13

13

உலக நாடுகளின் பொருளாதார தடைகளையும் தாண்டி ரஷ்யாவுடன் நட்பு பாராட்டும் சீனா !

ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்தமாக 11.67 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளதாக சீன சுங்கத் திணைக்கள தரவு காட்டுகிறது. சீனாவிற்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா உள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளை பலமுறை தொடர்ந்தும் சீனா விமர்சித்து வருகின்றது.

மேலும் குறித்த படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், சீனாவும் ரஷ்யாவும் வரம்பற்ற நட்பு ரீதியிலான இருநாட்டு உறவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமிக்ரோன் வைரஸ் வகைகள் !

தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமிக்ரோன் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமிக்ரோன் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில் “தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.

புதிய வைரஸ்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.

‘உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை’ – பைடன் சாடல்!

உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய அரசு சிறைகளில் அடைத்து உள்ளது என தெரிவித்தார்.
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று. எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை இனப்படுகொலை என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை என தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனியர் என்ற எண்ணத்தைக்கூட அழிக்க முயற்சிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் – மன்னிப்பு கேட்ட ஜோன்சன் !

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜோன்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதற்கிடையே, கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி பிரதமர் போரிஸ் ஜோன்சன், நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகியோருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், மது விருந்தில் பங்கேற்றதற்காக போலிசார் விதித்த அபராதத்தைச் செலுத்திவிட்டேன். விதிகளை மீறி மதுவிருந்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.