18

18

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை வெளியிட்ட சுகாதார அமைச்சகம் – கனடாவில் பெரும் பரபரப்பு !

கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால்  ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்தது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டது.

அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. இந்த வீடியோ பதிவை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கியூபெக் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் சுகாதார அமைச்சகத்தை கடுமையாக சாடியுள்ளனர். இன்னும் சிலர் ஆபாச பதிவு வீடியோவை பலருக்கும் பகிர்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து உஷாரான சுகாதார அமைச்சகம், அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் தனது தவறை உணர்ந்தது.

பின்னர் அந்த வீடியோ பதிவை நீக்கியது. இதற்காக கனடா அரசாங்கத்திடம் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சமூக ஊடக கணக்குகளை கையாளும் ஊழியர்களில் சிலர் ஆபாச வீடியோ உள்ளடக்கத்தை பார்ப்பதால், அவர்கள் இதுபோன்ற செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பகிரங்க மன்னிப்பு கடிதத்தில், ‘எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் பொருத்தமற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருகிறோம்.

தவறு நடந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இருந்தும் அமைச்சகத்தின் செக்ஸ் வீடியோ உள்ளடக்கம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதனை பலரும் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரான் எரிக்கப்பட்ட விவகாரம் – நான்காவது நாளாகவும் சுவீடனில் தொடரும் போராட்டங்கள் !

தீவிர வலதுசாரி, புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன.

நேற்று கிழக்கு நகரமான நோர்கோபிங்கில் கலவரக்காரர்கள் மீது பொலிஸார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Gallery

இந்த மோதலின் போது, பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் குறைந்தது 17பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமையன்று, தெற்கு நகரமான மால்மோவில் தீவிர வலதுசாரி பேரணியின் போது பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

முன்னதாக, ஈரான் மற்றும் ஈராக் அரசாங்கங்கள் சுவீடன் தூதர்களை வரவழைத்து, எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஸ்ட்ராம் குர்ஸ் அல்லது ஹார்ட் லைன் இயக்கத்தை வழிநடத்தும் டேனிஷ்- ஸ்வீடிஷ் தராஸ்மஸ் பலுடன் தான் இஸ்லாத்தின் புனிதமான நூலை எரித்துவிட்டதாகவும், அந்த செயலை மீண்டும் செய்வதாகவும் கூறினார்.

கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்டாக்ஹோமின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் லிங்கோபிங் மற்றும் நோர்கோபிங் நகரங்கள் உட்பட தீவிர வலதுசாரிக் குழு நிகழ்வுகளைத் திட்டமிட்ட இடங்களில் அமைதியின்மையில் குறைந்தது 16 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் பல பொலிஸ் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் இனவெறி உள்ளிட்ட குற்றங்களுக்காக 2020இல் ஒரு மாத சிறைத்தண்டனை பெற்ற பலுடன், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற குரானை எரிக்கத் திட்டமிட்டிருந்தாக கூறப்படுகின்றது.