்ஜன்ரீனா அணிதலைவர் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார்.

இதன்மூலம் போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து அனல் பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில் கோல் அடிக்க குரேஷியா அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் குரேஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்ரீனா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.

கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டை குடியுரிமை பெற்றவர் !

கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக அரசியலமைப்பு ரீதியாக நாடாளுமன்றத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது எனவும், தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக அவருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பான சட்ட விவகாரம் முடிந்தவுடன் சுரேன் ராகவனும் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.