30

30

மசூதியில் தொழுகை நேரத்தில் குண்டு வெடிப்பு – 50க்கும் மேற்பட்டோர் பலி !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப் மசூதியில் ஏராளமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மசூதியில் பயங்கர குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் ரத்த வெள்ளத்தில் சிதறினர். இந்த குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து கீழே கிடந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து மசூதியின் தலைவர் சையத் பசில் கூறும்போது, தொழுகையின் போது எங்களுடன் தற்கொலை தாக்குதல் நடத்தும் நபர் இணைந்ததாகவும், குண்டை வெடிக்க செய்ததாகவும் கூறியுள்ளார். சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் முஜாஹித் கூறும்போது, மசூதியில் நடந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் ஷியாசன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக நடந்த தாக்குதல்கக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் ஒழிக்க முயற்சிகள் நடக்கிறது.” – பாஜக ஆட்சி மீது குற்றச்சாட்டு !

“டெல்லி, மத்தியபிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் குறிவைத்து இடிக்கப்படுவதன் மூலம் நாட்டில் இருந்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் ஒழிக்க முயற்சிகள் நடக்கிறது.” என அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

மக்கள் அவர்களுக்கு நடத்த அநீதிகளை பற்றி என்னிடம் கூறுகின்றனர். கிராமங்கள், கடைகள் இடிக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையை இழக்க வேண்டாம். கவலைப்படவேண்டாம். நாம் அமைதி மூலம் இதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், நாம் வீடுகளை இடிக்கக்கூடாது.

மோடி, அமித்ஷா கேளுங்கள். நாங்கள் உங்களுக்கு தலைவணங்க வேண்டும். கடவுள் அல்லாவுக்கு (இஸ்லாமிய மதகடவுள்) மட்டுமே நாங்கள் தலைவணங்குவோம். கடவுள் அல்லா மட்டும் எங்களுக்கு போதுமானவர்’ என்றார்.

மத்தியபிரதேசத்தின் ஹர்ஹோன் பகுதியில் நடந்த வன்முறை மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசிய ஓவைசி, இஸ்லாமியர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறமாட்டார்கள். மரணத்தை பார்த்து அவர்களுக்கு பயம் இல்லை. கடவுள் அல்லா எங்கள் உயிரை எடுத்தால் நாங்கள் மரணிப்போம். அவர் எடுக்கவில்லை என்றால் நாங்கள் வாழ்வோம். நீங்கள் (பாஜக) எங்கள் வீடுகளை இடித்துள்ளீர்கள்.  நாங்கள் காத்திப்போம். ஆனால் கடவுள் அல்லா காத்திருக்கமாட்டார்.

டெல்லி, ஹர்ஹோனில் என்ன நடந்ததோ நாங்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு உதவி செய்வோம். உதவி செய்யவில்லை என்றாலும் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் நாம் பிரார்த்தனை செய்வோம்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அலையை பாஜக கொண்டுவந்துள்ளது. ஆனால், நீங்கள் அமைதியாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும். இந்த அநீதியை சட்டப்படி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். நாம் ஆயுதங்களை எடுக்கவேண்டுமென நம்மை பாஜக ஒடுக்க நினைக்கிறது. நமது ஆயுதங்கள் என்னவென்று தெரியுமா. பிரார்த்தனை செய்வது தான் நமது ஒரே ஆயுதம்’ என்றார்.