05

05

உலகை உலுக்கிய புச்சா படுகொலை சம்பவ விவகாரம் – உண்மையான குற்றவாளிகள் பிரித்தானியாவும் – உக்ரைன் இராணுவமுமா..? அதிர்ச்சி வீடியோ.. !

உக்ரைனின் கீவ் புறநகரில் 410 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் புச்சா நகரில் கொலை, சித்திரவதை, பலாத்காரம், கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக உக்ரைன் அதிபர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள நகரங்களின் தெருக்களில் 410க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்யப் படைகளை கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள், பலாத்காரக்காரர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வீடியோ பதிவில், ‘உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய அனைத்து குற்றங்களையும் விசாரிப்போம். சிறப்பு விசாரணை குழுவை அமைப்போம். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அவர்களுக்கு மரணம் மட்டுமே சரியான தீர்ப்பாக இருக்கும். ஒவ்வொரு ரஷ்ய வீரரின் தாயும் புச்சா, இர்பின், ஹோஸ்டோமலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் உங்களை என்ன செய்தார்கள்? ஏன் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்? தெருவில் சைக்கிளில் சென்றவர் உங்களுக்கு என்ன செய்தார்? அமைதியான நகரத்தில் வசித்த மக்கள் ஏன் சித்திரவதை செய்யப்பட்டனர்? பெண்களின் காதுகளில் இருந்து காதணிகள் பிடுங்கி கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? குழந்தைகள் முன்னிலையில் பெண்களை எப்படி உங்களால் பலாத்காரம் செய்து கொல்ல முடியும்? இறந்த பிறகும் அவர்களின் சடலங்களை ஏன் அவமதித்தீர்கள்? டாங்கிகளை கொண்டு அவர்களின் உடல்களை ஏன் நசுக்கினார்கள்? புச்சா நகரம் ரஷ்யாவிற்கு என்ன பாவம் செய்தது? இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ரஷ்ய தாய்மார்களே! நீங்கள் கொள்ளையர்களை வளர்த்தாலும் கூட, அவர்களும் எப்படி கசாப்புக் கடைக்காரர்கள் ஆனார்கள்? வேண்டுமென்றே மக்களை கொன்றுள்ளனர்’ என்று ஆவேசமாக பேசினார்.

உக்ரைன் அதிபர் பேச்சுக்கு மத்தியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா அளித்த பேட்டியில்,

‘புச்சா நகரில் நடந்துள்ள சம்பவங்கள், உக்ரைன் இராணுவத்தாலும், தீவிர தேசியவாதிகளாலும் நடத்தப்பட்டவை. புச்சா விவகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களை சீர்குலைக்கும். மேலும்  வன்முறையை அதிகரிக்கும். கடந்த மார்ச் 30ம் தேதி புச்சா பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறிவிட்டது. அதற்கு பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகுதான் கொலைக் குற்றங்கள் பற்றிய சான்றுகள் வெளிவந்தன. புச்சா நகரத்தின் மேயர் அனடோலி ஃபெடோருக் வெளியிட்ட வீடியோவில், ‘புச்சாவில் ரஷ்ய துருப்புக்கள் இல்லை’ என்பதை உறுதிப்படுத்தினார். எனினும் அவர் பொதுமக்கள் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட விபரங்கள் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என்று கூறினார்.

இதே நேரம் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகள், பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது என உக்ரேனிய எம்.பி. Ilya Kiva தெரிவித்துள்ளார். உக்ரைன் எம்.பி. Ilya Kiva வெளியிட்ட வீடியோவில், புச்சாவில் நடந்தது பிரித்தானியா MI6 உளவுத்துறையால் திட்டமிட்டப்பட்டு, உக்ரைனின் SBU-வால் அரங்கேற்றப்பட்டது.

உக்ரைன் SBU படைகள், அதிகாலையில் புச்சாவிக்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து, சாலையில் சடலங்கைளை சிதறித்தனர். பின் அவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்தனர். இதனையடுத்து, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க சம்பவயிடத்திற்கு ஜெலன்ஸ்கி சென்றார். ஆனால், அவை அனைத்தும் போலியானது. ஏன் இதுபோன்ற நிலைமை Sumy அல்லது CHernihiv-வில் இல்லை? என எம்.பி. Ilya Kiva கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘புச்சாவில் கொல்லப்பட்ட மக்களின் படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்கு காரணமானவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்’ என்று கூறினார்.

போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா வெளியிட்ட அறிவிப்பில், ‘மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்களை அனுப்ப வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை புச்சாவில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் பொய்யாக்குகின்றன. எனவே, உக்ரைன் படைகளுக்கு இப்போதைக்கு மூன்று விஷயங்கள் மட்டுமே தேவை. அதாவது ஆயுதங்கள், ஆயுதங்கள், நிறைய ஆயுதங்கள்…’ என்று தெரிவித்துள்ளார்.

Manchester Originals அணியால் சுமார் 4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வனிந்து ஹசரங்க !

இங்கிலாந்தில் நடைபெறும் “த ஹன்ட்ரட்” கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க பவுண்ட் 100,000க்கு வாங்கப்பட்டதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
The Hundred Draft: Kieron Pollard taken first pick and Tammy Beaumont joins  Welsh Fire in big-name moves | Cricket News | Sky Sports

“Manchester Originals” அணியினால் வனிந்து ஹசரங்க இவ்வாறு வாங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை ரூபாய் பெறுமதியில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இவர் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அபகரிக்கப்படும் தமிழ் மக்களின் நிலங்கள்.”- வலிகாமம் மீள் குடியேற்றச் சங்க தலைவர் குற்றச்சாட்டு !

யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு வருவதாக வலிகாமம் மீள் குடியேற்றச் சங்க தலைவர் சண்முகநாதன் சஜீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ். நில அளவைத் திணைக்களத்திற்கு தெரியாமல் கொழும்பிலிருந்து அதிகாரிகள் வருகை தந்து அளவீட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால்  யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சண்முகநாதன் சஜீபன் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) காலை 9 மணிக்கு எழுவைதீவு பகுதியில் 4 பரப்புக் காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது.

இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், குறிப்பாக வடகிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சூழலில் வாழும்போதும் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு காணி உரிமையாளர் எதிர்ப்பை தெரிவித்து இருப்பதால், அவருடன் சேர்ந்து பொது அமைப்புகள் அரசியல் பிரமுகர்கள் நாளை காலை 9 மணிக்கு நில அளவை தடுப்பதற்காக ஒன்றுகூட வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் நாம் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.” எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

“113 ஆசனங்களுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள் , நாங்கள் விலகி விடுகிறோம்.”- நாமல் ராஜபக்ச சவால் !

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதால், அது நிறைவேறினால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

113 பெரும்பான்மையை நிரூபிக்ககூடிய எந்தகட்சியிடமும் அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி தெளிவாக தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வீதிகளிற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை.  தங்கள் பிள்ளைகளிற்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டிய பொதுச்சொத்தை சேதப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

113 ஆசனங்களை பெறுவதன் மூலம் எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக தெரிவித்துள்ளனர். பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்கு அரசியல்கட்சிகள் தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு ஒன்றுபடவேண்டும். ஏற்கனவே சீற்றமடைந்துள்ள மக்கள் குறித்து அவசர முடிவுகளை எடுத்தால் அது நாட்டை இருண்டபாதைக்கு இட்டுச்செல்லும். 1988-89 போன்று அரசியல்வாதிகள் அவசரஅவசரமாக தீர்மானங்களை எடுத்த இருண்ட வரலாறு இலங்கைக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பேசிய நாமல் ராஜபக்ஷ,

இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றமே இதுவரை ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் நாட்டில் நடக்கும் அனைத்து ஆர்ப்பாட்டங்களின் பின்னணியிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்பது உண்மையானதாகும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாது. அதை அனைவரும் மறக்கவேண்டாம். சிலர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை போ என்று சொல்கிறார்கள். பிரதமரை போ என்று சொல்கிறார்கள். இப்பொழுது #gohomegota என்னும் ஹேஸ் டேக் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறாது. ஒன்றை மறவாதீர்கள், இன்று கோட்டாபய போ என்கிறார்கள். நாளை நீங்களோ நானோ யார் ஆட்சியமைத்தாலோ இதுதான் நடக்கும்.

இப்பிரச்சினை இன்றோ நாளையோ தீராது. இதனை நாங்கள் ஒன்றிணைந்தே தீர்க்க வேண்டும். இந்த நாடாளுமன்றத்தில் என்னை விட அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். நான் அரசியலுக்கு வந்து குறுகிய காலமே ஆகிறது. எனவே நாம் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழிகளை தேட வேண்டும்.

இதேவேளை, உலகத்தில் ஏனைய நாடுகளில் அரசாங்கம் ஜனநாயக ரீதியிலேயே மாறியிருக்கின்றன. வன்முறையால் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதிப்பு – நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்ற உத்தரவு !

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுத்தால் அதனை அன்றைய தினம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

“நான் பதவி விலகப்போவதில்லை.”- ஜனாதிபதி கோட்டாபாய உறுதி !

பதவி விலகப்போவதில்லை ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜகப்ஷ நேற்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சிரேஸ்ட தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என நாடளாவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் இடம்பெற்ற அதேவேளை ஜனாதிபதி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

ஜனாதிபதி தான் பதவி விலகப்போவதில்லை ஆனால் 113 பெரும்பான்மைய நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என தெரிவித்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது எந்த கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பலர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

எனினும் சாதாரண பெரும்பான்மையுடன் தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஈடுபட்டுள்ளது.

அரசிலிருந்து விலகுகிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்தார் ஜீவன் !

கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்ததாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளது.

தனது முகப்புத்தக கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

இதேவேளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்வதுள்ளார்.

விமான நிலையங்களை இழுத்து மூடுங்கள் – ஜே.வி.பி வலியுறுத்தல் !

குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆளுந்தரப்பிலிருந்து வெளியேறிய 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பெரும்பான்மையை இழந்த ராஜபக்ஷ க்கள் !

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துள்ளது.

இதன்படி அரசாங்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இன்று விலகுவதாக அறிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், விமல்வீரவன்ச தரப்பின் 16 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.

பதவி விலகினார் ஒரு நாள் நிதியமைச்சர் அலிசப்ரி – நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தும் இல்லை !

புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சரவை பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள ஜனாதிபதி பொருத்தமான நபரை நியமிக்கும் வகையில் அவர் தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில், இன்றைய தினம் அவர் பதவி விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.