28

28

தற்கொலைப் படை தாக்குதல் நடாத்திய இரண்டு பிள்ளைகளின் தாய் – கணவன் பெருமிதம் !

பாகிஸ்தான் கராச்சி பல்கலைகழகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஷாரி பலுச் என்ர அந்தப் பெண் படித்து பட்டம் வாங்கியவர் எனவும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைகழகத்தில் ஏப்ரல் 26 ஆம் திகதி, சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலியானவர்களில் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.

கராச்சி பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்ட பெண் பயங்கரவாதி: கணவர் 'பெருமித'  ட்வீட்! | Karachi University Suicide Bomber Shari Baloch - hindutamil.in

இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன் இத்தாக்குதலை அவ்வமைப்பைச் சேர்ந்த ஷாரி பலுச் என்ற பெண் நடத்தியதாகவும்,அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

30 வயதான ஷாரி பலுச் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்திருக்கிறார். விலங்கியலில் பட்டம் பெற்றுள்ள ஷாரி பலுச், எம்ஃபில் படித்திருக்கிறார். இவருடைய கணவர் பல் மருத்துவராவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்த ஷாரி தன்னை தற்கொலைப் படை பிரிவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

 ஷாரியின் கணவர் பஷிர் பலுச் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவானது பலரையும் அதிர்ச்சடைய செய்துள்ளது.  குறித்த  ட்விட்டர் பக்கத்தில், “ஷாரி என் உயிரே.. உனது தன்னலமற்ற செயல் என் வாயடைத்துவிட்டது. நான் பெருமை கொள்கின்றேன். குழந்தைகள் தாயை நினைத்து மிகவும் பெருமை கொண்டு வளர்வார்கள். நீ எங்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இருப்பாய்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்று பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் அவ்வப்போது குண்டுவெடிப்பு , தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன் – எலான் மாஸ்க் ட்வீட் !

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மாஸ்க் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் டுவிட்டர் பதிவுகள்
மேலும், கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன் என்று கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க அரசியல் ரீதியாக டுவிட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் தீவிர வலது சாரியோ, தீவிர இடதுசாரியோ கோபம்தான் அடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் மீது தக்காளிகளால் தாக்குதல் !

பிரான்ஸ் நாட்டிற்கு இம்மாத தொடக்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபரான இமானுவேல் மெக்ரோன், பிரதான எதிர்க்கட்சியான மரின் லீ பென் உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்ட தேர்தலில் யாரும் பெரும்பான்மை பெறவில்லை.
Angry citizens threw ... tomatoes at Macron in a public market - Watch video - News Bulletin 247
இதையடுத்து, கடந்த 24ம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டி அதிபர் மேக்ரான் பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர்மீது குறிவைத்து தக்காளி வீசப்பட்டது. இதைக் கண்ட சுதாரித்த பாதுகாவலர்கள் குடையை விரித்து மேக்ரானை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.